Sunday, 4 March, 2012

விஜய் டி.வியில் சிம்பு, டி.ஆரை செம கலாய் கலாய்த்த பிரிதிவிராஜ்
நம்ம டான்ஸ் ஆடினாத்தேன், ஐடியா ஸ்டார் சாம் ஆண்டர்சன் ஆடின மாதிரி இருக்கும், ஏதோ, பயபுள்ளைகள் டான்ஸ் ஆடுறாய்ங்க..கழுத, பார்த்துவிட்டுதான் போவோமெங்கிற(எப்படி..மீசையில மண்ணு இருக்கா...)
ஆசையிலதான், "உங்களில் யார் நயன்தாரா." அய்யய்யோ..சாரிங்க.."உங்களில் யார் ஏகபத்தினி விரதன்.." ஐயோ..அண்ணே..எப்படி குழறுது பாருங்க வாயி..."உங்களில் யார் பிரபுதேவா.." மாதிரி நிக்ழ்ச்சியெல்லாம் பார்க்குறது..


பயபுள்ளைக, நம்ம ரேஞ்சுங்கு இல்லைன்னாலும், சும்மா சொல்லக்கூடாது, நல்லாத்தேன் ஆடுறாய்ங்க..ஆனா, அதுக்கு ஜட்ஜூன்னு மூணு பேரை கூட்டி வைச்சு, அவிங்க பண்ணுற அலும்பு இருக்கே..ஆத்தாடி, அம்மாடி..சொல்லி மாலலைண்ணே..


கட்டையா, ஒரு ஜட்ஜூ, பேரு, ஏதோ ஸ்ரீதர் மாஸ்டராம்..இருக்குற எல்லாப் பேரையும், மூஞ்சியில அடிக்குற மாதிரி பேசுறாருண்ணே..யாருண்ணே..எந்த படத்துக்கு டான்ஸ் போட்டிருக்காரு..எதுவும், உலக லெவலுல, மைக்கேல் ஜாக்சன் மாதிரி பேமஸ் ஆளா..
யாருன்னு தெரியலண்ணே..ஆனா, ஒன்னு மட்டும் தெரியுது..இப்பதைக்கு எந்த படத்துக்கும் சான்ஸ் இல்லைன்னு மட்டும் தெரியுது.


அடுத்து பிரபுதேவா எம்புட்டு உசரம்..அவரு தோள் மேலேயே ஒரு அக்கா, காலை தூக்கிப் போட்டப்ப, சாப்பிட்டுட்டு இருக்குற கடலை பர்பியை தூக்கு எறிஞ்சுக்கிட்டு "ஆ" ன்னு பார்த்துக்கிட்டு இருந்தேண்ணே..அந்த அக்கா, ஒரு நாலு சுத்து பெருத்து போய், உக்கார்ந்துக்க்கிடு
ஜட்ஸ்மெண்டு சொல்லுறாய்ங்க..அதுவும் இங்கிலிபீசுல..நம்மெல்லாம் இங்க்லீசு பேசுன, பதிவுலகமே, கிடுகிடுத்து போயிடும். ..ஐ ஆம்..வார்னிங்கு..ஆங்க்...


சரி, மேட்டருக்கு வருவோம்..இப்படித்தான், ஒரு நாலு வருசம் இருக்குமுன்னு நினைக்கிறேன்..எப்ப பார்த்தாலும்(எதுக்குன்னே தெரியலண்ணே)
சிரிச்சுக்கிட்டே இருக்குற பப்லு(ஒரு படத்துல செந்தில பேரு பப்லு சொல்ல, தலைவன் கவுண்டமணி, "ஆமா..தொப்புளுன்னு வைச்சிக்க, அப்படின்னு
கவுண்டர் குடுப்பாரு..), போட்டியாளரா கலந்துக்கிட்டாரு..ஜட்ஜு யாரு தெரியுமா..சொல்லுறதுக்கு மின்னாடி சிரிக்க கூடாது, ஏங்க சொல்லுறேன்ல..
சிரிக்காதிங்க..ஆங்க்..ஜட்ஜூ யாரு தெரியுமா.."டே..என் மகன் மாதிரி வருமாடா' என்று எப்போதும் தன்னடகத்துடன் பேசும் டி.ஆரின் புதல்வன்,
கேட்டைத்தாண்டிய..இது..விண்ணைத்தாண்டிய, பிரபுதேவாவுக்கு, முந்தையப் போட்டியாளர், ஒஸ்தி, "சிம்பு"


ஒரு பாட்டுல ஏதோ கன்னா,பின்னானு, நம்ம தொப்புளு..சாரி..பப்லு டான்ஸ் ஆட, தரையக்கூட்டுற மாதிரி டான்ஸ் ஆடுற சிம்பு செம டென்சன்
ஆயிட்டாப்புல..அவ்வளவுதான் "எனக்கு பிடிக்கலை..எனக்கு நடிக்கத்தெரியாதுய்யா" டயலாக்க்கு விட, பார்க்குற எல்லாத்துக்கும் செம குஜாலுதான்..
விஜய், டி.வி முழுக்க சிம்பு சப்போர்ட்டுதான்..இதுக்காக அடுத்த, எபிசோடுல, சிம்புவுக்கு சப்போர்டு பண்ற மாதிரி, மக்கள் கருத்துன்னு கேட்டு
பப்லுவை போட்டு காய்ச்சு, காய்ச்சின்னு காய்ச்சி எடுக்க, நம்ம பப்லு, உண்மையிலேயே தொப்புளுவா மாறி, போங்கயா, நீங்களும் உங்க
ஷோவும் சொல்லிக்கிட்டு காசு வாங்காம கிளம்பிப் போயி பேப்பருல பேட்டியெல்லாம் கொடுத்துப்புட்டாரு..


இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சம்பவத்தை, எதிர்கால சந்ததிகள் மறந்து போயிரக்கூடாதுங்கிறதுக்குத்தேன், மேல சொன்ன முன்னோட்டம்..திரும்பவும் மேட்டருக்கு(பர்ங்கிமலை ஜோதி இல்லைண்ணே) வருவோம்..நேத்து அதே உங்களில் யார் உத்தமபுத்திரன்..இது..உங்களில் யார் பிரபுதேவா, நிகழ்ச்சியில, திரும்பவும் கலந்துக்கிட, நம்ம தொப்புளு..இல்ல பிரிதிவிராஜ், ஆரம்பத்திலேயே, சிம்புவை போட்டு கலாய், கலாய்ன்னு கலாய்க்க ஆரம்பிக்க, ஜட்ஜூ எல்லாம் ஒரு நெளிசல்..அப்பறம் ஆரம்பிச்சதுதான் கூத்து..


தக்காளி, பதிவுலகத்துல கூட டி.ஆரை இப்படி கலாய்ச்சிருக்க மாட்டய்ங்கண்ணே..அப்படி ஒரு கலாய்..இந்த பப்லுவை அறிமுகப்படுத்தனதே, நம்ம குறள்டிவியில் சாந்தமா பேசுற டி.ஆரு..அவரு எப்படி சூட்டிங்குல நடந்துக்குருவானு சொல்லி, மனுசன் அடிச்ச கூத்து இருக்கே..
யப்பே...யப்பே...ஏறக்குறைய, டி.ஆருக்கு, கேமிராவே புடிக்கத்தெரியாதுங்குற மாதிரி, கிழி, கிழின்னு கிழிச்சுப்புட்டாரு..


ஏதோ, விஜய்டிவிக்கும், டி.ஆருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு போல, இந்த தடவை, பப்லுக்கு புல் சப்போர்ட்டு, அப்படியே பிளேட்டை மாத்திப் போட்டு, நம்ம ஊரு அரசியல்வாதிகளை மிஞ்சிப்புட்டாய்ங்க...அதெல்லாம் பார்க்குறப்ப, எப்படி
அழுகை, அழுகையா இருந்துச்சு தெரியுமா(யாருண்ணே, அங்க, கேமிராவை திருப்பி, சோக ம்யூசிக் போட்டு, விளம்பர இடைவேளை போடுறது..)20120303-175955 by Oruwebsitetamil
4 comments:

Ramakrishnan said...

Link kodunga sir

Jayadev Das said...

ரொம்ப நன்றி நண்பா..... இதைப் பார்த்துவிட்டு, நான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்த பிரித்விராஜ் வீடியோவை இன்றைக்கு கண்டுபிடித்து விட்டேன், நான் எத்தனையோ முறை தேடியும் கிடைக்காத அது எப்படியோ இன்று கிடைத்து விட்டது, உங்களுக்கு மிக்க நன்றி, நீங்களும் அதைப் பாருங்கள், ரொம்ப நன்றாக இருக்கிறது!!

[Actor Prithvi @ Babloo acts as Trajendran]

http://www.youtube.com/watch?v=tzc4RNRfJBs

venkatesa gurukkal said...

பதிவர்கள் ஆபாசமானவர்களா?

இந்த இடுகையின் அனைத்து கமெண்ட்டை படித்து பதிவர்களாகிய நீங்களே தீர்ப்பு சொல்லுங்க
http://www.tamilvaasi.com/2012/03/simple-ways-to-increase-battery-life-of.html

Anonymous said...

accidentally happened to c ur blog... very nice.. aana contact panna email id ethum kudukala.y??? - kalya

Post a Comment