Sunday, 15 May, 2011

திமுகவுக்கு வைச்சோமா ஆப்பு..

“திமுகவுக்கு வைச்சோமா ஆப்பு..”

“சாவுங்கடா..இனிமேல் 5 வருடத்திற்கு எந்திரிக்கவே முடியாது..”

“திமுக கட்சியே இனிமேல் இருக்காது..”

இது எல்லாம், ஜெயித்தவர்கள், தோற்றவர்களைப் பார்த்து குஷியில் சொல்லிய வார்த்தைகள். ஆனால் கொடுமை என்ன தெரியுமா..கெட்ட, கெட்ட வார்த்தையில் எனக்கும் ஒரு இமெயில்..அடக்கொடுமையே..ஏதோ, நான் கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பக்கத்தில் இருந்து தண்ணியை எடுத்து கொடுத்த மாதிரியும், திமுக வெற்றிக்கு கடுமையாக உழைத்த மாதிரியும் அப்படி ஒரு மெயில்.

நான் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். தேர்தல் மட்டுமல்ல,விளையாட்டில் ஜெயித்தவர்கள், தோற்றவர்களை பார்த்து ஏளனம் செய்வது, பழிப்பு காட்டுவது, வாழ்க்கையில் ஜெயித்தவர்கள், தோற்றவர்களை கிண்டல் செய்வது என்று தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மை என்ன தெரியுமா..வாழ்க்கையில் ஒருவர் எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது. என்றாவது ஒருநாள், அதே அடி, தமக்கும் விழும். அப்போது சுருண்டு விழும்போது கிடைக்கும் வலியில் தான், தோற்றவர் கிடைக்கும் வேதனை தெரியும். ஆனால், அதை புரிந்து கொள்வதற்குள், மண்ணோடு மண்ணாக போயிருப்போம்.

சரி..இந்த தேர்தலை எடுத்துக் கொள்வோம்..பல ஊடகங்களின் தேர்தல் கணிப்புகளை மீறி, அம்மா அமோகமாக ஜெயித்திருக்கிறார். இவ்வளவு சீட்டு கிடைக்கும் என்று நாம் மட்டுமல்ல, அம்மாவே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்..ஆனால், இந்த வெற்றி, அம்மா போன முறை தோற்றபோது கம்ப்ளெயின் செய்த, எலெக்ட்ரானிக் ஓட்டுமுறையில் தான் கிடைத்திருக்கிறது என்பதுதான் ஜெயித்தவரகள் மறக்கநினைக்கும் உண்மை. இந்தமுறை இரட்டை இலையில் போட்ட ஓட்டு, இரட்டை இலைக்கே விழுந்திருக்கிறது என்பது இன்னும் ஆச்சர்யம்

சரி, இனிமேல் அதிமுக எப்படி இருக்கும்

அழகிரி போய் சசிகலா வருவார். இதுவரை பணம் சம்பாதிக்க முடியாமல் சுருண்டு போய் இருந்த கவுன்சிலர்கள், வட்ட மற்றும் சதுர செயலாளர்கள், இனி புத்துணர்ச்சி பெற்று, கழுத்தில் உள்ள செயினை எடுத்து வெளியே போட்டுக் கொள்வார்கள். நாளைக்கு பதவி இருக்குமோ என்ற பயத்திலேயே, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் காலம் தள்ள வேண்டியிருக்கும். “ஏம்பா சரியா காலுல விழுந்தேனா” என்று அம்மா வரும்போது உதவியாளர்களிடம் சரிபார்த்துக் கொள்வார். எங்கு பார்த்தாலும் அம்மாவுக்கு பிடித்த பச்சைக் கலர்தான். “தங்க தாரகையே..” என்ற போரடிக்கும் வார்த்தைகள் மீறி அம்மாவை பாராட்டுவதற்கு ஏதாவது புதிய வார்த்தைகளை டிக்சனரியில் தேடிகொண்டிருப்பர். ஆகமொத்தம் ஐந்து வருடங்களுக்கு கையிலேயே பிடிக்க முடியாது

சரி, இனிமேல் திமுக எப்படி இருக்கும்

ஒரு மாதத்திற்கு எந்த சவுண்டும் இருக்காது. வழியில் எங்கயாவது பார்த்துக்கொண்டால் கூட தலையில் உள்ள துண்டை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டு “என்னண்ணே..நம்ம தொகுதியில இப்படி ஆயிப்போச்சே” என்று சோகமாக துக்கம் விசாரித்துக் கொள்வார்கள். வழக்கம்போல “உடன்பிறப்பே, கலங்காதே” என்று கலைஞர் கடிதம், கலைஞர் டி.வியில்(இருந்தால்) வரும். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து, “இந்த ஆட்சியின் அராஜகங்கள் பாரீர்” என்று ஆரம்பித்து, போராட்டங்கள், பிரியாணியோடு களைகட்ட ஆரம்பிக்கும். காங்கிரஸ் அடுத்த மாதத்தில் அதிமுகவோடு வைக்கப்போகும் கூட்டணியைக் கண்டு கலங்கிப்போய் உக்காருவதறகுள், கட்சியின் முக்கிய கட்டத் தலைவர்கள், அம்மாவின் அக்னி பார்வையின் விளைவாக ஜெயிலுக்குள் இருப்பர்

இனி விஜய்காந்த்

சட்டசபையில் முடிந்த வரை குரல் கொடுத்து பார்த்துவிட்டு குண்டுகட்டாக(யப்பே, எம்புட்டு கஷ்டம்) தூக்கி வெளியே எறியப்படுவர். விழுந்த வலியில் “இந்த ஆட்சியின் அராஜகம் பாரீர்” என்று கத்த நினைத்து, வீட்டுக்கு வரப்போகும் ஆட்டோக்களை எண்ணி அமைதி காப்பர். “இந்த அராஜக ஆட்சியின் அராஜங்களை தோற்கடிக்கவேண்டும்” என்று டயலாக் பேசிக்கொண்ட அதே நாக்குகள் “தன்மானத்தலைவர் கலைஞர்” என்று பேச ஆரம்பிக்கும். அடித்த அடி தாங்க முடியாமல், திமுக, தேமுதிக மற்றும் மதிமுக எல்லாம் ஓரணியில் சேரும்.

இனி மக்கள்

இனிமேல் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்ற கனவில் இருக்கும் மக்களுக்கு முதலில் கிடைக்கப்போகும் அடி, ட்ராபிக் ஜாம். அம்மா, ஏதாவது சிலைக்கு மாலை போட நினைத்தாலே, அந்த பக்கம் டிராபிக் நிறுத்தப்படும். கொளுத்தும் வெயிலில், காய்ஞ்ச கருவாடு போல இருக்கும், தமிழன் ஓட்டுப்போட்ட விரலை ஒருமுறை பார்த்துக்கொள்வான். பச்சை, தமிழகத்தின் அதிகாரப்பூர்வமான கலராக மாறிவிடும். டிராபிக் ஜாம் கோபத்தில் கொலைவெறியில் வீட்டுக்கு வரும் தமிழ்னுக்கு, “மானாட, மயிலாட” மற்றும் சீரியல் பார்ப்பதற்கு கரண்ட் இருக்காது. எதிர்த்து கேட்டால், “பொடா, தடா, சடா, கடா” சட்டங்கள் கடுமையாக பாயும் என்பதால், “தென்ன மர ஓலையில் செஞ்ச விசிறி உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா” என்று பேசப்பழகிக் கொள்வான். அப்படியே கோபத்தை அடக்கிக்கொண்டு, அந்த கொலைவெறியில் அடுத்த தேர்தலில் “உதயசூரியன்” மற்றும் “முரசு” சின்னம் மேல் கன்னாபின்னாவென்று குத்துவான். மேலே உள்ளதை திரும்பவும் காபி, பேஸ்ட் செய்து கொள்ளவும்.

இனி இணையம் எப்படி இருக்கும்

“ஆப்பு வைச்சிட்டோமுல்ல, அடக்கிட்டோமுல்ல” என்று ஒருமாதம் முழுக்க பஞ்சு டயலாக்கா பறக்கும், அப்புறம் வழக்கம்போல் “இன்னும் மாறாத ஜெ” என்று எழுதிவிட்டு, “அய்ய்யயோ..அவசரப்பட்டுட்டமோ” என்று எச்சியைத் தொட்டு அழிக்க நினைப்பதற்குள், “எக்ஸ்க்யூஸ்மி,..நாங்க சைபர் க்ரைமிலிருந்து வந்திருக்கிறோம்” என்று சபாரி போட்ட ஆட்கள் வீட்டுக்கு வருவதானால், “அய்யயோ சார்..ஏதோ, நாங்க பொழுது போகாம எழுதுறோம் சார்..இதோ, இப்பயே அழிச்சிடுறோம் சார்” என்று அடுத்த நிமிடம் காணாமல் போகும். வழக்கம்போல “வடை எனக்கு, போண்டா உனக்கு, தயிர்வடை தம்பிக்கு” என்று கமெண்டுகள் எண்ணிக்கை அதிகரித்து “திரிஷா நாய்குட்டி பெயர் “ஜிம்மி தெரியுமா” என்ற பதிவுகள் தமிழ்மணத்தின் சூடான இடுகையின் முதலிடத்தைப் பிடிக்கும்

கடைசியாக, இதை எல்லாவற்றையும் படித்துவிட்டு, “இல்லை கெட்ட வார்த்தை கமெண்டுதான் எழுதுவேன்” என்று அடம்பிடிப்பவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் “அய்யா ஆண்டாலும், அம்மா ஆண்டாலும், இன்னைக்கு உழைச்சாத்தான், நாளைக்கு சோறு..”

38 comments:

THOPPITHOPPI said...

தெய்வமே எங்கேயோ போய்ட்டிங்க..........

Anonymous said...

very true :)

vanakkamradio said...

சரியான செய்தி.. இதுவே தலைவிதி... உங்களுடைய ஆக்கத்தை என்னுடைய Facebook இல் இணைத்து விடுகிறேன்.. நன்றி

ராஜ நடராஜன் said...

தி.மு.கவின் மீதான விமர்சனங்கள் நிகழ்ந்தவைகள் மீதானது.அ.தி.மு.க பற்றி அனுமானங்கள் மீதானதாக பழைய நிகழ்வுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலோனோர் முன் வைக்கின்றனர்.சந்தர்ப்பம் கொடுத்து வரும் நாட்களில் மதிப்பீடு செய்யலாமே!

ராஜ நடராஜன் said...

//அடித்த அடி தாங்க முடியாமல், திமுக, தேமுதிக மற்றும் மதிமுக எல்லாம் ஓரணியில் சேரும்.//

அரசியலில் எதுவும் நடக்கலாம்!ஆனால் கலைஞர் தன்மானத் தலைவர்ன்னு மீண்டும் சொல்வார்கள் என்பது சிரிப்பையே வரவழைக்கிறது:)

கக்கு - மாணிக்கம் said...

:))))))

Anonymous said...

பிரமாதம்.

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
THOPPITHOPPI said...
தெய்வமே எங்கேயோ போய்ட்டிங்க..........
15 May 2011 1:22 PM
//////////////////////////
நன்றி தொப்பி, தொப்பி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Anonymous said...
very true :)
15 May 2011 1:50 PM
///////////////////////
நன்றி நண்பர்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
vanakkamradio said...
சரியான செய்தி.. இதுவே தலைவிதி... உங்களுடைய ஆக்கத்தை என்னுடைய Facebook இல் இணைத்து விடுகிறேன்.. நன்றி
15 May 2011 2:03 PM
///////////////////////////
நன்றி நண்பரே..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
ராஜ நடராஜன் said...
தி.மு.கவின் மீதான விமர்சனங்கள் நிகழ்ந்தவைகள் மீதானது.அ.தி.மு.க பற்றி அனுமானங்கள் மீதானதாக பழைய நிகழ்வுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலோனோர் முன் வைக்கின்றனர்.சந்தர்ப்பம் கொடுத்து வரும் நாட்களில் மதிப்பீடு செய்யலாமே!
15 May 2011 2:09 PM
ராஜ நடராஜன் said...
//அடித்த அடி தாங்க முடியாமல், திமுக, தேமுதிக மற்றும் மதிமுக எல்லாம் ஓரணியில் சேரும்.//

அரசியலில் எதுவும் நடக்கலாம்!ஆனால் கலைஞர் தன்மானத் தலைவர்ன்னு மீண்டும் சொல்வார்கள் என்பது சிரிப்பையே வரவழைக்கிறது:)
15 May 2011 2:13 PM
/////////////////////////////
கண்டிப்பாக ராஜராஜன்..மக்களுக்கு நல்லது நடந்தால் கண்டிப்பாக பாராட்டாலம்..நானும் பொதுமக்களில் ஒருவந்தானே..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
கக்கு - மாணிக்கம் said...
:))))))
15 May 2011 2:43 PM
Anonymous said...
பிரமாதம்.
15 May 2011 3:04 PM
///////////////////////////
நன்றி மாணிக்கம், நண்பர்..

சிநேகிதன் அக்பர் said...

//“அய்யா ஆண்டாலும், அம்மா ஆண்டாலும், இன்னைக்கு உழைச்சாத்தான், நாளைக்கு சோறு..”//

நெத்தியடி.

ILA(@)இளா said...

கெட்ட வார்த்தை.. நான் பாருங்க கெட்ட வார்த்தைதான் எழுதியிருக்கேன். ஆனா உங்களுக்கு கஷ்டமா இருக்காதே? அதான் வாழ்க்கை
(உங்களுக்கு புரிஞ்சதா இந்த தத்துவம்? எனக்கும்தான் புரியலை)

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////////
கெட்ட வார்த்தை.. நான் பாருங்க கெட்ட வார்த்தைதான் எழுதியிருக்கேன். ஆனா உங்களுக்கு கஷ்டமா இருக்காதே? அதான் வாழ்க்கை
(உங்களுக்கு புரிஞ்சதா இந்த தத்துவம்? எனக்கும்தான் புரியலை)
15 May 2011 7:32 PM
///////////////////////////////////
ஆஹா..சூப்பரு..)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
சிநேகிதன் அக்பர் said...
//“அய்யா ஆண்டாலும், அம்மா ஆண்டாலும், இன்னைக்கு உழைச்சாத்தான், நாளைக்கு சோறு..”//

நெத்தியடி.
15 May 2011 3:58 PM
/////////////////////////////////
நன்றி அக்பர்..

Dinesh Thangam said...

கரெக்டா சொன்னிங்க சார்....

ராம்ஜி_யாஹூ said...

உங்களின் இந்த உரைநடை, பத்தி நடைப் பதிவுகள் தான் எனக்குப் பிடித்து இருக்கிறது
கோபாலு, கோவிந்தன் கேள்வி பதில் நடை என்னை ஈர்ப்பதில்லை

Jey said...

ஜெ-வின் மேல் நடுனிலை மக்களுக்கு அவனம்பிக்கை இருந்தாலும், இந்த தடவை திமுக-வை வீட்டுக்கு அனுப்பியாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்கள் என்பதே உண்மை.

ஜெ-வின் ஆரம்ப அறிக்கையை பார்த்தால் , அனுபவப் பட்டவராக தெரிகிறார். பார்ப்போம் திருந்தி நல் ஆட்சி தருகிறாரா இல்லை முருங்கை மரமேரி மீண்டும் வீட்டுக்கு போகிறாரா என்று.

நம்பிக்கைதானே வாழ்க்கை... பார்ப்போம்.

தறுதலை said...

கருணாநிதி எந்த அளவுக்கு இந்தத் தோல்விக்கு தகுதியானவரோ, அதே அளவுக்கு ஜெயலலிதா இந்த வெற்றிக்கு தகுதி அற்றவர்.

வரும் காலங்களில் தி.மு.க இருக்குமா? எப்படியும் ஜெயலலிதாவை மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள். அந்த நிலையில் விஷகாந்து மாற்றாக வரமாட்டார் என்பதற்கு சாத்தியங்கள் இல்லையா?

இனிமேலாவது, என் குடும்பம் உள்ளே போனாலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து 'போர்க் குணத்துடன்' தி.மு.க செயல்பட வாய்ப்பிருக்கிறாதா?

திரவிடத்துவாவும், இந்துத்வாவும் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு, 'தமிழர்' அடையாளத்துடன் ஒரு இயக்கம் உருவாக வாய்ப்பிருக்கிறதா?

சுருங்கச் சொன்னால், தி.மு.க.தோன்றியதற்கான இலக்கை முழுமையாக அடையமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு நிறைவேற்றியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்சியின் தேவை நீர்த்துப் போய்விட்டாதா? மாற்றாக புதிய இயக்கத்தை மக்கள் எதிபார்க்கிறார்களா?


-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மே '2011)

Anonymous said...

சிறப்பான பதிவு. சரியான சிந்தனை, தீர்க்க தரிசனம். கலக்குறீங்க தலை.


சுவாமி.

Anonymous said...

Hi, I would like to use this in my fb..with your permission..Thanks, Karthik
facebook.com/karthikgnanam

angelin said...

//என்னுடைய ஒரே பதில் “அய்யா ஆண்டாலும், அம்மா ஆண்டாலும், இன்னைக்கு உழைச்சாத்தான், நாளைக்கு சோறு..”//
its 100 percent true .

Anonymous said...

neengal oru theerkkatharisi.

malar said...

மக்களே முழிக்கிறார்கள்.....ஆஹா இப்படி மோசம் போய்ட்டமே கொஞ்சபேராவது மாத்தி குத்தி இருப்பாகன்னுலா இருந்தேன் இப்படி எல்லோரும் சேர்ந்து மோசம் போய்டமே...சரி விடு அடுத்த வாட்டியும் இதயே செய்வோம்....குஸ்பூ வந்தாஹ...வடிவேலுலான் வந்தானே...அப்பவும் நாம இப்படி பண்ணி போட்ட்மே...அய்யோ அய்யய்யோ வேற என்னத்த சொல்ல....

அவிய்ங்க ராசா said...

///////////////////////
Dinesh Thangam said...
கரெக்டா சொன்னிங்க சார்....
16 May 2011 12:07 AM
//////////////////////
நன்றி தினேஷ்..

அவிய்ங்க ராசா said...

ராம்ஜி..கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..
நன்றி ஜெய், நன்றி தறுதலை..
நன்றி சுவாமி, அனானி நண்பா..
நன்றி அனானி,ஏஞ்சலின்.,,.

navani said...

super sir pinnitinga. neenga sollura yellamay unmay than. sir namma makkalay dmk kodutha gas, tv anaithayum thooki vaylila poada solluga sir, amma romba nallvanga sir. amma nallavanga yendru ippa puriyathu. inum 6 month poagatum yellamay puriyum.
naan dmk vai uyarthi paysala ana romba kaivalama paysurathu than romba kastama iruku.rendu payrumay maari maari kollai adipavanga than .

navani said...

helloooooooooooo

Jayadev Das said...

நல்ல நடுநிலையான பதிவு. இதுவரையிலும் கருணாநிதியும், ஜெவும் மாத்தி மாத்தி மக்களை கும்மாங்குத்து தான் குத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஐயோ இதுக்கு முன்னாடி வாங்கியதே வலி கம்மியா தெரிஞ்சுதேன்னு நினைத்துத் தான் இந்த இரண்டு கொள்ளைக் கூட்டத்துக்கும் மாற்றி மாற்றிஓட்டைப் போட்டு வந்தார்களே ஒழிய, நல்லாட்சியைத் தருவார்கள் என்றல்ல என்பதே உண்மை. ஆனாலும், அம்மா கருணாநிதியின் குடும்பத்தின் கோரப் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை கொஞ்சமாவது விடுவிப்பார், மேலும், பழைய தவறுகளை திருத்திக் கொள்வார் என்று நம்புவோமே! நம்பிக்கைதானே வாழ்க்கை!!

navani said...

கருணாநிதி எந்த அளவுக்கு இந்தத் தோல்விக்கு தகுதியானவரோ, அதே அளவுக்கு ஜெயலலிதா இந்த வெற்றிக்கு தகுதி அற்றவர்.

navani said...

அழகிரி போய் சசிகலா வருவார்

Corner Stone Real Estate said...

சூப்பர் அப்பு !

அவிய்ங்க ராசா said...

நன்றி நவனி, மலர், நன்றி கார்னர்,

CrazyBugger said...

Vidunga boss.. 5 years DMK, 5 years ADMK varrathu sagajam thaanae.. neenga mattum pona aatchiyilae jolly ah irunthinga, ipppo naanga irukka porom.
Its all in the game.

~Maduraimalli

CrazyBugger said...

unga vaalkai tharam yaerikittu irukkuillae.. riteunu vidunga boss... naanum bloggernu solla intha post ah..

Sundar said...

Super boss.. kalakkitinga ponga..election pathina oru nalla nadu nilayaana padhivu poturukinga..Keep it up boss.

KATHAL said...

pesama neenga josiyam parkkalam nanpare

Post a Comment