Tuesday 17 May, 2011

வடிவேலு எப்ப அடிவாங்குவார்

இப்போதைக்கு தமிழ்நாட்டு மக்களின் ஹாட்கேக் என்ன தெரியுமா..அம்மா வெற்றி பெற்றதல்ல, வடிவேலு எப்ப அடிவாங்குவார் என்பதுதான். தேமுதிகவினரால், ஏற்கனவே அவருடைய அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில், அவருடைய பண்ணைவீடும் இன்று சூறையாடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவர் உயிருக்கு பயந்து, மதுரையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதில் எனக்கு ஆச்சர்யம் தருவது என்னவென்றால், மக்களின் மனநிலை. வடிவேலு, அடிவாங்குவதை கண்முழுக்க பார்க்கவேண்டும் என்பதை, ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறான். “எவ்வளவு நாளு, வீட்டுக்குள்ள பதுங்கியிருப்பான்..ஒருநாளைக்கு வெளியே வரணுமில்ல..அப்ப அடிப்பாயிங்க பாரு” என்பதுதான் இப்போதைய டாக். அதன் விளைவே, இணையத்திலும், பேஸ்புக்கிலும் வரும் கேலிச்சித்தரங்களும், வீடியோக்களும். அதை பார்க்கும்போது, நகைச்சுவையாக இருந்தாலும், ஒருநிமிடம் வடிவேலு மனதிலிருந்தும். அவர் குடும்பத்தினர் மனநிலையிலிருந்தும் பார்க்கும்போது நடுங்கி போகவைக்கிறது.

பொதுவாக மனித மனத்துக்குள், ஒரு குரூர மனப்பான்மை உண்டு என்று மனவியல் நிபுணர்கள் சொல்லுவர். அது சமயம் பார்த்து, எட்டிப் பார்க்குமாம். கிராமத்துப் பக்கம் சென்று பார்த்தால், சிறுவயது பயல்கள், தென்னை ஓலையில் செய்த ஒரு சுருக்கை எடுத்துக்கொண்டு, மரம் மரமாக அலைவார்கள், கரட்டாவண்டி எனும் ஓணானைப் பிடிப்பதற்கு. அணிலை யாரும் துன்புறுத்த மாட்டார்கள். கேட்டால், அதற்கு ஒரு கதை வேறு. ராமர் பாலம் கட்டும்போது, அணில் உதவியதாம், ஓணான் உதவவில்லையாம். பாவம், அந்த ஓணான் பிடிபட்ட பிறகு, அதன் கழுத்தில், சுருக்கை கட்டி, அதன் மேல் மூக்குபொடியை போட்டு, அதனை அணுஅணுவாக தடுமாற வைத்து, ரசிக்க ரசிக்க, கடைசியில் அதன்மேல் ஒரு கல்லைப் போட்டு கொல்லுவார்கள். அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது, நமக்கு குரூர மனப்பான்மை.

அதே குரூரமனப்பான்மையின் வெளிப்பாடுதான் “வடிவேலு எப்பதான் அடிவாங்குவான்” என்று காத்திருப்பதும், “மாமு..வடிவேலு வெளியே வந்தா அடிதாண்டா” என்று பூரித்து போவதும். இது எல்லாம் மனித அடிமனத்தில் உள்ள ஆசைகள் என்று சொல்லுவேன். வடிவேலு மட்டுமல்ல, யார் அடிவாங்கினாலும், அதை வேடிக்கை பார்ப்பதற்கு அப்படி ஒரு ஆசை. இதனாலேயே, பாம்பு, கீரி சண்டை போட்டு சாவதைப் பார்க்க அப்படி ஒரு கூட்டம். வேடிக்கை பார்ப்பவர்களை ஒருநிமிடம் கவனியுங்கள். எப்படா, கீரி அல்லது பாம்பு சாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். இது திரைப்படங்களிலும் எதிரொலிப்பதை காணலாம். தவறு செய்த வில்லனை, துடிக்க, துடிக்க ஹீரோ கொன்றால்தான், காசு கொடுத்ததற்கு நிம்மதி. இல்லையென்றால் “என்னயா படம் எடுத்திருக்கான்” என்று புறக்கணித்துவிடுவோம்.

இதைவிட கொடுமை என்னவென்றால், யாருக்காவது காய்ச்சல், அல்லது உடம்பு முடியவில்லையென்றால் அவ்வளவுதான்..”அவனுக்கு வேணும்டா..எப்படியெல்லாம் ஆட்டம் போட்டான்..பலபேர் சாபம்தான், இப்படி வந்திருக்கு” என்று மகிழும் மனநிலை. இவையெல்லாம் மனிதனின் அடிமனத்தின் உள்ள குரூரமனப்பான்மையின் வெளிப்பாடே. இந்த மனப்பான்மை தனக்குள்ளே அடங்கிவிட்டால் பிரச்சனை இல்லை. அதீதமாக வெளிப்படும்போதே சமூகம் பாதிக்கப்படுகிறது. அதுவும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, வெளிப்பட்டால் எப்படி இருக்கும் என்பதன் விளைவே, குஜராத் கலவரங்கள். “எப்படி அடக்குனாரு பார்த்தியா..இனிமேல் ஆடமாட்டாயிங்கள்ள” என்று மோடிக்கு சப்போர்ட் பண்ணுபவர்களுக்கும், இதை மனநிலைதான்.

சரி, இதனை எப்படி சரிசெய்வது என்றால், அது ஒவ்வொருவருவரின் மனதில்தான் இருக்கிறது. மனிதனை, மனிதனாய் பார்த்தாலே பாதி பிரச்சனை அடங்கிவிடும். அடுத்தவர் துன்பப்படும்போது, நாம் துன்பப்படவேண்டாம், அட்லீஸ்ட் சந்தோசப்படாமலாவது இருப்போம் என்று நினைத்துக்கொண்டாலே, இதை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர் யாருமே இல்லை. சின்ன குழந்தைக்கும் பிடிக்கும் அவர் காமெடி. அவருடைய பஞ்ச் டயலாக்குகள் இன்னும் பிரபலம். அப்படி நம்மையெல்லாம் சிரிக்க வைத்தவர் அடிவாங்குவதில் அப்படி என்ன ஒரு ஆனந்தம் இருக்கப்போகிறது. அவர் தவறு செய்திருந்தால், தண்டனை கிடைக்கட்டும், ஆனால் “எப்படா அடிவாங்குவார்” என்று காத்திருப்பது, நாம் அவருக்கு தரும் தண்டனை அல்ல. நமக்குள் இருக்கும் கொஞ்சநஞ்ச மனிதாபிமானத்திற்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை. முடிந்தவரை அதை செய்யாமல் இருப்போமே..

கடைசியாக, முடிந்த வரை, மனிதம் வளர்ப்போம், மனிதனாய் இருப்போம்..

39 comments:

rajamelaiyur said...

Right

தமிழ்வாசி பிரகாஷ் said...

எப்படா அடிவாங்குவார்” >>>>>>
இப்படி ஒரு ஆசையா உங்களுக்கு?

அவிய்ங்க ராசா said...

நன்றி ராஜா,

நன்றி தமிழ்வாசி..பதிவை படித்தீர்கள் தானே..)))

ராஜ நடராஜன் said...

//அணிலை யாரும் துன்புறுத்த மாட்டார்கள். கேட்டால், அதற்கு ஒரு கதை வேறு. ராமர் பாலம் கட்டும்போது, அணில் உதவியதாம், ஓணான் உதவவில்லையாம். //

பின்ன ஓணான் ஒன்னுக்கு அடிச்சதை எவனோ வத்தி வச்சா சும்மாவா இருப்பாங்க பசங்க!

Anonymous said...

எனக்கும் இதே உணர்வு

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////

17 May 2011 2:20 PM
///////////////////////////
:)))))))))))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
meenu-asha said...
எனக்கும் இதே உணர்வு
17 May 2011 2:27 PM
///////////////////////
நன்றி ஆஷா..

சிநேகிதன் அக்பர் said...

அண்ணே அவரு அடிவாங்கனும்னா நினைக்கிறாங்க?

எனக்கென்னவோ அவரை ஒன்னும் செய்யமாட்டாங்கன்னு மக்கள் நினைக்கிற மாதிரிதான் தெரியுது.

எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாயிருக்கணும். :)

tshankar89 said...

Hi

Vadivel is going to be beaten or not, that is not the issue here. In the first place, he has crossed his limit during the campaign on Vijayakant. As an Indian, Vijayakant has every right to contest in election, but Vadivel's speech was totally absurd and he needs to be punished legally for such speech. In west, such persons would have been immediately arrested and put behind the bars. In India, that too in Tamilnadu under MK Government what else one could expect? I do not know about JJ's present term how it will be, but Vadivel certainly needs to be brought in front of the law.

Sankara N. Thiagarajan

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
சிநேகிதன் அக்பர் said...
அண்ணே அவரு அடிவாங்கனும்னா நினைக்கிறாங்க?

எனக்கென்னவோ அவரை ஒன்னும் செய்யமாட்டாங்கன்னு மக்கள் நினைக்கிற மாதிரிதான் தெரியுது.

எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சாயிருக்கணும். :)
17 May 2011 2:58 PM
////////////////////////////////////
நன்றி அக்பர்..இன்றைய தட்ஸ்தமிழ் கருத்துக்கணிபை எடுத்து பாருங்கள்.."அவருக்கு வேணும்" என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்து..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
tshankar89 said...
Hi

Vadivel is going to be beaten or not, that is not the issue here. In the first place, he has crossed his limit during the campaign on Vijayakant. As an Indian, Vijayakant has every right to contest in election, but Vadivel's speech was totally absurd and he needs to be punished legally for such speech. In west, such persons would have been immediately arrested and put behind the bars. In India, that too in Tamilnadu under MK Government what else one could expect? I do not know about JJ's present term how it will be, but Vadivel certainly needs to be brought in front of the law.

Sankara N. Thiagarajan
17 May 2011 5:46 PM
/////////////////////////////////
சங்கர்..நம் இரண்டு பேர் கருத்தும் ஒன்றுதான்..வீட்டில் கல்லெடுத்து அடிக்கவோ, தெருவில் விட்டு அடிப்பதோ, அதை ரசிப்பதோ, தண்டனை அல்ல என்பதே என் வாதம்..

சின்னு said...

இந்த குரூர மனப்பான்மையை வைத்து இதுவரை காசு பாரத்தவர்தான் வடிவேலு. தான் அடிபடுவதை பார்த்து அடுத்தவர் சிரிப்பது அவருக்கு காசு... இப்போது மக்கள் மேலும் சிரிக்க விரும்புகிறார்கள்,ஆனால் வடிவேலு?

அவிய்ங்க ராசா said...

/////////////////////////

17 May 2011 7:34 PM
//////////////////////////
ஐயா..திரைப்படம் என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு. திரைப்படத்தில் அவர் யாரையாவது அடித்தாலோ, அல்லது அடிவாங்கினாலே, யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், நிஜவாழ்க்கையில்.. அவர் வீடு சென்று அடித்தால், எத்தனை பேருக்கு பாதிப்பு..பரவாயில்லை சிரிக்கலாம் என்கிறீர்களா..??

Anonymous said...

தேர்தல் நேரத்தில் வடிவேலுவிற்கு மக்கள் கூட்டம் கூடாமல் இருந்திருந்தால் இன்று அவர் இப்படி ஒரு நிலையை எதிர் கொள்ள வேண்டி இருக்காது .....ஆகவே மக்கள் தான் அவர் உயிருக்கு பொறுப்பாக வேண்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவர் அவிய்ங்க ராசா எப்போ அடி வாங்குவாரு? பார்க்க ஆசையா இருக்கு...

வரதராஜலு .பூ said...

குரூரம் மட்டும் காரணம் இல்லிங்க. பொறாமையும். இப்ப அவர்கிட்ட இருக்கற காசு அவ்வளவு. இப்படி பணக்காரணா இருக்கற எல்லாரைபாத்தும் பொறாமைபடுவாங்க. ஆனா அந்த காசு சேக்க அவருபட்ட கஷ்டம் பத்தி யாரும் நினைச்சிபாக்க மாட்டாங்க.

சின்னு said...

ஐயா..திரைப்படம் என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு. திரைப்படத்தில் அவர் யாரையாவது அடித்தாலோ, அல்லது அடிவாங்கினாலே, யாருக்கும் பாதிப்பு இல்லை. //

இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது சார்! திரைபட ரசனை நமது மனநிலையின் வெளிப்பாடுதான். திரைப்படத்தின் ஒரு அபலைப் பெண் சீரழிக்கப்படுவதை ரசிப்பவன் நிச வாழ்க்கையில் எத்தகைய மனநிலை கொண்டவனாக இருப்பான்? வடிவேலுவின் காமெடி இப்படிப்பட்ட மட்டமான ரசனையை - அடுத்தவன் வலியை இரசிக்க ஊக்கப்படுத்தியது.

//ஆனால், நிஜவாழ்க்கையில்.. அவர் வீடு சென்று அடித்தால், எத்தனை பேருக்கு பாதிப்பு..பரவாயில்லை சிரிக்கலாம் என்கிறீர்களா..?? //

நான் அப்படி சொல்லவரவில்லை.

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
தேர்தல் நேரத்தில் வடிவேலுவிற்கு மக்கள் கூட்டம் கூடாமல் இருந்திருந்தால் இன்று அவர் இப்படி ஒரு நிலையை எதிர் கொள்ள வேண்டி இருக்காது .....ஆகவே மக்கள் தான் அவர் உயிருக்கு பொறுப்பாக வேண்டும்
17 May 2011 10:30 PM
//////////////////////////////
ஒரு விதத்தில் கரெக்ட்

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவர் அவிய்ங்க ராசா எப்போ அடி வாங்குவாரு? பார்க்க ஆசையா இருக்கு...
17 May 2011 11:03 PM
///////////////////////////
ஏண்ணே..எம்மேல இம்புட்டு பாசமா..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
வரதராஜலு .பூ said...
குரூரம் மட்டும் காரணம் இல்லிங்க. பொறாமையும். இப்ப அவர்கிட்ட இருக்கற காசு அவ்வளவு. இப்படி பணக்காரணா இருக்கற எல்லாரைபாத்தும் பொறாமைபடுவாங்க. ஆனா அந்த காசு சேக்க அவருபட்ட கஷ்டம் பத்தி யாரும் நினைச்சிபாக்க மாட்டாங்க.
18 May 2011 12:13 AM
////////////////////////////
:))

தமிழ்வாசி பிரகாஷ் said...

அவிய்ங்க ராசா said...
நன்றி ராஜா,

நன்றி தமிழ்வாசி..பதிவை படித்தீர்கள் தானே..)))>>>>>>>>

உங்கள் தலைப்புக்கு அந்த கருத்து சொன்னேன்.

பதிவின் விஷயங்கள் யோசிக்க வேண்டியது.

tshankar89 said...

Avinga Raja....

Yes.. I too accept it. As a public or Vijayakant partymen are not allowed to take any "revenge" or action against Vadivel. But this issue shall be taken to legal system and let them decide the degree of punishment for such defamation case.

Sankara N. Thiagarajan

Saravana said...

ராசா,
நான் நண்பர்கள்ட்ட பேசிட்டிருந்த அதே விஷயம் உங்ககிட்ட இருந்து வந்ததில் ரொம்ப சந்தோசம்..
இதையே தி.மு.க காரன் செய்ஞ்சா 'அராஜகம், அட்டூழியம்' ன்னு சொல்வோம்.
"வடிவேலு சினிமா வாழ்க்கை முடிஞ்சுது, இனி அடி தான்'.... இப்படி பல பேச்சு, பல கருத்து...
ஒரு குடும்பத்துல பல பேர் சினிமா எடுத்தா.. ஆதிக்கம்னு சொன்ன நாம, ஒரு நல்ல நடிகன நடிக்க விடாம வெரட்டுரத எப்படி வரவேற்கிரோம்னு புரியவே இல்ல. எல்லோரும் என்ன நியாயமா சொல்லணும் ..
'எப்பா.. ஒட்டு போட்டமா, நீ ஜெயிச்சியா.. இப்போ எங்களுக்கு என்ன நல்லது செய்ய போறே. அதா செய்யி. அத உட்டுட்டு, வீட்டுக்கு கல் அடிக்கிறது, போன்லே மேரட்டுறது, நடிக்க விடாம தடுக்கிறது.. இதெல்லாம் வேண்டாம்.'
இப்படில்லா சொல்லணும்.
தப்பு யார் செய்ஞ்சாலும் தப்பு தான். இன்னைக்கு நாம அடிச்சா நாளைக்கு நமக்கும் அடி விழும்னு புரிஞ்சு நடக்கணும்.
அன்புடன்,
சரவணா.

vadivel adi vaanganumnu ethuku asa padurangana dmk vanthuchuna athula labam anubavikka pora stalin alagiri ellam adakki vaasikkumpothu vadiveluku mattum ean intha vela vadivelu pola yaravathu oruththar pesinangala illiye thappu seithavan thandanai vaangithane aganum

M.G.ரவிக்குமார்™..., said...

கசாப்புக்குக் கூடத் தான் தண்டனை கிடைக்கணுன்னு நினைக்கிறோம்!......
அப்போ எங்களுக்கு மனிதாபிமானம் கிடையாதுன்னு சொல்வீங்களா!....
மக்கள் எதிர்பாக்குறது வடிவேலு அடி வாங்கனும்னு இல்ல அவருக்கு ஒரு பாடம் கிடைக்கணுன்னு தான்!......அவருக்கு மண்டை உடஞ்சா யாருக்கும் லாபமில்லைன்னு எல்லாருக்கும் தெரியும்!.....

Anonymous said...

நீங்கள் எழுதிய அதே குரூர மனப்பான்மை வடிவேலுவிடமே உள்ளது.. அவரது முதல் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்தை மிக அவமானமாக பேசி கேலி செய்கிறார். அதை கேட்கும் சுற்றியுள்ள தலைவர்கள் எக்காளமிட்டு சிரிக்கிறார்கள். கருணாநிதி உட்பட.. தமிழக தலைவர்களுக்கு இல்லாத ஒழுக்கம், மனித தன்மை அதன் தலைவர்களிடமும் பார்க்கமுடியாது.. அதன் மக்களிடமும் பார்க்கமுடியாது.. வடிவேலு மாதிரியான அல்லக்கைகள் வாங்கிய 50 கோடிக்கு இப்படி தலைமறைவாக வாழ வேண்டிய அவசியம் என்ன.. ? நீங்கள் சற்று யோசித்து எழுதியிருக்கலாம். தமிழ் சமூகமே முதிர்ச்சியற்ற சமூகம் தன் இனம் கொல்லபட்டபோது துடிக்காத சமூகம் ரஜினிகாந்தின் உடல் கோளறுக்கு பதறி அழுது துடிக்கிறது.

Sundar said...

vadivelu alavukku vijaykanth tharam thaazhndhu pogamaaterendru nambuvomaaga ... edhu eppadiyo oru nalla kalaignanai indha kalaingar ippadi thoondi vittirukka vendam..kalaingnarudaiya vayadhukku idhu thagaadha velai..

CrazyBugger said...

Ayya Raasa, ithae vadivel election champaign naatkalil varthaigalil vijaykanthai adithu vaeluthavarai yaen andru neengal kural koova villai? polavae vijaykanth intha electionil thotruiruppin (DMK jaikkum patchathil) vadivel "Vaedivel" aagi iruppaar endrum ingae solla naan kadamai pattullaen...

nandha said...

பிரசாரத்தில் பேச வேண்டியதை பேசாமல் விஜயகாந்த்தை அவன் இவன் என்றும், லூசுப் பயல் என்றும், கேஸு என்றும், பீஸு என்றும், குடிகாரன் என்றும் தாறுமாறாக வடிவேலு பேசியது எந்த விததில் சரி என உங்களை மாதிரி கழக கண்மணிகள் (சாரி) அல்லைகைகள் சொன்னால் நல்லது...
>>அடிமனத்தின் உள்ள குரூரமனப்பான்மையின் வெளிப்பாடே.<<
>>வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர் யாருமே இல்லை...<<
ஆம் ..வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர் யாருமே இல்லை தான்..ஆனால் வடிவேலு விஜயகாந்தை திட்டியதையும் காமடியாக நினைத்து ரசித்து சிரித்த உங்கள் கழக குஞ்சுகளுக்கு இருப்பது தான் குரூரமனப்பான்மையின் வெளிப்பாடே தவிர...மற்றவர்களுக்கு இருப்பது "உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும்" என்ற பொது நியதின் வெளிப்பாடே.

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
தமிழ்வாசி - Prakash said...
அவிய்ங்க ராசா said...
நன்றி ராஜா,

நன்றி தமிழ்வாசி..பதிவை படித்தீர்கள் தானே..)))>>>>>>>>

உங்கள் தலைப்புக்கு அந்த கருத்து சொன்னேன்.

பதிவின் விஷயங்கள் யோசிக்க வேண்டியது.
18 May 2011 1:23 AM
////////////////////////////////
நன்றி தமிழ்வாசி..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
tshankar89 said...
Avinga Raja....

Yes.. I too accept it. As a public or Vijayakant partymen are not allowed to take any "revenge" or action against Vadivel. But this issue shall be taken to legal system and let them decide the degree of punishment for such defamation case.

Sankara N. Thiagarajan
18 May 2011 1:38 AM
//////////////////////////////
புரிதலுக்கு நன்றி சங்கர்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
Saravana said...
ராசா,
நான் நண்பர்கள்ட்ட பேசிட்டிருந்த அதே விஷயம் உங்ககிட்ட இருந்து வந்ததில் ரொம்ப சந்தோசம்..
இதையே தி.மு.க காரன் செய்ஞ்சா 'அராஜகம், அட்டூழியம்' ன்னு சொல்வோம்.
"வடிவேலு சினிமா வாழ்க்கை முடிஞ்சுது, இனி அடி தான்'.... இப்படி பல பேச்சு, பல கருத்து...
ஒரு குடும்பத்துல பல பேர் சினிமா எடுத்தா.. ஆதிக்கம்னு சொன்ன நாம, ஒரு நல்ல நடிகன நடிக்க விடாம வெரட்டுரத எப்படி வரவேற்கிரோம்னு புரியவே இல்ல. எல்லோரும் என்ன நியாயமா சொல்லணும் ..
'எப்பா.. ஒட்டு போட்டமா, நீ ஜெயிச்சியா.. இப்போ எங்களுக்கு என்ன நல்லது செய்ய போறே. அதா செய்யி. அத உட்டுட்டு, வீட்டுக்கு கல் அடிக்கிறது, போன்லே மேரட்டுறது, நடிக்க விடாம தடுக்கிறது.. இதெல்லாம் வேண்டாம்.'
இப்படில்லா சொல்லணும்.
தப்பு யார் செய்ஞ்சாலும் தப்பு தான். இன்னைக்கு நாம அடிச்சா நாளைக்கு நமக்கும் அடி விழும்னு புரிஞ்சு நடக்கணும்.
அன்புடன்,
சரவணா.
18 May 2011 3:15 AM
///////////////////////////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
M.G.ரவிக்குமார்™..., said...
கசாப்புக்குக் கூடத் தான் தண்டனை கிடைக்கணுன்னு நினைக்கிறோம்!......
அப்போ எங்களுக்கு மனிதாபிமானம் கிடையாதுன்னு சொல்வீங்களா!....
மக்கள் எதிர்பாக்குறது வடிவேலு அடி வாங்கனும்னு இல்ல அவருக்கு ஒரு பாடம் கிடைக்கணுன்னு தான்!......அவருக்கு மண்டை உடஞ்சா யாருக்கும் லாபமில்லைன்னு எல்லாருக்கும் தெரியும்!.....
18 May 2011 7:30 AM
////////////////////////////
நன்றி ரவிஷங்கர்..தவறு செய்தவருக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எந்த வழியில்..கசாப்பை தெருவில் ஓடவிட்டா சுடப்போகிறார்கள். பின், அவனுக்கும் நமக்கு என்ன வித்தியாசம். வடிவேலு தவறு செய்தால், வீடு புகுந்து அடிப்பதுதான் தண்டனை என்றால், பின் எதற்கு அரசாங்கம்..எல்லாரும் இதையே பின்பற்றலாமே..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Anonymous said...
vadivel adi vaanganumnu ethuku asa padurangana dmk vanthuchuna athula labam anubavikka pora stalin alagiri ellam adakki vaasikkumpothu vadiveluku mattum ean intha vela vadivelu pola yaravathu oruththar pesinangala illiye thappu seithavan thandanai vaangithane aganum
18 May 2011 6:39 AM
////////////////////////////////
மேலே கூறப்பட்ட பதில்தான் இதற்கும்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
Anonymous said...
நீங்கள் எழுதிய அதே குரூர மனப்பான்மை வடிவேலுவிடமே உள்ளது.. அவரது முதல் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்தை மிக அவமானமாக பேசி கேலி செய்கிறார். அதை கேட்கும் சுற்றியுள்ள தலைவர்கள் எக்காளமிட்டு சிரிக்கிறார்கள். கருணாநிதி உட்பட.. தமிழக தலைவர்களுக்கு இல்லாத ஒழுக்கம், மனித தன்மை அதன் தலைவர்களிடமும் பார்க்கமுடியாது.. அதன் மக்களிடமும் பார்க்கமுடியாது.. வடிவேலு மாதிரியான அல்லக்கைகள் வாங்கிய 50 கோடிக்கு இப்படி தலைமறைவாக வாழ வேண்டிய அவசியம் என்ன.. ? நீங்கள் சற்று யோசித்து எழுதியிருக்கலாம். தமிழ் சமூகமே முதிர்ச்சியற்ற சமூகம் தன் இனம் கொல்லபட்டபோது துடிக்காத சமூகம் ரஜினிகாந்தின் உடல் கோளறுக்கு பதறி அழுது துடிக்கிறது.
18 May 2011 12:56 PM
//////////////////////
என்னுடைய பதிவின் சாரம்சம் இதுதான். ஒருவர் தவறு செய்திருந்தால், வீடு புகுந்து அடிப்பது, என்பது தண்டனையாகது. அப்படி விரும்புவதும் மனிதாபிமாகாது..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
Sundar said...
vadivelu alavukku vijaykanth tharam thaazhndhu pogamaaterendru nambuvomaaga ... edhu eppadiyo oru nalla kalaignanai indha kalaingar ippadi thoondi vittirukka vendam..kalaingnarudaiya vayadhukku idhu thagaadha velai..
18 May 2011 1:35 PM
CrazyBugger said...
Ayya Raasa, ithae vadivel election champaign naatkalil varthaigalil vijaykanthai adithu vaeluthavarai yaen andru neengal kural koova villai? polavae vijaykanth intha electionil thotruiruppin (DMK jaikkum patchathil) vadivel "Vaedivel" aagi iruppaar endrum ingae solla naan kadamai pattullaen...
18 May 2011 2:08 PM
nandha said...
பிரசாரத்தில் பேச வேண்டியதை பேசாமல் விஜயகாந்த்தை அவன் இவன் என்றும், லூசுப் பயல் என்றும், கேஸு என்றும், பீஸு என்றும், குடிகாரன் என்றும் தாறுமாறாக வடிவேலு பேசியது எந்த விததில் சரி என உங்களை மாதிரி கழக கண்மணிகள் (சாரி) அல்லைகைகள் சொன்னால் நல்லது...
>>அடிமனத்தின் உள்ள குரூரமனப்பான்மையின் வெளிப்பாடே.<<
>>வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர் யாருமே இல்லை...<<
ஆம் ..வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர் யாருமே இல்லை தான்..ஆனால் வடிவேலு விஜயகாந்தை திட்டியதையும் காமடியாக நினைத்து ரசித்து சிரித்த உங்கள் கழக குஞ்சுகளுக்கு இருப்பது தான் குரூரமனப்பான்மையின் வெளிப்பாடே தவிர...மற்றவர்களுக்கு இருப்பது "உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும்" என்ற பொது நியதின் வெளிப்பாடே.
////////////////////////////////
பதில் சொல்லுவதற்கு முன்பு, நாகரிகமாக கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...முதலில் நான் யாருக்கும் சார்பு இல்லை. வடிவேலுவை எங்கேயும் நியாயப்படுத்தவும் இல்லை. என்னுடைய கருத்து எல்லாம், ஒருவர் தவறு செய்தால், தண்டிக்க சட்டமும், அரசாங்கமும் உள்ளது. வீடு புகுந்துதான் அடிப்பேன் என்பது, எப்படா அடிவாங்குவான் என்பதும் மனிதாபிமாகாது என்பதே என் வாதம். அவர் வீட்டில் கல்லெறிந்தால் "அவனுக்கு வேணும்டா.." என்று நினைப்பதே தவறான மனப்பான்மை என்பதும் என் கருத்து..

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி

CrazyBugger said...

http://eppoodi.blogspot.com/2011/05/blog-post_21.html

Perfect reply for your post.

Post a Comment