Thursday, 14 May, 2009

காங்கிரஸ் ஜெயிச்சுரும் போல இருக்குண்ணே…

என்னண்ணே..எலக்சன் எப்படிப் போச்சு..மூஞ்சில கரியை பூசினாயிங்களா..சாரி, கையில மைய வச்சாயிங்களா…ரொம்ப வருத்தமா இருக்குண்ணே…ஒவ்வொரு எலக்சனப்பயும் எங்க ஊரு களை கட்டும்…நான் இல்லாம போயிட்டேன்..இங்க அமெரிக்காவிலயும் தாண்ணே 2 மாசத்துக்கு முன்னாடி எலக்சன் நடந்துச்சு..எலக்சனான்ணே அது..சுடுகாடுண்ணே..ஒரு மைக் செட் இல்ல, ஒரு போஸ்டர் இல்ல, கட் அவுட் இல்ல..எல்லாரும் ஆபிஸ் வந்துட்டாயிங்க..என்னடா ஓட்டு போடலயான்னு கேட்டா, இன்டெர்நெட்ல போட்டுட்டாயிங்களாம்..ரசிக்கத் தெரியாத ஜென்மங்கண்ணே…

“எதிர்க்கட்சியினரை பார்த்து ஒன்று கேட்டுக்கொள்கிறேன்..”

“ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பிர்..”

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தனி ஈழம்..”

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காவிரி தண்ணி..”

“டே..சோமாறி..உன்னப்பத்தி எனக்கு தெரியாதா..உன் சின்ன வீடு…தூ…”

“ஒண்டிக்கு ஒண்டி வரயா மாமூ…”

"என் தலைவனப் பார்த்தா கேக்குற மொள்ளமாரி..." 

இதெல்லாம் இல்லாம என்ன அண்ணே எலக்சன்…அரசியல் நான் ஒண்ணாப்பு படிக்கிறப்ப இருந்தே என் ரத்தத்துல ஊறி கெடக்குண்ணே..எங்க ஸ்கூலுல எல்லாரும் எம்.ஜி.ஆர் கட்சி..நான் மட்டும் டி.எம்.கே..அடி அடின்னு அடிப்பாயிங்கண்ணே..விளையாட்டுக் கூட சேக்க மாட்டாயிங்கண்ணே..நான் எதிர்க்கட்சியாம்..வேற வழியில்லாம நானும் எம்.ஜி.ஆர் கட்சியல சேர்ந்துட்டேன்..ஒரு கன்டிசன் போட்டு சேர்த்துக்கிட்டாயிங்க..”தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வாழ்க” அப்படின்னு ஆயிரம் தடவை எழுதனுமாம்..நானும் எழுதினேன்ணே..வாங்கி படிச்சுட்டு செம அடி..”தமிழக “முதலை”மைச்சர் எம்.ஜி.ஆர்..” ன்னு எழுதி வச்சிருந்தேண்ணே..அப்பய குசும்ப பாருங்கண்ணே..ஓட்டுப் போடுற வயசு வந்தவுடனே நம்மளுக்கு ஆயுத எழுத்து சூரியா ன்னு நினைப்பு..ஒரு சேக்காளிய ஏத்தி விட்டு கவுன்சிலர் எலக்சனுல நிக்க விட்டோம்..பையன் நம்ம சரத்பாபு மாதிரியே நல்ல பையன்னே..அதனாலயே, மொத்தம் 10 ஓட்டு தான் வாங்கினான்..மொத்தம் 11 பேரு எங்க டீமுல..

இதனாலேயே எலக்சன்னாலே வெறுத்து போச்சுண்ணே..ஒவ்வொரு எலக்சன்லேயும் நல்ல சுயேச்சைக்கு தாண்ணே ஓட்டுப் போடுவேன்..இந்த முறையாவது காங்கிரஸ் வரக்கூடாதுன்னு ஓட்டு போடனும்னு ஆசைண்ணே..முடியலண்ணே..எங்க ஊரு அத்தைக்கு இன்னைக்கு போன் பண்ணியிருந்தேன்..

“என்ன அத்தை..நல்லா இருக்கிங்களா, எலக்சன் எப்படிப் போகுது..”

“அது போகுதுப்பா தம்பி..ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன”

“ஐயோ அத்தை..ராவணணே ஆளட்டும்..என்ன அங்க ஒவ்வொரு ஓட்டுக்கு 500 ரூபா தராயிங்களாமே..கவலையா இருக்கு அத்தை..”

“ஆமா தம்பி..எனக்கும் கவலையாதான் இருக்கு..நம்ம குடும்பத்துக்கு வர வேண்டிய பணத்தை நம்ம வார்டு கவுன்சிலர் அமுக்கிட்டாம்பா..கேக்கவும் சங்கடமா இருக்குப்பா..”

டீச்சர் வேலை பார்க்குராங்கண்ணே..

“சரி அத்தை..யாருக்கு ஓட்டு போட்டிங்க..”

“காங்கிரஸிக்கு தான்..”

“ஐயோ அத்தை..காங்கிரஸ் வந்தா இலங்கை தமிழர்களுக்கு..”

“சும்மா இருப்பா தம்பி..கலைஞர் தான் வாத்தியாருங்களுக்கு நல்லா செய்வாரு..அந்தம்மா வந்தா ஸ்டிரைக் பண்ணக் கூட விடாது..”

இதுக்கு மேல என்னத்தை பேசுறது..தென்சென்னையில எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணாச்சி ஒருத்தர் இருக்காருண்ணே..எலக்சனுக்கு முன்னாடி போன் பண்ணி..

“அண்ணாச்சி..சரத்பாபு உங்க தொகுதில தான் நிக்கிறாரு..படிச்சவரு அண்ணாச்சி..ஓட்டு போடுங்க..”

“என்ன தம்பி..ஜெயிக்குறவங்களுக்கு தாம்பா ஓட்டு போடனும்..டி.எம்.கே தான் போடப்போறேன்..”

செய்யிறவங்களுக்கு ஓட்டு போட மாட்டாராம்..ஜெயிப்பவங்களுக்குத்தான் ஓட்டு போடுவாராம்..

பாண்டிச்சேரியில இருக்குற நம்ம தோஸ்துக்கு போன் பண்ணிணேன்ணே..

“என்னடா யாருக்கு ஓட்டு..”

“காங்கிரஸிக்கு தான்டா..”

“அடப்பாவி..டே..எல்லாம் தெரிஞ்ச நீயே…”

“இல்லடா, சென்டர்ல பி.ஜே.பி வரக்கூடாது..பா.ம.கவ புடிக்காது..சுயேச்சைக்கு ஓட்டுப் போட்டு ஓட்ட வேஸ்ட் பண்ண விரும்பலை…அதனால தான்..”  

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….

24 comments:

கிரி said...

:-)))

//சும்மா இருப்பா தம்பி..கலைஞர் தான் வாத்தியாருங்களுக்கு நல்லா செய்வாரு..அந்தம்மா வந்தா ஸ்டிரைக் பண்ணக் கூட விடாது//

இது பலர் (தற்போது கூட) கூற கேட்டு இருக்கிறேன்..

KRICONS said...

///என்னடா ஓட்டு போடலயான்னு கேட்டா, இன்டெர்நெட்ல போட்டுட்டாயிங்களாம்..ரசிக்கத் தெரியாத ஜென்மங்கண்ணே…///
///மொத்தம் 10 ஓட்டு தான் வாங்கினான்..மொத்தம் 11 பேரு எங்க டீமுல...///

இப்படி நகைசுவையாக ஆரம்பித்த பதிவு

///செய்யிறவங்களுக்கு ஓட்டு போட மாட்டாராம்..ஜெயிப்பவங்களுக்குத்தான் ஓட்டு போடுவாராம்..///

கொஞ்சம் சீரியஸ் ஆகி

///இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….///

கடைசியில் பயங்கர சீரியசாக சிந்திக்க வைக்கும் பதிவு.

Suresh said...

படிச்சி சிரித்து கருத்து இருக்கும், உங்க நக்கலும் இருக்கு சூப்பர் ;) நீங்க உங்க பானியில் கலக்குறிங்க அண்ணாச்சி

Suresh said...

காங்கிரஸ் வரும். அது திமுக ஜெய்தால் அவங்களோட கூட்டனி, அதிமுக ஜெய்தால் அவங்களோட கூட்டனினு எப்பவும் ரெடி ... ஆனா போன தடவ மாதிரி 40 வோட்டு சக்தி இருக்காது அதனால் தமிழ்நாட்டில் 23 ஸீட் தான் கூட்டனி வரும்.. பார்ப்போம்..

கலைஞர் நினைத்து இருந்தால் 40 வைத்து ஈழத்து போரை நிறுத்தி இருக்கலாம் அவரு பண்ணல் என்ன செய்ய ..

r.selvakkumar said...

//நல்ல பையன்னே..அதனாலயே, மொத்தம் 10 ஓட்டு தான் வாங்கினான்..மொத்தம் 11 பேரு எங்க டீமுல..//
கலகலப்பான நகைச்சுவை நடை. இந்த நடையை பிடித்துக்கொள்ளுங்கள், நிறைய எழுதுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

காங்கிரஸ் ஜெயிச்சுடுமா அண்ணே:(

TAARU said...

///நானும் எழுதினேன்ணே..வாங்கி படிச்சுட்டு செம அடி..”தமிழக “முதலை”மைச்சர் எம்.ஜி.ஆர்..” ன்னு எழுதி வச்சிருந்தேண்ணே..அப்பய குசும்ப பாருங்கண்ணே.////

ஹ்ம்.. ஹ ஹ் ஹா ஹா ஹா....நம்ம ஊரு காரைங்க குனிய வச்சு குறுக்குலையே அடி போட்டு இருப்பாய்ங்களே!!!! ரொம்ப நல்லவைங்க...


//////மொத்தம் 10 ஓட்டு தான் வாங்கினான்..மொத்தம் 11 பேரு எங்க டீமுல../////
11 ல இருக்கணும்...நீங்க தான் அந்த ஒரு ஓட்ட அடுத்தவனுக்கு போட்டதா???


கவலை கொஞ்சம் கூட வேண்டம் ராசா... எத்தன 500 கொடுத்தாலும் இந்த வாட்டி காங்கிரஸ்/தி மு க தமிழ் நாடுல மண்ணை கவ்விடும்... மத்திய நிதி அமைச்சருக்கு deposit கிடைக்குறது கஷ்டம்னு நேற்றைய poll சொல்லுது. நம்ம ஊர்ல கூட "அ"ண்ணாச்சிக்கு எதிரா ஏதோ சதி பண்ணி இருக்காய்ங்க...
தமிழக பிரஜைகள் கண்டிப்பா துரோகிகள மன்னிக்க மாட்டாய்ங்க .... ஆப்பு உறுதி...

நம்பிக்கையுடன்
அய்யனார்.
ஒரு குட்டி matter:
http://selvaspeaking.blogspot.com/2009/05/blog-post_615.html

அப்பாவி முரு said...

/////இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….///

ராசா.,

இது மகாதேவி படத்துல பி. எஸ். வீரப்பா சொல்லுற வசனமாச்சே.
படத்துல சொல்லிக்கூட ஐம்பது வருசமாகப்போகுது.
கவலைப்பட வேணாம் ராசா, ஒரு விடிவுகாலம் பொறக்கும் இல்லீன்னா விடிஞ்சிருக்குற ஊராப் பாத்து செட்டிலாகிற வேண்டியது தான்.

SUBBU said...

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….
:))))

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

Anonymous said...

Fate!!!!!!!!!!!

DMK will favour their family members alone.

These peoples wont change....................

அபுஅஃப்ஸர் said...

தெளிவா எழுதிருக்கிய்ய அண்ணாச்சி

நீங்க தலைகீழே நின்னாலும் நம் மக்கள் மேன்மக்களே

வான்முகிலன் said...

வணக்கம். நீங்கள் எதை வைத்து காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறினீ்ர்கள்? உங்கள் அத்தையும், உங்கள் நண்பர்களும் மட்டும்தான் காங்கிரசா? ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். யார் யாருக்கு ஓட்ட போட்டார்கள் என்று போட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். கலைஞர் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போட்டார் என்று எப்படி உங்களால் நிரூபிக்க முடியும்? உங்கள் அத்தை அரசு ஊழியராய் இருப்பதால் வெளிப்படையாக வேண்டுமானால் அவர் அப்படி சொல்லியிருக்கலாமே. என்ன ரொம்ப போர் அடிக்குதா?

biskothupayal said...

அண்ணே என் ஓட்டு சரத் பாபுக்கு தான்

பித்தன் said...

//இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்….
//

இப்பவாச்சி நம்ம கட்சி கொள்கைய தெரிஞ்சிகிட்டிகளே அதுவே போதும்.

Anonymous said...

//எங்க ஸ்கூலுல எல்லாரும் எம்.ஜி.ஆர் கட்சி..நான் மட்டும் டி.எம்.கே..அடி அடின்னு அடிப்பாயிங்கண்ணே..//

உடன்பிறப்பே! மிசா காலத்திலும் நம்மை இப்படித் தான் அடித்தார்கள்

Anonymous said...

You can't vote in internet in U.S. If you want you can apply for postal vote in advance with valid reason.

Subu

Anonymous said...

no internet voting in US. they welcome you with smiling face. did not see any police or rowdies.
-aathirai.

ROJA said...

ரொம்ப அருமையான பதிவு..மானமுள்ள தமிழன் ஒவ்வொருவரின் சார்பாகவே நிீங்கள் எழுதியதாக எனக்கு தோன்றுகிறது...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.....!

Anonymous said...

-)))

//சும்மா இருப்பா தம்பி..கலைஞர் தான் வாத்தியாருங்களுக்கு நல்லா செய்வாரு..அந்தம்மா வந்தா ஸ்டிரைக் பண்ணக் கூட விடாது//

இது பலர் (தற்போது கூட) கூற கேட்டு இருக்கிறேன்..

athalathaan kalaijarukku muunu bondaaddiyaa_

கிஷோர் said...

நல்லா எழுதிறிங்கண்ணே..!
சிரிப்பா ஆரம்பிச்சு சீரியஸ்சா முடிச்சிருக்கீங்க வாழ்த்துகள்.

சித்து said...

நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா??

Anonymous said...

It's sad as a Eela tamilian we excepted more from our Indian bro's and sister's but from your story I realised no one their to help us…:(

I LOVE YOU said...

AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,性愛,聊天室,情色,a片,AV女優

Post a Comment