Wednesday, 6 May, 2009

சூப்பர் ஸ்டாருடன் நான். எந்திரன் சூட்டிங் அனுபவம்

நம்பவே முடியலண்ணே..நிஜம் தான்னே..சூப்பர் ஸ்டாரை நேருல பார்த்தேங்கண்ணா..எந்திரன் சூட்டிங் அமெரிக்காவில் நடப்பதா சொன்னாங்க..ஆனா அது எங்க இடத்துல நடக்கும்னு தெரியாதுண்ணே..தினமும் ஆபிஸ் போயிட்டு போற வழியில அன்னிக்கு பார்த்தா ஒரு சலசலப்பு..என்னன்னு பார்த்தா, நம்ம எந்திரன் சூட்டிங்குண்ணே..அய்யோ…இன்னும் நம்பவே முடியலண்ணே..நம்ம சூப்பர் ஸ்டார் சூப்பரா நிக்கிறாரு.. பக்கத்துல போயி “சார்” ன்னு கூப்பிட்டேன்..”அடடே..நம்ம ஊரா..வாங்க, வாங்க…” ன்னுட்டு அப்படியே கேரவன் வேனுக்குள்ள கூப்பிட்டு போயிட்டார்..கூடவே தலைவர் மகளும் வந்துட்டாங்க…

“சார்..என்னால நம்பவே முடியலை சார்..”

“ஹா.ஹா…சொல்லுங்க என்ன சாப்பிடுறீங்க..டீ..காபி..”

“எதுவும் வேணாம் சார்..உங்களை நேருல பார்த்தா சில கேள்விகள் கேக்கலாமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.கேக்கவா..??”

“என்னப்பா நிருபரா வேலை பார்க்குறிங்களா..பரவாயில்லை கேளுங்க..”

எனக்கு ஒரு சின்ன பிரச்சனைண்ணே..நம்ம கிட்ட ஒரு பாழாப் போன மனசாட்சி இருக்கு..எப்ப பார்த்தாலும் சாகடிக்கும்..அதுவும் கேள்வி கேப்பேன்னு அடம் புடிக்குதுண்ணே..

“எப்ப சார் அரசியலுக்கு வருவீங்க…”

“ஹா..ஹா..சொல்லி போரடிச்சிருச்சுப்பா…ஆண்டவன் சொன்னா வருவேன்..”

(என் மனசாட்சி) அப்ப ஆண்டவங்கிட்டயே கேட்டிருக்குலாமோ..”


“ஆண்டவன் எப்ப சார் சொல்லுவாரு..”

“நான் சொல்லுறப்ப..”

(என் மனசாட்சி) விசு அரட்டை அரங்கம் பார்ப்பிங்களா சார்..”

 

“சார், நீங்க அரசியலுக்கு வரதை தெளிவா சொல்லலாமே சார்..”

“பாருங்க தம்பி..இதுக்கு நான் குசேலன் படத்துலேயே பதில் சொல்லிட்டேன்”

(என் மனசாட்சி) நான் இடைவேளை போட்டவுடனே ஓடியாந்துட்டேன்


“நானும் கேள்விப்பட்டுத்தான் ஒரு மாசம் கழிச்சு படத்துக்கு போனேன் சார்..ஆனா நீங்க அதைப் பத்தி பேசுனதெல்லாம் தூக்கிட்டாங்க”

“அது என்ன பண்றது தம்பி..கோடி கோடியா பணத்தைப் போட்ட தயாரிப்பாளர் சொல்லிட்டாரரு..கேக்கனுமில்ல”

(என் மனசாட்சி) “தலைவர் வாழ்க” ன்னு அடித்தொண்டையில கத்திக்கிட்டே ஒரு நாள் சம்பாதிச்ச பணத்தை செலவழிச்சு, பால் வாங்கி உங்க கட் அவுட்ல ஊத்துறானே, அவனப் பத்தி நமக்கு என்ன கவலைண்ணே..”

 

“அப்பா, கூடிய சீக்கிரம் அரசியலுக்கு வருவாருன்னு உங்க பொண்ணு சொல்லுறாங்களே சார்..”

“ஹா..ஹா…அதை அவுங்ககிட்ட தான் கேக்கனும்..”

(என் மனசாட்சி) “சுல்தான்”  படம் எப்ப ரீலிஸ் சார்

சார் என்ன பேசிக்கிட்டு இருக்கும் போதே மேல சுடு தண்ணி ஊத்துறீங்க….முழிச்சி பார்த்தா என் பொண்டாட்டி பத்ரகாளி மாதிரி நிக்கிறாண்ணே… அடப்பாவமே எல்லாம் கனவா..ஒரு நாளாவது நல்ல கனவு வருதா பாருங்கண்ணே..

“ஏங்க, என்ன எருமை மாடு மாதிரி  ஒரு தூக்கம்..பல் விளக்கலைன்னா காபி கிடையாது, சொல்லிப்புட்டேன்..”

“அடிப்பாவி..கனவுல குறுக்கால வந்து கெடுத்துட்டேயேடி.. ரொம்ப நாளைக்கு அப்புறம் கொஞ்சம் தூக்கி நிறுத்துற மாதிரி கனவு வந்துச்சுடி”

“அது சரி, முதல்ல லுங்கிய தூக்கி கட்டுங்க....அது என்ன தூக்கத்துல “தமிழா, கட் அவுட்டுக்கு பால் ஊத்தாதேடா..அழுகுற உன் குழந்தைக்கு ஊத்துடா” ன்னு பினாத்துறீங்க..

“அது பாழாப்போன மனசாட்சிடி..சூப்பர் ஸ்டாரை பேட்டி எடுக்குற மாதிரி கனவு கண்டேன்டி..”

“அய்யோ…சூப்பர் ஸ்டாரா…சூப்பருங்க…ஏங்க, ஏங்க, அப்படியே எந்திரன் படம் எப்ப ரீலிஸ்ன்னு கேட்டு சொல்லுங்க..”

கடவுளே…நான் வீட்டில இருந்து ஆரம்பிக்கனும் போலயே…

17 comments:

குடுகுடுப்பை said...

கடவுளே…நான் வீட்டில இருந்து ஆரம்பிக்கனும் போலயே…//

இது...

ரஜினிகாந்த நல்ல நடிகர்.....

மகேஷ் said...

:))))

Anonymous said...

அது சரி ஐஸ்வர்யா வந்தகங்களா ....
இது ரொம்ப டூ மச் கனவு....
- விஜய் -

தீப்பெட்டி said...

:-))

Seenu said...

சூப்பர் ஸ்டாருடன் நான். எந்திரன் சூட்டிங் அனுபவம்

தலைப்பை பார்த்து சூப்ர(சூப்பர்) ஸ்டார் ஜால்ரா பதிவோன்னு சந்தேகபட்டேன்...
ஆனா கலக்கலான பதிவு.....அருமை....அட்டகாசம் !!!

SUBBU said...

//கடவுளே…நான் வீட்டில இருந்து ஆரம்பிக்கனும் போலயே…//

:))))))))))))))))

பித்தன் said...

//குடுகுடுப்பை said...
கடவுளே…நான் வீட்டில இருந்து ஆரம்பிக்கனும் போலயே…//

இது...

ரஜினிகாந்த நல்ல நடிகர்.....
//

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்ன்னு எங்களுக்கு தெரியும் :)

Anonymous said...

உலகத்திலேயே சினிமாக் காரவர்கள் மக்களை ரொம்ப ஆட்டி வைப்பது தமிழர்களைத் தான்.
அந்தக் கருமம் ஒழிய நம்ம ஒவ்வொருத்தரும் சினிமாவையும்,நடிக,நடிகைகளையும் வைக்க வேண்டிய இடத்திலே வைக்கணும்.
நீங்களும் நானும் இப்பவே ஆரம்பிக்கலாமா?

சரவணகுமரன் said...

//“ஹா.ஹா…சொல்லுங்க என்ன சாப்பிடுறீங்க..டீ..காபி..”//

கனவா தான் இருக்கணும்... ஏதோ சர்வர் கேட்ட மாதிரி சொல்றீங்க... :-)

ராஜா said...

///////////////////

பித்தன் said...
//குடுகுடுப்பை said...
கடவுளே…நான் வீட்டில இருந்து ஆரம்பிக்கனும் போலயே…//

இது...

ரஜினிகாந்த நல்ல நடிகர்.....
//

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்ன்னு எங்களுக்கு தெரியும் :)
7 May, 2009 5:43 AM
/////////////////////

வழிமொழிகிறேன்....

ராஜா said...

////////////////////

மகேஷ் said...
:))))
6 May, 2009 7:35 PM
Anonymous said...
அது சரி ஐஸ்வர்யா வந்தகங்களா ....
இது ரொம்ப டூ மச் கனவு....
- விஜய் -
6 May, 2009 7:40 PM
தீப்பெட்டி said...
:-))
///////////////////////
நன்றி விஜய், தீப்பெட்டி மகேஷ் அண்ணா... விஜய் அண்ணாச்சி, ஐஸ்வர்யா அந்த நேரத்துல எனக்கு டீ எடுத்து வர போயிருந்தாங்க...

ராஜா said...

//////////////////

Seenu said...
சூப்பர் ஸ்டாருடன் நான். எந்திரன் சூட்டிங் அனுபவம்

தலைப்பை பார்த்து சூப்ர(சூப்பர்) ஸ்டார் ஜால்ரா பதிவோன்னு சந்தேகபட்டேன்...
ஆனா கலக்கலான பதிவு.....அருமை....அட்டகாசம் !!!
7 May, 2009 12:00 AM
SUBBU said...
//கடவுளே…நான் வீட்டில இருந்து ஆரம்பிக்கனும் போலயே…//

:))))))))))))))))
7 May, 2009 5:04 AM
////////////////////
நன்றி சுப்பு, சீனு அண்ணாச்சி...

ராஜா said...

//////////////

Anonymous said...
உலகத்திலேயே சினிமாக் காரவர்கள் மக்களை ரொம்ப ஆட்டி வைப்பது தமிழர்களைத் தான்.
அந்தக் கருமம் ஒழிய நம்ம ஒவ்வொருத்தரும் சினிமாவையும்,நடிக,நடிகைகளையும் வைக்க வேண்டிய இடத்திலே வைக்கணும்.
நீங்களும் நானும் இப்பவே ஆரம்பிக்கலாமா?
7 May, 2009 7:38 AM
/////////////////

கண்டிப்பா அண்ணே...

ராஜா said...

////////////////

சரவணகுமரன் said...
//“ஹா.ஹா…சொல்லுங்க என்ன சாப்பிடுறீங்க..டீ..காபி..”//

கனவா தான் இருக்கணும்... ஏதோ சர்வர் கேட்ட மாதிரி சொல்றீங்க... :-)
7 May, 2009 7:46 PM
////////////////

ஹா..ஹா..ரசித்தேன்..அப்பயே சுதாரிச்சிகிட்டீங்களா..

அபுஅஃப்ஸர் said...

கலக்கல் ராஜா

ம் ம் நிசமாவே ஏதாவது கேக்கனும்னு நினைத்து இப்படியெல்லாம் எழுதி மனசை தேத்திக்கிறீங்க நல்லதுதான்... உங்க எழுத்தோட்டம் நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

வெத்து வேட்டு said...

i am becoming your fan

I LOVE YOU said...

AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,性愛,聊天室,情色,a片,AV女優

Post a Comment