Sunday, 3 October 2010

எந்திரனும் கருப்பாயி கிழவியும்

கருப்பாயி கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் ஏன் இப்படி இருக்கிறான். இவனுக்கு என்ன சொல்லி புரியவைப்பது. கன்னத்தில் கைவைத்து உக்கார்ந்து விட்டாள்.

“ஏ..என்ன கிழவி..இப்ப என்ன கப்பலா கவுந்து போச்சு..இப்படி கைவைத்து உக்கார்ந்து கிடக்க..” பக்கத்து வீட்டு ஜெயராசு

“வாங்கண்ணே..நீங்களாவது இந்த அநியாயத்தைக் கேட்ககூடாதா..”

“என்ன நடந்து போச்சுங்குறேன்..”

“இந்த பயபுள்ள வினோத்து..இப்படி இருக்கானே..நான் என்னத்த சொல்ல..ஏதோ ரசினி படம் ரீலீஸாமாம்..காலங்காத்தால 1 மணிக்கெல்லாம் கிளம்பி போயிட்டாங்குறேன்…”

“ஏ..எப்பே கிழவி..இப்ப எங்கிட்டு போனான்..படத்துக்குதானே போனான்..இம்புட்டு சலிச்சுக்குறேயே…”

“ஜெயராசண்ணே..எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லிப்பிட்டீக..உங்களுக்கே தெரியும்., அவனை நம்பிதான் வீட்டுல கஞ்சி குடிக்கிறோம். அவன் டெய்லி சம்பாதிச்சு வர்லைன்னா, வீட்டுல சோறு பொங்குமா..”

“ஏ..கிழவி..இதுக்குபோயி ஏன் மூக்கை சீந்துற..இப்ப என்ன நடந்துச்சு..இளவட்ட பசங்க..அப்படிதான் இருப்பாய்ங்க..அது என்ன நம்ம காலமா..இந்த காலபுள்ளைங்களாம், அப்படிதாங்குறேன்..இந்தா..என் வீட்டுல இருக்கான் பாரு. முந்தாநேத்தே கிளம்பிட்டான்..அட கடவுட் வைக்கிறதென்ன..சீரியல் செட்டு போடுறதென்ன..பம்பரமா சுத்துறாங்குறேன்..நம்ம சொல்லி எங்க கேக்க போறாயிங்க..அந்த காலமெல்லாம் வேறங்குறேன்..”

“அட நீங்க வேறண்ணே..நான் என்ன படம் பார்க்கவேணாமுன்னு சொல்லுறேன்..நல்லா வேளைவெட்டியை முடிச்சுபுட்டு, ஒரு கஞ்சியை கிஞ்சியை குடிச்சுப்புட்டு மெதுவா தியேட்டருக்கு போயி பார்க்கட்டும்..நான் என்ன கட்டியா வைக்கிறேன்..அதென்ன முத நாளிலே பார்க்கணும்..போன தடவை இப்படித்தான், கூட்ட நெரிசிலலே நின்னு, டிக்கெட் வாங்குறோமுன்னு போலிசு அடிச்சதுல்ல, முட்டி பேந்து வந்தப்ப, என் உசிரே போயிடுச்சு தெர்யுமாண்ணே..பயபுள்ள தூக்கத்துல வலிதாங்கம “யம்மா, யம்மா” கத்துனதுல..ஆத்தி என் நெஞ்சு கொலயே வெடிச்சுறும் போல இருந்துச்சு..பெத்த வயிறுண்ணே…”

“ஏ..யப்பே கிழவி..ஆ, ஊ ண்ணா அழுதுருவியே..இப்ப உனக்கென்ன குறைச்சலுங்குறேன்..நல்லாதானே உன் புள்ள பார்த்துக்குறான்..”

“கஷ்டமா இருக்குண்ணே..ஒரு டிக்கெட்டு ஆயிரம் ரூபாய்ம்ணே..புள்ள பாவம், மில்லுல ராத்திரி, பகலும் செத்த பாடா பட்டு, ஒரு வாரமா சம்பாதிச்ச காசுண்ணே..அந்த ஆயிரம் ரூபாயை சம்பாதிக்குறதுக்குள்ள, அவன் படுற பாடு இருக்கே..தெய்வம் சொல்லி மாளாதுண்ணே..ஆத்தி..ஒரு நிமிசத்துல செலவழிச்சிப்புட்டாண்ணே..ஏண்ணே, ஒரு டிக்கெட்டு ஒரு அம்பது ரூபா வந்ததும் போகக்கூடாது..”

“ஓய் கிழவி..நீ இன்னும் அந்த காலத்துல இருக்கியே..புள்ளைங்கள அதுக பாதையில விட்டுப்புடணும்..சும்மா கயிற போட்டு இழுக்க கூடாது..சரி..சரி..அவளுக்கு உடம்பு முடியலையாம்..காபி தண்ணி கேட்டா..முக்கு கடைக்கு வரைக்கும் போயிட்டு வர்றேன்..”

“தப்பா எடுத்துக்காதீங்கப்பூ..அவன் வேற வீட்டுல இல்லியா..சோறு பொங்கணும்..அரிசி தீர்ந்து போச்சு..ஒரு எட்டு வாங்கிவரலாமுன்னா, இந்த வெயிலுல நடக்க முடியலை..கிறுகிறுன்னு வருது..ஒரு குவளை அரிசி கொடுக்கீகளா..பய வந்தவுடனே, கொண்டாற சொல்லுறேன்..”

“ஏ ஆத்தா..இதுக்கு போயி இம்புட்டு தயங்குற.நீ போயி குவளைய எடுத்துட்டு வா..”

கருப்பாயி கிழவி, எழுந்து வீட்டுக்குள் போனாள். டி.வியில் சத்தமாக ஓடிக் கொண்டிருந்தது..

“கமான்…கெட் ரெடி போக்ஸ்…”

40 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ராசாண்ணே.. சரியாச் சொன்னீங்க..

ப.கந்தசாமி said...

உலகம் இப்படித்தான் இருக்கு, என்னத்தைச் சொல்ல?

ரோகிணிசிவா said...

reality strikes

Anonymous said...

நல்ல முயற்சி...ரஜினி படம் வரும்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா? கருப்பாயி போன்ற கிழவிகளுக்கு ரஜினி படம் வந்தால்தான் கஸ்டம் போல-;))

mvalarpirai said...

இது தான் எதார்த்தம் ! ஆனா எப்படி திருத்துவதுதான் தெரியலை.
.பாலை ஊத்துறானுங்க தேங்காய் உடைக்கிறானுங்க ! முடியலை
டிவில வேற இதை பெருமையா காட்டுறானுங்க ! என்னமோ போங்க !

பொன் மாலை பொழுது said...

யதார்த்தம்!

பொன் மாலை பொழுது said...

அந்த ஆத்தாவின் படம் எளிமை, Homely. இல்லையா?!

இவன் சிவன் said...

ராசான்னே வழக்கம்போல அருமை....

நசரேயன் said...

எந்திரன் படம் பார்க்கலைனா இந்திய பொருளாதாரம் உயர்ந்து வல்லரசு ஆகி இருக்குமோ?

Prathap Kumar S. said...

ராசாண்ணே டாப்பு... பாட்டியோட போட்டோ செம பொருத்தம்...

பார்த்துண்ணே.... ரசிக கண்மணிகள் பொங்கி எழுந்து அப்புறம் உங்களுக்கு கட்டவுட்டு கட்டிட போறாங்க...:)))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
ராசாண்ணே.. சரியாச் சொன்னீங்க..
2 October 2010 11:01 PM
///////////////////////////////
நன்றி செந்தில்

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
DrPKandaswamyPhD said...
உலகம் இப்படித்தான் இருக்கு, என்னத்தைச் சொல்ல?
2 October 2010 11:25 PM
//////////////////////////
வருகைக்கு நன்றி சார்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ரோகிணிசிவா said...
reality strikes
2 October 2010 11:32 PM
////////////////////////
நன்றி சிவா..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
ஆர்.கே.சதீஷ்குமார் said...
நல்ல முயற்சி...ரஜினி படம் வரும்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா? கருப்பாயி போன்ற கிழவிகளுக்கு ரஜினி படம் வந்தால்தான் கஸ்டம் போல-;))
2 October 2010 11:44 PM
/////////////////////////
கஷ்டம் ரஜினி படத்தினால் அல்ல..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
mvalarpirai said...
இது தான் எதார்த்தம் ! ஆனா எப்படி திருத்துவதுதான் தெரியலை.
.பாலை ஊத்துறானுங்க தேங்காய் உடைக்கிறானுங்க ! முடியலை
டிவில வேற இதை பெருமையா காட்டுறானுங்க ! என்னமோ போங்க !
3 October 2010 12:49 AM
////////////////////
கொஞ்ச நாளைக்கு வெளியே போயிறாதீங்க..ஆட்டோ எச்சரிக்கை..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
கக்கு - மாணிக்கம் said...
யதார்த்தம்!
3 October 2010 1:48 AM
கக்கு - மாணிக்கம் said...
அந்த ஆத்தாவின் படம் எளிமை, Homely. இல்லையா?!
3 October 2010 1:49 AM
//////////////////////////
நன்றி மாணிக்கம்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
இவன் சிவன் said...
ராசான்னே வழக்கம்போல அருமை....
3 October 2010 4:14 AM
/////////////////////////////
நன்றி சிவன்..

அவிய்ங்க ராசா said...

///////////////////
நசரேயன் said...
எந்திரன் படம் பார்க்கலைனா இந்திய பொருளாதாரம் உயர்ந்து வல்லரசு ஆகி இருக்குமோ?
3 October 2010 5:58 AM
///////////////////
இந்தியா வ்ல்லரசு ஆகுமோ இல்லையோ..பல வீட்டுல கருப்பாயிகிழவிகள் உருவாகி இருப்பார்கள்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
ராசாண்ணே டாப்பு... பாட்டியோட போட்டோ செம பொருத்தம்...

பார்த்துண்ணே.... ரசிக கண்மணிகள் பொங்கி எழுந்து அப்புறம் உங்களுக்கு கட்டவுட்டு கட்டிட போறாங்க...:)))
3 October 2010 6:02 AM
///////////////////

ஆனா, என்ன ஆச்சர்யம்னா..இன்னும் ஒரு கெட்டவார்த்தை கமண்ட் கூட வரலை..பார்ப்போம்..)))

Anonymous said...

Namma payapullainga... sontha veedu pathikittu earinjalum athula irunthu kolliya eduthu.. thalaivaruku 10000wala koluthuvanunga... vidunga rasa anne

சேலம் தேவா said...

படம் பாக்க போயிருப்பாங்கண்ணே..!!
வருவாய்ங்க..!!

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
Namma payapullainga... sontha veedu pathikittu earinjalum athula irunthu kolliya eduthu.. thalaivaruku 10000wala koluthuvanunga... vidunga rasa anne
3 October 2010 7:18 AM
//////////////////////////
:)))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
சேலம் தேவா said...
படம் பாக்க போயிருப்பாங்கண்ணே..!!
வருவாய்ங்க..!!
3 October 2010 9:42 AM
///////////////////////
பத்திரமா வந்தா சந்தோசம்தாண்ணே..

taaru said...

எது வந்தாலும் பாத்துகிருவோம்ண்ணே!!! நீ நடத்து... கஜினி மாதிரி படை எடிதுக்கினே இருக்க வாழ்த்துக்கள்... :)

Prathap Kumar S. said...

அவிய்ங்க ராசா said...
//ஆனா, என்ன ஆச்சர்யம்னா..இன்னும் ஒரு கெட்டவார்த்தை கமண்ட் கூட வரலை..பார்ப்போம்..))) ///

//சேலம் தேவா said...
படம் பாக்க போயிருப்பாங்கண்ணே..!!
வருவாய்ங்க..!! //

hahahahaha
அப்போ கண்டிப்பா வருவாங்கன்னு சொல்றீங்க...ராசாண்ணே கமண்ட் மாடரேஷன் போட்ருங்கோ... ஓடுங்க ஓடுங்க அது வந்துட்டு இருக்கு... ரொம்ப கோபமா இருக்கு...:))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
taaru said...
எது வந்தாலும் பாத்துகிருவோம்ண்ணே!!! நீ நடத்து... கஜினி மாதிரி படை எடிதுக்கினே இருக்க வாழ்த்துக்கள்... :)
3 October 2010 8:56 PM
////////////////////////
எங்கெங்கே வீங்கி இருக்குதுண்ணா..)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
அவிய்ங்க ராசா said...
//ஆனா, என்ன ஆச்சர்யம்னா..இன்னும் ஒரு கெட்டவார்த்தை கமண்ட் கூட வரலை..பார்ப்போம்..))) ///

//சேலம் தேவா said...
படம் பாக்க போயிருப்பாங்கண்ணே..!!
வருவாய்ங்க..!! //

hahahahaha
அப்போ கண்டிப்பா வருவாங்கன்னு சொல்றீங்க...ராசாண்ணே கமண்ட் மாடரேஷன் போட்ருங்கோ... ஓடுங்க ஓடுங்க அது வந்துட்டு இருக்கு... ரொம்ப கோபமா இருக்கு...:))
3 October 2010 9:04 PM
//////////////////////////////
ஆஹா....போன் போட்டு கூப்பிடுவீங்க போலிருக்கே..இந்த கைபிள்ளைகூட விளயாடுறதே உங்களுக்கு வேலை ஆகிப்போச்சு..)))

Anonymous said...

பெத்தவங்கள ஊருல ஆநாதையா விட்டுட்டு அமெரிக்காவுல வெள்ளகாரனுங்க காலை நக்கிட்டு இருக்குறவங்களை விட, ஊருக்குல்ல வயசான கிழவியை வச்சு பாக்குற வினோத்து எவ்வளவோ மேல்

Arun said...

பயபடதிங்க நான் வந்துட்டேன்.. :D இனிமேல் நோ bad வோர்ட்ஸ்.. (டாட்)
ராசா மேமேமேமேமே...... :D

என் கேள்வி -> இது போல் fanatics fan crazy for ஹாலிவுட் actors n singers கு மேலை நாடுகளில் நடப்பது இல்லையா?

இந்த அடித்தட்டு நாயகர்கள் தலைவனுக்கு கட் அவுட் வைகிறது ரஜினி னால் ஏறுபட்டது அல்ல. MGR,சிவாஜி,கலைஞர் காலத்தில் இருந்து இருகிறது.. ரஜினியை குற்றம் சொல்வது ஏறுபுடையதாக இல்லை.. (டாட்)


ரோபோ Rules :D
-Arun

(friday n saturday busy watching enthiran athan comments podda mudila :D )

Unknown said...

Very Nice Post.

Oru Super Star movie'kku 2 varusham kazhichu avaroda fans yetho celebrate panranga. Inikku vantha chinna chinna star pasangalukku avanga fans seiyyum pothu, Rajinikku seiyya koodaatha. Naatula vela vaasi vera yeri pochu. Illana ticket 150ku blackla kedaikaatha enna....:)

மதுரைவீரன் said...

அருமையான பதிவு .. நெஞ்ச தொட்டுடீங்க

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
sathish said...
பெத்தவங்கள ஊருல ஆநாதையா விட்டுட்டு அமெரிக்காவுல வெள்ளகாரனுங்க காலை நக்கிட்டு இருக்குறவங்களை விட, ஊருக்குல்ல வயசான கிழவியை வச்சு பாக்குற வினோத்து எவ்வளவோ மேல்
3 October 2010 10:59 PM
////////////////////////////////////
எவ்வளவு மேல்...?அம்மாவை பட்டினி போட்டு படத்த்க்கு போகும் அளவுக்கா???

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Arun said...
பயபடதிங்க நான் வந்துட்டேன்.. :D இனிமேல் நோ bad வோர்ட்ஸ்.. (டாட்)
ராசா மேமேமேமேமே...... :D

என் கேள்வி -> இது போல் fanatics fan crazy for ஹாலிவுட் actors n singers கு மேலை நாடுகளில் நடப்பது இல்லையா?

இந்த அடித்தட்டு நாயகர்கள் தலைவனுக்கு கட் அவுட் வைகிறது ரஜினி னால் ஏறுபட்டது அல்ல. MGR,சிவாஜி,கலைஞர் காலத்தில் இருந்து இருகிறது.. ரஜினியை குற்றம் சொல்வது ஏறுபுடையதாக இல்லை.. (டாட்)


ரோபோ Rules :D
-Arun

(friday n saturday busy watching enthiran athan comments podda mudila :D )
3 October 2010 11:50 PM
//////////////////////
நீங்கள் சொன்ன கருத்தையெல்லாம் விடுங்கள்..முதல்முறையாக என்னை நாயே, பேயே என்று திட்டாமல், மரியாதையாக கமெண்ட் செய்திருக்கிறீர்கள். அதற்கே எனக்கு மகிழ்ச்சி..இது போன்ற மாற்றங்கள் நடக்கும்போது, நான் ஏன் கமெண்ட் மாடரஷேன் வைக்கப்போகிறேன்..

சரி..உங்கள் கருத்துக்கு வருவோம்.ஹாலிவூட் நடிகர்களுக்கு வைத்தால் என்ன, சுள்ளான் நடிகர்களுக்கு வைத்தால் என்ன, கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு போகும் பட்சத்தில் தப்பு, தப்புதான்..

ஒருவேண்டுகோள்..தொடர்ந்து இதுபோன்று மரியாதையாகவே எழுதுங்களேன். நிறைய ஆரோக்கியமான விவாதங்கள் பண்ணலாமே..நம்பிக்கையுடன்...

அவிய்ங்க ராசா said...

////////////////////
Bala said...
Very Nice Post.

Oru Super Star movie'kku 2 varusham kazhichu avaroda fans yetho celebrate panranga. Inikku vantha chinna chinna star pasangalukku avanga fans seiyyum pothu, Rajinikku seiyya koodaatha. Naatula vela vaasi vera yeri pochu. Illana ticket 150ku blackla kedaikaatha enna....:)
4 October 2010 9:52 AM
//////////////////////////
அண்ணே..சுள்ளான் நடிகர்களுக்கு செய்தால் என்ன, ரஜினிக்கு செய்தால் என்ன..கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு போகும்பட்சத்தில் தவறுதான்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
சதீஷ் said...
அருமையான பதிவு .. நெஞ்ச தொட்டுடீங்க
4 October 2010 2:07 PM
/////////////////////////////
நன்றி சதிஷ்..

Arun said...

நன்றி நண்பரே.. ரஜினி ரசிகன் புண்படதவும் பண்படவும் தெரியும்..
ரஜினி/எந்திரன் பற்றிய உங்கள் பதிவுகள் என்னை மிகவும் புண்படுத்தி விட்டன.. அதை தான் திருப்பி கொடுத்தேன் :D

நான் முன்னரே சொன்னது போல் நான் இரண்டு வருஷமாக தினமும் படிக்கும் டாப் 10 பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று.. உங்க பதிவிலே வர்றது என்னால் ஏத்துக்க முடில..

-Arun

Arun said...

விவாததுக்கு வருவோம்..

/// கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு போகும் பட்சத்தில் தப்பு, தப்புதான்.. //

தண்ணி அடிக்க தம் அடிக்க எவளோ செலவு நம்மில் எவளோ பேர் பண்றோம்.. அது தப்பான உடல் நலம் கேடான செலவு நு தெரிஞ்சிதான் பண்றோம் .. ஏன்? ப்ரிண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரு entertainment /tension relief நு சொல்றோம் அது போலதான் இந்த செலவும் அவங்களுக்கு ஒரு entertainment .. இந்த அடித்தட்டு நாயகர்கள் செலவும் அவங்க ஏரியால பெரிய ஆளு நு இமேஜ் buildup கு கூட பண்ணுவாங்க

சில தப்பான நடைமுறை விசயங்களை நம்ம ஏதும் பண்ண முடியாது ராசா.. கட் அவுட் கு செலவு பண்ணாத நு தடுத்த அவங்க டாஸ்மாக் கு போவாங்க :D simple (டாட்)

-Arun

santosh said...

Nan oru software engg than *** enaku thukkam varalya 4 am show than parthaen... kasu illai nalum atharuku ulachu parpan... yena 1000 matham vangum pothu kuda ulachi parthu irukan, ;) rasigarluku esp thevira rasigargaluku he he he neenga sonna mathiri ellam 1000 illai entha natula iruka mandrathula kedaichidum FREE than yena Cutout ku ellarum sernthu potu irupom, kasu illai adjust panikuvanga pasanga

Eppa ntha software potti thatti blog podurvanga thollai mudiyala da sami pakathula utkanthu partha mathiri eluthavendiyathu

karupai kelavikita kettu paru, avan rajini padathuku 1 maniku 1000 2 varusathuku oru vatti poti vara, pakathula vellaiyai kelvi vutula daily 50 rubukaiku kudichitu vanthuduran...

2 yrs la 1000 better boss ;) ungala mathiri mokkaiya ideal a eluthuna eppadi than elutha mudiyum

Goyyala Padam rocks 7 vatti parthaen ...

Avatar 3 Vatti parthen...

Eppa Nalla padam vantha parpanga... 15 DVD la parthutu pesura pasangalae enna seiyva...

Arun Machan padam rocks !:-)

Ellathukum orae dialogue maeeeeeeeeeeee

dot

santosh said...

/நான் முன்னரே சொன்னது போல் நான் இரண்டு வருஷமாக தினமும் படிக்கும் டாப் 10 பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று.. உங்க பதிவிலே வர்றது என்னால் ஏத்துக்க முடில..

-Arun /

Valimozhikiraen nan padikira ore pathivu nee than rasa ;) unnoda nallavum palaigi irukaen entha rajini post la than sema kandu...

Close friend a iruntha adichitu than pesiyae irupaen

Sari vidu evan sonan enna padam summa sarrrrrrrrrrrr nu iruku enga area la 3 varusama padame parkathavanga ellam pulla kuittioda parthutu santhosama varanga

Arun said...

3rd Time, I saw Robo in Inox theatre, Bangalore. I saw lot of elder people coming with their children. :-) One of the guy sitting besides me and my wife was explaining to his old mom each scene of the movie. That was very touching to see how much care they took about their parents till the movie ended. I don't get to see these kind of scenarios for any ACTOR'S Movie in this world. Come on Guys, Rajni Rocks..
Even I saw lot of small kids of 2-5 years old drinking pepsi and clapping hands for Rajni..
Cost of ticket is 400rs even though lot of families came to watch.. tat was very exciting to see people spending time with their family for Rajni.

Spending for Rajni has returns(fun, excitement n whole family get-together).

Post a Comment