Sunday, 17 May 2009

மவனே சரத்பாபு, இனிமே ஓட்டு கேப்ப..

ஏய்…ஏய்…வச்சோமா ஆப்பு…என்னமா ஆட்டம் போட்டிங்க..சரத்பாபுவாம், படிச்சவனாம்…என்னங்கடா கலர், கலரா பிலிம் காட்டுறீங்க..மக்களுக்கு நல்லது பண்ணுவாராம்..இப்ப டவுசர் கிழிஞ்சு போச்சா..இப்ப வீட்டுல போயி தூங்குங்கயா…சரத்பாபு, சரத்பாபுன்னு கூவுனீங்களே..என்னயா தகுதி இருக்கு அவருக்கு..கீழ உள்ள ஒரு தகுதி இருக்கா, நாங்க  அவருக்கு வோட் போடுறதுக்கு…

 1)      ஐ.ஐ.எம்ல படிச்சிருக்காராம், முதல் தகுதியிலேயே அடிபட்டு போச்சே. பத்தாவதுக்கு மேல என்னய்யா தகுதி வேண்டி கிடக்கு அரசியலுக்கு..

2)      உங்க ஆளு கட்டப் பஞ்சாயத்து பண்ணியிருக்காராயா…அட்லீஸ்ட் யாரயாவது உயிரோட எரிச்சுருக்காராயா?? எந்த மூஞ்சிய வச்சிட்டு ஓட்டு கேட்டு வரீங்க…

3)      ஒரு ஓட்டு போடுறதுக்கு எவ்வளவு துட்டு குடுத்தீங்க..அட்லீஸ்ட் ஒரு பாட்டில் சாராயம்..சும்மா கைய ஆட்டிக்கிட்டு வந்தா ஓட்டு போடுவமா???..

4)      ஏதாவது அரசியல் கட்சித் தலைவரோட மகனா..? சொந்தக்காரனா..? என்ன தகுதி இருக்கு அவருக்கு….

5)       வருண்காந்தி மாதிரி ஏதாவது குமால்டியா பேசிருக்காராயா?? மேடையில ஏதாவது கெட்ட வார்த்தை பேசிருக்காராயா??

6)      ஏதாவது கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்கு இருக்காயா?? எதை நம்பியா நாங்க ஓட்டு போட முடியும்??

7)      காவிரி தண்ணி, ஈழம் ன்னு ஏதாவது மேடை ஏறி பேசிருக்காராயா??

8)      எந்த ஜாதிக்காரர்யா?? எங்க ஜாதி ரத்தமா…???

9)      ஏதாவது சினிமாக்காரங்களை பிரச்சாரத்துக்கு கூட்டி வந்தாராயா??? கண்ணுக்கு குளிர்ச்சி இருந்தா மட்டும்தான் ஓட்டு…

இப்படி ஒரு தகுதி இல்லாதவர நாங்க ஜெயிக்க வைக்க விரும்பலை..அதுதான் வச்சோம் ஆப்பு..இனிமே எந்த எலக்சனுக்காவது, “ஓட்டு போடுங்க” ன்னு யாரவது சப்போர்ட் பண்ணி வந்தீங்க…எங்க வலையுலக படைத் தளபதி “லக்கிலுக்” அண்ணணை வச்சே கிண்டல் பண்ணி ஓட வச்சிருவோம் ஜாக்கிரத….

27 comments:

ttpian said...

sarath has not done any acting-any politician should be an expert in acting(like karunanidhi)otherwise,we have to give up the election deposit-a lesson for us-lose for the society!

கிஷோர் said...

சூப்பர் அண்ணே.....!
ம்..ம்...போட்டு தாக்குங்கண்ணே.!

Anonymous said...

//சும்மா கைய ஆட்டிக்கிட்டு வந்தா ஓட்டு போடுவமா???//

யோவ் என்னய்யா இப்படி பச்சையா பேசுற

தீப்பெட்டி said...

என்ன செய்யுறது...

மக்கள் திருந்துற வழியக் காணோம்..

ஆ.சுதா said...

ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்கு.
'அப்படிதா அகிபோச்சு நம்ம ஓட்டு போடுவது'

Anonymous said...

மேலே சொன்ன கவர்ச்சியான விஷயங்களை விட்டுத்தள்ளுங்கள்.
மக்களுக்காக மக்களோடு இணைந்து இதுவரை செயல் பட்டு இருக்கிறாரா?
ஏதாவது பிரச்சனை என்றால் அவரது வீட்டின் கதவை தயக்கமில்லாமல் தட்டமுடியுமா?
பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் விசுவாசிகளுக்காக எதையும் செய்வார்கள். இவர் குறைந்த பட்ச பிரச்சனைகளுக்காவது மக்களிடம் நெருக்கம்காட்டியிருக்கிறாரா?

கண்ணா.. said...

// Anonymous said...
பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் விசுவாசிகளுக்காக எதையும் செய்வார்கள் //

அப்பிடியா....!!!!

ஹி ஹி

கண்ணா.. said...

// ஒரு ஓட்டு போடுறதுக்கு எவ்வளவு துட்டு குடுத்தீங்க..அட்லீஸ்ட் ஒரு பாட்டில் சாராயம்..சும்மா கைய ஆட்டிக்கிட்டு வந்தா ஓட்டு போடுவமா???..//

நல்ல கேள்வி...

கலக்குங்க...கலக்குங்க....

கண்ணா.. said...

// “ஓட்டு போடுங்க” ன்னு யாரவது சப்போர்ட் பண்ணி வந்தீங்க…எங்க வலையுலக படைத் தளபதி “லக்கிலுக்” அண்ணணை வச்சே கிண்டல் பண்ணி ஓட வச்சிருவோம் ஜாக்கிரத…//

இது செம தில்

KRICONS said...

சாட்டை அடி...

அப்பாவி முரு said...

eay supperappu

கலையரசன் said...

இதுதான் பின்நவீனத்துவ நக்கலா?
மக்கள் மனசாட்சிச்சிக்கு வச்சிருக்கீங்க ஒரு குட்டு!

ச.பிரேம்குமார் said...

தென் சென்னை வாக்கு நிலவரப்படி 40000 வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கிறார் சரத்பாபு. அதுவே பெரிய செய்தி தான். சட்டமன்ற தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட்டு அற்புதமாய் வெல்ல இப்போவே வாழ்த்துகிறேன்

ச.பிரேம்குமார் said...

போட்டியிட்ட 40 சொச்சம் போட்டியாளர்கள் இடையே இவர் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறார். நல்ல தொடக்கம் தானே இது

Anonymous said...

//தென் சென்னை வாக்கு நிலவரப்படி 40000 வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கிறார் சரத்பாபு//

How come Fourteen thousand becomes forty thousand?!

MaduraiKaaran said...

Anonymous/Prem, Sarathbabu received 3400 votes only. comparing traffic ramasamy (1400) he is far better. Also many ppls doesnt know about sarathbabu and his symbol, that got let him down. Lucky, why cant you help sarathbabu to join in DMK.Punniyama pogum!!!

Suresh said...

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் ;) ( வடிவேல் பானியில் படிக்கவும்)

:-) உண்மை தான் நண்பா நச் என்று சொல்லிட்டிங்க

ஊறுகாய் said...

வலையுலக படைத் தளபதி ஹீ ஹீ ..

ஒரே காமெடி தான் அவரு இப்படி ஓட ஒட வலையுலகில் இருந்து துறத்தியது நிறைய பதியவர்களை .... அதுக்கு ஜிங் அடிச்சதாய் நம்ம ரவி அண்ணாச்சி கோட்டு போட்டு ஜிங் ஜிங் வந்து ஆட்டுவாராம் ஒரு வருடத்துக்கு முன்னாடியே பல பதிவர்களை போட்டு டவுசர் அவுத்து ஓட விட்டோம்..

அப்புறம் அனானி பெயரில் லக்கி அவரையே வாழ்த்தி பேசுவார், அர்ச்சனா அக்கா, அது இது பல போலி ஐடியில் வந்து பாராட்டுவோம்...

சாரு மாதிரி காப்பி அடிச்சு அவர மாதிரி ஆக நாங்களே charuonline மாதிரி luckylookonline athisaonline இப்படி வைப்போம்...

அப்புறம் சாருக்கு கெட்ட வார்த்தையில் அபிஷேகம் நடக்கும்,அது மாதிரி நாங்களும் ஆக நாங்க வந்தவன் போனவன் நாங்களே எங்கள பத்தி அனானி கமெண்டில் புகழுவோம்...

எங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி அதுக்கும் அவன மதிக்காத மாதிரி ஒரு பைசா பிரோசணம் இல்லைனு அசிங்க படித்தி பதிவு போடுவோம்...

அப்புறம்... கைல காலில் விழுந்து அடுத்தவன வருடி நாக்கால நக்கி (லிக்கி) நம்ம லக்கி போடுவாரு கதை விகடனில், குமுத்தில்

நம்மல தப்புனு எவனாச்சும் சொன்னா அது எப்படி நாங்க 2 புக் போட்டு இருக்கோம் அந்த எரிச்சல்னு சொல்லி நம்மல பத்தி ஒரு பய பேச விடமாட்டோம்

நாங்க மட்டும் தான் மட்டம் தட்டுவோம்.. வம்பு இழுப்போம்... ஆனா எங்களே எதிர்த்து இப்போ தான் நீ, சக்கரை எல்லாம் பேசுறிங்க ... தெரியமா ஏண்டா இவங்களும் பருப்பு பசங்கனு நிணைத்து வம்பு இழுத்து ... அப்புறம் தண்ணி அடிச்சோம், அதுக்கு அப்புறம் வாந்தி எடுத்தோம்...

நாங்க தான் லாடு ... இங்க எவனாச்சும் புதுசா நல்ல எழுதின பல பசங்கள ஓட ஓட விரட்டி விட்டாச்சு, இப்போ ஒரு செட் நம்மல ஆட்டி வைக்குது...

என்ன செய்ய கட்டம் கட்டினாலும் தப்பிச்சு வந்து எழுதுறாங்க...

பரிசல், வாலு மாதிரி அமைதியா எழுத எவனையும் விட மாட்டோம்...

அவங்க மேலையே காண்டு அது வேற விஷியம்..

நாங்க எல்லாம் நல்ல முகத்தை சக பதிவரிடம் காட்டிவிட்டு இப்படி ஓட ஓட விரட்டியது அனானி பெயரில் புகுந்து விளையாடியது எல்லாம் இன்னொரு முகம்...

லக்கியை அனானி settings remove panna solunga எங்க படை தளபதி ( படை என்றால் சொரி படை வியாதி தானே ) எடுக்கமாட்டாரு, அவரு கோபம் தனிக்கும் கக்கூஸ் தான் அனானி ...அந்த அனானி தான் வடிகால்... அவரே அனானி..

Anonymous said...

நெத்தியடி ஊறுகாய்.. 100 % சரியானவை..

சபாஷ்..

Unknown said...

சரத் பாபு அரசியலுக்குள்
வந்த பின் நீங்கள் சொன்ன
அத்தனைத் தகுதியும் தானாய்
வந்து விடும்.

Joe said...

இது என்னோட பதிவை காபி அடிச்ச மாதிரி இருக்கே? ஹீ ஹீ!
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_27.html

எப்படியோ சரத் பதினேழு ஆயிரம் வோட்டு வாங்கினதே பெரிய விஷயம். அடுத்த முறை சற்று முன் கூட்டியே களத்தில் இறங்கினால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

சக்கரை சுரேஷ் போன்ற பலர் அவருக்காக நிறைய உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள் / நன்றிகள்.

அப்துல்மாலிக் said...

அண்ணாத்தே சரியாசொன்னீக‌

நாட்டு நடப்பு அப்படியிருக்கு என்னத்த சொல்லி என்னத்த செய்யுறது

இப்படி பொலம்பவெச்சிட்டீங்களே மக்கா

குப்பன்.யாஹூ said...

The title itself rocking,

post is good, lauging with regrets,

நரேஷ் said...

நச் பதிவு!!!

ச.பிரேம்குமார் said...

மன்னிக்கனும் 40 ஆயிரம் என்பது தவறு, அவர் பெற்ற வாக்குகள் :14101 சான்று : http://ibnlive.in.com/politics/electionresults/constituency/22/22/chennaisouth.html

சுட்டிக்காட்டிய பெயரிலிக்கு நன்றி. (நீங்க சொன்ன 4 ஆயிரமும் இல்ல, நான் சொன்ன 40 ஆயிரமும் இல்ல)

Anonymous said...

//ஐ.ஐ.எம்ல படிச்சிருக்காராம், முதல் தகுதியிலேயே அடிபட்டு போச்சே. பத்தாவதுக்கு மேல என்னய்யா தகுதி வேண்டி கிடக்கு அரசியலுக்கு..//

இந்த ஒரு பாயிண்டு தவிர மற்ற எல்லாத்தையும் ஒத்துக்குறேன். கல்விக் கண் திறந்த காமராஜர் என்ன படித்தார். படிப்பு முக்கியம் தான் ஆனால் கட்டாயம் கிடையாது

சரவணகுமரன் said...

:-))

Post a Comment