இப்போதைக்கு என்ன பேஷன் தெரியுமா..நாலு பேத்த அழுகவைக்கிற மாதிரி பதிவு போடுறது..அதுதான் செம ஹாட்டா ஓடிக்கிட்டு இருக்காம்ல..ஆனாலும், நாங்களும், இதுமாதிரி நிறைய பதிவு போட்டிருக்கோம்டி..ஏதோ போரடிக்குறதனால, டெம்பரரியா ஸ்டாப் பண்ணி வைச்சிருக்கோம்..அம்மா பதிவு, பாட்டி பதிவு..ஒன்னு விட்ட தாத்தா பதிவு, சித்தப்பா பதிவு, முந்தானைக்கு தொலைஞ்சு போன பக்கத்துவிட்டு பெரியம்மா பதிவு..இப்படின்னு ஒவ்வொண்ணா எடுத்து விட்டோமுன்னா, சும்மா பூமி தாங்காது..அழுதுபுடுவீங்கன்னு அழுது அப்படின்னு சொல்லிக்கிட்டே இந்த பதிவை எழுதுறதுக்கு முன்னாடியே அழுதுகிட்டே எழுதுறேன்..தெரிஞ்சுக்குங்க..ஐய்யா..ஒன்னுக்கு ரெண்டுக்கு போறவியிங்க..இப்பயே போயிட்டு வந்துருங்க..படிக்க ஆரம்பிச்சிட்டிங்கன்னா, அப்புறம் அதெல்லாம் போக முடியாது..அது வந்து..ஆங்க்..அம்புட்டு செண்டிமெண்டா இருக்கும்..
பயபுள்ளைங்க, ரெண்டு டிஸ்யூ பேப்பரு, ரெண்டு மூணு கைகுட்டை எடுத்து வைச்சிக்குங்க..அப்புறம் அழுவுறேன்னு சொல்லி, தரைய ஈரமாகிட்டு என்னைய திட்டாதிங்க..சொல்லிப்புட்டேன்..சரி..ஆரம்பிப்போமா..
நேத்து, ஊருப்பக்கம் போற மாதிரி கனவு..போனா, அங்கிட்டு ஒரு பாட்டி, பாவம், இரண்டு காது, ஒரு மூக்கு தான் இருக்கு…பாவமா இருக்கு..தேம்பி, தேம்பி அழுவுறாங்க…நம்மளுக்கு தாய்க்குலம் அழுதா பிடிக்காதேன்னு என்னன்னு கேக்குறேன்..கஷ்டப்படுற பேமிலி போலிருக்கு..அவிங்க மகளை காட்டி காட்டி அழுவுறாங்க..அவுங்க மகளை பார்த்தா. அவுங்களும் ஒரே அழுகாச்சி..ஆச்சர்யம் என்னன்னா, அவிங்களுக்கும் இரண்டு கண்ணு ஒரு காதுதான்..சரி..அவிங்க ஏண்டா அழுவுறாய்ங்கன்னு பார்த்தா, பாவம் ஒருவேளை சோறு கூட சமைக்கமுடியுறதில்லையாம்..ஒன்லி பிட்சா தானாம்..தேம்பி, தேம்பி அழுவுறாங்க..
எனக்கே நொம்ப கஷ்டமாயிடுச்சு..தயவுசெய்து சொல்லிட்டு அழுவுங்கம்மான்னு கேட்டா, அவுங்களோட சோகக்கதைய கேட்டா, என் நெஞ்சே வெடிச்சிரும்போல இருக்குண்ணே..பாவம் பயபுள்ளைக, சாய்ங்காலம் எப்பொதும் போல வடை சுட்டிருக்காய்ங்க. அதுவும் எப்படி வீட்டு வெளியில..
கேட்டா கரண்டு இல்லையாம்..எம்புட்டு கஷ்டமா இருக்கு தெரியுமா..நீங்க அழுவாதிங்கண்ணே..கண்னைத் தொடைச்சுக்குங்க..அப்புறம்..அவிங்க வடை சுட்டுக்கிட்டு இருக்குறதைப் பார்த்துட்டு ஒரு காக்கா..காக்காவை பார்க்க ஒரே அழுவை, அழுவையா வருதுண்ண்ணே..பாவம்ணே..அதனால பேசக்கூட முடியலை..ஆனாலும் மனம் தளராம..அவிங்க சுட்டுக்கிட்டு இருக்குற வடையத் தூக்கிட்டு போயிடுச்சாம்..
இந்த இடத்துலதான் கண்கலங்காம படிக்கணும்ணே..நொம்ப முக்கியமான இடம்..காக்காவுக்கு வ்யித்த வலி..அதனால கொஞ்சம் பொறுமையா சாப்பிடுவோமேண்ணு, ஒரு மரத்துல உக்கார்ந்திட்டுகிட்டு இருந்துருக்கு..ஏண்ணே..எம்புட்டு கஷ்டம்..அதப் பார்த்துக்கிட்டு இருந்த ஒரு நரி..பாவம்..அன்னைக்கு சாப்பிடுறதுக்கு எதுவும் கிடைக்காததுனாலே காக்ககிட்ட் வந்து தன் நிலைமைய சொல்லி தேம்பி..தேம்பி….(கண்ணைத் தொடச்சிக்குங்கண்ணே..) அழுவுச்சாம்..
அதப் பார்த்து பாவம் காக்காவால அழுவகூட திராணியில்லாம, மௌனமா பார்த்துக்கிட்டு இருந்துச்சாம்..நரி, அப்புறம் காக்காகிட்ட, “நீ ரொம்ப அழகா இருக்க..ஒரு பாட்டு பாடு..” அப்படின்னு சொல்ல, பாவம் அந்த வாயில்லா ஜீவன் காக்கா, வடை இருக்குறது தெரியாம “கா..கா” ன்னு பாட, நரி வடைய தூக்கிட்டு, ஓட காக்கா, என்ன பண்ணுறதுன்னு தெரியாம, விசும்ம்பி, விசும்பி அழுவுச்சாம்..பாவம்ணே..அதுக்கு ஒருந்த ஒரே டின்னர் அந்த வடைதான்..அதையும் காக்கா தூக்கிட்டு போனா எப்படி இருக்கும்..காக்கா, பாட்டிய பார்த்து அழுவ, பாட்டி, மகளையும் பேத்தியையும் பார்த்து அழுவ..அழுவ..அழுவ..அழுவ..போய் கண்ணைத் தொடைச்சிக்குங்கண்ணே..எம்புட்டு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..
இப்படித்தான்..ஒரு ஊருல ஒரு காக்கா தண்ணி குடிக்குறதுக்க ஒரு பானை பக்கத்து…ஹல்லோ..எங்க
ஓடுறீங்க..அழுதுட்டு போங்க..ப்ளீஸ்..ஹல்லோ..எச்சூஸ்மி..ஹல்லோ..
“மிகவும் உருக்கமான
பதிவு..”, “படிக்கும்போது, அழுதே விட்டேன்…” , “நெடுநாளைக்கு அப்புறம் என்னை அழவைத்துவிட்டீர்கள்..”,
“மனதை உலுக்கிவிடது..” இதைத் தவிர எதயாவது கமெண்டு போட்டீங்க….இருக்குடி…
14 comments:
“படிக்கும்போது, அழுதே விட்டேன்…” ,
“நெடுநாளைக்கு அப்புறம் என்னை அழவைத்துவிட்டீர்கள்..”
ok va
அய்யா ராசா,
நான் இன்னைக்கி இதப் படிக்கப் போறேன்னு நேத்தே தெரிஞ்சி கிட்டு, நேத்து பூரா அழுது ஓய்ஞ்சிட்டேன்
சிலர் அவர்களது உணர்வுகளை எழுத்தாக கொண்டு வந்தால் அதனையும் நையாண்டி மேளம் கொட்டுவது குரூரமான மனநிலை.கூடவே உங்கள் பழைய பதிவு ஒன்று நினைவில் வந்து போகிறது.எனது கண்டனங்கள்.
இன்னும் என்னால அழுகைய அடக்க முடியல........ அழுகைய நிப்பாட்ட ஏதாவதை சிரிக்கிற மாதிரி எழுதுங்க...
தப்பு செய்யறீங்க.. இது அவரவர் உணர்வுகள். மிக அதிகம், ஓவர் செண்டிமெண்ட் என்று சொல்பதற்க்கு நாம் யார். பிடித்தால் படிக்கலாம். இல்லையேல் நிறுத்தலாம். அதை கிண்டல் செய்வது தவறு..
திரு ராஜ நடராஜன் சார் மற்றும் பந்து சார்,
இந்த பதிவை ஒரு நகைச்சுவையாகவே நான் பார்க்கிறேன். காரணம் இவரின் இயல்பே இப்படித்தான்.
எதையுமே தன்னுடைய நோக்கில் நகைச்சுவையாகவே தருவது இவரின் இயல்பு.
மாறாக இவர் மற்றவர்களின் உணர்வுகளை நையாண்டி செய்வதற்காக இப்பதிவென்றால் நான் வேதனைப் படுகிறேன்.
இனி விளக்கம் ராசாவின் கையில்.
சாரி இன்னொருவரை கிண்டல் செய்வது ஒருவரின் இயல்பு என்பதை எப்படி சார் ஏற்றுக்கொள்ள முடியும்?
kalakkite rasa. sirichi sirichi vayiru punna pochi.
நன்றி பாவா, கரிகாலன், அனானி,
நன்றி ராஜநடராஜன்,பந்து...
இந்தப் பதிவின் அடிப்படை, செண்டிமெண்டுகளை நக்கல் விடுவதற்கோ, குரூர எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கோ இல்லை. செண்டிமெண்டல் என்ற பெயரில் நடக்கும் பேத்தல்களை, நகைச்சுவைப்படுத்துவதுதான். மற்றபடி செண்டிமெண்டுகளால்தான், நம்நாட்டில் இன்னமும் குடும்பமுறை உயிர்ப்புடன் இருப்பதாக கருதுகிறேன். இல்லையென்றால், நாடு முழுதும் முதியோர் காவல் கூடங்கள் தான் இருந்திருக்கும். ஆனால் செண்டிமெண்டுகள் என்ற பெயரில் நடக்கும் பேத்தல்கள்தான் கொடுமையாக இருக்கிறது. உதாரணமாக என் மனைவி அழுதாள் என்பது செண்டிமெண்ட்..ஆனால் அழுதுகொண்டே இருந்தாள்..பக்கத்தில் உள்ளவர்களும் அழுதனர்.நானும் அழுதேன்..எங்கள் வீட்டு நாய்குட்டியும் அழுதது என்று சொன்னால் அது பேத்தல். இந்த மாதிரி பேத்தல்கள்தான் நிறைய ஓடிக்கொண்டிருக்கிறது. என்ன பிரச்சனை என்றால், நாம் செண்டிமெண்டிற்கு எளிதில் அடிமைப்பட்டுவிடுகிறோம். அதை வைத்து நிறைய பேர் பலனடைந்துவிடுகிறார்கள்..நாமும் உணர்வுகளை மதிப்பதாய் சொல்லி ஏமாந்துவிடுகிறோம். என்னுடைய இந்த பதிவு, டி.ஆரின் படங்களை கிண்டல் செய்வது போலதான். என்ன, நீங்கள் படத்தைப் பார்த்து சிரித்துவிட்டு நகர்கிறீகள். நான் சற்று கிண்டல் செய்துவிட்டு நகர்கிறேன். மற்றபடி, இந்தப் பதிவு, யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்த அல்ல..செண்டிமெண்டுகள் என்ற பெயரில் அடிக்கப்படும் கூத்துக்களை கிண்டல் செய்யவே..இல்லை, காயப்பட்டுவிட்டது என்று சொன்னால், என் மனம்தாழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.....
nice post.. yen edhuku eduthalum jackie-a kindal panniye post podureenga..
but unga post enaku romba pidichiruku.. :)
உண்மையிலேயே வருத்தப்பட்டு புலம்புவது வேறு, ஹிட்சுக்காக ஒப்பாரி வைப்பது வேறு.
நீங்கள் சொல்லவந்தது பலருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன்.
நண்பர் ராசா அவர்களுக்கு,
ஒரு முறை பின்னூட்டமிட்டால் சில சமயம் கடந்து போய் விடுவதுண்டு.பின்னூட்ட பகுதியிலோ அல்லது பெயர் அறிமுக காரணத்தால் பெயர் மறுபடியும் தெரிந்தால் பதிவரின் மறுமொழி என்ன என்பது பார்ப்பது எனது வழக்கம்.
பழைய பதிவு ஒன்று நினைவுக்கு வருகிறது என்று எனது நினைவிலிருந்தே கூறினேன்.எனது நினைவு அவ்வளவு மோசமில்லை என்பதை உங்கள் பதிவான எனது ஓட்டு கலைஞருக்குத்தான் உறுதிப்படுத்தியது.
You cannot have two yardsticks on sentiments and feelings.
உங்கள் நகைச்சுவை உணர்வை நான் பெரிதும் மதிக்கிறேன்.அதே சமயத்தில் தவறை சுட்டிக்காட்டுவதும் சக பதிவனாக எனது கடமை என நம்புகிறேன்.நன்றி என முடிப்பதை விட இந்தப் பின்னூட்டம் உங்களை மன அவஸ்தைக்குட்படுத்தினால் எனது மன்னிப்பையும் சொல்லிக் கொள்கிறேன்.
Post a Comment