Saturday, 7 May, 2011

தண்ணியடிக்காத பிரண்ட்ஷிப்

இந்த உலகத்துலயே கொடுமையான சமாச்சாரம் எது தெரியுமாண்ணே.. வேலை இல்லாம இருக்குறதா..இல்லைண்ணே..வறுமையா..இல்லைண்ணே..கொடுமையான சமாச்சாரம் எது தெரியுமா..டாஸ்மார்க்ல போய் தண்ணி அடிக்காம இருக்குறது தான்.

நண்பன் ஒருத்தன் பாசக்கார பயபுள்ளைண்ணே..ஆளைக்கண்டா உசுர விட்டுடுவான்..”வாடா ராசா..சாப்பிடு ராசா..” ன்னு எம்புட்டு பாசம்ணே..ரொம்ப பாசக்கார பயபுள்ளைண்ணே..எனக்கு கூட சிலநேரம் புல்லரிச்சு போகும்ணே..ஒரு மனுசன் மேலே இப்படியா பாசத்தைக் கொட்டுறது..ஒருதடவே கேட்டேபுட்டேன்..

“டே..குமாரு..ஏண்டா..இப்படி பாசத்த பொழியுற..என்மேல அம்புட்டு நட்பாடா..”

“ராசா..என்னடா, இப்படி சொல்லிப்புட்ட..நட்புன்னா எனக்கு கற்பு மாதிரிடா(படம் பார்த்து கெட்டுபோயிட்டாய்ங்க..வேற ஒன்னுமில்ல..)..உன்மேல எவ்வளவு நட்பு வைச்சிருக்கேன் தெரியுமா” ங்குறான்.. எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சுண்ணே..

“டே..குமாரு..இதுக்கு நான் எப்படி கைமாறு செய்யப்போறன்னு தெரியலே…” அப்படியே ஒரு செண்டிமென்டு படம் பார்த்த மாதிரி ஆயிடுச்சுண்ணே..

ஆனா, நம்மதான் வினைய தூக்கி கக்கத்துல வைச்சுக்கிட்டு சுத்துவோமே..அப்படிதான் அன்னைக்கு ஆயிப்போச்சு.. நம்மாளுங்க பக்கத்து வீட்டு குழந்தை ஆய் போனாவே டிரீட் கேட்போமே..அதுமாதிரி தெரியாம, ஒருவார்த்தை கேட்டதுதான், “பொன்னர் சங்கர்” படம் பார்த்ததுக்கு அடுத்த மாதிரி, நான் என் வாழ்க்கையில பண்ணுன பெரிய தப்பு..

“குமாரு..நம்ம ப்ரெண்ட்சிப்பு வைச்சிக்கிட்டு 1 வருசம் ஆயிடுச்சுல்ல..எங்கடா டிரீட்டு..”

அவ்வளவுதான் பயபுள்ளை துள்ளி குதிச்சிட்டான்..

“ராசா..உனக்கில்லாமயா..கண்டிப்பாடா..பெரிய தண்ணி பார்ட்டி வைச்சிருவோம்..” ங்கிறான்..

எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு..நம்மகிட்ட இல்லாத ஒரே கெட்டபழக்கம் தண்ணி அடிக்க இன்னும் பழகாததுதான்(யாருண்ணே அங்க மத்த கெட்ட பழக்கமல்லாம் இருக்கான்னு கேக்குறது…) ..

“இல்லடா குமாரு..நான் தண்ணி அடிக்கமாட்டேன்..”

“உன்னை யாருடா அடிக்கச் சொன்னது..நாங்கல்லாம் அடிக்குறோம்..நீ சைடு டிஷ்ஷ காலி பண்ணு..”

சைடு டிஷ்ன்னு சொன்னவுடனே. நம்மளுக்கு மண்டைக்குள்ள பல்பு விட்டமாதிரி ஒரு பிரகாசம்..நம்ம பயபுள்ள வேற காரம்சாரமா சமைப்பானா..நாக்கு ஊறுச்சுண்ணே..கண்டிப்பா வர்றேன்னு சொல்லிட்ட கிளம்பிட்டேன்..

அடுத்த நாளு சரியா நைட்டு 10 மணிக்கு போய் அவன் கதவை தட்டுறேன்..பயபுள்ள டயர்டா கதவை தொறந்தான்.. ரூம் முழுக்க அவ்வளவு மனம்ணே..சிக்கன் வறுவல்..பிரியாணி..முட்டை, சிப்ஸ், கடலை ன்னு பயபுள்ள விழுந்து, விழுந்து சமைச்சு வைச்சிருக்காண்ணே..எனக்கு கண்ணுல தண்ணியே வந்துருச்சு..

“குமாரு..எனக்காகவாடா..”

“ஆமாண்டா..நண்பா..எதுனாலும் கிராண்டா கொண்டாடினும்..அப்படியே என் பிரண்ட்ஸ் ஆறு பேரு வர்றாயிங்க..”

“சந்தோசம்டா..”

ஆறுபேரும் வந்தாயிங்க..பயபுள்ளைங்க..ரொம்ப டீசண்டுண்ணே..பேசுறப்ப கூட, சத்தம் வெளியே வரலைன்னா பார்த்துங்க்கங்களேன்..மரியாதை தெரிஞ்ச பயபுள்ளைங்க..

“வாங்க பாஸ்” ன்னு அப்படின்னு அவிங்களே இன்ட்டிரிடியூஸ் பண்ணிக்கிட்டாய்ங்க..முத ரவுண்ட ஆரம்பிச்சாய்ங்க..நம்மளுக்கு வழக்கம் போல கோகோ கோலாவும் சைட்டிஷ்ஷூம்..முதல் ரவுண்ட் ஆரம்பிச்சவுடனே ஒருத்தன் ரொம்ப பதவிசா கேட்டாண்ணே..

“ராசா….பாஸ்..பிரிட்ஜ தொறந்து அந்த ஐஸ்ஸ கொஞ்சம் எடுத்து தர்றீங்களா..”

சரி நம்ம பயபுள்ளைங்கள்ளதானேன்னு எடுத்து கொடுத்தேன்..அதுக்குள்ள ரெண்டாவது ரவுண்டு போயிடுச்சு..

“டே..ராசா..வெளக்கெண்ணே..அந்த ஐஸ்ஸ எடுடா டுபுக்கு..”

நமக்கு திக்குன்னு ஆயிடுச்சு..பழகி ரெண்டு நிமிசம் கூட ஆகலையே..ஒருவேளை வேற யாரையோ கூப்பிடுறாயிங்களோன்னு திரும்பி பார்க்குறேன்..அவன் சொல்லுறான்..

“டே..**** மவனே..கண்ணை என்ன பொடனிலியா வைச்சுருக்கிற..ஐஸ்ஸ எடுறா ******”

அப்பவே எழுந்து போகலாம்னு நினைச்சேன்..ஒருத்தன் அவசரம், அவசரமா ஓடிப்போய் கதவை பூட்டிக்கிட்டான்..கதவை பூட்டுனவனை நமக்கு கொஞ்சம் பழக்கம்..வந்த புதுசுல “அண்ணே..அண்ணே” ன்னு தான் கூப்பிடுவான்..

“டே..நான் வீட்டுக்கு போகணும் தம்பி..அண்ணன் சொல்லுறேன்..கதவை தொற..”

அதுக்கு அவன் கேக்குறான்..

“தண்ணி அடிக்காத மயிராண்டி..உனக்கு என்னடா மரியாதை..போயி உக்காருடா..*****..இல்லை இந்த பாட்டிலை மண்டையில் வுட்டு ஆட்டிடுவேன்”

எனக்கு பயமா போச்சுண்ணே..அவசரமாக குமாரைக் கூப்பிடுறேன்..

“”குமாரு..குமாரு..வந்து இவங்கிட்ட சொல்லுடா..நான் போகணும்..”

குமாரு அவசரமா வந்தான்..இவன் பரவாயில்லைண்ணே..குமாரு..அப்படி ஒரு கெட்ட வார்த்தைண்ணே..தமிழில திட்டியிருந்தா கூட மனசு ஆறிரும்ணே..பயபுள்ளைக்கு “எச்சூஸ்மி” தவிர எதுவும் தெரியாது..என்னை திட்டுறதுக்காகவே டிக்சனரி படிச்சுட்டு வந்துருப்பான் போல..அம்புட்டும் கெட்ட, கெட்ட வார்த்தை…காதை பொத்திக்கிட்டேன்..கடைசி வார்த்தை “மொன்னை நாயி”ன்னு அப்படின்னு தமிழ்ழ முடிச்சுக்கிட்டான்..

அதோட நிறுத்தியிருந்தா பரவாயில்லை..அந்த பயபுள்ள , ஸ்கூலுல எஸ்ஸே எழுதுற மாதிரி எல்லாருகிட்டயும் சொல்லுறான்

“டே பசங்களா..ராசாவை எல்லாரும் கெட்டவார்த்தை திட்டணும்..யாரு நல்லா பவரா திட்டுறாயிங்களோ, அவிங்களுக்கு இன்னொரு டிரீட்டு” பயபுள்ள நாரதருக்கு கிளாஸ் எடுத்துருப்பான் போல..

அவ்வளவுதான்…தமிழுல இவ்வளவு கெட்டவார்த்தை இருக்கான்னு அப்பதான் தெரியும்..அவ்வளவும் பேர்ட் வேர்ட்ஸ் தான்....கலைஞருக்கு தெரிஞ்சிருந்தா, உலகத்தமிழ் மாநாடே போட்டிருக்க மாட்டாரு.. என்னையே நொந்துகிட்டு வீட்டுக்கு போய் தூங்கிட்டேன்..

காலையில எழுந்து காதுல ரத்தம் வருதான்னு பார்த்தேன்..வரலை..செல்போனுல ரிங்கு வரவே , யாருண்ணு பார்த்தா..நம்ம குமாரு..எடுக்கவே பிடிக்கலை..ரெண்டாவது தடவையா ரிங்கு அடிக்க எடுத்தேன்..

“ம்..சொல்லு..”

“என்ன ராசா..உனக்கு மரியாதையே தெரியாதா..எதுக்கு பார்ட்டியில நடுவுல எழுந்து வந்த..”

“ஏண்டா..உங்களுக்கு ஊறுகாய் பத்தலையா..”

“நாங்க தன்மையாத்தாண்டா பேசுனோம்..ஏண்டா..எதுவும் கெட்ட வார்த்தை எதுவும் பேசுனுமோ..எதுவும் ஞாபகம் இல்லையே..”

“……”

“சரி..விடு ராசா…வர்ற வாரம் நம்ம பிரண்டு இன்னொரு தண்ணி பார்ட்டி வைக்கிறான்..நீ கண்டிப்பா வரணும்…”

“@#$%&^*” (இருக்குற கெட்ட வார்த்தை எல்லாத்தையும் போட்டு புல்லப் பண்ணிக்குங்க..)

26 comments:

Anonymous said...

நல்லா இருக்கு பாஸ், முன்னமே இதே மாதிரி எழுதியிருக்கீங்களோ!

-
வெங்கடேஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அசிங்கப்பட்ட தன்மான சிங்கம் வாழ்க

# கவிதை வீதி # சௌந்தர் said...

ம்.. நடத்துங்க...

இரவு வானம் said...

என்ன பாஸ் தமிழ்நாட்டுல இருந்துட்டு தண்ணி அடிக்க தெரியாதுன்னு சொன்னா எப்படி?

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...

//////////காலையில எழுந்து காதுல ரத்தம் வருதான்னு பார்த்தேன்..வரலை..செல்போனுல ரிங்கு வரவே , யாருண்ணு பார்த்தா..நம்ம குமாரு..எடுக்கவே பிடிக்கலை..ரெண்டாவது தடவையா ரிங்கு அடிக்க எடுத்தேன்..

“ம்..சொல்லு..”

“என்ன ராசா..உனக்கு மரியாதையே தெரியாதா..எதுக்கு பார்ட்டியில நடுவுல எழுந்து வந்த..”

“ஏண்டா..உங்களுக்கு ஊறுகாய் பத்தலையா..”

/////////////

அருமையான எழுத்து நடை நண்பரே ஒவ்வொரு வரியிலும் சிரிப்பு கசிகிறது . இதுதானே முதல் அனுபவம் இனி உஷாரா இருக்கவேண்டியதுதான் என்ன சொல்றிங்க

ROJA said...

தண்ணி அடிக்கிறவங்க கூட உக்காந்து இருந்துட்டு பின்ன பிலக்குல குத்து குடையிதுனா..தீயார்ரோடு சேர்ந்து இருப்பதும் தீதே....

Anonymous said...

..கொடுமையான சமாச்சாரம் எது தெரியுமா..டாஸ்மார்க்ல போய் தண்ணி அடிக்காம இருக்குறது தான்.
.நம்மளுக்கு வழக்கம் போல கோகோ கோலாவும் சைட்டிஷ்ஷூம்..///////////////////
தண்ணி அடிக்க முடியல ரொம்ப வருத்தம் போல....

Anonymous said...

நல்லவனுக்கு அங்க என்ன வேலைங்க......

Anonymous said...

இனிமேலாவது இந்த மாதிரி கெட்டபசங்களோட சேராதீங்க....

Anonymous said...

நீர் என்ன மயிருக்கு பார்ட்டிக்கு போனீரு.....மூடிக்கிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே....

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////////
Anonymous said...
நல்லா இருக்கு பாஸ், முன்னமே இதே மாதிரி எழுதியிருக்கீங்களோ!

-
வெங்கடேஷ்
//////////////////////////////////
ஆமா பாஸ்..அது ஒருத்தங்கிட்ட மாட்டிக்கிட்டது..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அசிங்கப்பட்ட தன்மான சிங்கம் வாழ்க
7 May 2011 4:12 AM
//////////////////////////////////
ஹி..ஹி..சிங்கத்தை சிதைச்சுப்புட்டாய்ங்களே..)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////////
கவிதை வீதி # சௌந்தர் said...
ம்.. நடத்துங்க...
7 May 2011 4:24 AM
////////////////////////////////////
நன்றி சௌந்தர்..)

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////////
இரவு வானம் said...
என்ன பாஸ் தமிழ்நாட்டுல இருந்துட்டு தண்ணி அடிக்க தெரியாதுன்னு சொன்னா எப்படி?
7 May 2011 6:34 AM
/////////////////////////////////
தமிழ்நாட்டை விடுங்க..ஏண்டா உயிர் வாழுறன்னுல கேக்குறாயிங்க..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
பனித்துளி சங்கர் ♥ ! said...
//////////காலையில எழுந்து காதுல ரத்தம் வருதான்னு பார்த்தேன்..வரலை..செல்போனுல ரிங்கு வரவே , யாருண்ணு பார்த்தா..நம்ம குமாரு..எடுக்கவே பிடிக்கலை..ரெண்டாவது தடவையா ரிங்கு அடிக்க எடுத்தேன்..

“ம்..சொல்லு..”

“என்ன ராசா..உனக்கு மரியாதையே தெரியாதா..எதுக்கு பார்ட்டியில நடுவுல எழுந்து வந்த..”

“ஏண்டா..உங்களுக்கு ஊறுகாய் பத்தலையா..”

/////////////

அருமையான எழுத்து நடை நண்பரே ஒவ்வொரு வரியிலும் சிரிப்பு கசிகிறது . இதுதானே முதல் அனுபவம் இனி உஷாரா இருக்கவேண்டியதுதான் என்ன சொல்றிங்க
/////////////////////////////////
நன்றி சங்கர்..ஏற்கனவே அனுபவப்பட்டாச்சு..ஆனா..நட்பு இருக்குல்ல..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
ROJA said...
தண்ணி அடிக்கிறவங்க கூட உக்காந்து இருந்துட்டு பின்ன பிலக்குல குத்து குடையிதுனா..தீயார்ரோடு சேர்ந்து இருப்பதும் தீதே....
7 May 2011 9:07 AM
////////////////////////////
ரோஜா..நகைச்சுவைப் பதிவு இது..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
Anonymous said...
..கொடுமையான சமாச்சாரம் எது தெரியுமா..டாஸ்மார்க்ல போய் தண்ணி அடிக்காம இருக்குறது தான்.
.நம்மளுக்கு வழக்கம் போல கோகோ கோலாவும் சைட்டிஷ்ஷூம்..///////////////////
தண்ணி அடிக்க முடியல ரொம்ப வருத்தம் போல....
7 May 2011 9:15 AM
////////////////////////////
ஆமாண்ணே..உலகத்துல ஒரு பய மதிக்க மாட்டுறாயிங்க..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Anonymous said...
நல்லவனுக்கு அங்க என்ன வேலைங்க......
7 May 2011 9:17 AM
Anonymous said...
இனிமேலாவது இந்த மாதிரி கெட்டபசங்களோட சேராதீங்க....
7 May 2011 9:39 AM
//////////////////////////////
ஆஹா..எல்லாரும் நம்ம பிரண்ட்சுதாண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
Anonymous said...
நீர் என்ன மயிருக்கு பார்ட்டிக்கு போனீரு.....மூடிக்கிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே....
7 May 2011 9:42 AM
//////////////////////////////
ஆஹா..இந்த கமெண்டு போட்டது யாருன்னு தெரிஞ்சு போச்சு..)))

ஷர்புதீன் said...

me too have sam experience

Faizal said...

அருமையான எழுத்து நடை நண்பரே ஒவ்வொரு வரியிலும் சிரிப்பு கசிகிறது

Anonymous said...

ithe oru ponnu party kodutha palla kaatittu povir, moodikittu varvir, aanal friendship with boys na??????

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
ஷர்புதீன் said...
me too have sam experience
7 May 2011 11:54 AM
///////////////////////////////
ஓ..உங்களுக்குமா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Faizal said...
அருமையான எழுத்து நடை நண்பரே ஒவ்வொரு வரியிலும் சிரிப்பு கசிகிறது
8 May 2011 2:42 PM
////////////////////////////////
நன்றி பாய்சல்...

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
Anonymous said...
ithe oru ponnu party kodutha palla kaatittu povir, moodikittu varvir, aanal friendship with boys na??????
8 May 2011 2:45 PM
//////////////////////////////////
அப்படியே இருக்கட்டும் நண்பா..

safi said...

அவ் அவ் அவ் அவ் அவ் அவ்வ்வ்வவ்வ்

Post a Comment