“எனக்கு யாரும் தேவையில்லை..எனக்கு யாரும் உறவினர் இல்லை..சப்த ஸ்வரங்கள் போதும்”
அதிர்ந்து போயி யாரு பேசுராங்கன்னு பார்த்தா நீங்க தான் ராசா வால்மீகி வெளியீட்டு விழாவுல..நீங்களா ராசா இப்படி பேசுறது…
அதிர்ந்தே போயிட்டேன் ராசா..கொஞ்சம் கஷ்டமாத்தான் போச்சு ராசா…எங்களுக்கு சோறு கிடைக்கலன்னா உங்க பாட்டை கேட்டு தான்னே ராசா வளர்ந்தோம்..நீங்க இசையமச்சிங்கற ஒரே காரணத்துக்காக எத்தனை சொத்த படத்தை முதல் வரிசையில உக்கார்ந்து பார்த்து இருப்போம்…ஒரு வயசுக்கு மேல அம்மா தாலாட்டு பாட்டு மாதிரு உங்க பாட்டைதான ராசா கேட்டு தூங்கப் போனோம்..அதுக்காக நீங்க எது பேசினாலும் கரெக்டுன்னு ஒத்துக்க மாட்டோம் ராசா..
"உனக்கு என்னடா ஞானம் இருக்கு, என்ன பத்தி பேச” ன்னு கேக்கலாம்..உங்க இசையப் பத்தி விமர்சனம் செய்ய இசை ஞானம் இல்லாமல் இருக்கலாம்..ஆனா உங்க செயலை பத்தி யாரு வேணாலும் விமர்சனம் பண்ணலாம் ராசா..
மிஷ்கின் என்ன தப்பு வேணுன்னாலும் செஞ்சு இருக்கலாம் ராசா..அதுக்காக இப்படியா ராசா மேடை போட்டு திட்டுறது..தனியா கூப்பிட்டு திட்டிருக்கலாமே ராசா..அதே மேடையில உங்களை பத்தி யாராவது அப்படி பேசுன்னா நீங்க சும்மா இருப்பிங்களா ராசா…
‘மிஷ்கின்” படம் முடிஞ்ச பிறகு ஒரு போன் கூட பண்ணலன்னு குறை சொல்லுரிங்களே ராசா..அவர் பண்ணலைன்னா நீங்க ஏன் ராசா ஒரு போன் போட்டு பேசக்கூடாது..ஏன் ராசா?? “இவன் என்ன ஒரு புது டைரக்டர்”..நான் எவ்வளவு பெரிய இசைஞானி..” இதுக்கு பேருதான் ஆணவம்தானே ராசா..
“எல்லா பேரும் என்ன சும்மா சும்மா புகழ்றாங்க..எனக்கு யார் புகழ்ந்தாலும் புடிக்காது” ன்னு சொல்லுறீங்களே ராசா, ‘இசைஞானி” ன்னு படத்துல ஏன் ராசா போட அனுமதிக்கிறீங்க..பட்டமும் ஒருவித புகழ்ச்சி தான ராசா..ராஜ்கிரண், ராமராஜன் படத்துல எல்லாம் உங்களை புகழ்ந்து ஒரு பாட்டு வச்சாங்களே..அப்ப ஏன் ராசா அத நீங்க தடுக்கலை..
“எனக்கு யார் தயவும் தேவையில்ல” ன்னு சொல்லிப்புட்டு அப்புறம் விகடன் படம்ங்கறதனால தான் வந்தேன்னு சொல்லுறீங்களே ராசா..அப்ப விகடன் தயவு உங்களுக்கு தேவைப்படுதா ராசா..
எப்போதும் வெள்ளையா இருக்குற உங்க ஆடை மாதிரியே உங்க மனசும் வெள்ளையா இருக்கனும்னு ஆசையா இருக்கு ராசா..இசை குடியிருக்குற மனசு ஒரு கோயில்ன்னு நீங்களே சொல்லி இருக்கிங்க ராசா, அதுல இந்த மாதிரி கொஞ்ச நஞ்ச இருக்குற குப்பைய தூக்கி எறிஞ்சிட்டீங்கண்ணா, உங்களை கையெடுத்து கும்பிடுவோம் ராசா..செய்வீங்களா ராசா…
ஏக்கத்துடன் பண்ணைபுரத்து ராசாவை வேண்டும் சோழவந்தான் ராசா…
15 comments:
//.உங்க இசையப் பத்தி விமர்சனம் செய்ய இசை ஞானம் இல்லாமல் இருக்கலாம்..ஆனா உங்க செயலை பத்தி யாரு வேணாலும் விமர்சனம் பண்ணலாம் ராசா..//
என் கருத்தும் இதுதான்
ராசாவா இப்பிடி.......? :(((((((((
//.உங்க இசையப் பத்தி விமர்சனம் செய்ய இசை ஞானம் இல்லாமல் இருக்கலாம்..ஆனா உங்க செயலை பத்தி யாரு வேணாலும் விமர்சனம் பண்ணலாம் ராசா..//
என் கருத்தும் இதுதான்
உங்க கருத்தை அழகாய் யார் மனமும் புண்படாத படி சொன்னாய் ராஜா ...
ராஜா :-) உன் பெயரில் அவர் பெயர்.. நீ நல்ல ரசிகன் தான் ராஜா
//மிஷ்கின் என்ன தப்பு வேணுன்னாலும் செஞ்சு இருக்கலாம் ராசா..அதுக்காக இப்படியா ராசா மேடை போட்டு திட்டுறது..தனியா கூப்பிட்டு திட்டிருக்கலாமே ராசா..அதே மேடையில உங்களை பத்தி யாராவது அப்படி பேசுன்னா நீங்க சும்மா இருப்பிங்களா ராசா//
மிக சரி
தமிழர்ஸில் வோட்டு போட்டாச்சு, தமிழ்ஷ்லும் போட்டாச்சு.
தமிழர்ஸ் மூலமாய் உங்க பதிவுக்கு வந்தேன்
உங்க சைட் நம்ம புக் மார்க்கில் இருக்கு, அதுக்குள்ள தமிழர்ஸில் பார்த்துட்டேன் அதான் சொன்னேன்
////////////////
புருனோ Bruno said...
//.உங்க இசையப் பத்தி விமர்சனம் செய்ய இசை ஞானம் இல்லாமல் இருக்கலாம்..ஆனா உங்க செயலை பத்தி யாரு வேணாலும் விமர்சனம் பண்ணலாம் ராசா..//
என் கருத்தும் இதுதான்
26 May, 2009 8:41 PM
//////////////
வருகைக்கு நன்றி புருனோ சார்
//////////////
SUBBU said...
ராசாவா இப்பிடி.......? :(((((((((
26 May, 2009 9:23 PM
///////////
ஆமாண்ணே..அவரோட இசை அளவுக்கு , மனசு இல்லைண்ணு என்னோட கருத்து..
////////////
Suresh said...
உங்க சைட் நம்ம புக் மார்க்கில் இருக்கு, அதுக்குள்ள தமிழர்ஸில் பார்த்துட்டேன் அதான் சொன்னேன்
26 May, 2009 9:51 PM
/////////////
நன்றி சுரேஷ்...நீங்க புது பதிவர்களுக்கு குடுக்குற ஊக்கம் தான் எங்களை இன்னும் தூண்டுது..
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.
நன்றி
தமிழ்ர்ஸ்
Raasakku thimir athigam. Athaan field i vittu poottaru.
//நன்றி சுரேஷ்...நீங்க புது பதிவர்களுக்கு குடுக்குற ஊக்கம் தான் எங்களை இன்னும் தூண்டுது..//
உங்க ரெண்டாவது பதிவு படிச்சவுடனே தெரிந்து போச்சு இந்த மனுஷன் பின்னுவாரு, அதான் அப்பவே உங்கள பத்தி நண்பர்கள் கிட்டயும் சொல்லி,புக் மார்க்கும் பண்ணியாச்சு ...
உங்க எழுத்த மூளை ஏற்றுக்கொள்கிறது... ஆனா மனசு ... -:(
பீத்தோவனுக்கு இளையராசா குறைந்தவரல்ல போல...எல்லாவற்றிலும்.
இப்படிய செயல் பண்பட்டவர்களிடமும் படிந்திருப்பது, வருத்தமடையும் செயல்.
/ஏன் ராசா ஒரு போன் போட்டு பேசக்கூடாது../
இது ஏன் இல்லாமல் போகின்றது. எத்தனை பக்குவம் வந்த பின்னும்!!!
////////////////
பித்தன் said...
உங்க எழுத்த மூளை ஏற்றுக்கொள்கிறது... ஆனா மனசு ... -:(
பீத்தோவனுக்கு இளையராசா குறைந்தவரல்ல போல...எல்லாவற்றிலும்.
27 May, 2009 5:33 AM////////////////
aamothikkiren pothan....
/////////////
ஆ.முத்துராமலிங்கம் said...
இப்படிய செயல் பண்பட்டவர்களிடமும் படிந்திருப்பது, வருத்தமடையும் செயல்.
/ஏன் ராசா ஒரு போன் போட்டு பேசக்கூடாது../
இது ஏன் இல்லாமல் போகின்றது. எத்தனை பக்குவம் வந்த பின்னும்!!!
/////////////////////
yes Muthuramalingam. It is sad ilayaraja is having this mentality
Post a Comment