Thursday, 20 October, 2011

திருச்சி இடைத்தேர்தல் முடிவும், உள்ளாட்சித் தேர்தலும்


நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும்போது, திருச்சி இடைத்தேர்தலின், இரண்டாவது கட்ட முடிவு வந்து கொண்டிருக்கும். முதல் கட்ட முடிவுப்படி, அதிமுக, இழுத்துக்கோ, பறிச்சிக்கோ என்று முண்ணனியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பெங்களூர் நீதிமன்றத்துக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கும், அம்மாவுக்கு, இது கண்டிப்பாக இனிப்பான செய்தியாக இருக்காது. மாபெரும் வெற்றியை எதிர்பார்த்த அதிமுகவினருக்கு, இந்த துக்கடா வெற்றி கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தரப்போவதில்லை.

ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் சிறையில், போட்டியிடும் வேட்பாளரே சிறையில், பெரிய அளவில் பிரச்சாரம் இல்லாதிருந்தும், திமுக மயிரிழையில் தோல்வியைத் தழுவினாலும், இதுவே அவர்களுக்கு உற்சாக டானிக்காக அமையப்போகிறது. “இந்த ஆட்சியினருக்கு சரியான பாடம் புகட்டிவிட்டனர்..” என்று கலைஞரும், “இந்த ஆட்சிக்கு இது ஒரு எச்சரிக்கை மணி” என்று நடுநிலையாளர்களும், இன்னும் கொஞ்ச நாளைக்கு கதற கதற பேட்டி கொடுக்கபோவதையும் பார்க்கபோகிறோம்.

இந்த முடிவு, உண்மையிலேயே, அம்மா ஆட்சி பற்றி மக்களின் கருத்துக்கணிப்பா என்று கேட்டால், 50% ஆமாம் என்றும், 50% இல்லை என்றும் சொல்லமுடியும். சமச்சீர்கல்வி, மின்வெட்டு, துப்பாக்கிச்சூடு, என்று அம்மா ஆட்சியில் டேமேஜ் ஆயிருந்தாலும், சட்டம் ஓழுங்கு(ஆந்திராவில் இருந்து அவ்வப்போது வந்து செயின் அறுத்து செல்வதை தவிர), இலவச பொருட்கள்(ரேசன் அரிசி சூப்பருல), போனமுறை போல ஆடம்பரம் இல்லாமல் எளிமை என்று சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டுபோட்டால்தான், தொகுதிக்கு நல்லது நடக்கும் என்ற நப்பாசையும், அதிமுக பக்கம் சாயவைப்பதால் தான் இந்த 50%-50%

உள்ளாட்சி தேர்தலிலும் இந்த நிலைதான் வரப்போகிறது என்று எதிர்பார்க்கிறேன். ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், இந்த உள்ளாட்சித்தேர்தலில் தான், இந்த அல்லக்கை கட்சிகளின் பலம் தெரியவரும். கண்டிப்பாக டெபாசிட் கிடைக்குமா என்று கூட தெரியவில்லை.. விஜயகாந்துக்கு இது கண்டிப்பாக அக்னிபரிட்சையாகத்தான் இருக்கும், ஏற்கனவே, விஜயகாந்தை மதிக்காத அம்மா, இந்த தேர்தலில், டெபாசிட் காலியானால், சொல்லவா வேண்டும்..

நான் ஏற்கனவே சொல்லியபடி, பொறுத்திருந்து பாருங்கள்., இன்னும் சிறிது காலத்தில் நடக்கப்போகும் நாடகங்களை. விஜயகாந்த், கம்னியூஸ்ட், மதிமுக கட்சிகள் எல்லாம், “தமிழனத்தலைவர் கலைஞர்” என்று சொல்லிக்கொண்டு, அறிவாலயம் பக்கம் திரும்ப, “அன்புத் தங்கச்சி” என்று அந்த பக்கத்தில் வரும் சத்தத்தை நீங்கள் அடையாளம் காணாவிட்டால், நீங்கள் “பவர் ஸ்டாருன்னா யாருப்பா” என்று கேட்கும் அளவுக்கு அப்பாவியாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனாலும் கலைஞர் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். “2016” ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில், தமிழக மக்களின் மூன்றாம் விதிப்படி, சராமரியாக, உதயசூர்யனில் ஓட்டு குத்தப்பட்டு, மதுரையும் கூடிய சீக்கிரம் மீட்கப்படும். அதன் பிறகு, வழக்கம்போல, இந்த ஆட்சியின் அராஜகத்தைப் பாரீர் என்று ஜெயா டிவியில் ஒளிபரப்பட, “தைரியலட்சுமி” என்று சொன்ன அதே சூப்பர்ஸ்டார், “முத்தமிழ் அறிஞர்” என்று “பாசச்தலைவனுக்கு” நடக்கபோகிற பாராட்டு விழாவில் சூப்பர்ஸடார் சொல்ல, விளம்பர இடைவேளைக்கு நடுவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு, ஓட்டுபோட்ட தமிழன், பக்கோடா சாப்பிட்டுகொண்டே பார்த்துக்கொண்டிருப்பான் 2021ல் அம்மாவுக்கு ஓட்டுபோடுவதற்கு..,

8 comments:

MANASAALI said...

\\\ஆனாலும் கலைஞர் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். “2016” ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில், தமிழக மக்களின் மூன்றாம் விதிப்படி, சராமரியாக, உதயசூர்யனில் ஓட்டு குத்தப்பட்டு, மதுரையும் கூடிய சீக்கிரம் மீட்கப்படும். அதன் பிறகு, வழக்கம்போல, இந்த ஆட்சியின் அராஜகத்தைப் பாரீர் என்று ஜெயா டிவியில் ஒளிபரப்பட, “தைரியலட்சுமி” என்று சொன்ன அதே சூப்பர்ஸ்டார், “முத்தமிழ் அறிஞர்” என்று “பாசச்தலைவனுக்கு” நடக்கபோகிற பாராட்டு விழாவில் சூப்பர்ஸடார் சொல்ல, விளம்பர இடைவேளைக்கு நடுவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு, ஓட்டுபோட்ட தமிழன், பக்கோடா சாப்பிட்டுகொண்டே பார்த்துக்கொண்டிருப்பான் 2021ல் அம்மாவுக்கு ஓட்டுபோடுவதற்கு..,///


இதையெல்லாம் நம் தன்மான தமிழன் 'அரசு கேபிளில்' பார்க்காமல் எஸ் சி வி யில் பார்ப்பான்

Anonymous said...

nice

Anonymous said...

கடைசி பந்தி சூப்பர்ங்கண்ணா.. இது சரியில்லைன்னா அது, அப்புறம் அது சரியில்லைன்னா இது... வேற எதுவும் சரி வராது..

சேலம் தேவா said...

தமிழேண்டா... :)

Eesan said...

He! He! He! Thiruchi makkal unakku aapu vachutanga polirukku. 14000 votes difference. po po nalla padi ....

Babu said...

“பாசச்தலைவனுக்கு” நடக்கபோகிற பாராட்டு விழாவில் சூப்பர்ஸடார் சொல்ல ..

2021ல் சூப்பர்ஸடார் - arasiyalukku varapogirar endru valakkampol news irukkum

2021ல் சூப்பர்ஸடார் - New movie's heroin is Meena's daughter. Meena plays role of rajini's mother.

Tamilan - eppo mudiyum intha 12 hours power cut ??!!!!

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

அவிய்ங்க ராசா said...

நன்றி மனசாலி, பாபு, அருள்,ஈசன், தேவா, மொக்கராசு மாமா, அனானி

Post a Comment