கௌதம்மேனம், ஏ.ஆர் ரகுமான் என்ற ஒரே காரணத்திற்காக “வி.தாண்டி வருவாயா” பார்த்தபோது “அட..இந்த புள்ள திருந்திருச்சு போல” என்று நினைத்தேன். ஆனால், இன்று வானம் படம் பார்த்தபோது, “திருந்தியது மட்டுமில்லை. பயபுள்ளைக்கு கண்டிப்பா டேலண்ட் இருக்கு..இப்படியே அடக்கி வாசிச்சா, கண்டிப்பா பெரிய ஆளா வருவார்” என்றே தோன்றியது. அதற்கு அவர் ஒன்றே ஒன்றை மட்டும் பண்ணினால் போதும்..நன்றாக தாம்பு கயிறு ஒன்றை எடுத்து, கையில் இறுக்க கட்டிக் கொண்டால் போதும். அடுத்து, இது போன்ற படங்களில் நடித்தால், அவர் அப்பா பேச்சையும் மீறி நன்றாக வருவார்.
வானம்..எதற்கு இந்த பேர் வைத்தார்கள் என்ற சந்தேகம், படத்தின் கிளைமாக்ஸ்சின் போது உணர முடிந்தது. ஐந்து கதாபத்திரங்கள், வெவ்வேறு சூழ்நிலைகளில் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வருகிறது. முதலில் சிம்பு, நான் ஏற்கனவே சொல்லியபடி, அவரும் சந்தானமும் அடிக்கும் கூத்து செம. கூட, நம்ம கேமிராமேன் கணேஷீம். அவர்கள் அடிக்கும் கூத்துகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. சிம்பு, சந்தானத்தோடு அடிக்கும் ரகளையாகட்டும், “என்ன வாழ்க்கைடா இது” என்று புலம்புவதாகட்டும், காதலியை ஏமாற்றுவதாகட்டும், பணத்தை திருடிவிட்டு, குற்ற உணர்ச்சியில் புழுங்கவதாகட்டும், அனைத்தையும் ரசித்து செய்திருக்கிறார். பயபுள்ள கண்டிப்பாக திருந்திட்டாருண்ணே..தைரியமா நம்பலாம். அப்படியே இந்த டாக்குடரு விசய் பயபுள்ளையும் திருந்திட்டா எம்புட்டு நல்லா இருக்கும்..
அடுத்து, பிரகாஷ்ராஜ். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், தன் மனைவி கர்ப்பம் கலையும்போது கதறும் கதறல் நெஞ்சை அடைக்கிறது. ஓவர் ஆக்டிங்க் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. தான் பார்த்து பார்த்து வளர்த்த கரு , தன் கண் முன்னால் ஒருநிமிடத்தில் கலையும்போது, ஒருவருக்கு அப்படித்தான் இருக்கும். அந்த நேரத்தில், கையை எடுத்து வாயை அடைத்துக்கொண்டு டீசண்டாகவா அழுவார். பிரகாஷ்ராஜின் அந்த நடிப்பு என்னை கவர்ந்தது. இயக்குநர் இரண்டு பக்க நியாயங்களையும் சரியாகவே சொல்லியிருக்கிறார். இஸ்லாமியனாக பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக, எல்லோரையும் தீவிரவாதியாக பார்க்கும் எண்ணத்தை செவிட்டில் அறைந்தாற்போல சொல்லியிருக்கிறார். ஒரு வாதத்திற்காக, “இஸ்மாயில்” என்ற பெயருடன் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துவிடுங்கள் பார்ப்போம்..யப்பா..நம் நாட்டில் மட்டும்தான், இஸ்லாமியனாக பிறந்தால் “நான் தீவிரவாதி இல்லை” என்று நெற்றியில் ஒட்டி அலைய வேண்டியிருக்கிறது..
சரண்யா, மற்றும் அந்த பெரியவர் கதாபத்திரம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. பணத்தை பறிகொடுத்து விட்டு அந்த பெரியவர் கதறும் கதறல், “எங்கயா..இவ்வளவு நாளும் இருந்தீங்க” என்று கேட்கத் தோணுகிறது. அவர்களை சென்னையில் ஏமாற்றும் மனுசர்க்ளை பார்க்கும்போது, “அடப்பாவிகளா..பணத்திற்காகத்தானடா எல்லாமே..போகும்போது அப்படி என்னத்தைதான் கொண்டு போகப்போறீங்க” என்று சட்டையைப் பிடித்து உலுக்கத்தோன்றுகிறது.
அனுஷ்கா..சும்மா ஊறுகாய் போல அல்லாமல், படத்திற்கு இன்னொரு பலம். பலர் நடிக்க தயங்கும் கதாபத்திரம். எப்போதும் கண்களில் ஒரு போதை, சரிந்து கொண்டே இருக்கும் சேலை, அலட்சியமான ஒரு பார்வை என்று, பின்னி எடுக்கிறார். “நான் வேணுமின்னா, படுக்கிறேன் சார்..என் பிரண்டை காப்பாத்துங்க சார்” என்று கெஞ்சும்போது,கண்முன் நிற்கிறார். அம்மணி, இதுமாதிரி படத்தை தேர்ந்தெடுத்து நடிங்க…
சற்று வீக்கான கதாபாத்திரமாக இருந்தாலும், கடைசி நிமிடங்களில் ஸ்கோர் அடிக்கிறார் ப்ரத். தயவு செய்து அந்த சின்ன தளபதி பட்டத்தை துறந்து, இது போல உருப்படியாக நடித்தால் போதும்..திரைஉலகில் நிலைக்கலாம். பஞ்ச் டயலாக் பேச நிறைய ஆளு இருக்காங்கப்பூ..
ஐந்து கதாபத்திரங்களுக்கு சரிசமமாக சந்தர்ப்பம் கொடுத்து நடிக்கவைத்ததில் இயக்குநரின் திறமை தெரிகிறது. குறிப்பாக, ஒரு கட்டத்தில், அனைத்து கதாபத்திரங்களும், ஒரே மாதிரி துன்பத்திற்குள்ளாவதை அழகாக கோர்த்து காண்பிக்கும்போது பிரமிக்கவைக்கிறார். இந்த மாதிரி திரைக்கதை அமைக்கும்போது, அதை பேலன்ஸ் செய்ய திறமை வேண்டும். அதை ஸ்டைலிசான மேக்கிங்கோடு திறம்பட செய்திருக்கிறார்.
அடுத்த பலம் யுவன்..”வானம்” என்று மெஸ்மரைஸ் செய்யும் ஒரு பாடலோடு ராஜாங்கத்தை ஆரம்பிக்கிறார். பல இடங்களில் பிண்ணனி இசையை அடக்கிவாசித்ததோடு, “எவண்டி உன்னைப் பெத்தான்” என்று துள்ளலிசையும் கொடுத்து கவர்கிறார்.
ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி படம் முடியும்போது தெரிகிறது.,அங்கெங்கு தெரியும் லாஜிக் மீறல்களையும் மறந்து..
16 comments:
தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html
உங்க விமர்சனம் படிச்ச பிறகு உண்மையிலே படம் நல்ல இருக்குமோ இன்னு தோன ஆரம்பிச்சிருச்சு!
-
வெங்கடேஷ்
good review boss
really good
the climax is very good
especially last half an hour
உங்கள் விமர்நனம் படித்த பிறகு பார்க்கத் தீர்மானம். நன்றி
இந்த உலகத்தில் நான் பயப்படுகிற ஒரே ஆள் சிம்பு தான் என்று என் கணவர் இந்த படத்திற்கு வர மறுத்து விட்டார். நாங்கள் மட்டும் போனோம். இனிய ஷாக்.வந்து என் கணவரை திட்டினோம்.
ok
//////////////////////////////
மதுரை said...
தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html
8 May 2011 1:37 AM
////////////////////////
ஏண்ணே..படம் நல்லாத்தானே இருந்துச்சு..
/////////////////////////////////
Anonymous said...
உங்க விமர்சனம் படிச்ச பிறகு உண்மையிலே படம் நல்ல இருக்குமோ இன்னு தோன ஆரம்பிச்சிருச்சு!
-
வெங்கடேஷ்
8 May 2011 2:03 AM
///////////////////////////////////////
நன்றி வெங்கடேஷ்..
///////////////////////////////
இரவு வானம் said...
good review boss
8 May 2011 3:50 AM
Prabhu Palaniappan said...
really good
the climax is very good
especially last half an hour
8 May 2011 7:13 AM
///////////////////////////////
நன்றி இரவு வானம்..பிரபு..
////////////////////////////////////
Dr.எம்.கே.முருகானந்தன் said...
உங்கள் விமர்நனம் படித்த பிறகு பார்க்கத் தீர்மானம். நன்றி
8 May 2011 10:00 AM
அமுதா கிருஷ்ணா said...
இந்த உலகத்தில் நான் பயப்படுகிற ஒரே ஆள் சிம்பு தான் என்று என் கணவர் இந்த படத்திற்கு வர மறுத்து விட்டார். நாங்கள் மட்டும் போனோம். இனிய ஷாக்.வந்து என் கணவரை திட்டினோம்.
8 May 2011 12:11 PM
mk said...
ok
8 May 2011 3:57 P
//////////////////////////////////////
நன்றி முருகானந்தம் சார், அமுதா..எம்கே..
ஒசாமா வுக்கு தொழுகை நடத்தும் நம் நாட்டு முஸ்லிம் களை என்ன செய்வது?
////////////////////////////////
Arun said...
ஒசாமா வுக்கு தொழுகை நடத்தும் நம் நாட்டு முஸ்லிம் களை என்ன செய்வது?
9 May 2011 2:59 AM
//////////////////////////////
மோடிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களோடு சேர்த்து சிறையில் அடைக்க வேண்டியதுதான்..
naan nenachen neenga solliteenga
ஒசாமா வுக்கு தொழுகை நடத்தும் நம் நாட்டு முஸ்லிம் களை என்ன செய்வது?//
onnum seyyaama irunthaale naatula paathi prachinai illai...
படத்தின் இசை மிகவும் அருமை நண்பரே... ஆனால் சில கழுதைகளுக்கு அந்த கற்பூர வாசனை தெரியவில்லை..
vaithee.co.cc
Post a Comment