தமிழ் சினிமாவின் கேடு என்ன தெரியுமா..ஒரு பக்கம், “எங்கேயும் எப்போதும்” போன்ற இயல்பான யதார்த்தமான திரைப்படங்கள் வந்து, 4 படிகள் உயர்த்திக் கொண்டு போகும். ஆனால், திடிரென்று சில படங்கள் எண்டிரியாகி, தமிழ்சினிமாவை, 8 படி கீழிறிக்கி அதள பாதாளத்திற்கு கொண்டு சென்று, மிதித்துவிட்டு கேலியாக சிரிக்கும். அப்படி ஒரு படம் தான், சமீபத்தில்,வெளியான “வெடி..”
படுபில்டப்பாக கல்கத்தா வந்து சேரும், விஷால், ஒரே அடியில், பாட்டிலை, ஒரு ரவுடி மண்டையில் விட்டு ஆட்டும்போதே தெரிந்து விடுகிறது..அடுத்த 2 மணி நேரத்துக்கு நமக்கு எமகண்டம் தான்..அவசரம் அவசரமாக ஓட நினைக்கும்போது, தியேட்டர் வாசலில், உருட்டு கட்டை இல்லாமல் நிற்கும், தியேட்டர்காரர்களை பார்த்து, வரும் ஒன்னுக்கை கூட அடக்கிக்கொண்டு உட்கார நேர்கிறது…
சரி கதைக்கு(இருக்கா என்ன) வருவோம். தங்கையை தேடு கல்கத்தாவிற்கு வரும் விஷாலை, ஒரு கும்பல் வெறி கொண்டு தேடி அலைகிறது(படம் முடிந்த பின்பு, டைரக்டரை நாம் தேடுவது போல).. அவரும் சளைக்காமல் , எல்லார் மண்டையிலும் நல்லா பாட்டிலை விட்டு ஆட்டுகிறார். அதற்கப்பறம், பார்த்தாலே, கெக்கெபிக்கெ, கெக்கெபிக்கெ என்று சிரிப்பு வரும் வில்லன் சாயாஜி ஷிண்டே தான் நம்ம விஷாலையும் தங்கையும் கொல்ல அனுப்பியது என்றால்..ஏனென்றால் அதற்கு ஒரு பிளாஷ்பேக்காம்(கொடுமைடா சாமி..) ஷாயாஜி ஷிண்டே, பிரபல ரவுடியாம்..தூத்துக்குடியே ஆட்டிப்படைக்கிறாராம்(அம்மாவுக்கு தெரிஞ்சது…மவனே என்கவுண்டர்தான்). அந்த ஊருக்கு அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் விஷாலுக்கும், வில்லனுக்கும் நடக்கும் மோதலில், நம்ம விஷாலு, வில்லனை கன்னாபின்னாவென்று அலையவிடுகிறார்..அதற்கு பழிவாங்கதான், விஷாலை கொல்ல அனுப்புறாய்ங்களாம்..நடுநடுவே, நம்ம டி.ஆருக்கு பிடித்த தங்கச்சி செண்டிமெண்ட், சமீரா ரொட்டி..இது..சமீரா ரெட்டியோடு காதல் என்று..அய்யோடா சாமீமீமீ..யாராவது காப்பத்துங்களேன்..
விஷால், “அவன், இவன்” படத்தில் நடித்து, சேர்த்து வைத்திருந்த எல்லா நல்லபெயரையும், ஒரே நிமிடத்தில் பாழக்கியுள்ளது மட்டுமில்லாமல், பயங்கர எக்ஸ்பிரஷன்களாம் கொடுத்து, கொடுமைப்படுத்துகிறார்..வெந்து போயி சொல்லுறோம் சாமி..இந்த பாவமெல்லாம் சும்மாவே விடாது…சாயாஜி ஷிண்டே நடித்த ஒரே நல்ல படம் “பாரதி” என்று நினைக்கிறேன்..தாங்கலை…வில்லத்தனம் என்ற பெயரில் சரி காமெடி செய்கிறார்…விவேக் தயவு செய்து ரிட்டையர்டாகி விடலாம்..மருந்துக்கு கூட சிரிப்பு வருவேனான்னு அடம்பிடிக்கிறது….படம் பார்த்து முடித்துபிறகு, “கோவாலு” கூட பேசும்போது கூட சிரிப்பு வரவில்லையென்றால் பாருங்களேன்...தயவுசெய்து சார்…ப்ளீஸ்…..
சமீரா ரெட்டி, வழக்கம்போல, ஹீரோவோடு புரண்டு புரண்டு லவ் செய்கிறார்..கவர்ச்சி காட்டுறாராம்மா…படத்தில் உள்ள ஒரே ஆறுதல், விஜய் ஆண்டனியின் பாடல்களும், அவ்வப்போது வரும் சில சண்டை காட்சிகளும் தான்…விவேக் போதாது என்று, ஊர்வசி, ஸ்ரீமன் என்று வந்து படுத்தி எடுக்கிறார்கள்…
டைரக்டர் பிரபுதேவாவாம்..சார்..இப்பதான், தமிழ்சினிமா கொஞ்சம் நல்ல பாதையில் போய்கிட்டு இருக்கு..எவ்வளவோ புதிய இயக்குநர்கள் வாய்ப்புத்தேடி, ஸ்டூடியோ வாசலில் நிற்கிறார்கள்..தமிழ்சினிமாவை ஒரு படி ஏத்தலைனாலும் பரவாயில்லை…இப்படி…..
உங்க கையை காலா நினைச்சு கேக்குறோம் சார்….
9 comments:
தலைவா, இந்த மொக்க படத்த விடுங்க, புது முயற்சியான வாகை சூட வா விமர்சனத்தை எழுதுங்க
//வெந்து போயி சொல்லுறோம் சாமி..இந்த பாவமெல்லாம் சும்மாவே விடாது…//
hahahah............
//உங்க கையை காலா நினைச்சு கேக்குறோம் சார்….//
Romba correct Raja.
பதிவு சூப்பர் .இன்று என் வலையில் http://kobirajkobi.blogspot.com/2011/10/blog-post.html
வெடி புஸ்வானம் - கவலையில் பதிவர்
உங்கள் பீலிங்க்ஸ் எனக்கு புரியுது...கவலைப்படாதீங்க பாஸ்....
இப்படிக்கு,
கெளதம் G.A
http://www.gowthampages.blogspot.com
y blood?
ஹா ஹா..! நான் நினைச்சதை அப்படியே போட்டிருக்கிங்க...!
Ungal pathivu nagaichuvaiyodu nandraaga eluthi eruntheergal.vaalthukkal.
நன்றி சரவணன்,
நன்றி புஷ்பராஜ்..எழுதிடுவோம்
நன்றி விஜய் ஆனந்த்
நன்றி கோபி
நன்றி கௌதம்
நன்றி ரமேஷ்
நன்றி அனானி
நன்றி பாபு
Post a Comment