நமக்கெல்லாம் தூக்கம்தாண்ணே சொர்க்கம். அடிக்கிற குளிருல, நல்லா போர்வைய போர்த்திக்கிட்டு தூங்குனா, நயன்தாரா, நமீதா, திரிஷா ன்னு மூணு டூயட் பாடி முடிச்சிருலாம்,, முந்தாநேத்து அப்படித்தான், செம தூக்கம் தூங்கிகிட்டு இருக்கேன், “நீயெல்லாம் ஒரு மனுசனா” ன்னு யாரோ திட்டுற மாதிரி ஒரு பிரமை. சரி நம்மளை யாரு திட்டபோறான்னு அலட்சியத்துல தூங்குனா, முகத்துல யாரோ சுடுதண்ணிய ஊத்துற மாதிரி சூடுண்ணே..அலறிகிட்டு எழுந்தா, வூட்டுக்காரம்மாதான்..பத்ரகாளி மாதிரி நின்னுக்கிட்டு இருக்கா..என்னால நம்பவே முடியலைண்ணே..என் வூட்டுக்காரம்மாவுக்கு கோவம் வந்தா, பக்கத்துல இருக்குற சப்பாத்திக்கட்டைய எடுத்து ரெண்டு போடுவாளே தவிர “நீயெல்லாம் மனுசனா” ன்னு மட்டு மரியாதை இல்லாம பேசக்கூடிய ஆளு இல்லைண்ணே….
“அடியே..நீயா…”
“அப்புறம் என்ன எதிர்த்த வூட்டுக்காரியா..”
“இருந்தா நல்லாத்தான் இருக்கும்…” ஏதோ பேச்சுவாக்குல சொல்லிட்டேன்..அவ்வளவுதான்..அடுப்புல கடுகுதாளிக்கிற மாதிரி தாளிச்சு எடுத்துட்டா..கொஞ்சநேரம் கழிச்சு சுனாமி ஓஞ்சவுடனே, நானே கேட்டேன்..
“அதுசரி..காலையில ஏன் என்னை திட்டுன..”
“இன்னைக்கு என்ன நாளு..”
“ம்..என்ன நாளு..,.நம்ம கல்யாண நாளா..”
“அதை ஏன் ஞாபகப்படுத்துறீங்க..”
“பின்ன..தமிழகத்தின் செல்ல சீமாட்டி நமீதா அவதரித்த நாளா…”
“…….”
“சரி..விடு…நீயே சொல்லு,,”
“மகளிர் தினம் ங்க..”
“ஆமால..நல்லது..”
“என்னது..நல்லதா…எனக்கு வாழ்த்து சொன்னீங்களா..உங்களை நம்பி தினமும் படித்து, தினமும் வாசகர் கடிதம் எழுதுற பல்லாயிரக்கணக்கான(ஆத்தாடி..தலையில்ல சுத்துது) மகளிருக்கு வாழ்த்து சொல்லி பதிவு எழுதுனீங்களா..”
“ஏ..யப்பே..ஏதாவது சரக்கு இருந்தா பதிவு போடலாம்..ஒன்னுமே சரக்கு இல்லாதப்ப வெறும் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி எப்படி பதிவு எழுதுறது..”
“ஆமா..இல்லன்னாலும்…”
“அடியே..ஒரு நிமிசத்துல பிரபலபதிவரை அசிங்கப்படுத்திட்டே..பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவ..”
“ஏங்க..இப்படி பேசுறீங்க..உங்களுக்கு பொறுப்புணர்ச்சியே இல்லியா..இந்த லட்சணத்துல, உங்க எழுத்துல ஜெயமோகன் சைடுவாக்குல உக்கார்ந்து இருக்குறாரு, பாலகுமாரன் ஒருக்களிச்சு படுத்துக்கிட்டு இருக்காருன்னு கமெண்ட்டு வேற வருது..”
“ஆஹா..அடியே..அது நம்ம கோவாலு ஓசிசரக்குக்கு ஆசைப்பட்டு போட்ட கமெண்ட்டுடி..வாங்கி தரலைன்னதும், அடுத்த பதிவுல எவ்வளவு அசிங்கம், அசிங்கமா திட்டுனான் தெரியுமா..,”
“ப்ச்..அதெல்லாம் தெரியாது…மகளிரை மதிக்காத உங்களுக்கு எதுக்கு நானு, சோறு பொங்கி தரணும்..”
“வாவ்..இன்னைக்கு வீட்டுல பர்கரா…”
“மன்னாங்கட்டி..”
“என்னது,,மன்னாங்கட்டி ப்ரையா…”
அவ்வளவுதான்னே..அன்னைக்கு முழுக்க சோறு இல்லை..சோறு கிடைக்காம, ஒவ்வொரு வீடு வீடா அலைஞ்சேன்..அன்னைக்கு பார்த்து ஒவ்வொருத்தன் வூட்டுலயும் பழைய கஞ்சிதான்..அந்த ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை சொல்லியிருந்தா, எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..அந்த வார்த்தை..
இப்படிக்கு
அவிங்க ராசா(கழுத்து பக்கம் கத்தியோடு)
9 comments:
me the first...
ஏன்ண்ணே !!!! இத்த ஒரு மூணு நாளைக்கு முந்தி எழுதி இருக்கப் பிடாதா?... சைடுல படுத்த பாலகுமாரன் "கருப்பு ஜெமோவே வந்து வாழ்த்து சொல்றாரு"ன்னு நானே என் சொந்த செலவுல [சூனியம் இல்லைண்ணே] உங்க ஊருக்கு ஒரு கம்மென்ட் அனுப்பி வச்சு இருப்பேன்ல...
கழுத்துப்பக்கம் கத்தியுடன் இருக்கும் அண்ணிக்கு.. அவர் எங்களோட பேச வேண்டி இருப்பதால்....சற்று ரெண்டு இஞ்சி இறக்கி நெஞ்சில் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
////////////////////////////////
Vijay Anand said...
me the first...
10 March 2011 10:43 PM
/////////////////////////////
எங்க ஆளையே காணோம்???
/////////////////////////////
taaru said...
ஏன்ண்ணே !!!! இத்த ஒரு மூணு நாளைக்கு முந்தி எழுதி இருக்கப் பிடாதா?... சைடுல படுத்த பாலகுமாரன் "கருப்பு ஜெமோவே வந்து வாழ்த்து சொல்றாரு"ன்னு நானே என் சொந்த செலவுல [சூனியம் இல்லைண்ணே] உங்க ஊருக்கு ஒரு கம்மென்ட் அனுப்பி வச்சு இருப்பேன்ல...
கழுத்துப்பக்கம் கத்தியுடன் இருக்கும் அண்ணிக்கு.. அவர் எங்களோட பேச வேண்டி இருப்பதால்....சற்று ரெண்டு இஞ்சி இறக்கி நெஞ்சில் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
10 March 2011 11:10 PM
//////////////////////////
நீ ஒருத்தன் போதும்யா..எனக்கு பால் ஊத்துறதுக்கு..)))
//
அவிய்ங்க ராசா said...
////////////////////////////////
Vijay Anand said...
me the first...
10 March 2011 10:43 PM
/////////////////////////////
எங்க ஆளையே காணோம்???
//
படிக்கிறேன் , வோட்டு போடுகிறேன். கமெண்ட் போடா நேரம் இல்ல ராஜா ...
ரொம்ப பிஸி,,,,,,
இடுகையின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தைவரை படிப்பவரை ரசனையுடன் இழுத்துச்செல்லும் கலையை உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்
"என் வூட்டுக்காரம்மாவுக்கு கோவம் வந்தா, பக்கத்துல இருக்குற சப்பாத்திக்கட்டைய எடுத்து ரெண்டு போடுவாளே தவிர"
இப்பதான் புரியுது .எங்க வீட்டுக்காரர் எனக்க்கு tortilla chappathi maker
வாங்கி தந்ததன்
ரகசியம்.
chumma edhuku jackiesekar-aye vambuku iluththuttu irukkreenga?? ungalukum avarukum edhachum thanipatta prachinaya??
நன்றி ஜோதி,
ஏஞ்சலின்..ஹி..ஹி..தப்பிச்சாரு..))
ரேஷ்மா..இந்த பதிவில் எங்கு அவர் வந்தார்..
Post a Comment