Thursday, 22 September, 2011

விஜய் டிவியின் நீயா நானா – கொலையா கொல்லுறாய்ங்கப்பா

இந்த விசய் டிவியில ஞாயிற்றுக்கிழமையான்னா, மிச்சம் இருக்குற உசுரை எடுக்குறதுக்குன்னே, ஒரு ப்ரோகிராம் போடுறாய்ங்கண்ணே..பார்க்கவே, பல்க்கா, இந்த வேகாத வெயிலயும், கோட்டு சூட்டு போட்டுகிட்டு, ஒரு மனுசன், பேரு கோபிநாத்தாம்..வாயைத் தொறந்தா, பேசிக்கிட்டே இருக்காருண்ணே..சரி, பயபுள்ளைக்கு ஏதாவது வியாதி இருக்கும்போலிருக்கேன்னு நினைக்ககூட முடியல, ஏன்னா சிலநேரம், ரொம்ப நல்லா பேசுறாருங்கிறதனால தான். அதுவும் இல்லாம, சானலை அங்கிட்டு திருப்புனா, “யேய்..என்னடா ராஸ்கல்..என்ன கொரியோகிராப் பண்ணியிருக்க..பேசாத..” என்று கலா மாஸ்டர் பண்ணும் அடாவடி தாங்கமுடியாமலும் தான்..

இப்படித்தான், போனவாரம் என்னடா, ஒரே பொண்ணுங்களா இருக்கேன்னு நீயா நானா பக்கம் திருப்ப ஆரம்பிச்சேன்..டாப்பிக்கு “எது சிறந்தது…டஸ்க்கா(மாநிறம்), பேர்(வெள்ளைத் தோலாம்மா..)” நம்மளுக்கெல்லாம் டாஸ்மார்க்குதான் தெரியும் தவிர, டஸ்க்கெல்லாம் இப்பத்தான் கேள்விப்படுறேன்.. சரி, பயபுள்ளைக நல்லாத்தான் இருக்குதுகன்னு நம்பி உக்கார்ந்தா, அவிங்க பேசுற கேட்டு பி.பி ஏறுதுண்ணே. அதுவும், நம்ம ஊரு பொண்ணுங்ககிட்ட , அழகைப் பத்தி கேட்டாலே “ஹே..ஐம் ஹேவிங்க் லாங்க் ஹேர்யா…ஐ பீல் ஷையா..” என்று எல்லாத்துக்கும் “யா..யா” போட்டே உசிரை எடுக்குங்க..அதுல மைக்க வேற கொடுத்துட்டா சொல்லவா வேணும்…யப்பே, ஒரு பொண்ணு என்னடான்னா, அதுக்கு ப்யூச்சர் நல்லா இருக்காம், 40 பேரு ப்ரோபோசல் பண்ணியிருக்காய்ங்களாம்,, இன்னொரு பொண்ணு, மூக்கு நீட்டிக்கிட்டு இருக்காம்,,அது சூப்பரா இருக்காம்..இன்னொரு பொண்ணுக்கு நெத்தி அகலாம இருக்காம்..அதனால பஸ்ஸடாண்டுல நிக்கவே முடியலயாம், பசங்க சுத்தி, சுத்தி வர்றாயிங்களாம்…இன்னொரு ஆண்டிக்கு காலேஜ் போற வயசுல பொண்ணு இருக்காம், இப்ப கூட ஒரு ப்ரோபோசல் இருக்காம்..யோவ்..என்னங்கயா இது..எனக்கு பார்க்குறப்பய கண்ணைக் கட்டிக்கிட்டு வந்துச்சுண்ணே…

இதுல வேற இந்த கோபிநாத்து, ரெண்டு பொண்ணுங்களை ஏத்தி விடுறாரு..அய்யோ..அதுதான் டெய்லி பஸ்ஸடாப்புல பார்க்குறோமே..அன்னைக்கு பஸ்ஸடாப்புல நிக்குறேன்..பக்கத்துல ஒரு பொண்ணு, ஒரு பொண்ணுக்கிட்ட பேசுதாம்…

“ஹே..1 கேஜி இங்கிரீஸ்டு யா…ஐ ஃபீல் சேட்..”

அதுக்கு இந்த பொண்ணு..

“நோ யா..யூ ஹேவ் டூ பி இன் டயட் யா..”

“யா..கரெக்ட்..ஐ ம் கோயிங்க் டூ ரெடியூஸ்ட் டூ ஒன் இட்லி..”

அதாவது, மதிய சாப்பாடுக்கு ரெண்டு இட்லி சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சாம்..இனிமேல் ஒரு இட்லிதானாம்மா… அடங்கொன்னியா..எக்மோரு பக்கம் போனா, பிளாட்பாராத்துல 2 இட்லி கூட கிடைக்காம, ஒரு கூட்டமே பட்டினியில படுத்துக்கிடக்காய்ங்க..இதுக டயட்டுக்காக பட்டினி கிடக்குதுங்க…ஏண்ணே, உலகம் அவ்வளவு சீக்கிரம் அழியும்ங்கிறீங்க???

அப்புறம், மைதா மாவுக்கு நல்லா போர்வை போத்தின மாதிரி சீப் கெஸ்டாம்..பேரு ஜனனி ஐயராம்…காலுமேல காலு போட்டிக்கிட்டு பேசுறப்ப, நம்ம நாடு சீக்கிரம் வல்லரசா ஆகிடுமோ, பயம் வந்துருச்சுண்ணே..அந்த சைடு ஹிப்பி வைச்சிக்கிட்டு ஒரு புள்ள இங்கிலீபிசுல பிச்சி உதறுத பார்த்து நமக்கு கை காலெல்லாம் நடுங்குதுண்ணே..நல்ல வேளையா கடைசியல, நம்ம காலேஜ் பசங்ககிட்ட ஒரு சர்வே எடுத்தாய்ங்க..நம்ம பசங்களை கண்டிப்பா பாராட்டணும்னே..எங்கம்மா அடிக்கடி சொல்லுற, “ஏலே..செவத்த தோலை பார்த்து மயங்கிறாதடா..” ங்கிற மாதிரி “மாநிறமே சிறந்ததுன்னு தீர்ப்பு சொல்லிருக்காய்ங்க..நல்லா இருங்கயா.

எல்லாத்துக்கும் கோவாலுக்கிட்ட கருத்து கேட்போமே, இதுக்கும் கேட்காம இருந்த வரலாறு மன்னிக்காதேன்னு கோவாலுகிட்ட கேட்டேன்,..

“கோவாலு..எந்த பொண்ணுங்க அழகுடா….மாநிறமா, செவத்த தோலு..”

பாவிப்பய சொல்லுறான்..

“ராசா..எதுனா இருந்தா என்னடா..பிகரு பார்க்க சூப்பரா, அம்சமா இருக்கா..அது போதும்டா…கோழி குருடா இருந்தாலும்..”

எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வந்துச்சுண்ணே..இனிமேலு தாங்கமுடியாதுன்னு நல்லா போர்வையா பொத்திக்கிட்டு தூங்குனா, 4 மணிக்கு அலாரம் வைச்சு எழுப்பி வூட்டுக்காரம்மா கேட்குறா…

“ஏங்க..நான் டஸ்க்கா, பேர்(fair) ஆ….”

27 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

raituuuuuuuuu

• » мσнαη « • said...

அது ஜனனி அய்யர் இல்லண்ணே...

அனுஜா அய்யர்...

உன்னை போல் ஒருவன் ல நடிச்சுதே!!!!!!!!!!

தமிழ்வாசி - Prakash said...

ரொம்ப கொல்றாங்கப்பா.....

Babu said...

ayyar-nu sollatheenga...prachanai varum ! ada..luckylook kochikka porar !

NAPOLEON said...

ANNE SUPER ANNE
KAVUNDAMANI SENTHIL KKU ADUTHTHATHU NEENGA THAN

மருதமூரான். said...

ஆமாண்ணே...! இந்தியா சீ்க்கிரம் வல்லரசாயிடும். நம்புங்க.

மிகவும் இயல்பான எள்ளல்களுடனான பதிவு.

Kannan said...

சூப்பரான பதிவு.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

IlayaDhasan said...

நீங்க டுஸ்க் ஆ ,பாயர் ஆ ...
பாருங்க டிரன்சிளிடேரட்டு பண்ணா காமடிய வருது!
சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

அசோக்.S said...

very nice dear friend cont..,very nice dear friend cont..,

Srinivas said...

நீங்க சொல்லுறத பாரதா இந்த ஒரு episode மட்டும் பார்த்த மாதிரி தெரிது ...

Please don't judge the program with this episode alone....

Thanks

அவிய்ங்க ராசா said...

நன்றி ரமெஷ்

அப்படியா மோகன்.பயபுள்ள பேரை மாத்திட்டாய்ங்க போல..)))

நன்றி தமிழ்வாசி

நன்றி பாபு..நான் ஆட்டைக்கு வரலை...)))

நன்றி நெப்போலியன்..

நன்றி மருதமூரான்

நன்றி கண்ணன்

நன்றி இளையதாசன்.

நன்றி அஷோக்..

நன்றி ஸ்ரீனிவாஸ்..இது மாதிரி நிறைய இருக்கு..நிறையவும் எழுதியிருக்கிறேன்..என்னுடைய பழைய பதிவுகளைக் காணவும்(ஒரு விளம்பரம்...ஹி..ஹி)

aruna said...

suppperrrrrrrrrrrrrrr

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Pls change your font mobile phonela read panna mudiyalaPls change your font mobile phonela read panna mudiyala

இரா.கதிர்வேல் said...

அட அவிய்ங்க ஏதோ பேசிட்டு போறாய்ங்க தலைவா. ஆனா ஓவர் மண்டைக்கனமா பேசிறாய்ங்க தலைவா. நாட்டைப் பத்திக் கேட்டா நாலு வார்த்தை தெரியாது ...

டக்கால்டி said...

antha maitha maavu peru Janani illai Anujaa endru maathidunga anne...

டக்கால்டி said...

"Thaatha naanum paarthen" endru naattaamai padathula vara chinna paiyan pola thaan solla thonuthu anne...

டக்கால்டி said...

onnu gavanicheengalaa? karuppu engira niram listla illa ippo...

:-) vaazhga dravidam..

shaji said...

பின்றிங்க ராசா ........

Funny Facebook Status said...

Avan "Naturals" beauty parlor nadathuranga.. Atha nala than beaauty pathiye ipo program panran.. azhaga iukurathu mukiyamnu solra mathiri pathupan..

Varra judge'ta "irukuravagalla yaru rompa azhagunu sollunga" apdinu kepan..
Ellame ulnokkaththoda than boss...

Oru kodi rupaiki veedu vangirukanam ipo...
Enna koduma sir..

Booku vera ezhuthirukan..
"Intha booka vangatheeganu"...
Athanudaya ulnokkamum vanga vaikiathu than..

Vasikka vaikirathu ulnokkamna "Intha booka vasikathinga"nu potrupan..

Avana vidunga booss...

Evlo pera paththurkome aadunavanga ellam epdi ponaganu... Vidunga vidunga.,..

J.P Josephine Baba said...

ஆமாம் ஆமாம் வர வர கோபி நாதின் பிஸ்தா பேச்சு தாங்க முடியலே.

கோவை நேரம் said...

நானும் அந்த ப்ரோக்ராம் பார்த்தேன் ..சகிக்கல ...

Thekkikattan|தெகா said...

:))) செம ரவுசு பண்ணியிருக்கீங்க. படிச்சிக் காமிச்சேன் வீடே சிரிச்சிச்சு.

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

இதில் என்ன வேடிக்கைனா சிங்கப்பூரில் இந்த நிகழ்ச்சிக்கு ஆங்கில சப்டைட்டில் வேறு போடுகிறார்கள்.

narendran said...

super anne.sema nakkal.

அவிய்ங்க ராசா said...

நன்றி அருணா..
நன்றி கேரளாக்காரன். நானும் எவ்வளவோ முயற்சித்தேன்..முடியவில்லை.உதவ முடியுமா
கரெக்டா சொன்னீங்க டகால்டி
நன்றி சாஜி
நன்றி பேஸ்புக் நண்பர்
நன்றி ஜோசப்பின்
நன்றி கோவை நரம்
நன்றி தெக்காட்டன்
நன்றி அழகிரிவேல்
நன்றி நரேன்..

Abdul Rahman said...

பின்னி பெடலை எடுக்குறீங்க போங்க.... பாராட்டுக்கள்!!

ஒன்று தெரியுமா? விஜய் டிவிக்கு மறு பெயரே "விளம்பர டிவிதான்!"

பொதுவா எல்லா டிவியிலும் ப்ரோக்ராமுக்கு நடுவுலேதான் விளம்பரம் போடுவானுங்க.... இந்த பயபுள்ளைக விளம்பரத்துக்கு நடுவுலதான் ப்ரோக்ராமே போடுவானுங்க...

அதைப் பத்தி நச்சுன்னு ஒரு குட்டு குட்டியிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்... இருப்பினும் மிக அருமையான பதிவு. பாராட்டுக்கள்!!!

Ernesto Balaji said...

உங்கள் மொழி கலக்கல்.. வாழ்த்துக்கள் :)

Post a Comment