Tuesday, 31 August, 2010

பிரபல பதிவர்கள் பங்குபெற்ற நீயா நானா??

அண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிரேன். முழுவதும் கற்பனையான பதிவு இது. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல..படிச்சிப்புட்டு கல்லைக் கொண்டி அடிக்கிறதெல்லாம் செய்யக்கூடாது..சொல்லிப்புட்டேன்.

கோபிநாத் : தேங்க்யூ..தேங்க்யூ..வெல்கம் டூ லயன் டேட்ஸ் வழங்கும் நீயா நானா..அனைவருக்கும் கோபிநாத்தின் அன்புவணக்கங்கள்..

(கூட்டத்தில் இருந்து ஒருவர்..)

“உன் வணக்கத்தை தூக்கி உடப்புல போடு..ஒரு நையா பைசா தேறாது…உன் வணக்கத்தை வைச்சு அட்லீஸ்ட் தமிழ்மணத்துல ஒரு ஓட்டு வாங்க முடியுமாயா..”

கோபிநாத் : யாருங்க அங்க எகத்தாளம் பேசுறது..ஆஹா..ஆண்டனி..பதிவர்களை கூப்பிடாதீங்கன்னு தலையால அடிச்சுக்கிட்டேன்..கேட்டீங்களா..கடவுளே என்ன நடக்க போகுதோ…ஓகே..ஓகே..லெட்ஸ் கம் டூ த பாயிண்ட்..

பைத்தியக்காரன் : எச்சூயூஸ்மி..என்ன நோக்கத்துக்கு சங்கம் அமைக்கப் போறீங்க..யாரு யாரெல்லாம் மெம்பர்..முக்கியமா யாரு பொருளாளர்..

கோபிநாத் : என்னது சங்கமா….அண்ணே..இது நீயா நானா..

பைத்தியக்காரன் : (அதிர்ச்சியுடன்) என்னது நீயா நானாவா,.உண்மைத்தமிழன் சங்கம் வைக்கிறதுக்கு கூட்டமில்ல சொன்னாரு..இட்ஸ் ஓகே..நான் வெளியிலிருந்து ஆதரவு தர்றேன்..

கோபிநாத் : சந்தோசம்..நீயா நானா கண்டிப்பாக இதை வரவேற்கும்.ஓகே..இன்று நாம் எடுக்கப்போகும் தலைப்பு..பிரபல பதிவராக இருப்பது அவஸ்தையா..குஜாலா….(கேபிள் சங்கரைப் பார்த்து) எங்க..பெரியவரே நீங்க சொல்லுங்க…

கேபிள் சங்கர் : ஏய்..யாரைப்பார்த்து பெரியவருன்னு சொன்ன..கடையடைப்பு..உண்ணாவிரதம்..சைதாபேட்டைல ரெண்டு பஸ்ஸ் கொளுத்துங்கடா..நாங்க எல்லாம் யூத்து தெரியுமா..25 முடிஞ்சு இப்பதான் 26 ஆகுது..

கோபிநாத் : யாருக்கு..??

கேபிள் சங்கர் : யாருக்கோ..முதல்ல நீங்க எப்படி சொல்லலாம்..

கோபிநாத் : அய்யோ அண்ணே..தெரியாம சொல்லிட்டேன்..தண்டனையா நீங்க எழுதுற எண்டர் கவிதைகள் தினமும் படிக்கிறேன்..போதுமா..ஒகே..இப்ப இந்தப்பக்கம் வரலாம்..சொல்லுங்க மிஸ்டர் நர்சிம்..உங்களைப்பற்றி உங்கள் பதிவில் என்ன எழுதி இருக்கிறீர்கள்

நர்சிம் : நாமார்க்கும் குடி….

அப்துல்லா : ஆஹா..அண்ணே..சொல்லவே இல்லை பார்த்தீங்களா..எந்த பாரு....விட்டுட்டு போயிட்டீங்க பார்த்தீங்களா..

கோபிநாத் : மிஸ்டர் நர்சிம்..இதை தமிழுல சொல்ல முடியுமா..

நர்சிம் : ஆஹா..சங்க இலக்கியத்துல இருந்து ஒரு வார்த்தை பேசுனா கிண்டல் பண்ணுறாயிங்களே..இன்னைக்கு போறப்ப டி.வி கிடைக்காது போலிருக்கே….ஆக்சுவலி..

கோபிநாத் : வாவ்.வாவ்..இதுவல்லவோ தமிழ்..நீயா நானா பற்றி இரண்டு வார்த்தைகள்..

நர்சிம்: ம்..என்ன சொல்ல..சங்க கால இலக்கியத்தில் திரூமூலர்..

கோபிநாத் : அவர் கிடக்கட்டும்..நீங்க என்ன சொல்லுறீங்க…

நர்சிம் : வேணுமின்னா..இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு புனைவு எழுதட்டுமா..

கோபிநாத் : சூப்பர்..எழுதுங்களேன்..

அதிஷா : (மெல்லிய குரலில்) ஆஹா..கோபிநாத்து ஓணானை எடுத்து கோட்டுக்குள்ள விடுறாரே..மிஸ்டர் கோபிநாத்..நாங்களும் இருக்கோம்..எங்களையும் கேளுங்க..

கோபிநாத் : கண்டிப்பா..அதுக்கு முன்னாடி உங்க பக்கத்துல் உக்கார்த்து புத்தகம் படிச்சிக்கிட்டு இருக்காரே..அவர் யாரு..

அதிஷா : நண்பர் லக்கிலுக்..

கோபிநாத் : அவருகிட்ட கொடுங்க..நீங்க சொல்லுங்க சார்..பிரபலபதிவராக இருப்பது..

லக்கிலுக் : ஆளப்பிறந்தவன்..ஆத்திரப்படமாட்டேன்..

கோபிநாத் : ஒன்னும் புரியலையேப்பா..

அதிஷா : யாருக்குதான் புரியுது..

கோபிநாத் : ஓகே..யாருப்பா அங்க விஜய் டி.வியுல இவ்வளவு பெரிய கேமிரா இருக்குறப்ப குட்டி கேமிராவை வைச்சு படம் புடிக்கிறது..

ஜாக்கிசேகர் : நாந்தான் ஜாக்கி சேகர்..ஆங்கிள் பார்க்கிறேன்..

கோபிநாத் : நீங்க சொல்லுங்க..பிரபலபதிவரா இருக்குறதுனால அவஸ்தையா..

ஜாக்கிசேகர் : கண்டிப்பா சார்..ஒரு நாளைக்கு 40 மெயில் வருது…ரோட்டுல நடமாட முடியலை..யாரப்பார்த்தாலும், நீங்க ஜாக்கிசேகரா..ஜாக்கிசேகாரான்னு ஒரே குஷ்டமப்பா..இது..ஒரே கஷ்டமப்பா..இப்படித்தான்..

கோபிநாத் : ஆஹா..ரெண்டு எபிசோட் போகும் போலிருக்கே..நீங்க சொல்லுங்க உண்மைத்தமிழன்..

உண்மைத்தமிழன் : எம்பெருமான் முருகப்பெருமானுக்கு..

கோபிநாத் : ஆஹா..ஆறு எபிசோட் ஆகும் போலிருக்கே..

நிகழ்ச்சி தொகுப்பாளார் ஆண்டனி அலறியடித்து ஓடிவர..எலலோரும் கலவரமாகின்றார்கள்..

“நிறுத்துங்க..நிறுத்துங்க..எல்லாத்தையும் நிறுத்துங்க..”

ஆண்டனி : தற்காலிகமா எழுதுறதை நிறுத்தியிருந்த பிரபல பதிவர் சக்கரை சுரேஷ்ஷூ இன்னையிலிருந்து எழுதப்போறாராம்..மீட்டிங்க் நடக்குறதைக் கேள்விப்பட்டவுடனே தானும் கலந்துக்கணுமுன்னு வந்துகிட்டு இருக்காராம்..உடனே ஓடுங்க..ஓடுங்க..

(எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்..ஓடும் வழியில் பிரபலபதிவர் டோண்டு ராகவன் “சரியாக எட்டு மணிக்கு டோண்டு ராகவன் கார்..இடத்தை விட்டு எஸ்கேப் ஆனது..” என்று தொடங்க..கொத்து கொத்தாக தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்..)

29 comments:

ஜோதிஜி said...

இதில் வருகிறவர்கள் கூட ரசித்து சிரிப்பார்கள்.

Robin said...

:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஹி.. ஹி.. கிண்டல் நல்லாயிருக்கு..!

வரதராஜலு .பூ said...

செம ரவுசு. ரசிச்சி சிரிச்சேன்.

taaru said...

அது! அன்பு வனக்கங்கள் நே...
என்னாது சுரேஷ் மறுபடியும் எழுத வராப்புலையா? சந்தோசம் மகிழ்ச்சி..
என்ன அண்ணே... கோபியோட touch அந்த அழுகுற மேட்டர் விட்டுடீகளே?

எல்லாம் கிடக்கட்டும், நிகழ்ச்சி எப்படி இருந்துச்சு.. என்னால பாக்க முடியல..travel பண்ணிட்டு இருந்தேன்... பாக்கணும்... பாக்கலாம் தானே?!!

Jawahar said...

ரசிக்கக் கூடிய கற்பனை!

http://kgjawarlal.wordpress.com

துளசி கோபால் said...

தொலைக்காட்சி பார்க்கறதில்லை. அருமையான நிகழ்ச்சியை மிஸ் பண்ணிட்டேனே.....:-)))))))

☀நான் ஆதவன்☀ said...

:)))))))))))))

காவேரி கணேஷ் said...

superb , each and every word makes me laughs.

SHANTHINI said...

neenga yean sir, neeya naana la kalandhukalai? ungala mattum vitutinga......

அஹமது இர்ஷாத் said...

கடைசி வரி டாப்போ டாப்புண்ணே..

உதவாக்கரை said...

என்னமா எழுதறீங்கப்பா... அருமை! அருமை!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super. veettukku auto vanthuchchaa?

பிரியமுடன் ரமேஷ் said...

செம ரவுசாயிருக்கே...கலக்கல் கற்பனை..

Jey said...

விஜய் டீவில பாத்த நீயா? நானா? காட்டிலும் இது நல்லாருக்கு... நல்லா பேசிருக்காங்க....:)

TechShankar said...

// This is called final touch

தற்காலிகமா எழுதுறதை நிறுத்தியிருந்த பிரபல பதிவர் சக்கரை சுரேஷ்ஷூ இன்னையிலிருந்து எழுதப்போறாராம்..மீட்டிங்க் நடக்குறதைக் கேள்விப்பட்டவுடனே தானும் கலந்துக்கணுமுன்னு வந்துகிட்டு இருக்காராம்..உடனே ஓடுங்க..ஓடுங்க..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

:)

வழிப்போக்கன் said...

jaaki sekar, lakki luk
Super...

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

எம்.எம்.அப்துல்லா said...

ரசித்துச் சிரித்தேன் :))))))

அவசரமா எழுதுனீங்களா?? இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாமோன்னு தோணுது.

மங்களூர் சிவா said...

/
ய்..யாரைப்பார்த்து பெரியவருன்னு சொன்ன..கடையடைப்பு..உண்ணாவிரதம்..சைதாபேட்டைல ரெண்டு பஸ்ஸ் கொளுத்துங்கடா..நாங்க எல்லாம் யூத்து தெரியுமா..25 முடிஞ்சு இப்பதான் 26 ஆகுது..
/


சிறு பிழை 26 முடிஞ்சி 25னு வந்திருக்கனும்

யூத் கொலைவெறிப்படை
மங்களூர்

பரிசல்காரன் said...

//கோபிநாத் : ஆஹா..ரெண்டு எபிசோட் போகும் போலிருக்கே..நீங்க சொல்லுங்க உண்மைத்தமிழன்..

உண்மைத்தமிழன் : எம்பெருமான் முருகப்பெருமானுக்கு..

கோபிநாத் : ஆஹா..ஆறு எபிசோட் ஆகும் போலிருக்கே..//


இந்த இடத்துல - அதாவது இந்த இடத்தைப் படிக்கறப்ப - அடக்க மாட்டாம சிப்பு வந்துச்சுப்பா சிப்பு...!!! வெல்டன்!

அவிய்ங்க ராசா said...

நன்றி ஜோதிஜி,
நன்றி உண்மைத்தமிழன்
நன்றி வரதராஜூலு
கண்டிப்பா பாருங்க தாரு..நல்லா இருக்கு
நன்றி ஜவஹர்,
நன்றி துளசி டீச்சர்,
நன்றி ஆத்வன்,
நன்றி கணேஷ்,
நன்றி சாந்தினி, நான் பிரபலபதிவர் இல்லையில்லை..அதனாலதான்..)
நன்றி அகமது
நன்றி உதவாக்கரை,
நன்றி ரமேஷ்..ஆட்டோவா..!!!
நன்றி ரமேஷ்
நன்றி ஜெய்
நன்றி டெக்சங்கர்,
நன்றி சங்கர்
நன்றி வழிப்போக்கன்,
நன்றி அப்துல்லா..கொஞ்சம் அவசரமாதான் எழுதிட்டேன்..
நன்றி சிவா..யூத் கொலைவெறிப்படையா..பேரக்கேட்டாவே பயமா இருக்கே..
நன்றி பரிசல்காரன்..உங்களை விட்டுட்டனே..))

வழிப்போக்கன் - யோகேஷ் said...

கேபிள் மற்றும் உ.த அண்ணன் பற்றி படிக்கிறப்போ பயங்கரமா சிரிச்தேன்........

அஹோரி said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் படிச்சி சிரிச்ச பதிவு. யாரையும் நோகடிக்காத தன்மை , அருமை.

சிங்கக்குட்டி said...

ஹிஹிஹி...நல்லாயிருக்கு..!

சிவகுமார் said...

Super nalla Hahahahahah ....,
Romba nallaiku apparam .

சந்தோஷ் = Santhosh said...

சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு..

ஜாக்கி சேகர் said...

என்னையையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு நன்றி அண்ணே..

Post a Comment