Thursday, 22 March, 2012

தி கில்லிங்க் ஜார் - ஒலகப்பட விமர்சனம்
"
அட ஹாலிவுட் படத்துக்கு இணையா எடுத்திருக்கான்யா" என்று விமர்சனம் எழுதுவதுண்டு. ஆனால் அப்படி எழுதுபவர்களிடம் "எதுடா ஹாலிவுட் தரம்" என்று கேட்டுப்பாருங்கள். பாதி பேர் முழிப்பார்கள். சில பேர் "ரெண்டு ஹெலிகாப்டர் போகுது..நடுவுல டைனோசர் காட்டுறாய்ங்க" என்று டப்பிங்க் பட ரசிகர்கள் போல் பேசுவார்கள்.
இன்னும் சில பேர், "கடைசி வரைக்கு நடந்துக்கிட்டே இருக்காய்ங்கப்பா..ஹாலிவுட் படம் மாதிரி" என்று சொல்லுவார்கள்.

நானும் சிலநேரத்தில் விமர்சனம் எழுதும்போது, ஹாலிவுட் தரத்திற்கு இணையாக என்று சொல்லிவிட்டு, "ஆஹா..எதுவும் கேட்டுப்புடுவாய்ங்களோ" என்று பயந்தபடி இருந்திருக்கிறேன். சமீபத்தில் நான் பார்த்த இந்தப் படம்
"ஒஹோ..இது கூட ஹாலிவுட் தரமோ" என்று என்னை அச்சப்பட வைத்திருக்கிறது.

அப்படி என்னைக் கவர்ந்த படம் "தி கில்லிங்க் ஜார்(The Killing Jar).

படம் முழுவதும் ஒரே உணவு விடுதி, மொத்தம் ஏழு பேர். ஒரு படம் முழுவதிலும், வேறு எந்த லொக்கேஷனோ,மனிதர்களையோ காட்டாமல், எடுக்கமுடியுமா..அதுவும் இரண்டு மணிநேரம். முடியும் என்று நிரூபித்திருக்கிறார்,

அமெரிக்காவின் சிறிய கிராமத்தில் உள்ள ஒரு உணவு விடுதி. அதை நடத்தி வருபவர் ஒரு செவ்விந்தியர். வெயிட்டராக வேலை பார்ப்பவர் நம் நாயகி. தினமும் கடையில் சாப்பிடவரும், ஒரு காவலர், ஒரு எக்ஸ் மிலிட்டரி..இவர்களோடுதான் படம் துவங்குகிறது. .சி போடாமல் சிக்கனமாக இருக்கும் ஓனரை கோபித்துக்கொண்டு ஹீரொயின் எல்லோருக்கும் சர்வ் செய்கிறார். "வீட்டை விட்டு ஓடிப்போகும் (அல்லது) திருட்டுத்தனமாக ஏதாவது செய்யும் ஆசையில் ஒரு ஜோடி(கல்லூரி மாணவர்களும்) அமர்ந்திருக்கிறார்கள்.

நம் நாயகி, ஒரு லொடலொட பார்ட்டி. பேசவில்லையென்றால் பாதி மூச்சு நின்றுவிடும். எப்போதும், லொடலொடவென்று பேசிக்கொண்டே இருக்கிறார். அப்பொழுது, ரேடியோவில் செய்தி வாசிக்கிறார்கள்.  அதே ஊரில், ஒரு குடும்பம் முழுவதையும் சுட்டுக்கொண்டிருக்கிறான் ஒரு வெறியன். சுட்டுவிட்டு கருப்புநிற டிரக்கில் ஓடியதாக தகவல். "அமெரிக்கா எங்கு போகிறதுஎன்று சலித்துக்கொள்கிறார்.அப்பொழுது, ஒரு இளைஞன் சாப்பிட வருகிறான். வெகு தூரத்தில் இருந்து வருவதாகவும், சாப்பாட்டுக்காக, இங்கு ஒதுங்கியதாகவும் கூறுகிறான். நியூயார்க் வரைக்கும் செல்லவேண்டும், தன் சேல்ஸ் உத்தியோகத்தின் பேரில் என்று சொல்ல, நாயகி, வழக்கம்போல அவனிடமும் கடலை போட ஆரம்பிக்கிறாள். அப்போதுதான் நம் நாயகன் கம் படுபயங்கர வில்லன் சாப்பிட வருகிறான்பார்ப்பதற்கே, மிகவும் கடுப்பாக இருப்பதைப் போன்று தோற்றம் உடையவன். பார்த்த உடனே நாயகிக்கு பிடிக்கவில்லை.பற்றாக்குறைக்கு, நான் கேட்ட சாப்பாடு கிடைக்கவில்லை என்று சண்டை போட, ஹீரோயினுக்கோ "இவன் முழியே சரியில்லையே. ஒருவேளை இவன்தான் அந்த சீரியல் கில்லரோ" என்று சந்தேகப்படி, தன்னைப் பார்து ஜொள்ளுவிடும் அந்த காவலரைப் பார்த்து விசாரிக்க சொல்லுகிறாள்.

அந்த காவலரும், கொஞ்சம் கடுமையாக விசாரிக்க, இரண்டு பேருக்கும் சண்டை வர, கடுப்பாகி, நம் வில்லன் வெளியே சென்று, ஒரு துப்பாக்கியை எடுத்து வந்து காவலரை ஒரே போடு..தடுக்க வரும் ஓனரையும், ஒரே போடு, ரெஸ்டாரண்ட் முழுக்க ரத்தமயம்.எல்லோரையும் ஹவுஸ் அரஸ்ட் பண்ணி, ஒவ்வொருவராக போட்டுத்தள்ள திட்டம் செய்துகொண்டிருக்க, எங்கிருந்தோ, புரோக்கர் மாதிரி ஒருவன் ரெஸ்ட்ராண்ட் வருகிறான். வந்தவன் துப்பாக்கியை வைத்திருக்கும் வில்லனைப் பார்த்து.."ஹே..ஸ்மித் இங்கதான் இருக்கியா..எல்லாத்தையும் முடிச்சுட்டியா..இந்தா நீ கேட்ட பணம்.." என்று கொடுக்க, நம் வில்லன் அவனைப் பார்த்து துப்பாக்கியை நீட்ட "அட சும்மா விளையாடதப்பா," என்று கிளம்ப முயல, நம் வில்லன் சொல்கிறான்.."அட நாதாரி..நான் ஸ்மித்ன்னு யார் சொன்னா,..உக்காருடா ஆனியன்....மீன் வெங்காயம்" என்று கத்த, நம் புரோக்கர்கேப்டன் விஜய்காந்தைக் கண்ட வடிவேலு போல பயந்து உக்காருகிறான். என்னடா மேட்டரு என்று புரோக்கரிடம்
கேட்டால், ஒரு குடும்பத்தையே கொலை பண்ண சொல்லியிருந்தேன், ஒரு புரோபசனல் கொலைகாரனிடம்.. அவனை முன்னபின்ன பார்த்தது இல்லை.அவன் இரவு இங்கதான் வந்து பணத்தை வைச்சிட்டு போகச் சொன்னான் என்று சொல்ல, நம்ம வில்லனுக்கோ படு டென்சன்,.."என்னடா,,நம்மளே பெரிய வில்லன்.., ஒரு குடும்பத்தையே
கொலை செய்யுற அளவுக்கு ஒருத்தன், இந்த நாலு பேருக்குள்ள யாருடா" என்று மிரட்ட, தக்காளி படம் போகுது பாருங்க ஸ்பீடு.."

ஒவ்வொரு காட்சியும் செம திரில்லிங்க்..சஸ்பென்ஸ்..அதுவும் வில்லன் ஒரு கன்னை எடுத்து வந்து "பொட்டு, பொட்டுன்னு" போடும்போது, கையை எடுத்து என் தலை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். ரெஸ்ட்ராண்ட் முழுக்க சுத்திவரும் கேமிரா கோணங்கள், அட, அட, அட..வில்லனாக நடித்தவர் உண்மையிலேயே நாலு பேரை சுட்டுத்தள்ளிட்டு வந்தவர் போல
இருக்கிறார்..அப்பாவியான அந்த இளைஞனும், "போலிஸ்" என்ற கெத்திலேயெ செத்துப்போகும், அந்த காவலரும், இன்னும் மனதுக்குள். ஒவ்வொரு சீன் போகும் பரபரப்பில் ரகுவரன் போல் என் கையில் மொத்த நகமும் காலி...

இன்னும் மனதுக்க்குள்ளே, நின்ற அந்த திரில்லரைப் பார்த்துவிட்டு அடுத்த படம் பார்க்கலாமே என்று ஸ்க்ரோல் பண்ணினால் வருதுய்யா ஒலகப்படமான ராமராஜனின் "மேதை.."  

4 comments:

ராஜ் said...

நல்ல விமர்சனம், போன வருஷம் பார்த்த படம்..நல்ல படம்

நெஸ்டர் ஞானம் பெற்றவன் said...

உடனடியா இந்த படம் பார்த்தாவனுமே...

சுருதிரவி..... said...

நமக்கெல்லம் அந்த கொடுப்பினை இல்லை சாரே..!மேதை, லத்திகா போன்ற ஒலகப்படங்களின் திருட்டு விசிடிகூட லண்டன்ல கெடைக்குதில்லே...

ஹாலிவுட்ரசிகன் said...

அடுத்த வாரமே படத்தை எடுத்துப் பார்த்துவிடுகிறேன். நன்றி

Post a Comment