ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, எல்லாத்துக்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்குறேண்ணே..என்னோட கடந்த ரெண்டு பதிவுகளோட பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல முடியலை..3 நாளா மனசு ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே…காரணம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்ணே…..சோறு வச்சா உள்ள இறங்க மாட்டிங்குது…போக்குவரத்து சிக்னலை பார்க்காம அப்பிடியே போயிடுறேன்…ஒரே ஒரு காரணம்தான்னே..பிரபாகரன் சுட்டுக்கொலை..
ரெண்டு நாளைக்கு எல்லாருக்கும் போலதான் எனக்கும் விடிஞ்சிச்சு…காலை சாப்பாடு சாப்பிட்டுகிட்டு நியுஸ் படிச்சப்ப அப்பிடியே கை மரத்து போயிடுச்சுண்ணே..அப்பிடியே சிலை ஆகிட்டேண்ணே…
“என்னங்க..என்ன ஆச்சு…ஏன் திடிருன்னு இப்படி ஆகிட்டீங்க..”
“இல்ல..பிரபாகரனை சுட்டு…”அதுக்கு மேல என்னால பேச முடியலண்ணே…
“ஐயோ..பாவங்க…அதுக்கு ஏங்க நீங்க சாப்பிட மாட்டுறீங்க..நீங்க சாப்பிடுங்க..”
“இல்லடி எனக்கு ஒரு மாதிரியா இருக்கு…”
“என்னங்க..நம்ம என்ன பண்ண முடியும் அதுக்கு..நீங்க சாப்பிடுங்க..”
“இல்லடி..முடியல..” கை கழுவிட்டேண்ணே..
“ஏங்க..வர்ரப்ப ஒரு கேலன் பால் வாங்கிட்டு வாங்க…அப்பிடியே என் பிரண்டு ரேணுகாவுக்கு பிறந்த நாள்..ஒரு கேக் வாங்கிட்டு வாங்க..”
எனக்கு எதுவும் கேக்கலண்ணே…உலகத்துலே எல்லாரும் வாழ்றது எதுக்குண்ணே..உயிர் வாழத்தானே..அந்த உயிரை துச்சமா மதிச்சு, உலக ராணுவத்தையே எதிர்த்து ஒருத்தன் போட்டியிட்டான்னா, அவன் தான்னே ஆம்பிளை….நம்ம எல்லாம் மனுசங்களே இல்லண்ணே..காலையில வயித்துக்கு சோத்த சாப்பிட்டு , வேலையும், சொந்தத்தையும் காப்பாத்திக்கிற ஓடுற ரெண்டு கால் பிராணிண்ணே..யோசிச்சு பாருங்க..பிரபாகரனுக்கு என்னன்னே குறைச்சல்..ராஜா மாதிரி இருந்துருக்கலாம்ணே..தெருவுல இறங்கி போராடியிருக்காருண்ணே..காடு, மழை, மலை, காத்து, தீ..எதுவும் பார்க்கலைண்ணே..மக்களுக்காக போராடி இருக்காருண்ணே..அவர் முன்னாடி நம்ம எல்லாம் தூசிண்ணே..
இலங்கை ராணுவம் பொய் சொல்லுறாயிங்கன்னு எல்லாரும் சொல்லுறாங்க..எனக்கு எந்த பொய்யும் பிடிக்காதுன்ணே..வாழ்க்கையிலே முதல் தடவையா ஒரு பொய், பொய்யாவே இருக்கனும்னு ஆசையா இருக்குண்ணே…
அப்படியே ஆபிஸ் போயி யாருகிட்டயாவது சொல்லனும்னு போல இருந்துச்சுண்ணே…
“சுரேஸ்..நியுஸ் பார்த்தியா..பிரபாகரன சுட்டு கொன்னுட்டாங்களாம்டா..”
“அப்பிடியா ராசா..பாவம்டா…சரி அதை விடுடா..நேத்து என்ன நடந்துச்சுன்னா..தெருவுல ஒரு செம பிகர்டா மச்சான்..”
“டே..நான் என்ன பேசுறேன்..நீ என்ன பேசுற..”
“டே..பிரபாகரன் செத்துட்டாரு..அதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்..”
அதுக்கு மேல என்ன பேசுறதுன்னே..என்னால அன்னிக்கு வேலை கூட சரியா பார்க்க முடியலண்ணே..ஒரு மனுசன் மரணம் பாதிக்காத அளவுக்காண்ணே, தமிழன் மனம் மறத்துப் போச்சு.. அப்படியே வீட்டுக்கு வந்துட்டேண்ணே..
“என்னங்க..சீக்கிரம் வந்துட்டிங்க..கேக் வாங்கி வந்தீங்களா..உங்களுக்கு தெரியுமா, பக்கத்து வீட்டு ஆண்டி செல்லமா வளர்க்குற குட்டி நாய் செத்து போயிடுச்சாங்க..கேவி, கேவி அழுகுறாங்க..எனக்கே மனசு கஷ்டமா போச்சுங்க..என்னால சாப்பிடக்கூட முடியலங்க…”
தமிழ் நாட்டுல காங்கிரஸ் ஜெயிச்சது எனக்கு ஆச்சர்யமா இல்லண்ணே…
13 comments:
எனக்கும் அதே நிலை தாங்க.........
சமுகம் இன்னும் மோசமா இருக்கண்ணே........
மாற்றத்துக்கான முயற்சியை மேற்கொள்வோம்.....
நண்பா ராசா! அந்த news/ foto பார்த்த நாளாய்த்தூக்கமில்லாமல்;என் கண் முன்னே அந்த மாவீரன் முகம் ["விரிந்த கண்களோடு"] தீர்க்கமான பார்வை என்னிடம் கேட்கிறது "மானத்தை காசுக்கு விற்றவனே இனிமேல் உன்னை யார் காப்பது? இதற்கு பரத்தை எவ்வளவோ மேலடா? த்தூ .... சாக்கடையில் மிதக்கும் மலத்துக்கும் .. நெளியும் புழுவுக்குமே உன்னை பார்த்தால் அருவருப்பாய் இருக்கும்.... த்தூ.....
நான் வீரச்சாவு பேரு பெற்றேன்... நீ உன் உயிர் பிரியும் வரை ,இதை நினைந்து புழுங்கி கொண்டே இரு!!".............
இருந்தாலும்.... நீங்க சொல்ற மாதிரி அந்த பொய் ... அப்டியே கடைசி வரை பொய்யாக இருக்க என் மனசு கிடந்தது அடிச்சுகிது....
நம்பிக்கையுடன்,
அய்யனார்.
எனக்கும் அதே நெலமதாண்ணே.. யார்கிட்டையாவது சொல்லனும்னு நெனப்பேன்... ஆனா, யாருக்குமே அது பெரிய விசயமா தெரியலைங்க :((
தலைவா www.tamilwin.com போய் பாருங்க நல்ல சேதி வந்திருக்கு
கவலைப்படாதே சகோதரா. தன் மகனைப் பரிகொடுத்ததன் மூலம் தான் ஒரு பயங்கரவாதியல்ல விடுதலை வீரன் என அவர் நிரூபித்துள்ளார்
அண்ணே....கவலைப்படாதே...!
தலைவன் இருக்கிறான்.
தமிழன் தன் சுதந்திரகாற்றை சுவாசிக்கும் வரை
எங்கள் தலைவனை அவ்வளவு இலகுவாக இழந்துவிடமாட்டோம்.
இது வெறும் நம்பிக்கையின் வார்த்தையல்ல.
நிஜம்
இந்த நாடும், நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும் கூட ... இந்த இனமும் நாசமாய் போகட்டும்ன்னு சேத்துக்கனும்...
nenga sollurutha partha than yen tamilan nei ellorum maratamilan yendru solluranganu theriyuthu intha poraliyay kooda avan ninaika matingiran
unmayil nan yeela tamilargalai pattri kavalai padamatten MGR matiri aanal prabaharan irantha seithi keetu nan oru nimidam mounam katthen
எப்படிண்ணே.. இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..
http://limation.blogspot.com
அது பொய்தான்னு தெரியுது.. கவலப்படாதீங்க!!
I had such emotions when Rajiv died. It took me a couple of days to believe he is no more. Now you people are going through these emotions. Hmm....!
நல்லாத்தான் போடுறீங்க போடு. சபாசு.
ஒசாமா & கசாப் திவிரவாதி பிரபாகரன் போராளியா?
என்ன நியாயம் ??
????????????????
Post a Comment