ஒரு மனிசனுக்கு நிம்மதி
இருக்கவேணாமாண்ணே..எப்ப பார்த்தாலும் நொச்சு, நொச்சுன்னு இருந்தா கடுப்பா
இருக்காது..என் வீட்டுக்காரம்மாவைத்தானே சொல்லுறேன்..இந்த பாழாப்போன ஏழாம் அறிவு
பார்த்ததும்தான் பார்த்தோம், எப்ப பார்த்தாலும் “ஏங்க விமர்சனம் எழுதலையா..”,
“ஏங்க விமர்சனம் எழுதலையா” ன்னு ஒரே நொம்பலம்தான்.
“அடியே..இப்ப எதுக்கு
விமர்சனம் எழுத சொல்லுற..நம்மளை படிக்குறதே பத்து பேரு, அதிலயும் ரெண்டு, ஐயோ,
கைதவறி உங்க பிளாக்கை ஓபன் பண்ணிட்டேன்னு மெயில் அனுப்புறான்..இந்த லட்சணத்துல
நான் விமர்சனம் வேற எழுதணுமா..”
“அட..என்னங்க இப்படி
பேசுறீங்க..ஊருக்குள்ள, பெரிய பதிவரு பொண்டாட்டின்னு ஒரு கெத்து பார்ம்
பண்ணியிருக்கேன்..இப்ப விமர்சனம் எழுதலைன்னா, ஊருக்குள்ள நாலு பேரும்
மதிப்பாய்ங்களா..”
“அய்யோ..கடவுளே..தயவுசெஞ்சு
இப்படியெல்லாம் ஏத்திவிடாதே..ஊருக்குள்ள உண்மை தெரிஞ்சா நாலு பய மதிக்க
மாட்டாய்ங்க..”
அவ்வளவுதாண்ணே..ஒருநாள்
முழுதும் மூஞ்சியை உம்முன்னு வைச்சிக்கிட்டா..எனக்கு சங்கடமா போச்சு…சரி, இதுக்கு
மேல எழுதலைன்னா, ஆறாம் அறிவே இல்லைன்னு நினைச்சுடுவான்னு பயந்தே போயிட்டேன்..
“சரி..வா..விமர்சனம் எழுதுறேன்..அந்த
லேப்டாப்பை எடு”
ரொம்ப சந்தோசத்தோடு
எடுத்துக்கொடுத்தா
“ஓகே..நான் சொல்லுறேன்..நீயே
எழுது..”
அவளுக்கு சந்தோசம் தாங்கலை..
“சரி..சொல்லுங்க..”
“படத்தின் கதை என்னன்னா..”
“என்னங்க..இதோட 100 பேரு
படத்தோட கதைய எழுதியிருப்பாய்ங்க..படத்தோட மெயின் பாயிண்டை சொல்லுங்க…”
“படத்துல முதல்ல வர்ற 20
நிமிடங்கள், ஹாலிவுட் தரத்துக்கு எடுத்துருக்காய்ங்க..டைரக்டரு தீயா வேலை
செஞ்சுருக்காரு,.,உண்மையிலே ஒரு ஆங்கில படம் பார்ப்பது போன்ற உணர்வு…கைகொடுங்கள்
முருகதாஸ்..”
“என்னங்க..உங்களுக்கு என்ன
ஆச்சு..அவருக்கு ஏங்க கை கொடுக்குறீங்க..ஜெட்லி படம் பார்த்த மாதிரி
இருந்துச்சு..சூர்யா காமெடி பண்ணியிருக்காரு..இப்படிங்குறாரு, கீழ இருக்குற புழுதி
எல்லாம் கிளம்பது..அப்படிங்குறாரு..அங்குட்டு நாலு பேரு
விழுகுறாய்ங்க..சரி..அப்படியே ஹாலிவிட்டு தரமா இருந்தாலும், அதையெல்லாம்
பாராட்டுனா, ஊருக்குள்ள உங்கள பதிவராகவே மதிக்க மாட்டாய்ங்கங்க..தயவுசெய்து,
ஏதாவது திட்டி எழுதுங்க..”
“ஆஹா…சரி..விடு..இதை
எழுது..நம்ம உலகநாயகன் மக, சுருதிஹாசன் என்னமா நடிச்சுருக்காய்ங்க..சூர்யாவை
வைச்சு ஆராய்ச்சி பண்ணுறதாகட்டும்..வில்லனை கண்டு மிரளுதறாகட்டும்..பின்னுறாங்க..”
“அது சரி..புடலங்காய்க்கு
பேண்டு சட்டைய போட்ட மாதிரி இருக்காங்க..தமிழை இதுக்கு மேல யாரும் கொலை பண்ண
முடியாதுங்க..குத்துயிரும் கொலையியுருமா, தமிழ் மேல புல்டோசர் விட்டு ஏத்தியிருக்காய்ங்க..சும்மா
பேசுறீங்க..
“அய்யோ கடவுளே..இப்ப
பாரு..தமிழுக்கு புதுவரவு அந்த சீனாக்கார வில்லன்..பார்வையாலே என்னமா
மிரட்டுறாரு..அவரோட பாடிலாங்குவேஜ்ஜூ..யம்மா சொல்லவே வேணாம்..அவருதான் படத்தோட
ஹீரோ..”
“போங்க…ங்க….வில்லனா
அவரு..சரியான மைதா மாவு…எப்ப பார்த்தாலும், யாரையாவது பார்த்துக்கிட்டே இருக்காரு..அதுவும்,
ஒரு நிமிசம்தான்..அதுக்குள்ள எல்லாரும் மயங்கி அவரு சொல்லுறதையெல்லாம்
செய்யுறாங்களாம்..காதுக்குள்ள வண்டி, வண்டியா, பூ இல்லீங்க..ஒரு பூக்கூடையே
சொருகியிருக்காய்ங்க..தயவுசெஞ்சு இப்படியெல்லாம் எழுதாதீங்க..கை அழுகிடும்..”
“அடியே..அந்த ஹாரிஸ்
ஜெயராசு…சூப்பரா பாட்டு..”
“வேண்டாம்..கொலைவெறியில
இருக்கேன்..பாட்டாங்க போட்டுருக்காரு..எல்லாம், சர்ச்சுல கேக்குற மாதிரியே
இருக்கு..நம்ம பையனுக்கு போட்டு காண்பிக்கிற “டிவிங்கிள், டிவிங்கிள்” பாட்டை கூட
விடலைங்க..அந்த மனுசன்..அதையும் காபி அடிச்சு, சைனீஸ் பாட்டுன்னு சொல்லி..வேண்டாம்..ஆத்திரம்
ஆத்திரமா வருது..”
“அடியே..எப்ப பார்த்தாலும்
குத்தம் சொல்லிக்கிட்டு இருப்பியா..”தமிழன் பெருமைய” எவ்வளவு அழகா
சொல்லியிருக்காரு டைரக்டரு..அப்படியே புல்லரிச்சு போச்சுடி..தயவு செஞ்சு இதையாவது
குத்தம் சொல்லாதே…”
“ஐயோ..கடவுளே..உங்களுக்கு
என்ன ஆச்சு..தமிழன இதுக்கு மேல கேவலப்படுத்தமுடியாது..சரி..உங்க சந்தோசத்துக்காக
அப்படியே இருக்கட்டும்..ஆனா, அத அப்படியே பாராட்டி எழுதக்கூடாது..”இன்னும் கொஞ்சம்
டிரை பண்ணியிருந்தா, ஒரு அழகான காவியம் கிடைச்சிருக்கும்….புட்டேஜ் கொஞ்சம்
ஜாஸ்தி..எடிட்டிங்க்ல கொஞ்சம் வேலை செய்திருக்கலாம்..கேமிராவுல ஓரத்துல கொஞ்சம்
அழுக்கு இருந்துச்சு..ஹீரோ ரெண்டாவது சீனுல பாதி தம்முதான் புடிச்சாரு..அடுத்த
சீனுல புல் தம்மு இருந்துச்சு..கண்டினியூட்டி மிஸ்ஸிங்குன்னு” சினிமா தெரிஞ்ச
மாதிரியே எழுதணும்..அப்பதான்., “ஆஹா..சூப்பர் விமர்சனம்..உங்க விமர்சனம்
படிச்சுட்டுதான் படத்துக்கே போகப்போறோம்..”200 ரூபாய் மிச்சம்” ன்னு, கமெண்டு
போடுவாய்ங்க..அப்பதான, ஊருக்குள்ள பெரிய பதிவருன்னு மதிப்பாய்ங்க..என்ன நான்
சொல்லுறது..”
“தயவு செய்ஞ்சு..தயவு
செய்ஞ்சு..ஆளை விடுறியா..நான் விமர்சனமே எழுதலை..”
“அது
எப்படிங்க..விடமுடியும்..அதெல்லாம் எழுதியாச்சு..சரி..விமர்சனத்துக்கு தலைப்பு
சொல்லுங்க..”
“இதுல என்னடி தலைப்பு
வைக்கிறது..”ஏழாம் அறிவு – விமர்சனம்…”
“என்னங்க..இப்படி அப்பாவியாய்
இருக்கீங்க..இப்ப பாருங்க, தலைப்ப..
“என்ன…??”
“ஏழாம் அறிவு..சர்..புர்..கர்…”
“அடியே..அது என்னடி சர்,
புர்..கர்..”
“எவனுக்கு
தெரியும்..வித்தியாசமா இருக்குல்ல…”
ஊருக்குள்ள ஒரு விமர்சனம்
எழுத விடுறாய்ங்களா பாருங்கண்ணே..
7 comments:
ராசா நெசம் தானா நீங்க சொல்லுறீங்க. அப்போ நான் அந்த பத்தில ஒண்ணா?
ஏ..பாசு(ஸ்) விமர்சனம்ன்னு வந்தா உங்க வீட்டுக்காரம்மாய்ட்ட அடிவாய்குனத எழுதிவச்சிருக்கீய்க...
என்ன பாசு சர் புர் கர் ஹ..ஹஹஹ.. நேத்திய்க்கு வீட்டுல பூரி உருளைகிழங்கு மசாலாவா...
சும்மா தமாசு...
விமர்சனம் வித்தியாசமா இருந்தது நண்பரே...
கொன்னுடிங்க ...
wow super...
Sir, Your review is fantastic - actually here no one is not understand that the director will imagine the scene more than 100 times and try to shoot more than 10 times in a different angle - so try to take the good ones - but my questions are u praise the movie making or not
:) nine review. As Murugadas said "All Tamilans should proud of this movie"
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.
Post a Comment