Wednesday, 21 March, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் – நடந்தது என்ன
எல்லாம் பொய்க்கோலி பசங்கண்ணே..இதுல என்ன கொடுமைன்னா, எங்க வீட்டுக்காரய்ங்களும் சேர்ந்து பொய் சொல்லியிருக்காய்ங்கண்ணே. எப்ப போன் பண்ணினாலும்ராசா, கரண்டே இல்லைடா, புழுக்கத்துல வேகுறோம்டா..ராசா, எல்லா அத்தியாவசிய பொருட்களும் விலை ஏறிக்கிடக்குடா..சாகுறோம்டா..” அப்படின்னு..இப்பதாண்ணே தெரியுது..அம்புட்டும் பொய்

ஏண்ணே..நெசமா இருந்தா, சங்கரன்கோவில் தொகுதியிலயும் அப்படி நடந்துருக்கணும்ல. அங்கயும் கரண்டு போயிருக்கணும்ல,
அங்கயும், பால் விலை ஏறியிருக்கணும்ல..ஆனா, அப்படி நடந்த மாதிரி தெரியலயே..மாறி, மாறில வேண்டுதல் மாதிரி, ரெட்டை இலைக்கு ஓட்டு குத்தியிருக்காய்ங்க..

இப்ப தெரிஞ்சு போச்சுண்ணே..இப்ப தெரிஞ்சு போச்சு..சின்னப்பையன் தானேண்ணு(நாந்தேன்), எல்லாப் பயபுள்ளைகளும் சேர்ந்து என்னை ஏமாத்தியிக்கிய்ங்க..அம்மா ஆட்சி செய்யுறதுல ஏண்ணே அப்படி உங்களுக்கு கோவம். நீங்க தான ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தீங்க..அப்புறம் ஏன் கரண்டு இல்லை, விலை ஏறிப் போச்சுன்னு பொய் சொல்லுறீங்க..நாம் 3 வருசமா, ஊருல இல்லைதான்..அதுக்காக இப்படியாண்ணே ஏமாத்துறது..போங்கண்ணே..

ஆங்க்..தெரிஞ்சுருச்சுண்ணே..தெரிஞ்சுருச்சு..நீங்க என்னை வேணும்னு ஏமாத்தலை. பேன், லைட்டு போடுறதுக்காக, சுவிட்சைப் போட்டீங்களே..ஒரு நாளைக்காவது, மெயின்(கண்ட்ரோல்) சுவிட்சுன்னு ஆன் ஆயிருக்கானு பார்த்தீங்களா..அங்கதாண்ணே. தப்பு பன்ணுறீங்க..போங்கண்ணே..போயி, மெயின் சுவிட்சை ஆன் பண்ணுங்க..அத விட்டுட்டு தமிழகத்தில் நடக்கும் அம்மாவின் பொற்கால ஆட்சியை இப்படி கலங்கப்படுத்தாதீங்க

என்னது, பால் விலை, பஸ் டிக்கெட் விலை ஏறிருச்சா..அதெல்லாம் எல்லா அரசாங்கத்துலயும் ஏறத்தாண்ணே செய்யும். ஓட்டுப் போட்ட நம்மெல்லாம் தான் அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். எப்ப பார்த்தாலும், பஸ்ஸீலயே போகணும்னு அடம்பிடிச்சா எப்படி..ஒரு சைக்கிளோ, இல்லாட்டி, ஒரு மாட்டுவண்டியோ, பிடிச்சீங்கண்ணா..சுத்த பத்தமா ஆபிஸ் போகலாம்ல. என்ன ஒரு 2 மணிநேரம் எக்ஸ்ட்ரா ஆகும்..அதுக்கு என்ன பண்ண முடியும். காலை 7 மணிக்கு பதிலா, 2 மணிக்கெல்லாம் ஆபிஸ் கிளம்புங்க. காலையில ஜாக்கிங்க போன மாதிரியும் இருந்துச்சு..ஆபிஸ் போன மாதிரியும் இருந்துச்சுஎல்லாம் மனசு வைச்சா முடியும்ணே..

என்னது, பால், அத்தியாசிய பொருட்கள் விலை ஏறிருச்சா..போங்கண்ணே..உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுத்தான்..இன்னும் அந்த காலம் மாதிரியே, 3 வேளை சாப்பிடணும்னு ஆசைப்பட்ட எப்படிஅதனாலதான் எல்லாரும், தொப்பை, தொந்தியுமா திரியுறோம்..ஒருவேளை சாப்பாடு கம்மி பண்ணனுங்குறதுக்குத்தான், விலை ஏத்தியிருக்காய்ங்க..பெரிய துரைங்கஎப்பொழுதும் பாக்கெட் பாலுலதான் காபி சாப்பிடுவீங்களோ….குமட்டுல குத்திப்பிடுவேன்..மூலிகை காபி குடிச்சுப் பழகிக்குங்க..சுடுதண்ணிய காயவைச்சு..ரெண்டு மூலிகை போட்டிங்கன்னா, உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா..அதே மாதிரி..காலையில, இராத்திரி சாப்பாட்ட கட் பண்ணினா, எவ்வளவு மிச்சம் பண்ணலாம்..அதுகூட தெரியாம, போங்கண்ணே..விலைவாசி ஏறியிருச்சு, கரண்டு வரலைன்னு சும்மா தமாசு பண்ணிக்கிட்டுபேன் போட முடியலன்னா, பனஓல விசிறி எதுக்கு இருக்கு..அத ஒரு ஸ்டாண்டுல மாட்டிக்கிட்டு, உடம்பை லெப்டு பக்கம் ரெண்டு வாட்டி, ரைட்டுப்பக்கம் ரெண்டு வாட்டி ஆட்டு ஆட்டுனீங்கன்னா, காத்துக்கு காத்தும் ஆச்சு..உடம்பு அப்படியே எக்சர்சைஸ் பண்ணியும் ஆச்சு..இது தெரியுமா..பேனு, கரண்டுன்னு புலம்பிக்கிட்டு..

தமிழகத்துல பொற்கால ஆட்சி நடக்குதுண்ணே..அப்படி இல்லைண்ணா, சங்கரன் கோவிலுல அதிமுக தோத்திருக்கும்ல..எல்லாரும் சேர்ந்து பொற்கால ஆட்சிக்கு எதிரா சதி பண்ணுறீங்க..நல்லா இல்லை சொல்லிப்புட்டேன்..

என்னது நான் எப்ப அதிமுகவுக்கு மாறினேனா..தமிழத்துல ஏழை எளிய மக்களுக்கு மட்டும் லேப்டாப் தர்றாயிங்க..அமெரிக்காவுல வாழுற என்போன்ற எளிய மக்கள் என்ன பாவம் பண்ணியாய்ங்க..ஒரு நாள் பர்கர் சாப்பிடுறதுக்கு எம்புட்டு கஷ்டப்படுறோம் தெரியுமா..லேப்டாப் இருந்ததுன்னா, ஆன்லைனுல ஆர்டர் பண்ணுவோம்ல..இதுபோன்ற கஷ்டங்களையெல்லாம் விளக்கமா, அரசின் பார்வைக்கு அனுப்பியுருந்தோம். என்போன்ற எளியமக்களின் பால் அன்புகொண்ட அரசு, ஒபாமாகூட பேசி, ஒரு “ஆப்பிள்” லேப்டாப்பும் , அப்படியே ஒரு ஐபோனும் தர்றதா சொல்லியிருக்காய்ங்க.. அமெரிக்காவுல வாழ்ற ஏழைபாழைங்களுக்கு உதவியா இருக்கும் பாருங்க..என்ன நான் சொல்லுறது..இனிமேல் பொற்கால ஆட்சிக்கு எதிரா எவனாவது பேசுங்க..இருக்குடி…

கடைசியா ஒன்னு சொல்லுக்கிறேன் கேட்டுக்குங்க..

“அண்ணா நாமம்..”…ஐய்யய்யோ..மன்னிச்சிருங்க..ஏதோ வாய்தவறி வந்துருச்சு..

“அம்மா நாமம் வாழ்க..புரட்சித் தலைவி நாமம் வாழ்க..”

4 comments:

ரெவெரி said...

கூடங்குளத்தில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை உடனே நிறுத்தவேண்டும்...

கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்...

Hitler's Germany...Sadam's Iraq...Now Singh's India...

Shame on you Jaya...

Ponniyinselvan said...

one thing you forget.Salary and income of people has increased disproportionately. Especially, the 6 th pay commission has given unbelievable increase in salary. So people have more than enough money and they can buy.Even a house maid has raised her salary.She gets 2000 in one house.Easily, she gets at the least 8000 .So reconsider your idea.

Kovai Neram said...

ஓஹோ...இதுல இம்புட்டு விஷயம் நடந்து இருக்கா...

Anonymous said...

நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மையிலும் உண்மை இல்லையென்றால் அவர்கள் பணத்தையும் பெற்றுக்கொண்டு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் அதிமுகவிற்கு வாக்கு அளித்து இருப்பார்களா?

Post a Comment