Saturday 9 May, 2009

பிளடி இண்டியன்ஸ்.....

“பிளடி இண்டியன்ஸ்” ன்னு ஒரு வெள்ளைக்காரன் உங்க கிட்ட சொன்னா உங்களுக்கு எப்படிண்ணே இருக்கும்..அவன சாகடிக்கலாம் போல இருக்கும்லண்ணே..எனக்கு ஏக்கமா இருக்கும்ணே…

இங்க அமெரிக்காவுல, எங்க அபார்ட்மெண்டுக்கு அடுத்த வீட்டுல ஒரு வெள்ளக்கார தாத்தா இருக்காருண்ணே..பேரு “ஜக் பென்ட்லே”…80 வயசு இருக்கும்ணே..எழுந்து நடக்க முடியாது..எப்போதும் வீல் சேர் தான்..அவர் மட்டும் தனியா இருக்காருண்ணே..பொண்டாட்டி கிடையாது..அவரோட மகன் தனிக்குடித்தனம் இருக்கான் போல..அப்ப, அப்ப வந்து பார்ப்பான்..

ஒரு நாள் என்னோட வாசல்ல நின்னுக்கிட்டு நம்ம சேக்காளிங்களோட பேசிக்கிட்டு சத்தம் போட்டு பேசுக்கிட்டு இருந்தேண்ணா..அவருக்கு இடஞ்சலா இருந்துருக்கும் போல, வீல் சேருல இருந்தபடியே வெளியே வந்துட்டாரு…

“ஹலோ…என்ன இங்க சத்தம்,பக்கத்து வீட்டில குடியிருக்க வேணாமா…பிளடி இண்டியன்ஸ்…”

சத்தம் போட்டு பேசுனது தப்புதாண்ணே..அதுக்காக இப்படியான்னே பேசுறது..எனக்கு நாக்கு மேல கோவம் வந்து கன்னாபின்னான்னு பேசிட்டேண்ணா..எனக்கே கஷ்டமா இருந்துச்சுண்ணே..தாத்தா வயசுண்ணே…

ஒருநாள் ஆபிஸ் விட்டு வந்தேண்ணே…பக்கத்து வீட்டு இருந்து சத்தம்..பயந்து போயி, கதவை தொறந்து பார்த்தா, பாவம்ணே..தாத்தா பாத்ரூம் போனப்ப கிழே விழுந்துட்டாருண்ணே…அவருனால எந்திருக்க முடியாம அப்படியே தவழ்ந்து, தவழ்ந்து வந்தார் பாருங்கண்ணே…வாழ்க்கையே சீ..ன்னு ஆகிடுச்சுண்ணே..எதிரிக்கு கூட இந்த நிலமை வரக்கூடாதுண்ணே…உடம்பெல்லாம் மலம்ணே..என்னால தாங்க முடியலைண்ணே..நம்மல்லாம் மனுசயங்கண்ணே..அப்படியே அவர அள்ளி தூக்கிக்கிட்டேண்ணே…

“ராஜா..ராஜா..வேண்டாம்பா..உடம்பெல்லாம் அசிங்கம்பா..உனக்கும் ஒட்டிக்கும்பா..” அழுகுராருண்ணே…

மனசுல இருக்குற அசிங்கத்தை விடவாண்ணே. இதெல்லாம்..

“பரவாயில்ல சார்…”  அப்படின்னுட்டு அப்படியே ஒரு துணிய எடுத்து துடைச்சி விட்டேண்ணே… என் கைய அப்படியே பிடிச்சுக்கிட்டு குழந்தை மாதிரி அழுகுறாருண்ணே..

“ஏண்டா ராஜா..நீ எனக்கு பொறக்கலை…”

“சார், என்ன ஆச்சு..ஏன் தனியா இருக்கிறீங்க..நீங்க உங்க பையனோட இருக்கலாமே…”

அவர் முகம் விரக்தியாருச்சுண்ணே…

“இல்லப்பா..என்னோட பையன் ஒத்துக்கல..அவனுக்கு அவன் ஆபிஸ் வேலை பார்க்கவே நேரம் இல்லையாம்..வெளியே அனுப்பிட்டான்..மாசத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பான்..”

“என்ன சார் உலகம் இது..பெத்த அப்பா விடவா காசு..”

“சரிப்பா, அப்ப நீ ஏன் உங்க வீட்டை விட்டு இங்க வந்த..”

எனக்கு யாரோ செருப்ப கழட்டி அடிக்குற மாதிரி இருந்துச்சுண்ணே..அம்மா, அப்பாவை இந்த வயசான காலத்துல விட்டுட்டு இங்க வந்து சந்தோசமா இருக்கோம்னு நினைக்கிறீங்களா..இல்லண்ணே…சுயநலம்ணே…ஒவ்வொரு மாசமும் சம்பளக்காசு வரும்போதும் அம்மா, அப்பா ஞாபகம் தாண்ணே வரும்..பாவக் காசுண்ணே…நமக்காக தன் வாழ்க்கையே குடுத்தவங்கள அங்க தனியா விட்டுட்டு எங்க சுய வாழ்க்கைக்காக இங்க வந்து கிடக்கோம்ணே…பாவம்ணே..இப்பயும் எங்க அம்மாகிட்ட கேளுங்க, “என் பையன் பாரின்லே இருக்கான்..”அப்படியே பூரிச்சு போயிடுவாங்கண்ணே…ஒருநாள் அம்மானால தாங்க முடியல..”தம்பி ராசா..இங்க வந்துருப்பா, உன்னை பார்க்காம இருக்க முடியலப்பா..” அழுதாங்கண்ணே..வீட்டுல திட்டிருப்பாய்ங்க போல..அடுத்த நாள் அவசரமா போன் பண்ணி..

”தம்பி அவசரம் இல்லப்பா..இப்பல்லாம் அமெரிக்கா ஈசியா போக முடியாதாமே..எங்களை பத்தி கவலைப்படாதப்பா..நாங்கல்லாம் இன்னைக்கோ நாளைக்கோ..நீதான் வாழப் போறவன்..”

நம்மோட எதிர்காலத்துக்காக, தன்னோட நிகழ்காலத்தையே தியாகம் பண்றவங்கண்ணே…

அப்புறம் “ஜக்” நமக்கு நல்ல பிரண்ட் ஆகிட்டாருண்ணே..ஆனாலும் என்னை “பிளடி இன்டியன்” னுதான் கூப்பிடுவாருண்ணே..ஆனா, செல்லமா…நானும் குசும்புக்காரன் தாண்ணே..”சக்” ன்னு கூப்பிடுவேன்..

“ராசா, “சக்” குன்னு கூப்பிடாதப்பா..அது கெட்டா வார்த்தப்பா..”

“நீங்க பிளடி இண்டியன்னு கூப்பிடிறதை நிறுத்துங்க..அப்பத்தான்..”

குழந்த மாதிரி சிரிப்பாருண்ணே…அவருக்கு உறைப்பு பண்டம்ன்னா சுத்தமா ஆகாது..நாங்க வேணும்னே அவருக்கு உறைப்பு முருக்கு குடுத்து கலாய்ப்போம்..பாத்ரூம்ல போயி, அவசரம் அவசரமா வாயைக் கழுவிட்டு “பிளடி இண்டியன்ஸ்” ன்னு சொல்லி சிரிப்பாரு..

அன்னைக்கி அவருக்கு பொறந்த நாளுண்ணே…நானும் என்னோட மனைவியும் அவருக்காக உறைப்பு கம்மியா செஞ்சு அசத்தலாம்னு ஆசைப்பட்டு, காலையில எழுந்து எல்லா வேலையும் முடிச்சிட்டு அவரக் கூப்பிடலாம்ன்னு நினச்சுக்கிட்டு இருந்தேன்..யாரோ கதவைத் தட்டுறாங்கண்ணே..திறந்து பார்த்தா, பெரியவரோட பையன்..

“தம்பி..கொஞ்சம் வீடு வரைக்கும் வந்து போறீங்களா..”

சரி கேக் வெட்டத்தான் கூப்பிடுறாங்கன்னு அவசரம் அவசரமா “குளோப் ஜாமுன்”ன ஒரு ட்ப்பால எடுத்துக்கிட்டு போயி அவரு வீட்டுக்கு போறேன்….அப்படியே வீல் சேருல செத்து கிடக்குறாருண்ணே…கண் அப்படியே என்னையே பார்க்குதுண்ணே..உதடு ஏதோ சொல்ல வந்தது போல தொறந்து அப்படியே இருக்குண்ணே..என் உசிரை யாரே என்கிட்ட இருந்து பிச்சி எடுத்துக்கிட்டு போன மாதிரு இருந்துச்சுண்ணே..அப்படியே வாய தொறந்து “பிளடி இண்டியன்”னு கூப்பிடுவாருன்னு அவர் வாயவே பார்த்துக்கிட்டு நின்னேண்ணே..உலகத்துலே கொடுமையான விசயம் சாவுதாண்ணே…


54 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நெஞ்சைத் தொட்டது இடுகை..........

(முதியோர் இல்லம்-

இது மனிதக் காட்சி சாலை
இங்கு
விலங்குகள் வந்து
மனிதரைப் பார்த்துப்போகும்.

என்ற கவிதை தான் நினைவுக்கு வந்தது

Subha said...

ஜாலியா தொடங்கி..ரொம்ப கஷ்டமாயிடுச்சு..

Unknown said...

உங்கள் எழுது நடை மிகவும் அருமை ...!

வாழ்க & வளர்க :))

Arivazhagan said...

Very moving.. My sympathies to the family and to you who had been more than his family.

அப்துல்மாலிக் said...

ராஜாண்ணே மனசு வலிச்சுடுச்சி

ரொம்ப அருமையான தேவையான பதிவு

முதியோர்யில்ல‌ம் அதிக‌மாகிட்டுவ‌ரும் இந்த‌ நேர‌த்தில் இப்ப‌டி ஒரு ப‌திவு தேவையான‌து

பெற்றோரின் வ‌லியை அருமையா உண‌ர்த்திருக்கீங்க‌

Subankan said...

டச் பண்ணிட்டீங்கண்ணா

Unknown said...

என்ன எழுதுற்துன்னே தெரியல

ரொம்ப அருமை

நன்றி

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நல்லொரு பதிவு

கிருபாகரன் said...

really superb...

Vishnu - விஷ்ணு said...

// மனசுல இருக்குற அசிங்கத்தை விடவாண்ணே. இதெல்லாம்.. //

செருப்பால அடிச்சமாதிரி.

// உலகத்துலே கொடுமையான விசயம் சாவுதாண்ணே…

நிசமாதாண்ணே....

அவிய்ங்க ராசா said...

//////////////

முனைவர்.இரா.குணசீலன் said...
நெஞ்சைத் தொட்டது இடுகை..........

(முதியோர் இல்லம்-

இது மனிதக் காட்சி சாலை
இங்கு
விலங்குகள் வந்து
மனிதரைப் பார்த்துப்போகும்.

என்ற கவிதை தான் நினைவுக்கு வந்தது
9 May, 2009 12:32 AM
/////////////////////
உங்க கவிதை மனசை தொட்டுடிச்சி..நன்றி...

அவிய்ங்க ராசா said...

//////////////////

Subha said...
ஜாலியா தொடங்கி..ரொம்ப கஷ்டமாயிடுச்சு..
9 May, 2009 1:25 AM
பாஸ்கரன் சுப்ரமணியன் said...
உங்கள் எழுது நடை மிகவும் அருமை ...!

வாழ்க & வளர்க :))
9 May, 2009 2:47 AM
Arivazhagan said...
Very moving.. My sympathies to the family and to you who had been more than his family.
9 May, 2009 2:58 AM
////////////////////
வருகைக்கு நன்றிண்ணே...

அவிய்ங்க ராசா said...

///////////////

அபுஅஃப்ஸர் said...
ராஜாண்ணே மனசு வலிச்சுடுச்சி

ரொம்ப அருமையான தேவையான பதிவு

முதியோர்யில்ல‌ம் அதிக‌மாகிட்டுவ‌ரும் இந்த‌ நேர‌த்தில் இப்ப‌டி ஒரு ப‌திவு தேவையான‌து

பெற்றோரின் வ‌லியை அருமையா உண‌ர்த்திருக்கீங்க‌
9 May, 2009 3:05 AM
//////////////////
நன்றிண்ணே...பெற்றோர் தெய்வம்ணே..

அவிய்ங்க ராசா said...

//////////////////

Subankan said...
டச் பண்ணிட்டீங்கண்ணா
9 May, 2009 3:08 AM
என் பக்கம் said...
என்ன எழுதுற்துன்னே தெரியல

ரொம்ப அருமை

நன்றி
9 May, 2009 3:15 AM
மதுவதனன் மௌ. said...
உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நல்லொரு பதிவு
9 May, 2009 4:40 AM
einsteincalls said...
really superb...
9 May, 2009 4:56 AM
/////////////////
வருகைக்கு நன்றி அண்ணே..

KRICONS said...

வாழ்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது

அவிய்ங்க ராசா said...

//////////////
9 May, 2009 4:56 AM
விஷ்ணு. said...
// மனசுல இருக்குற அசிங்கத்தை விடவாண்ணே. இதெல்லாம்.. //

செருப்பால அடிச்சமாதிரி.

// உலகத்துலே கொடுமையான விசயம் சாவுதாண்ணே…

நிசமாதாண்ணே.
/////////////////
வருகைக்கு நன்றி...அண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////
9 May, 2009 5:34 AM
KRICONS said...
வாழ்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது
9 May, 2009 5:35 AM
/////////////

அப்படியா அண்ணே..தகவளுக்கு நன்றி அண்ணே

மணிகண்டன் said...

சூப்பரா எழுதறீங்க ராஜா

☀நான் ஆதவன்☀ said...

நல்லா இருக்கு ராஜா..மனசு என்னவோ பண்ணிடுச்சு

கிரி said...

நல்லா எழுதி இருக்கீங்க ராஜா

Suresh said...

//வாசல்ல நின்னுக்கிட்டு நம்ம சேக்காளிங்களோட பேசிக்கிட்டு சத்தம் போட்டு பேசுக்கிட்டு இருந்தேண்ணா..அவருக்கு இடஞ்சலா இருந்துருக்கும் போல,//

நம்ம எப்பவுமே இப்படி தானே போன இடம் கல கட்டும்

சித்து said...

நீங்கள் எழுதுவதிலும், மனித நேயத்திலும் ராஜா தான். என் ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த பெரியவருக்கு. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும், பிரார்த்திப்போம். நன்றி. சித்து.

Suresh said...

//இந்த நிலமை வரக்கூடாதுண்ணே…உடம்பெல்லாம் மலம்ணே..என்னால தாங்க முடியலைண்ணே..நம்மல்லாம் மனுசயங்கண்ணே..அப்படியே அவர அள்ளி தூக்கிக்கிட்டேண்ணே…

“ராஜா..ராஜா..வேண்டாம்பா..உடம்பெல்லாம் அசிங்கம்பா..உனக்கும் ஒட்டிக்கும்பா..” அழுகுராருண்ணே…

மனசுல இருக்குற அசிங்கத்தை விடவாண்ணே. இதெல்லாம்..

“பரவாயில்ல சார்…” அப்படின்னுட்டு அப்படியே ஒரு துணிய எடுத்து துடைச்சி விட்டேண்ணே… என் கைய அப்படியே பிடிச்சுக்கிட்டு குழந்தை மாதிரி அழுகுறாருண்ணே..//

நண்பா பெருமையா இருக்கு உண்மையில் நிங்க அவரை ஒரு குழந்தையா நினைத்து ... :-) நல்லவர்

Suresh said...

//என்ன சார் உலகம் இது..பெத்த அப்பா விடவா காசு..”

“சரிப்பா, அப்ப நீ ஏன் உங்க வீட்டை விட்டு இங்க வந்த..”

எனக்கு யாரோ செருப்ப கழட்டி அடிக்குற மாதிரி இருந்துச்சுண்ணே..அம்மா, அப்பாவை இந்த வயசான காலத்துல விட்டுட்டு இங்க வந்து சந்தோசமா இருக்கோம்னு //

மிக அருமையா சொன்னிங்க ... அது உணமை நண்பா நிங்களாவது உங்க அப்பா அம்மா கிட்ட பேசுவிங்க அமெரிக்க போன பல பசங்க கண்டுகுறது இல்லை என்று நான் கண்ட பல பெற்றோர் சொல்லி கேட்டு இருக்கேன்...

நான் இரு வரங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு செல்வேன்... அப்பா அம்மாவை பார்க்க தான்

என் நண்பன் 3 வருடம் அமெரிக்கவில் இருந்து விட்டு இப்போது திரும்ப வந்துட்டான் அவனும் நம்மல மாதிரி நண்பா சென்னை சரவண பவன் காபி, வெயில் நண்பர்கள், சத்தியம் தேவி தியேட்டர் பீச்.. இது எல்லாம் காசு கொடுத்தாலும் கிடைக்காத சுகம்

Suresh said...

//நம்மோட எதிர்காலத்துக்காக, தன்னோட நிகழ்காலத்தையே தியாகம் பண்றவங்கண்ணே…//

உண்மை கண் கல்ங்கியது

Suresh said...

//“தம்பி..கொஞ்சம் வீடு வரைக்கும் வந்து போறீங்களா..”

சரி கேக் வெட்டத்தான் கூப்பிடுறாங்கன்னு அவசரம் அவசரமா “குளோப் ஜாமுன்”ன ஒரு ட்ப்பால எடுத்துக்கிட்டு போயி அவரு வீட்டுக்கு போறேன்….அப்படியே வீல் சேருல செத்து கிடக்குறாருண்ணே…கண் அப்படியே என்னையே பார்க்குதுண்ணே..உதடு ஏதோ சொல்ல வந்தது போல தொறந்து அப்படியே இருக்குண்ணே..என் உசிரை யாரே என்கிட்ட இருந்து பிச்சி எடுத்துக்கிட்டு போன மாதிரு இருந்துச்சுண்ணே..அப்படியே வாய தொறந்து “பிளடி இண்டியன்”னு கூப்பிடுவாருன்னு அவர் வாயவே பார்த்துக்கிட்டு நின்னேண்ணே..உலகத்துலே கொடுமையான விசயம் சாவுதாண்ணே…//

யோவ் சும்மா கதற அடிச்சிடயா கொங்யால உன்னை திட்டனும் போல இருக்கு....

மனசே கரஞ்சிட்டுச்சு... கண்கள் அழுதுடுச்சு,

நண்பா ரொம்ப மனசு பாரமா ஆயுடுச்சு....
உயிர் எவ்வளவு மதிப்பு...

என்ன அழகா சொல்ல மாட்டாரா என்னயும் கூப்பிட சொல்லுங்க பிளடி இண்டியன்” என்று ...

இது அழகிய கவிதை யா உன் எழுத்துகள் என்னை கட்டி போட்டுச்சு, கலச்சாலும் சூப்பர் இப்படி கரங்க அடிச்சு மனசு .... ஒரு பிரிவு ஏற்படுத்திட்டயா...

சக் தாத்தா .... நாங்களும் உங்களுக்கு பிராத்தணை செய்கின்றோம்


வாழ்க

ராஜா... நீங்க ரொம்ப நல்லா வருவிங்க ... என் மனதார வாழ்த்துகிறேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதிவண்னே!!

நல்லா எழுதியிருக்கீங்க.

Anonymous said...

ரொம்ப எதார்த்தமா அழகா எழுதி இருக்கீங்கண்ணே..மனசு கொஞ்சம் பாரம் ஆகிடுசுன்னே.

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

KRICONS said...

இப்பதான்ணே படிச்சேன் ரொம்ப நல்லா இருக்குன்ணே... கண்ணுகலங்கிருச்சன்ணே..

ROJA said...

என்னங்க நிீங்க..... இப்படி மனசை உருகவச்சிட்டிங்க....

அட்பொக்ஸ் said...

என்ன ஒரு வேகம் உங்க எழுத்தில..... தொடர்ச்சியா படிச்சிட்டு வாறன் உங்கள் பதிவுகளை. தொடர்ந்து எழுதுகள் அண்ணே...!
நான் ஈழத்தைச் சேர்ந்தவன், இருந்தாலும் மதுரை திருநகரில், 3 வது நிறுத்ததில் 3 மாதங்கள் ஒரு வேலை விசயமாக வாழக்கிடைத்தது நான் செய்த புண்ணியம் அண்ணே.
அந்த 3 மாதங்களும் என் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டுவந்தவை. தமிழ்நாடு என்றாலே எனக்கு தனிபிரியம்.

வெத்து வேட்டு said...
This comment has been removed by the author.
வெத்து வேட்டு said...

is yours a true story?
if it is..condolences for a poor man..
and hatsoff to you for your kind deed...

if not true..still nice

அன்புடன் அருணா said...

மனசை என்னவோ செய்ததுங்க படித்தவுடன்.....
அன்புடன் அருணா

CHANDRA said...

பணம்... அதுக்காக மனச கல்லாக்கிகிட்டு உழைக்க வேண்டியதுதான். ஊருல 30 வருசம் சம்பாதிக்கிறத 3 வருஷத்துல அடைய முடியும்னா, போராட வேண்டியதுதான். ஒன்ன இழந்தாதான் இன்னொன்னு..........

mvalarpirai said...

தலைப்பை படிச்சுட்டு சுள்ளீனு சூடறி வந்தேன்..அழ வச்சீட்டீங்க !

Anonymous said...

//ரொம்ப எதார்த்தமா அழகா எழுதி இருக்கீங்கண்ணே..மனசு கொஞ்சம் பாரம் ஆகிடுசுன்னே.//

Repeat.
vijayan

அவிய்ங்க ராசா said...

//////////////////

S Senthilvelan said...
அருமையான பதிவண்னே!!

நல்லா எழுதியிருக்கீங்க.
9 May, 2009 9:48 AM
Anonymous said...
ரொம்ப எதார்த்தமா அழகா எழுதி இருக்கீங்கண்ணே..மனசு கொஞ்சம் பாரம் ஆகிடுசுன்னே.
9 May, 2009 10:23 AM
தமிழ்நெஞ்சம் said...

தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

9 May, 2009 11:13 AM
KRICONS said...
இப்பதான்ணே படிச்சேன் ரொம்ப நல்லா இருக்குன்ணே... கண்ணுகலங்கிருச்சன்ணே..
9 May, 2009 11:32 AM
////////////////
நன்றி தமிழ் நெஞ்சம், அனானி, க்ரிகான்ஸ்

அவிய்ங்க ராசா said...

////////////////

அட்பொக்ஸ் said...
என்ன ஒரு வேகம் உங்க எழுத்தில..... தொடர்ச்சியா படிச்சிட்டு வாறன் உங்கள் பதிவுகளை. தொடர்ந்து எழுதுகள் அண்ணே...!
நான் ஈழத்தைச் சேர்ந்தவன், இருந்தாலும் மதுரை திருநகரில், 3 வது நிறுத்ததில் 3 மாதங்கள் ஒரு வேலை விசயமாக வாழக்கிடைத்தது நான் செய்த புண்ணியம் அண்ணே.
அந்த 3 மாதங்களும் என் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டுவந்தவை. தமிழ்நாடு என்றாலே எனக்கு தனிபிரியம்.
9 May, 2009 4:58 PM
/////////////
நன்றி..திருநகர் நான் சுற்றி திரிந்த ஊருண்ணே..நீங்க நல்லா இருப்பீங்கண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////////

வெத்து வேட்டு said...
is yours a true story?
if it is..condolences for a poor man..
and hatsoff to you for your kind deed...

if not true..still nice
9 May, 2009 5:59 PM
அன்புடன் அருணா said...
மனசை என்னவோ செய்ததுங்க படித்தவுடன்.....
அன்புடன் அருணா
10 May, 2009 2:36 AM
சந்திரா said...
பணம்... அதுக்காக மனச கல்லாக்கிகிட்டு உழைக்க வேண்டியதுதான். ஊருல 30 வருசம் சம்பாதிக்கிறத 3 வருஷத்துல அடைய முடியும்னா, போராட வேண்டியதுதான். ஒன்ன இழந்தாதான் இன்னொன்னு..........
10 May, 2009 3:40 AM
mvalarpirai said...
தலைப்பை படிச்சுட்டு சுள்ளீனு சூடறி வந்தேன்..அழ வச்சீட்டீங்க !
10 May, 2009 3:47 AM
Anonymous said...
//ரொம்ப எதார்த்தமா அழகா எழுதி இருக்கீங்கண்ணே..மனசு கொஞ்சம் பாரம் ஆகிடுசுன்னே.//

Repeat.
vijayan
10 May, 2009 4:53 AM
//////////////////////
நன்றி அருணா,சந்திரா, விஜயன், வெத்துவேட்டு, வளர்பிறை...தனிதனியா நன்றி சொல்ல முடியாததுக்கு மன்னிச்சுடுங்கண்ணே...

TAARU said...

/////உலகத்துலே கொடுமையான விசயம் சாவுதாண்ணே…////

செத்த நேரம் அரண்டு போய் உங்க blogஅஹ் வாய் பொளந்து பாத்துட்டே இருந்தேன்...

Ananda said...

Your post is very nice.

முதியோர் இல்லத்தில் தான் இருக்கா வேண்டும்,
"முதியோர் இல்லத்தில்" அல்ல.

Anonymous said...

Needhaanyaa..unmaiyaana manushan, You are a good man

ச.பிரேம்குமார் said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது பதிவு

sakthi said...

கண்களில் இடி கண்ணீரில் மழை ரொம்ப செண்டிமெண்ட் சம்பவம் .எழுது நடை அருமை

கலையரசன் said...

ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
www.kalakalkalai.blogspot.com

பாரதி.சு said...

வணக்கம் ராஜா,

//“என்ன சார் உலகம் இது..பெத்த அப்பா விடவா காசு..”
“சரிப்பா, அப்ப நீ ஏன் உங்க வீட்டை விட்டு இங்க வந்த..”
எனக்கு யாரோ செருப்ப கழட்டி அடிக்குற மாதிரி இருந்துச்சுண்ணே..///

சத்தியமான வார்த்தைகள்...இப்பவும் வலிக்கிறது..

அருமை..தொடருங்கள்.

Joe said...

அருமையான பதிவு.

கண் கலங்க வைத்து விட்டீர்கள்.

இளைய கவி said...

இவ்வளவு நாளா உங்களை படிக்காமே போய்ட்டேனே மக்கா..

ஆ.ஞானசேகரன் said...

ஆகா,.... நல்லாயிருக்கு அண்ணே,...

cheena (சீனா) said...

அன்பின் ராஜா

நெஞ்சு நெகிழ - ஒரு நிகழ்வு - எழுதிய விதம் பாராட்டுக்குரியது - அருமை அருமை

பிளடி இண்டியன் எனச் சொல்ல மாட்டாரா என ஏங்க வைத்தவர் - வாழ்க

நாம் பல காரணங்களுக்காக அயலகம் செல்கிறோம். அவ்வப்பொழுது சிறிது நேரம் ஒதுக்கி தாயகத்தில் இருக்கும் பெற்றோரிடமும் பேச வேண்டும் - பெரும்பான்மையானவர்கள் செய்கிறார்கள். சிலரால் பணி அழுத்தத்தினால் பேச இயலவில்லை. என்ன செய்வது - காலத்தின் கோலம்.

நலவாழ்த்துகள் ராஜா

அருண் பிரசாத் ஜெ said...

Arumaiyaana article thala ... keep it up ..
naanum madurai kaarandhaan .....
kalakkunga .......

Anonymous said...

http://pnaplinux.blogspot.com

Post a Comment