Tuesday, 12 May 2009

எல்லாரும் பார்த்துக்கங்கப்பா..நாங்களும் என்.ஆர்.ஐ தான்

அலுவலக வேலை விசயமா, ஒரு வாரம் அமெரிக்காவிலுருந்து சென்னை வந்து மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டிய சூழ்நிலைண்ணே..என் பொண்டாட்டியும் சென்னை வருவேன் என அடம் பிடிக்க, அவளையும் கூட்டிக்கிட்டு சின்சினாட்டி ஏர்போர்ட் வந்தேண்ணே..1 வருசம் கழித்து என் மனைவி தாயகம் போறா, ஏதாவது சென்டிமென்டா பேசுவான்னு எதிர்பார்த்து காத்திருந்தேண்ணே…

“ஏங்க…நம்மளும் என்.ஆர்.ஐ தானங்க…”

ஆகா…இந்த வியாதி இவளுக்கும் தொத்திக்கிச்சா..எத்தனையோ பேர பார்த்து இருக்கோம்னே..ஏர்போட் புல்லாம் ஒரே அலப்பரை தான்..நம்ம ஊருல போயி ரெண்டு நாளைக்கு விறைப்பா அலைவாயிங்க..நல்லா மொட்ட வெயிலு மூஞ்சில அடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்…..

“அடியே..நம்ம என்.ஆர்.ஐ இல்லடி..என்.பி.ஐ..”

“அது என்னங்க புதுசா என்.பி.ஐ…”

“ம்….."நாசாமா போன இண்டியன்ஸ்"..அடியே..நம்மளே பஞ்சம் பொழைக்க வந்துருக்கோம்டி…பொழப்புல மண்ண அள்ளி போட்டுறாதடி..மகராசி..”

“நீங்க சும்மா இருங்க…யாராவது கேட்டா,என்.ஆர்.ஐ தான்னு சொல்லப் போறேன்..கெடுத்து விட்டுறாதிங்க..”

சரி உனக்கு மொட்டை வெயிலு அடிச்சாதான் திருந்துவ…ஏர்போர்ட் நடைமுறை எல்லாம் முடிஞ்சு விமானத்துல ஏறி உக்கார்ந்துட்டோம்னே..பக்கத்துல ஒரு வெள்ளைக்கார தாத்தா..நல்லா அண்டா சைசுல இருந்தாருண்ணே..கையில பர்கர் வேற..அவர் பக்கத்துல கோழிக்குஞ்சு மாதிரி உக்காந்திருந்தோம்ணே..

“வணக்கம் பிரதர்..நீங்க இந்தியர் தானே..நான் இறக்குமதி பிசினஸ் பண்றேன்..பிசினஸ் விசயமா இண்டியா போறேன்…”

அவரா அறிமுகம் செஞ்சுக்கிட்டாருண்ணே..அடப்பாவி, ஒன்னரை சீட்டுல உக்கார்ந்துக்கிட்டு அரை சீட்டை குடுக்குறேயேய்யா…

கர்சிப்பை எடுத்து முகத்தை பொத்திக்கிட்டேண்ணே.. என் பொண்டாட்டிக்கு ஆச்ச்ர்யம் தாங்க முடியலண்ணே..

“என்னங்க, ஏங்க கர்ச்சிப்பை எடுத்து பொத்திக்கிறீங்க..பன்னி காயிச்சல் பயமா..”

“அய்யோ இது அத விட கொடுரம்டி…விமானத்துல அவனவன் பாத்ரும் போறதுக்கு சோம்பேரித்தனப் பட்டுக்கிட்டு கேஸ் பேக்டரிய ஓப்பன் பண்ணி விட்டுருவாயங்க..பன்னி காயிச்சலாவது ஒரேயடியா ஆளைக் கொல்லும்டி..இது, கொஞ்சம் கொஞ்சம் ஆளைக் கொல்லும்டி..நீயும் ஏதாவது துணியை எடுத்து முஞ்சிய போத்திக்கடி..”

“அடப் போங்க..வெள்ளைக்காரய்ங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டாயிங்க..”

அடிப்பாவி..கருப்பா இருக்குறவயிங்களையெல்லாம் நாய் கடிக்காது ரேஞ்சுல பேசிறேயடி..சரி உனக்கு பட்டாத்தாண்டி தெரியும்னு விட்டுட்டேண்ணே..

நேரம் ஆக, ஆக அவனவன் பலமுனைத் தாக்குதல் நடத்த ஆரம்பிச்சுட்டாயிங்கண்ணே…என் பொண்டாட்டி கதறிட்டாயிங்கண்ணே…

“ஏங்க, எனக்கு குடலை பிரட்டுதுங்க..ஒரு துணி இருந்தா தாங்களேன்..முகத்தை பொத்திக்குறேன்” கெஞ்சுறான்ணே…

“ஏங்க நீங்களுமா..”

“ஐயோ..என்னை அப்படி சந்தேகப் பார்வை பார்க்காதடி..ஏர்போர்ட் வர்றதுக்கு முன்னாடியே நாலஞ்சு தடவை பாத்ரூம் போயிட்டண்டி..”

யாரா இருக்கும்னு திரும்பி பார்த்தா, நம்ம வெள்ளைக்கார தாத்தா..பர்கரை சாப்பிட்டுக்கிட்டே சிரிக்குறாருண்ணே..

அடப்பாவி..நீதானா அந்த படுபாவி..இதுதான் இறக்குமதி பிஸுனஸடா..நல்லா இருங்கடா..நீ சாப்பிடுறது பர்கராடா அல்லது பொணமாடா..

“சார்..பொணத்தை சாப்பிடுங்க..ஆனா கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடுங்க..”

“என்ன பிரதர்..”

ஐயோ ஆளை விடுடா சாமி..சென்னை இறங்குற வரைக்கும் முகமூடிய கழட்டவே இல்லண்ணே… இப்ப என் பொண்டாட்டி ஆரம்பிச்சிட்டாங்கண்ணே..

“ஓ..வாட் எ வெயில்.. வாட் எ வெயில்…” இங்கிலிஸ பாருங்கண்ணே…

“ஏங்க, ஒரு கேப் கூப்பிடுறீங்களா…” டாக்சின்னு சொல்ல மாட்டாளம்ணே..

டாக்சிக்காரன் வந்தாண்ணே..என் பொண்டாட்டியே பேசட்டும்னு அமைதியா இருந்துட்டேண்ணே..

“இங்க இருந்து கீழ் கட்டளைக்கு எவ்வளவுங்க..”

“400 ரூபாங்கம்மா..”

“ஓ..இட்ஸ் காஸ்ட்லி…நாங்க அட்லாண்டாவுல இருந்து கலிபோர்னியா போறதுக்கே 100 டாலர்ஸ்தான் குடுப்போம் தெரியுமா..”

“சார்..இன்னா சார் பேசுறாங்க..ஒன்னுமே பிரியல சார்..கொஞ்சம் வெளங்குற மாதிரி சொல்லு சார்..”

போதும்டா சாமி..அம்மா தாயே..முதல வண்டியில ஏறு..

“பரவாயில்லங்க..மீனம்பாக்கம் ரோடு நல்லா இருக்குங்க..இண்டியா இஸ் சேஞ்சிங்க..”

டிரைவர் கொலை வெறி ஆகிட்டாண்ணே…

“சார், அம்மாவுக்கு எந்த ஊரு சார்…”

“அது , மதுர பக்கத்துல இருக்குற கொட்டாம்பட்டி..”

இப்ப கொலைவெறி மனைவிக்கு ஷிஃப்ட் ஆகிடுச்சுண்ணே…ஒரு வழியா, வீடு வந்து சேர்ந்துட்டோம்ணே..

“ஏங்க வீட்டில ஏ.சி. இல்லயா..இட்ஸ் டூ ஹாட்ன்னா..”

முடியலண்ணே…அம்மா வந்துட்டாங்கண்ணே…

“வாம்மா..பிரயாணம் எப்படிம்மா இருந்துச்சு..பிளைட்டுல ஒன்னும் சாப்பிடாம வந்து இருப்பீங்க..சாம்பார் சோறு சாப்பிடிறீங்களா..”

“இல்ல ஆண்டி..கெல்லாக்ஸ் இருக்கா..கார்ன் பிளக்ஸ் இருக்கா..”

“ஏம்பா, நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு உன் பொண்டாட்டி கெட்ட வார்த்தையில திட்டுறா…”

அட நாராயணா..இந்த என்.ஆர்.ஐ ய்ங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி…

47 comments:

அப்பாவி முரு said...

ஹாய் ராஜா இப்ப எங்க இருக்கீங்க,

அலங்காநல்லூரா? இல்லை அமெரிக்காவா?

Thiyagarajan said...

really liked your post.. Really funny.

Suresh said...

//அவரா அறிமுகம் செஞ்சுக்கிட்டாருண்ணே..அடப்பாவி, ஒன்னரை சீட்டுல
உக்கார்ந்துக்கிட்டு அரை சீட்டை குடுக்குறேயேய்யா…//
ஹா ஹா

Suresh said...

//அடிப்பாவி..கருப்பா இருக்குறவயிங்களையெல்லாம் நாய் கடிக்காது ரேஞ்சுல பேசிறேயடி..//

:-)

Anonymous said...

Raja really super...
Vijay

Suresh said...

//யாரா இருக்கும்னு திரும்பி பார்த்தா, நம்ம வெள்ளைக்கார தாத்தா..பர்கரை சாப்பிட்டுக்கிட்டே சிரிக்குறாருண்ணே..//

அண்ணே ;) NRI மட்டும் இல்லை, ஒரு கிரமாத்தில் இருந்து வேளை செய்ய பெங்களூர் சென்னை வந்த சில பேரு பண்ணுற ரவுசு ...தாங்கல வந்த இடத்தை மறக்காமா இருந்தா ;) நல்லா இருக்கும்..

ஏதோ Brought and Born up in Forgien city Rangekku ora ravusu... hmm enna seiya avanga kuda avalavu rosue vida matanga...

புலிய பார்த்து பூணை கோடு போட்டுகிச்சாம் ;)

Suresh said...

சரி இப்போ எங்க இருக்கிங்க இண்டியா சொல்லுங்க போனுல பேசுவோம் நண்பா

சித்து said...

அட நாராயணா..இந்த என்.ஆர்.ஐ ய்ங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி…

ஹா ஹா ஹா ராஜா முடியல சிப்பு வருது சிப்பு.

வனம் said...

வணக்கம் ராஜா

ம்ம்ம்ம் சிரிச்சு ...... முடியல.

தொடருங்கள்

கிரி said...

:-))))

ramalingam said...

உங்களைப்போல் self criticism இருக்க வேண்டும். அப்போதுதான் lifeல் ஒரு balance இருக்கும்.

துளசி கோபால் said...

ஹைய்யோ.:-)))))))))))))))))

கண்ணா.. said...

கலக்கல் ராஜா...

//அவர் பக்கத்துல கோழிக்குஞ்சு மாதிரி உக்காந்திருந்தோம்ணே..
//

அருமையா இருந்திச்சு...எனக்கும் இப்பிடிதான் பலதடவை தோணும்....

இதெல்லாம் நமக்குள்ள தாழ்வு மனப்பான்மையான்னு தெரியலை... ஆனா நீங்க அற்புதமா வார்த்தையில் கொண்டுவந்திட்டீங்க....

வாழ்த்துக்கள்...

SUBBU said...

:))))))))

Anonymous said...

great thinking....

KRICONS said...

அருமை. இன்னுமும் பல கணவன்மார்கள் தங்கள் மனைவியை விட்டுக்கொடுக்காமல் தான் இருக்கின்றனர் (என்ன தவறு செய்தாலும்). நீங்கள் உங்கள் மனைவி பற்றி இப்படி பகிர்ந்தது பாராட்டுக்குறியது.

ஆமா இதை அக்கா படிச்சுட்டாங்களா???

Anonymous said...

{{GrabBag.Clapping}}

Anonymous said...

I have never seen any middle class Indian who have not shown off stupidly after staying abroad. funny attitude.

unmayave kosu thollaidhan.
-Reena

கார்த்திகைப் பாண்டியன் said...

அட்டகாசம் நண்பா.. ரசிச்சு சிரிச்சேன்..:-)

malar said...

அரட்டை அரங்கம் ரேஞ்சுக்கு ஏறங்கிடீங்க.

கிஷோர் said...

வணக்கமண்ணே..!
ஆரம்பிச்சிடிங்களா...?
அதச் சொல்லி, இதச்சொல்லி...Wife யும் விட்டுவக்கலையா.........?

உங்க பதிவுகள் எல்லாமே சூப்பர்.. அண்ணே! ஒவ்வொருதடவையும் புதுசா எழுதிறிங்க.....நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

ha ha ha

அப்துல்மாலிக் said...

ஹா ஹா கலக்கல் ராச

அனுபவிச்சி படிச்சேன்.. ரொம்ப அருமையா இருந்தது உங்க பதிவு

அப்துல்மாலிக் said...

//நீதானா அந்த படுபாவி..இதுதான் இறக்குமதி பிஸுனஸடா..நல்லா இருங்கடா//

ஹா ஹா கலக்க்கல் பிஸினஸ்

அப்துல்மாலிக் said...

//வணக்கமண்ணே..!
ஆரம்பிச்சிடிங்களா...?
அதச் சொல்லி, இதச்சொல்லி...Wife யும் விட்டுவக்கலையா.........?/

Repeattaaaaaai

ராஜ நடராஜன் said...

//நம்ம ஊருல போயி ரெண்டு நாளைக்கு விறைப்பா அலைவாயிங்க..நல்லா மொட்ட வெயிலு மூஞ்சில அடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்…..//

இங்கே நம்ம ஊர விட மொட்ட வெயிலு நிறையவே அடிக்குது.ஆனா மூஞ்சில அடிச்சா சரியாப் போறதுக்கு நம்ம ஊருக்குப் போக வேண்டியிருக்கும்:)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நம்மளே பஞ்சம் பொழைக்க வந்துருக்கோம்டி//

எவ்வளவு உண்மையான வார்த்தை.

தாயகத்தை விட்டு கூலி வேலை செய்ய சென்றாலும், கோடி கோடியாய் கொட்டி தொழில் தொடங்க சென்றாலும், பிழைப்புக்காக தான் செல்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

கூலிவேலைக்கு சென்றவர்கள் உடனே ஒத்துக்கொள்வார்கள், கொஞ்சம் அதிகம் வருவாய் ஈட்டும் வர்க்கத்திற்கு மட்டும் ஒத்துக்கொள்ளும் மனபக்குவம் இராது.

பிழைப்புக்காக தான் செல்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் இருந்தாலே போதும்... காசினால் வந்த கர்வம் தானாக இறங்கிவிடும்.

சின்னப் பையன் said...

:-))))))))))

TBCD said...

கலக்கலோ கலக்கல்...தொடர்ந்து நச்சின்னு எழுதுறீங்க..!!

roja said...

சுப்பர்ரோ சுப்பர்ங்க.....

குடுகுடுப்பை said...

மதுரைக்காரன் எழுத்தே தனிதான்.

ச.பிரேம்குமார் said...

//அட நாராயணா..இந்த என்.ஆர்.ஐ ய்ங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி…//

ஹா ஹா ஹா... முடியல ;-)

உங்க வீடு கீழ்கட்டளையா? நான் மடிப்பாக்கம் தான் ;-)

TAARU said...

///“அது என்னங்க புதுசா என்.பி.ஐ…”

“ம்….."நாசாமா போன இண்டியன்ஸ்"..அடியே..நம்மளே பஞ்சம் பொழைக்க வந்துருக்கோம்டி…பொழப்புல மண்ண அள்ளி போட்டுறாதடி..மகராசி..”///////

atrocity பண்றீங்கன்னே!!! எங்கிட்டு இருந்து தான் யோசிக்கிறாய்ன்களோ!! பின்னி பெடல் எடுக்குறீங்க..

ராசாவின் பார்வை இப்போ ராணியின்[உங்க அவிய்ங்க] பக்கமோ?!!
இந்த blog பார்த்த அப்புறம் ரெண்டு நாளு சோறு கிடைச்சு இருக்காதே?!! சொ. செ. சூ. வா?

மனசாட்சிய தொட்டு சொல்லணும், இந்த peter எல்லாம் விட்டது ராசா தானே?!! பாவம் அவிங்கள இழுத்து விட்டுடீங்க? வேற ஆள் சிக்கலான இப்டி தன கூட இருக்குரவயங்கள ஓட்டுறதா?!! நல்ல பழக்கம்..

மென்மேலும் அலும்பு பண்ண வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அய்யனார்.

அவிய்ங்க ராசா said...

////////////////

அப்பாவி முரு said...
ஹாய் ராஜா இப்ப எங்க இருக்கீங்க,

அலங்காநல்லூரா? இல்லை அமெரிக்காவா?
11 May, 2009 10:04 PM
////////////////////////////

இப்ப அமெரிக்காவுல தாண்ணே இருக்கேன்

அவிய்ங்க ராசா said...

///////////////////
11 May, 2009 10:04 PM
Thiyagarajan said...
really liked your post.. Really funny.
11 May, 2009 10:06 PM
Suresh said...
//அவரா அறிமுகம் செஞ்சுக்கிட்டாருண்ணே..அடப்பாவி, ஒன்னரை சீட்டுல
உக்கார்ந்துக்கிட்டு அரை சீட்டை குடுக்குறேயேய்யா…//
ஹா ஹா
11 May, 2009 10:20 PM
///////////////

நன்றி தியாகராஜன்..சுரேஸ், நான் அமெரிக்கா வந்துட்டேன்...

அவிய்ங்க ராசா said...

///////////////////
11 May, 2009 10:26 PM
சித்து said...
அட நாராயணா..இந்த என்.ஆர்.ஐ ய்ங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி…

ஹா ஹா ஹா ராஜா முடியல சிப்பு வருது சிப்பு.
11 May, 2009 10:30 PM
வனம் said...
வணக்கம் ராஜா

ம்ம்ம்ம் சிரிச்சு ...... முடியல.

தொடருங்கள்
11 May, 2009 10:48 PM
கிரி said...
:-))))
11 May, 2009 10:56 PM
ramalingam said...
உங்களைப்போல் self criticism இருக்க வேண்டும். அப்போதுதான் lifeல் ஒரு balance இருக்கும்.
11 May, 2009 10:58 PM
/////////////////////
நன்றி வனம், சித்து, கிரி ராமலிங்கம்..

அவிய்ங்க ராசா said...

///////////////////
11 May, 2009 10:58 PM
துளசி கோபால் said...
ஹைய்யோ.:-)))))))))))))))))
11 May, 2009 10:58 PM
Kanna said...
கலக்கல் ராஜா...

//அவர் பக்கத்துல கோழிக்குஞ்சு மாதிரி உக்காந்திருந்தோம்ணே..
//

அருமையா இருந்திச்சு...எனக்கும் இப்பிடிதான் பலதடவை தோணும்....

இதெல்லாம் நமக்குள்ள தாழ்வு மனப்பான்மையான்னு தெரியலை... ஆனா நீங்க அற்புதமா வார்த்தையில் கொண்டுவந்திட்டீங்க....

வாழ்த்துக்கள்...
11 May, 2009 11:05 PM
SUBBU said...
:))))))))
11 May, 2009 11:19 PM
Anonymous said...
great thinking....
///////////////
நன்றி சுப்பு, கண்ணா, துளசி...

அவிய்ங்க ராசா said...

//////////////
11 May, 2009 11:44 PM
KRICONS said...
அருமை. இன்னுமும் பல கணவன்மார்கள் தங்கள் மனைவியை விட்டுக்கொடுக்காமல் தான் இருக்கின்றனர் (என்ன தவறு செய்தாலும்). நீங்கள் உங்கள் மனைவி பற்றி இப்படி பகிர்ந்தது பாராட்டுக்குறியது.

ஆமா இதை அக்கா படிச்சுட்டாங்களா???
11 May, 2009 11:45 PM
//////////////////////
படிச்சி, பூரிக்கட்டயில அடி வாங்குனேன்ணே..அத தனிப் பதிவா போடுறேன்..

அவிய்ங்க ராசா said...

///////////////

Anonymous said...
I have never seen any middle class Indian who have not shown off stupidly after staying abroad. funny attitude.

unmayave kosu thollaidhan.
-Reena
12 May, 2009 12:03 AM
கார்த்திகைப் பாண்டியன் said...
அட்டகாசம் நண்பா.. ரசிச்சு சிரிச்சேன்..:-)
12 May, 2009 12:14 AM
malar said...
அரட்டை அரங்கம் ரேஞ்சுக்கு ஏறங்கிடீங்க.
12 May, 2009 12:27 AM
கிஷோர் said...
வணக்கமண்ணே..!
ஆரம்பிச்சிடிங்களா...?
அதச் சொல்லி, இதச்சொல்லி...Wife யும் விட்டுவக்கலையா.........?

உங்க பதிவுகள் எல்லாமே சூப்பர்.. அண்ணே! ஒவ்வொருதடவையும் புதுசா எழுதிறிங்க.....நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்.
12 May, 2009 12:46 AM
///////////////////
வருகைக்கு நன்றி ரீனா, கார்த்திகை,மலர், கிஷோர்..

அவிய்ங்க ராசா said...

///////////////

அபுஅஃப்ஸர் said...
//நீதானா அந்த படுபாவி..இதுதான் இறக்குமதி பிஸுனஸடா..நல்லா இருங்கடா//

ஹா ஹா கலக்க்கல் பிஸினஸ்
12 May, 2009 2:44 AM
அபுஅஃப்ஸர் said...
//வணக்கமண்ணே..!
ஆரம்பிச்சிடிங்களா...?
அதச் சொல்லி, இதச்சொல்லி...Wife யும் விட்டுவக்கலையா.........?/

Repeattaaaaaai
12 May, 2009 2:45 AM
ராஜ நடராஜன் said...
//நம்ம ஊருல போயி ரெண்டு நாளைக்கு விறைப்பா அலைவாயிங்க..நல்லா மொட்ட வெயிலு மூஞ்சில அடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்…..//

இங்கே நம்ம ஊர விட மொட்ட வெயிலு நிறையவே அடிக்குது.ஆனா மூஞ்சில அடிச்சா சரியாப் போறதுக்கு நம்ம ஊருக்குப் போக வேண்டியிருக்கும்:)
12 May, 2009 4:13 AM
/////////////
நன்றி அபு அஸர், ராஜா நடராஜன்..

அவிய்ங்க ராசா said...

//////////////
12 May, 2009 4:13 AM
பித்தன் said...
//நம்மளே பஞ்சம் பொழைக்க வந்துருக்கோம்டி//

எவ்வளவு உண்மையான வார்த்தை.

தாயகத்தை விட்டு கூலி வேலை செய்ய சென்றாலும், கோடி கோடியாய் கொட்டி தொழில் தொடங்க சென்றாலும், பிழைப்புக்காக தான் செல்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

கூலிவேலைக்கு சென்றவர்கள் உடனே ஒத்துக்கொள்வார்கள், கொஞ்சம் அதிகம் வருவாய் ஈட்டும் வர்க்கத்திற்கு மட்டும் ஒத்துக்கொள்ளும் மனபக்குவம் இராது.

பிழைப்புக்காக தான் செல்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் இருந்தாலே போதும்... காசினால் வந்த கர்வம் தானாக இறங்கிவிடும்.
12 May, 2009 6:12 AM
ச்சின்னப் பையன் said...
:-))))))))))
12 May, 2009 7:26 AM
TBCD said...
கலக்கலோ கலக்கல்...தொடர்ந்து நச்சின்னு எழுதுறீங்க..!!
12 May, 2009 10:42 AM
////////////////
வருகைக்கு நன்றி சின்னப் பையன், பித்தன்

அவிய்ங்க ராசா said...

////////////////

குடுகுடுப்பை said...
மதுரைக்காரன் எழுத்தே தனிதான்.
12 May, 2009 7:48 PM
ச.பிரேம்குமார் said...
//அட நாராயணா..இந்த என்.ஆர்.ஐ ய்ங்க கொசுத் தொல்லை தாங்க முடியலடா சாமி…//

ஹா ஹா ஹா... முடியல ;-)

உங்க வீடு கீழ்கட்டளையா? நான் மடிப்பாக்கம் தான் ;-)
12 May, 2009 8:01 PM
TAARU said...
///“அது என்னங்க புதுசா என்.பி.ஐ…”

“ம்….."நாசாமா போன இண்டியன்ஸ்"..அடியே..நம்மளே பஞ்சம் பொழைக்க வந்துருக்கோம்டி…பொழப்புல மண்ண அள்ளி போட்டுறாதடி..மகராசி..”///////

atrocity பண்றீங்கன்னே!!! எங்கிட்டு இருந்து தான் யோசிக்கிறாய்ன்களோ!! பின்னி பெடல் எடுக்குறீங்க..

ராசாவின் பார்வை இப்போ ராணியின்[உங்க அவிய்ங்க] பக்கமோ?!!
இந்த blog பார்த்த அப்புறம் ரெண்டு நாளு சோறு கிடைச்சு இருக்காதே?!! சொ. செ. சூ. வா?

மனசாட்சிய தொட்டு சொல்லணும், இந்த peter எல்லாம் விட்டது ராசா தானே?!! பாவம் அவிங்கள இழுத்து விட்டுடீங்க? வேற ஆள் சிக்கலான இப்டி தன கூட இருக்குரவயங்கள ஓட்டுறதா?!! நல்ல பழக்கம்..

மென்மேலும் அலும்பு பண்ண வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அய்யனார்.
12 May, 2009 9:38 PM
////////////////
நன்றி குடுகுடுப்பையாரே..பிரேம் குமார்...என் ஊரு மதுரைப்பக்கம், சென்னயில செட்டில் ஆனோம், திரும்ப மதுரைப் பக்கமே போரோம்..
அய்யானாரே, குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ணாதிங்கண்ணே...))))

Sathish said...

Very nice

Maddy said...

அது என்னமோ தெரியலை, நம்ம தமிழ் மக்கள் தமிழ்நாடு விட்டு வெளிநாடு சென்று விட்டால் அலம்பல் தாங்க முடியறது இல்லை ..குறிப்பாக , பெங்களூர் செல்லும் மிடில் கிளாஸ் மக்கள்
மற்றும் அமெரிக்கா செல்லும் SW engineers ..Come on guys, its only Bangalore! and You are "workers" in US...
நல்ல நகைச்சுவை பதிவு ...

sikkandar said...

ovvoru pathivum muthu muthaa eerukku.... enna our writing.. boss dont stop it. keep on write.....all the best

கைப்புள்ள said...

சூப்பர் சிரிப்புங்க... நீங்க ஒரு என்.ஆர்.ஐ தான்ணே நான் ஒத்துக்கறேன்.
:))

Kirubakaran said...

sema comedy sir..super...

Post a Comment