Friday, 29 May, 2009

பிரபல பதிவர்களோடு ஒரு படகு பயணம்

அண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன்..இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு..யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல…

பிரபல பதிவர்கள் எல்லாரும் ஒரு படகுப் பயணம் போறாங்கண்ணே. எல்லாரும் துடுப்பு போடுற படகுண்ணே..அது யார் யாருண்ணா…லக்கி லுக், கேபிள் சங்கர், சக்கரை சுரேஷ், உண்மைத்தமிழன், டோண்டு சார், இட்லிவடையார், செந்தழல் ரவி. நான் பிரபல பதிவர் இல்லாததால், பயணத்தின் கோ-ஆர்டினேட்டர்…

அவீங்க ராசா : எல்லாரும் நல்லா கவனிங்கப்பா..எல்லா பதிவர்களும் ஒன்னா கூடியிருக்கீங்க..இங்கேயிருந்து அக்கரைக்கு போகணும்னா 8 மைல் துடுப்பு போடணும்..எல்லாரும் ஒற்றுமையா துடுப்பு போட்டாத்தான் அக்கரைக்கு போக முடியும்..சண்டை போடக்கூடாது…சரியா???

லக்கிலுக் : யோவ்..நாங்க எல்லாம் பிரபல பதிவர்கள்..நீ யாருய்யா..

அவீங்க ராசா : அண்ணண்..நான் மதுரைக்காரண்ணே..இப்பதான் புதுசா எழுத ஆரம்பிச்சிருக்கேன்..உங்களை தாக்கி கூட ரெண்டு பதிவு போட்டுருக்கேண்ணே..

லக்கிலுக் : ஆ..அப்பிடியா..நான் ரொம்ப பிசிப்பா..எல்லாரும் என்னையே தாக்கி போடுறதுனாலே, எல்லாத்தையும் படிக்க முடியலே..என்ன தாக்கி ஏதாவது பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புங்கப்பா..தர்மசங்கடமா இருக்குல்ல..சேய்..ஒரே குஷ்டமப்பா..

செந்தழல் ரவி : அய்யோ..உங்களை தாக்கி பதிவு போட்டுட்டானா..யோவ் என்ன தைரியம்யா..இன்டெர்நெட் அழியப்போகுது..எல்லாரும் உள்ள போகப் போறீங்க..நாங்க சுவத்துல ஏறிட்டோம்..யாரு எங்களோட வர்றா…

லக்கிலுக் : யே..விடுப்பா..அனானில பார்த்துக்குவோம்..நீ மட்டும் எப்படிப்பா கோ-ஆர்டினேட் பண்ணுவ....கூட யாராவது இருக்காங்களா..

அவிங்க ராசா : ஆமாண்ணே..என் பிரண்டு சரத்பாபு இருக்காண்ணே..

சக்கரை சுரேஷ் : சரத்பாபுவா..மச்சான்ஸ் எல்லாரும் ஓட்டு போடுங்கப்பா..

லக்கிலுக் : யோவ்..சரத்பாபு என்னத்தையா பண்ண போறாரு..உடன்பிறப்புகளே..யாரும் ஓட்டு போடாதிங்க..எங்க கழகம் தோத்துரும்ல…

செந்தழல் ரவி : சக்கரை சுரேஷ்..எப்படி நீ பேசலாம்..ரத்தம் கொதிக்குண்ணே..லக்கிலுக் ஏன் சொல்லுரானுன்னா, சரத்பாபு எங்க கழக ஓட்டைப் பிரிக்குறாருய்யா..அய்யோ, இன்டெர்நெட் அழியப் போகுது..எல்லாரும் உள்ள..

அவிங்க ராசா : ஆகா ஆரம்பிச்சுட்டாருய்யா..அய்யோ அண்ணே அவரு அந்த சரத்பாபு இல்லண்ணே..இவரு வேற..சரி அதை விடுங்க..எல்லாரும் சேர்ந்த மாதிரி துடுப்பு போடுங்க..துடுப்பு போடுறப்ப, “ஏலேலோ ஐலசா” ன்னு சொல்லணும்..எங்க சொல்லுங்க..

எல்லோரும் : ஏலேலோ ஐலசா…

உண்மைத்தமிழன் : எம்பெருமான் முருகப் பெருமானே…ஐலசா..

அவீங்க ராசா : அண்ணாச்சி அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது..ஆமா, செந்தழல் ரவி நீங்க ஏன் ஐலசா சொல்லாம இருக்கீங்க..சொல்லுங்க..

செந்தழல் ரவி : லக்கிலுக் சொன்னாத்தான் நானும் சொல்லுவேன்..

அவீங்க ராசா : ஓ..மறந்துட்டேன்..லக்கிலுக் அண்ணே..நீங்களும் சொல்லுங்கண்ணே..அப்பத்தான் ரவி சொல்லுவாரு..

லக்கிலுக் : நான் சொல்ல மாட்டேன்..சாருநிவேதிதா வந்தாதான் நான் சொல்லுவேன்..

அவீங்க ராசா : அய்யோ..அவர்ல்லாம் இங்க வர மாட்டாருங்க..கூப்பிடனும்னா இன்விடேசன்னெல்லாம் அடிக்கனும்..ஒரு தடவை இப்படித்தான், ஒரு பதிவர் சந்திப்புக்கு பிரபல பதிவர் ஒருத்தர் சாருவை கூப்பிட போயிருக்காரு..சூப்பர் ஸ்டாரை இப்பிடித்தான் கூப்பிடுவீங்களான்னு செம டோஸ்..

செந்தழல் ரவி : (முனுமுனுப்புடன்)..ஆகா..விவரம் தெரியாத பயலா இருக்கானே..

லக்கிலுக் : யோவ்..அவரை ஏன்யா எல்லாரும் திட்டுறீங்க..அவர் ஒரு பிழைக்கத் தெரியாத ஏமாளி எழுத்தாளர்யா..நல்ல மனுசன்யா..இப்பக்கூட வன்முறையின் தோல்வின்னு ஒரு பதிவு போட்டு இருக்காரு..அந்த கருத்துல ஒன்னுகூட எனக்கு உடன்பாடு இல்ல..ஆனாலும் பிடிக்கிது..அந்த கர்வம்..அவர் தான்யா எழுத்தாளர்..சாரு கொடி பறக்குதையா..

கேபிள் சங்கர் : கண்ணுக்கு எட்டுன வரைக்கும் ஒரு கொடியும் காணோமே..அது எப்படிங்க..யாரோட கருத்துலேயும் உங்களுக்கு உடன்பாடு இல்ல..ஆனா உங்களுக்கு பிடிக்குது..இளையராஜாவை திட்டுறீங்க..ஆனாலும் பிடிக்கிதுன்னு சொல்லுறீங்க..ஒன்னுமே புரியலேயே..நீங்க என் தோரணம் விமர்சனம் படிச்சீங்களா..அதுல ஷ்ரெயா கிளிவேஜ்..

டோண்டு சார் : சிவ, சிவா..என்ன இப்பிடியெல்லாம் பேசுறீங்க..

அவீங்க ராசா: ஆகா..எல்லாரும் கொஞ்சம் பேசாம துடுப்பு போடுறீங்களா..படகு நகரவே மாட்டிங்குது…டோண்டு சார் ஏதோ சொல்ல வரீங்க போல தெரியுது..

டோண்டு சார் : எங்கே பிராமணன்…

லக்கிலுக் : ம்…”ஆத்துக்குள்ளே” இருக்காரு..

சக்கரை சுரேஷ் : மச்சான்..நான் வேணா ஆத்துக்குள்ள குதிச்சு எடுத்து தரவா..நட்புன்னா உயிரையும் கொடுப்பான் இந்த சுரேஷ்..

செந்தழல் ரவி : கடவுளே..யாருய்யா இந்த சுரேஷ்ஷு..ஒரு எத்திக்ஸ் இல்ல..உனக்கு எப்படியா இவ்வளவு பாலோயரு…ஒன்னுமே புரியலையா..ஐயோ..இன்டெர்நெட் அழியப்போகுது..எல்லாரும் உள்ள போகப்போறீங்க..

இட்லிவடையார் : ரொம்ப சந்தோசம்..எல்லொரும் உள்ள இட்லி வடை தேர்தல் குழு அமைச்சுருவோம்..யாரு, யாரு எந்த ஏரியா..வழக்கம் போல, துக்ளக் பத்திரிக்கையில இருந்து கட் அண்டு பேஸ்ட் நான் பார்த்துக்குறேன்..

உண்மைத்தமிழன் : சார்..இது வேற ஏரியா..இப்பிடித்தான் திரையுலகப் பேரணில அண்ணன் பாரதிராஜா..(நீண்ட உரையை ஆரம்பிக்க..)

எல்லோரும் : ஆகா, இதுக்கு இந்த கடலே மேலுடா சாமி…

கடலில் எல்லோரும் குதிக்க..படகு மூழ்குகிறது….

(அண்ணே..யாரு மனசு நோகாம எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்..யாரோட மனச நோகடிச்சிருந்தா மன்னிச்சுங்கண்ணே..இந்த பதிவை படிக்கும்போது எத்தனை தடவை சிரிச்சீங்களோ அத்தனை ஓட்டு போட்டுங்க..))))

56 comments:

பித்தன் said...

i can't control my laugh -:)

too good.

aana itha ellarum eppadi eduthukkaporaangannu theriyala :(

தருமி said...

//டோண்டு சார் : எங்கே பிராமணன்…

லக்கிலுக் : ம்…”ஆத்துக்குள்ளே” இருக்காரு..//

fantastic!!

Anonymous said...

WOW.. SUPPER

Suresh said...

கல்க்கல் ஸ்டார்ட்

சித்து said...

செந்தமிழ் ரவி மீது செம கொலைவெறி போல?? ஓட்டு குத்தியாச்சு.

Suresh said...

//அண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன்..இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு..யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல…//

ஹா ஹா ;) இத சொன்னதுலே இருந்தே தெரிந்து ஏதோ வில்ங்கமா இருக்குனு ஹீ ஹீ

சென்ஷி said...

//அதுல ஷ்ரெயா கிளிவேஜ்..

டோண்டு சார் : சிவ, சிவா..என்ன இப்பிடியெல்லாம் பேசுறீங்க..//

ஆமாம். அவர் தீவிர மும்தாஜ், நமீதா ரசிகர். அவர்கிட்ட போய் ஷ்ரேயாவைப்பத்தி பேசுனா என்ன செய்வார் :)

Suresh said...

//சக்கரை சுரேஷ்//

ஆமா பிரபல பதிவரின் படகு பயணத்தில் எதுக்கு அண்ணே என்னை சேர்த்திக்க ... ;) ஒரு வேளை படகு கீளினரா சேர்த்துக்கோங்க ... ஏனா டரைவர்னா ஓட்டனும் வலிக்கும் ;)

கீளினர்னா ஒரு கண்டிஷன் படகு நின்னு போனா நடு கடலில் இறங்கி தள்ள சொல்ல கூடாது

Suresh said...

//. நான் பிரபல பதிவர் இல்லாததால், பயணத்தின் கோ-ஆர்டினேட்டர்…/

இதை நான் ஓத்துக்கமாட்டேன் ;) ஆமா உங்க ரெண்டாவது பதிவிலே நான் பித்தன் கிட்ட சொல்லிட்டேன் அவிங்க பிரபல பதிவர்னு .. ஆமாம் ஒழுங்கா மாத்துங்க இல்லைனா போராட்டம் வெடிக்கும்

இப்படிக்கு அவிங்க ரசிகர் மன்ற செயலார் சுரேஷ்

எங்க அண்ணேனுக்கு ஜே

ஆமா பித்தன் தான் தலைவர் :-)

Suresh said...

//அவீங்க ராசா : எல்லாரும் நல்லா கவனிங்கப்பா..எல்லா பதிவர்களும் ஒன்னா கூடியிருக்கீங்க..இங்கேயிருந்து அக்கரைக்கு போகணும்னா 8 மைல் துடுப்பு போடணும்..எல்லாரும் ஒற்றுமையா துடுப்பு போட்டாத்தான் அக்கரைக்கு போக முடியும்..சண்டை போடக்கூடாது…சரியா???//

நான் அக்கரைக்கு பதிலா ச்க்கரை சக்கரைனு படிச்சிட்டேன் ஹீ ஹீ

Suresh said...

//அவீங்க ராசா : எல்லாரும் நல்லா கவனிங்கப்பா..எல்லா பதிவர்களும் ஒன்னா கூடியிருக்கீங்க..இங்கேயிருந்து அக்கரைக்கு போகணும்னா 8 மைல் துடுப்பு போடணும்..எல்லாரும் ஒற்றுமையா துடுப்பு போட்டாத்தான் அக்கரைக்கு போக முடியும்..சண்டை போடக்கூடாது…சரியா???//

நாங்க எல்லாம் அப்பா ஆத்தா வாத்தி மேனேஜர் சொன்னாலே கேட்க மாட்டோம் படகு கோ-ஆர்டினேட்டர்… சொன்னா கேட்டு விடுவோமா

Suresh said...

//அண்ணண்..நான் மதுரைக்காரண்ணே//

மதுர குசும்பு ;0

Suresh said...

அவிங்க ராசா : ஆமாண்ணே..என் பிரண்டு சரத்பாபு இருக்காண்ணே..

சக்கரை சுரேஷ் : சரத்பாபுவா..மச்சான்ஸ் எல்லாரும் ஓட்டு போடுங்கப்பா.//

நல்லா சிரிச்சு புட்டேன் ஹா ஹா

Suresh said...

//அய்யோ, இன்டெர்நெட் அழியப் போகுது..எல்லாரும் உள்ள../

யோவ் நான் வாய் விட்டு சிரித்து விட்டேன் கண்டோரல் பண்ண் முடியா சிரித்து பக்கதுல நண்பர்கள் எல்லாம் என்ன ஆச்சு ஏன் இப்படி சிரிக்குரிங்கனு கேட்கும் அளவுக்கு, அவங்கிய கிட்ட அது அவிங்கனு ஒருத்தர் பதிவுனு சொல்லி சப்பா

நல்லா சிரிச்சு புட்டேன்

Suresh said...

சக்கரை சுரேஷ் : சரத்பாபுவா..மச்சான்ஸ் எல்லாரும் ஓட்டு போடுங்கப்பா..

" மச்சான்ஸ் " ஹா ஹா ;) நல்லா இருக்கு

Suresh said...

//அவிங்க ராசா : ஆகா ஆரம்பிச்சுட்டாருய்யா..அய்யோ அண்ணே அவரு அந்த சரத்பாபு இல்லண்ணே..இவரு வேற..சரி அதை விடுங்க..எல்லாரும் சேர்ந்த மாதிரி துடுப்பு போடுங்க..துடுப்பு போடுறப்ப, “ஏலேலோ ஐலசா” ன்னு சொல்லணும்..எங்க சொல்லுங்க..

எல்லோரும் : ஏலேலோ ஐலசா…//

ஹா ஹா நினைத்து பார்த்தேன் சரி காமெடி மச்சான் ;-) ஹா ஹா சூப்பர் கற்பணை

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

Suresh said...

//உண்மைத்தமிழன் : எம்பெருமான் முருகப் பெருமானே…ஐலசா..

அவீங்க ராசா : அண்ணாச்சி அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது..ஆமா, செந்தழல் ரவி நீங்க ஏன் ஐலசா சொல்லாம இருக்கீங்க..சொல்லுங்க..

செந்தழல் ரவி : லக்கிலுக் சொன்னாத்தான் நானும் சொல்லுவேன்..//

ஹீ ஹீ எப்பா சாமி முடியல ரொம்ப சிரித்து விட்டேன்

பித்தான் காலேயில் போன் போட்டு சொன்னான் சரி நகைச்சுவைனு

:-) நல்லா இருக்கு யாரும் காய படுத்தாம நகைச்சுவையா இருக்கு :-

நான் ரொம்ப சிரித்தேன்

Suresh said...

கேபிள் சங்கர் அவரையும் விட்டு வைக்கலையா ஹா ஹா

Suresh said...

//டோண்டு சார் : எங்கே பிராமணன்…

லக்கிலுக் : ம்…”ஆத்துக்குள்ளே” இருக்காரு..//


சரி டைமிங் காமெடி ஹா ஹா அவ்

Suresh said...

//சக்கரை சுரேஷ் : மச்சான்..நான் வேணா ஆத்துக்குள்ள குதிச்சு எடுத்து தரவா..நட்புன்னா உயிரையும் கொடுப்பான் இந்த சுரேஷ்..

செந்தழல் ரவி : கடவுளே..யாருய்யா இந்த சுரேஷ்ஷு..ஒரு எத்திக்ஸ் இல்ல..உனக்கு எப்படியா இவ்வளவு பாலோயரு…ஒன்னுமே புரியலையா..ஐயோ..இன்டெர்நெட் அழியப்போகுது..எல்லாரும் உள்ள போகப்போறீங்க../

ஹா ஹா பஞ்ச் டைலாக் ;) அண்ணே எனக்கு நிச்சல் தெரியாது ;) இருந்தாலும் ஜாகெட் போட்டு ;) லைப் ஸேவிங் ஜாகெட் போட்டாவது ;) எடுத்து கொடுக்குறேன்

ஹா ஹா

சரி நகைச்சுவை

ஆமா எனக்கு தெரியலை எப்படி இத்துனை பாலேவர் நம்ம மொக்கைக்கு

//இன்டெர்நெட் அழியப்போகுது..எல்லாரும் உள்ள போகப்போறீங்க..///

ஹா ஹா முடியவில்லை சிரித்து

Suresh said...

//செந்தழல் ரவி : (முனுமுனுப்புடன்)..ஆகா..விவரம் தெரியாத பயலா இருக்கானே../

அண்ணே உங்களை போய் அப்படி சொல்லுவோமா ஹா ஹா ரொம்ப விவரம்னு ரெண்டாவது பதிவுலேயே தெரிந்து போச்சு ஆமா நம்ம சத்தியராஜ் அமைதிப்படை கேரக்டர் தொத்து போச்சு

Suresh said...

இட்லிவடையார் , நம்ம அண்ணே உண்மை தமிழனு ஹா ஹா யாரும் விடல்

என்ன போய் இந்த பிரபலம் லிஸ்டல சேர்த்தது தான் தப்பு
நான் எல்லாம் சும்மா மொக்கை பதிவு தான் போடுறேன்

ஆனா ரொம்ப வாய் விட்டு சிரித்தேன் நல்ல கற்பனை என்னை ஓட்டியது கூட ஜாலியாக தான் இருந்தது..

Suresh said...

(நீண்ட உரையை ஆரம்பிக்க..)
ஹா ஹா

Suresh said...

அண்ணே என்னால் ஒரு வோட்டு தமிழிஷில் தமிழ்மணத்தில் ஆனா சிரித்தது ஒரு 20-30 வாட்டி என்ன செய்ய என் நண்பர்களிடம் இந்த நகைச்சுவை பதிவை சொல்லுறேன்

Suresh said...
This comment has been removed by the author.
Suresh said...

# //அதுல ஷ்ரெயா கிளிவேஜ்..

டோண்டு சார் : சிவ, சிவா..என்ன இப்பிடியெல்லாம் பேசுறீங்க..//

ஆமாம். அவர் தீவிர மும்தாஜ், நமீதா ரசிகர். அவர்கிட்ட போய் ஷ்ரேயாவைப்பத்தி பேசுனா என்ன செய்வார் :) #

:-)))))0

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நல்ல காமெடி..

சிரியோ சிரி என்று சிரித்தேன்..!

நன்றி ராஜா..

மதுரையா நீங்க..?

வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..!

இராகவன் நைஜிரியா said...

இஃகி, இஃகி....

கலக்கல்...

வித்யாசமான யோசனைங்க..

Suresh said...

//எல்லோரும் : ஆகா, இதுக்கு இந்த கடலே மேலுடா சாமி…//

எல்லாரையும் இணைத்த அன்பு அண்ணன் உண்மை தமிழன் வாழ்க

அபுஅஃப்ஸர் said...

ஹா ஹா

நல்லாதான் காமெடி பண்ணிருக்கீங்க போங்க‌

KISHORE said...

செம காமெடி... ரொம்ப நாளுக்கு பிறகு ரசிச்சி சிரிச்ச பதிவு இது... தொடர்ந்து கலக்குங்கள்...

vinoth gowtham said...

அய்யோ வாய்பே இல்லை தல,
ஒவ்வொரு வரியும் விழுந்து விழுந்து சிரிச்சேன்..
கண்டிப்பா யாரும் தப்பா எடுத்துக்க மாடங்கனு நினைக்கிறேன்..
ஆனா படிச்சாலும் உண்மை தமிழன் மாதிரி போல்டா பின்னுட்டம் போட வாய்ப்பு இல்லை..
சுரேஷ் கதை வேறு அதனால் அவன் பின்னுட்டம் இட்டு விட்டான்..

Chanceless flow of humor..Keep it Up..

ஆதவா said...

:)

Suresh said...

//அய்யோ வாய்பே இல்லை தல,
ஒவ்வொரு வரியும் விழுந்து விழுந்து சிரிச்சேன்..
கண்டிப்பா யாரும் தப்பா எடுத்துக்க மாடங்கனு நினைக்கிறேன்..
ஆனா படிச்சாலும் உண்மை தமிழன் மாதிரி போல்டா பின்னுட்டம் போட வாய்ப்பு இல்லை..
சுரேஷ் கதை வேறு அதனால் அவன் பின்னுட்டம் இட்டு விட்டான்..

Chanceless flow of humor..Keep it Up.. //


மிக சரியா சொன்னாய் வினோத்

உண்மையில் உண்மை தமிழன் அண்ணனுக்கு ஒரு பெரிய சல்யூட்

செந்தழல் ரவி said...

:))

வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..

Anonymous said...

//வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..//

இந்த 'வாழ்க வளமுடன்' பின்னாடி ... நிறைய அர்த்தம் பொதிந்து கிடக்குற மாதிரி தெரியுதே?

Anonymous said...

//ஆமா எனக்கு தெரியலை எப்படி இத்துனை பாலேவர் நம்ம மொக்கைக்கு//

சூடு சொரணை இல்லாம அடுத்தவன் காலை ________ விடுற திறமை இருந்தால் இன்னும் ஆயிரம் பாலோவேர் கிடைக்கும்

வெங்கிராஜா said...

அமளிதுமளிப்படுது போங்க... அதிபயங்கர நக்கலோட எழுதியிருக்கீங்க.. விலாநோக சிரித்த இடங்கள்:

//சரத்பாபுவா..மச்சான்ஸ் எல்லாரும் ஓட்டு போடுங்கப்பா

//அய்யோ, இன்டெர்நெட் அழியப் போகுது..எல்லாரும் உள்ளம்…”ஆத்துக்குள்ளே” இருக்காரு..//

//சார்..இது வேற ஏரியா..இப்பிடித்தான் திரையுலகப் பேரணில அண்ணன் பாரதிராஜா..(நீண்ட உரையை ஆரம்பிக்க..)

S.A. நவாஸுதீன் said...

அண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன்..இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு..யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல…

ஏனப்பு பொய் சொல்றீங்க. படிச்சு முடிக்கிறதுக்குள்ள சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சப்பு.

S.A. நவாஸுதீன் said...

அவீங்க ராசா : அண்ணண்..நான் மதுரைக்காரண்ணே..இப்பதான் புதுசா எழுத ஆரம்பிச்சிருக்கேன்..உங்களை தாக்கி கூட ரெண்டு பதிவு போட்டுருக்கேண்ணே..

சூப்பர் குசும்பு

S.A. நவாஸுதீன் said...

செந்தழல் ரவி : அய்யோ..உங்களை தாக்கி பதிவு போட்டுட்டானா..யோவ் என்ன தைரியம்யா..இன்டெர்நெட் அழியப்போகுது..எல்லாரும் உள்ள போகப் போறீங்க..நாங்க சுவத்துல ஏறிட்டோம்..யாரு எங்களோட வர்றா…

ஹா ஹா ஹா. யாகவா முனிவர் ரேஞ்சுக்கு இருக்கே! மதுரை மல்லிக்கு மட்டுமில்ல லொள்ளுக்கும் தான்

S.A. நவாஸுதீன் said...

டோண்டு சார் : எங்கே பிராமணன்…

லக்கிலுக் : ம்…”ஆத்துக்குள்ளே” இருக்காரு..

சான்சே இல்ல. கொஞ்சம் பிரேக் கொடுங்கப்பு.

S.A. நவாஸுதீன் said...

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த பதிவை படிக்கத் தொடங்குமுன் ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் கையில் வைத்துக்கொண்டு படிக்கவும். படித்து முடித்தபின் அதிகம் சிரித்ததால் வயிற்று வலி வர வாய்ப்பு உள்ளதால் அடிவயிற்றில் தடவிக்கொள்ள உதவும்

Suresh said...

@ SA நவாஸீதீன்

//இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த பதிவை படிக்கத் தொடங்குமுன் ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் கையில் வைத்துக்கொண்டு படிக்கவும். படித்து முடித்தபின் அதிகம் சிரித்ததால் வயிற்று வலி வர வாய்ப்பு உள்ளதால் அடிவயிற்றில் தடவிக்கொள்ள உதவும்.//

மிக சரியாக சொன்னிங்க ;)

Suresh said...

உங்களை என் கேள்வி பதில் தொடர் சங்கிலிக்கு அழைத்துள்ளேன்

ராஜா said...

////////////////

பித்தன் said...
i can't control my laugh -:)

too good.

aana itha ellarum eppadi eduthukkaporaangannu theriyala :(
29 May, 2009 9:41 PM
தருமி said...
//டோண்டு சார் : எங்கே பிராமணன்…

லக்கிலுக் : ம்…”ஆத்துக்குள்ளே” இருக்காரு..//

fantastic!!
29 May, 2009 10:18 PM
கவின் said...
WOW.. SUPPER
/./////////

நன்றி தருமி, பித்தன்,கவி..

ராஜா said...

//////////////
29 May, 2009 11:14 PM
Suresh said...
# //அதுல ஷ்ரெயா கிளிவேஜ்..

டோண்டு சார் : சிவ, சிவா..என்ன இப்பிடியெல்லாம் பேசுறீங்க..//

ஆமாம். அவர் தீவிர மும்தாஜ், நமீதா ரசிகர். அவர்கிட்ட போய் ஷ்ரேயாவைப்பத்தி பேசுனா என்ன செய்வார் :) #

:-)))))0
29 May, 2009 11:29 PM
//////////////////

மிகவும் நன்றி சுரேஷ்...

ராஜா said...

///////////////
29 May, 2009 11:29 PM
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நல்ல காமெடி..

சிரியோ சிரி என்று சிரித்தேன்..!

நன்றி ராஜா..

மதுரையா நீங்க..?

///////////////////////

ஆமாண்ணே..நான் மதுரைதான்..என்னைப் பத்தி தப்பா, புரிஞ்சுக்காம வந்து வாழ்த்தியதற்கு நன்றி..

ராஜா said...

//////////////////

அபுஅஃப்ஸர் said...
ஹா ஹா

நல்லாதான் காமெடி பண்ணிருக்கீங்க போங்க‌
30 May, 2009 8:07 AM
KISHORE said...
செம காமெடி... ரொம்ப நாளுக்கு பிறகு ரசிச்சி சிரிச்ச பதிவு இது... தொடர்ந்து கலக்குங்கள்...
30 May, 2009 8:23 AM
vinoth gowtham said...
அய்யோ வாய்பே இல்லை தல,
ஒவ்வொரு வரியும் விழுந்து விழுந்து சிரிச்சேன்..
கண்டிப்பா யாரும் தப்பா எடுத்துக்க மாடங்கனு நினைக்கிறேன்..
ஆனா படிச்சாலும் உண்மை தமிழன் மாதிரி போல்டா பின்னுட்டம் போட வாய்ப்பு இல்லை..
சுரேஷ் கதை வேறு அதனால் அவன் பின்னுட்டம் இட்டு விட்டான்..

Chanceless flow of humor..Keep it Up..
30 May, 2009 8:55 AM
ஆதவா said...
:)
30 May, 2009 9:28 AM
//////////////////
நன்றி கிஷோர், ஆதவன்,வினோத், அபு அப்ஸர்...

ராஜா said...

///////////////////

செந்தழல் ரவி said...
:))

வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..
30 May, 2009 1:32 PM
//////////////////////
நன்றி ரவி...

ராஜா said...

/////////////////
30 May, 2009 2:27 PM
வெங்கிராஜா said...
அமளிதுமளிப்படுது போங்க... அதிபயங்கர நக்கலோட எழுதியிருக்கீங்க.. விலாநோக சிரித்த இடங்கள்:

//சரத்பாபுவா..மச்சான்ஸ் எல்லாரும் ஓட்டு போடுங்கப்பா

//அய்யோ, இன்டெர்நெட் அழியப் போகுது..எல்லாரும் உள்ளம்…”ஆத்துக்குள்ளே” இருக்காரு..//

//சார்..இது வேற ஏரியா..இப்பிடித்தான் திரையுலகப் பேரணில அண்ணன் பாரதிராஜா..(நீண்ட உரையை ஆரம்பிக்க..)
30 May, 2009 10:00 PM
S.A. நவாஸுதீன் said...
அண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன்..இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு..யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல…

ஏனப்பு பொய் சொல்றீங்க. படிச்சு முடிக்கிறதுக்குள்ள சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சப்பு.
30 May, 2009 10:56 PM
///////////////////
நன்றி வெங்கிராஜா, ,நவாஸ்..

ஷங்கர் Shankar said...

அவிங்க ராசா நீங்க எங்கயோ போய்டீங்க!

Joe said...

ராஜா,
சரியான நகைச்சுவை, விழுந்து விழுந்து சிரிச்சேன்.

பின்னிட்டீங்க!

தமிழ் நாடன் said...

சிரிச்சி சிரிச்சி வயத்து வலிக்குதண்ணா!

I LOVE YOU said...

AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,a片,AV女優,聊天室,情色,性愛

Post a Comment