Monday, 19 March 2012

கண்கலங்க வைத்த கோடிஸ்வரன் நிகழ்ச்சி




என்னதான் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியைப் பற்றி கேலி கிண்டல்கள் செய்தாலும், நேற்று பார்த்த அந்த நிகழ்ச்சி, ஒரு நிமிடம் இதயத்தை உலுக்கிப் போட்டது. எப்பொழுதும் போல, சற்று அயர்ச்சியாகத்தான் அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன். கலந்து கொண்டவர் பெயர் நவநீத கிருஷ்ணன் என்று நினைக்கிறேன்.அவருடைய குடும்பத்தை பற்றி சொல்லும்போது, தன்னுடைய மகளைப் பற்று பேசிவிட்டு, மகனைப் பற்றி
பேசியபோது, குரல் கம்மியது. அவருடைய மகன், சிறுவயதிலேயே, "ஆட்டிசம்" என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாக கூறியபோது, குரல் உடைந்து போயிருந்தது.

ஒரு சிறுஅறையில் மெதுவாக சென்ற கேமிரா, அங்கு போர்வையோடு படுத்துக்கொண்டிருந்த அந்த சிறுவனை காண்பித்த போது, மனதை ஏதோ செய்தது. அந்த 21வயது இளைஞன், மனதளவில் இன்னும் சிறுவனாக இருந்தான். சிறுவயது குழந்தையைப் போல, அந்த இளைஞனை பாதுகாக்க வேண்டியிருந்தது. இந்த ஆட்டிசம் என்ற குறைபாடு எதனால்
வருகிறது, என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று சொன்னார். லட்சம் பேருக்கு ஒருவருக்கு இந்த குறைபாடு இருக்கும், அந்த குழந்தை தன்னுடைய குழந்தை எனும்போது, அவருக்கு எப்படி இருக்கும்.

ஆனால், அவரிடம் எனக்குப் பிடித்தது, அவருடைய அந்த மனஉறுதி, அவருடைய குரல்தான் உடைந்திருந்ததே ஒழிய, மனம் அல்ல. ஒரு இடத்தில் கூட அவர் அழவில்லை. அந்த சிறுவன் தனக்கு கடவுள் கொடுத்தது, என்ற நம்பிக்கை இன்னும் இருந்தது. நம்மில் எத்தனை பேர் அப்படி இருக்கமுடியும். எனக்கெல்லாம் ஒரு சின்ன காய்ச்சல் வந்தால் கூட துவண்டு போகிறேன்கடவுளை, இருபதுமுறை பழிக்கிறேன். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும், தான் ஈன்ற மகன், இப்படி ஒரு நிலையில் இருக்கும்போது,
தாயின் வேதனை எப்படி இருக்கும். ஆனாலும், அதையும், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு, அவனுக்கு உணவு ஊட்டிய அந்த தாயைப் பார்க்கும்போது, அழுகைதான் வந்தது.

 
எல்லோருக்கும். இந்த நிகழ்ச்சி பாதித்து இருந்தாலும், திருமணமாகி, உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால், இன்னும் கலங்கடிக்கும்என்னையும் அப்படித்தான் ஒருநிமிடத்தில் உலுக்கிபோட்டுவிட்டது. ஒருவயது கடந்த என் மகனுக்கு, எப்போதும் நடக்கும் ஹெல்த் செக்கப்பிற்காக ரத்தப் பரிசோதனை எடுக்க சொல்லியிருந்தார்கள். போனவாரம் ரத்தப்பரிசோதனை நிலையத்திற்கு சென்றிந்தேன். ஒரு வயது
பையனுக்கு என்ன தெரியும். அங்கே உள்ள அலுவலர்களோடு, ஒரே விளையாட்டுதான். சற்று நேரத்தில் அவனை அங்கு உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்துப்போயிருந்தது. சற்று நேரம் கழித்து, ரத்தப்பரிசோதனைக்காக, உள்ளே அழைத்தனர். நம்மைப்போலவே, குழந்தைகளுக்கும் நரம்பில் ஊசி போட்டு ரத்தம் எடுப்பார்கள் என்று எனக்கு தெரியாது. குழந்தைகளுக்கு சுலபமாகத்தான் இருக்கும் என நினைத்திருந்தேன். அவனுடைய அம்மா
மடியிலேயே அமர்த்தச் சொல்லிவிட்டு, கையில் நரம்பு தெரிவதற்காக அந்த ரப்பரைக் கட்டியபோது கூட, அவன் அவர்களைப் பார்த்து சிரித்தான். என்னை அவனுடய இரண்டு கைகளையும், இறுக்க பிடிக்க சொல்லிவிட்டு, அவனுடைய இரண்டு கால்களையும் இறுக்க இரண்டு பேர் பிடிக்க சொல்லிவிட்டனர்.

அவன் துடித்துப்போய்விட்டான். எவ்வளவு அழுதாலும் பரவாயில்லை, தயவுசெய்து, இறுக்கத்தை தளர்த்திவிடாதீர்கள், வேறு இடத்தில் ஊசி இறங்கிவிடும் என்று சொல்லியதால், மனதை கல்லாக்கிகொண்டு, அப்படியே அவனுடைய இரண்டு கைகளை இறுக்கப்பிடித்திருந்தேன்..அவன் பிறந்து , ஒரு வயதில் அவ்வளவு தேம்பி,தேம்பி அழுததை நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு அழுகை..இரண்டு சிரிஞ்சுகள் எடுத்துவிட்டனர். அவனால் அழுவதைத் தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை. கையை காலை ஆட்ட முயற்சிக்கிறான்..முடியவில்லை..ஒரு கட்டத்தில் இரண்டு சிரிஞ்சுகள் எடுத்துவிட்டபிறகு, கையை தளர்த்த சொன்னார்கள். அப்படியே வந்து அம்மாவைக் கட்டிகொண்டான். நான் கூப்பிட்டால் கூட வரவில்ல்லை. என்மேல் அவ்வளவு கோபம். நீதானே என்னை இறுக்கப்பிடித்துக்கொண்டாய் என்று..என்னைப் பார்த்தால், சிரித்து, விளையாடுபவன், ஒரு நாள் முழுக்க என் அருகில் வரவில்லை.

எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. யோசித்துப் பாருங்கள், ஒருநாளைக்கே இப்படி என்றால், தன் மகன் கடந்த 21 வருடங்களாக கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது, ஒரு தாய்க்கும், தந்தைக்கும் எப்படி இருக்கும். ஆனால் அவையெல்லாம், மனதில் போட்டு
அடக்கிக்கொண்டு, முகத்தில் உறுதியைக் காட்டிய அந்தப் பெரியவருக்கு, நாம் என்ன செய்யமுடியும்..அவருடைய மகன் சீக்கிரம் குணமடையவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதைத் தவிர..

கடவுளே, அவருக்கு அந்த ஒருகோடி கிடைக்கவேண்டும் என்று என் மனது வேண்டிக்கொண்டது...

13 comments:

இராஜராஜேஸ்வரி said...

நாம் என்ன செய்யமுடியும்..அவருடைய மகன் சீக்கிரம் குணமடையவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதைத் தவிர..

dsfs said...

அவரின் முகத்தில் தன்னம்பிக்கையின் ஒளி தெரிந்தது கவனித்திர்களா? புன்னகையை மட்டுமே முகத்தில் வைத்திருந்தார். நல்ல மனிதர்.

Anonymous said...

eelam tamilanukku ennasolla vararu vidudhalai puligal ella muslimagalai kondrozhiththanar illai appadi paarththaal avargalukku edhiraaga seyalpaduvorai indhu thozhiladhibargalaiyum mattrum migaperum thalaivargaliyum kondranar thiru eelam tamilan avargale naamvenduvadhu vidudhalai puligalukkaaga illai makkalukkaanadhu dhayavuseydhu madhchchaayam poosavendaam appadinadappavargalil neenglalum oruvardhaan endraal vidudhalai puligalukkum ungalukkum verupaadu kidayaadhu nandri mannikkavum thiru raasaa avargale naan nigazhchchiyai paarkkavillai irundhaalum vedhanayaana padhivu

KANNAA NALAMAA said...

கடவுளே, அவருக்கு அந்த ஒருகோடி கிடைக்கவேண்டும் என்று என் மனது வேண்டிக்கொண்டது...

gEr.Ganesan/Combatore

Anonymous said...

He won 12.5 Laks. :) He played brilliantly even after all life lines are used up.

marimuthu said...

அவனுடைய தாய்க்கும் தந்தைக்கும் இன்னும் மன உறுதியை தரவேண்டும் என்று இறைவனை பிறார்த்திக்கிறேன்...

RKTHINA said...

hand off both

ரவி சேவியர் said...

கடவுளே, அவருக்கு அந்த ஒருகோடி கிடைக்கவேண்டும் என்று என் மனது வேண்டிக்கொண்டது...

பிரதிபலன் பாரா வேண்டுதல்கள் என்றும் நிறைவேறும்.

Unknown said...

yes nanum antha nigazhchiyai partheen

durai m said...

o god please help me this is your child

Anonymous said...

நானும் இப்படியான குழந்தைகளைப்பற்றி எழுத நினைப்பதுண்டு..ஆனாலும் ஏனோ முடிவதேயில்லை.ஏனெனில் நானும் லட்சம் தந்தைகளில் ஒருவன்....

shiva said...

கடவுளே, அவருக்கு அந்த ஒருகோடி கிடைக்கவேண்டும் என்று என் மனது வேண்டிக்கொண்டது...


good will happen always fir ur good heart dear..
may god bless you

- யெஸ்.பாலபாரதி said...

http://www.youtube.com/watch?v=W3YxDKQmnzE

இதோ அந்த நிகழ்ச்சியின் வீடியோ!

Post a Comment