கொலைவெறிய கெளப்புறதுக
கோவாலுதாண்ணே, நம்பர் ஒன்னு. சுனாமி மாதிரி ஏதாவது கிளப்பிவிட்டுக்கிட்டு
போய்கிட்டே இருப்பான். காலங்காத்தால 4 மணிக்கு கொலைவெறியை யாராவது
கெளப்புவாயிங்களா..கெரகம் காலையில 4 மணிக்கு வந்து வீட்டு பெல்
அடிக்குது..அன்னைக்கு பார்க்குறதுக்கு வேற பதட்டத்துல வேற இருந்தானா, பயந்தே
போயிட்டேன்…
“கோவாலு..என்ன ஆச்சுடா..ஷேர்
மார்க்கெட் டவுன் ஆயிடுச்சா..”
“இல்லடா ராசா..”
“பின்ன..லத்திகா படம் ஓடி 250
நாள் ஆகிடுச்சா..”
“ஐயோ இல்லடா..”
“பின்ன..”
“ராசா..உண்மையைச்
சொல்லுடா..நீ கேபிள் சங்கர் ஆளா, லக்கிலுக் ஆளா..”
“டே கோவாலு..உனக்கே இது
நியாயமா இருக்காடா..காலையில 4 மணிடா..கொசு கூட குறட்டை விட்டு தூங்கும்டா..இந்த
நேரத்துல வந்து கொலைவெறிய கிளப்பாதடா..”
சும்மா இருந்தாவே, என்
வூட்டுக்காரம்மா, ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பா..இங்கே ஆயிரத்தெட்டு கேள்வி இருந்தா,
சொல்லவா வேணும்…
“ஏங்க யாருங்க அது..ரைபிள்
சங்கரு…எதுவும் உலகத்தலைவரா..”
“ம்…கழகத்தலைவரு..அடியே..அவரு
ரைபிள் சங்கர் இல்ல..கேபிள்..கேபிள்..சங்கர்..உன் புருஷன் மாதிரியே அவரும் பெரிய
எழுத்தாளரு..பிளாக்கெல்லாம் எழுதுவாரு..”
“அய்யய்யோ…அவருக்கும் லக்கோ
லக்குக்கும் என்ன பிரச்சனையாம்…”
“வேண்டாம்டி..அவரு
லக்கிலுக்கு…டே..கோவாலு..என்னதாண்டா பிரச்சனை…”
“மொதல்ல்..கேபிள் சங்கர்
எழுதின இந்த லிங்கைப் படி” ன்னான்..
படிச்சிட்டு
கண்கலங்கிடுச்சுண்ணே…
“கோவாலு..தமிழேண்டா..கேபிளு
நின்னுட்டாருல்ல..அதெப்படிடா, அவிங்க அப்படி போர்டு வைக்கலாம்..தமிழன்னா
இளக்காரமா..கேட்டாருல்ல ஒரு கேள்வி…நின்னுட்டோமில்ல..”
“அப்ப..நீ கேபிளு ஆளா…எதுக்கு
லக்கி எழுதின இந்த பதிவையும் படிச்சுடு…”
படிச்சுட்டு இன்னொரு கண்ணும்
கலங்கிருச்சுண்ணே..
“கோவாலு..சூப்பருடா..இதுவும்
நியாயம்தானடா..எப்ப பார்ததாலும் “தமிழன், தமிழன்” சொல்லுறதுல அர்த்தம்
இல்லைலடா..”ஹெல்ப்”ன்னு சொன்னா, அத ஏத்துக்கறதுல என்ன தன்மானம் தடுக்குது..சரியா
சொன்னாருடா லக்கி..”
“டே
ராசா..வெறியேத்தாத…ஒன்னைச் சொல்லு..நீ கேபிளு ஆளா..லக்கி ஆளா..”
“நான்..லக்கி சங்கர் ஆளு..”
கோவாலு டென்சனாயிட்டான்..
“டே ராசா..காலங்காத்தால
கடுப்பேத்துற…நீ யாரோட ஆளு…”
“கோவாலு..விட்டுருடா..”
“ராசா..நீ, இப்ப சொல்லைன்னா,
அன்னா ஹசாரே மாதிரி இங்கேயே உக்கார்ந்து சத்யாகிரகம் இருப்பேன்..”
“டே..கோவாலு..வேணாண்டா…சரி..கேட்டுக்க..நானு.இந்த
பதிவையெல்லாம் படிச்சு மண்டையை பிச்சுக்குற ஆளு..இவ்வளவு கேக்குறயே கோவாலு..நீ
யாரு பக்கம்..”
அதுக்கு பயபுள்ள சொல்லுறான்..
“நான் பக்கத்து வீட்டு புவனா
பக்கம்..”
(பின் குறிப்பு : யாரையும்
புண்படுத்த எழுதப்பட்டதல்ல.)
12 comments:
சூப்பர் தலிவா...என் கதையில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வச்சுருக்கேன், நன்றி
கண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகதைப் போட்டி -2011)
எழுதறத எழுதிப்புட்டு,
அப்புறம் என்ன //பின் குறிப்பு : யாரையும் புண்படுத்த எழுதப்பட்டதல்ல//
படத்துல இருக்கற ஸ்டீவ் ஜாப்ஸுக்கும்><பில்கேட்ஷுக்கும் என்னண்ணெ சண்டை?.
எப்புடி இப்படி?
நான் கூட இனிமே லக்கி சங்கர் ஆள் தான்னே...
Naan Lucky look aalu..avar than A.Raja supporter aache !
நன்றி இளையதாசான், சேக்காளி, மனசாலி, பாபு, பிரபாகரன், ரமேஷ்
இரண்டு பதிவுகளை படித்த போதும் ஒரு குழப்பம் வந்தது.இப்ப இன்னும் குழப்பாகிடுச்சு.
என்னாது லக்கி சங்கரா? எப்படி நீங்க எங்க கேபிள் அண்ணனை பின்னாடி தள்ளபோச்சு. இதை நான் மென்முறையா கண்டிக்கிறேன். லக்கி சங்கர் என்பதை மாற்றி கேபிள் லுக் என்று மற்றும் படி எச்சரிக்கிறேன். இல்லாவிட்டால் எங்க கேபிள் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெரும்.
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
ராசா அவர்களே... நான் உங்க ஆளு. நான் உங்களின் ரசிகன். உங்களின் போடா கிறுக்கு பயலே, வர்றியா, டேய் தகப்பா போன்ற பதிவுகளின் தீவிர ரசிகன். நானும் மதுரை காரன் தாங்கோ...
இந்த தடவை உங்களுக்கு முன்னாடியே விஜய் டிவி நீயா நானா பத்தி எழுதிட்டேன்.. மன்னிப்பீர்களாக.
http://sathish-chandran.blogspot.com/2011/10/vs.html
பங்காளி
சதீஷ்
பங்காளி ராசாவுக்கு...
இந்த "மதுரைக்காரன்" ப்ளாக் உங்களுக்கு சமர்பிக்கிறேன்.
http://sathish-chandran.blogspot.com/2011/06/blog-post_16.html
பங்காளி
சதீஷ்
nowadays u r not teasing jackie.. wt happend?? u scared??? ur writings r really njoyable one..
Post a Comment