Sunday, 10 October, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார அறிவிப்பு

பொதுமக்களுக்கு துக்ககரமான ஒரு செய்தி. இனிவரும் காலங்களில் மிக்சர் ஜூஸ் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் தவறாமல் வரும். அதனால் பொதுமக்கள், காலையில் பல்விளக்கிவிட்டு, சுத்தம் பத்தமாக, பக்தியோடு அருந்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதையெல்லாம் செய்யாமல் அவசரமாக குடிப்பவர்களுக்கு வரும், வயிற்று உபாதைகளுக்கு, கண்டிப்பாக கம்பெனி பொறுப்பேற்று கொள்ளாது என்று ஆணித்தரமாக சொல்லி கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

இந்த வார துக்கம்

எஸ்.எஸ் சந்திரன். இவருடைய டைமிங்க் சென்ஸ் யாருக்கும் வராத ஒன்று. டைமிங்காக இவர் அடிக்கும் கமெண்டுகள், சிலநேரம் இரட்டை அர்த்தமாக இருந்தாலும் பலநேரம் சிரிக்க வைத்தது. போரடித்துக் கொண்டிருந்த விஜய் டிவியின் “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியை, தன்னுடைய நகைச்சுவையால் இன்னும் கலகலப்பாக்கியவர். அவருடைய கடைசி நிகழ்ச்சியை பார்க்க சங்கடமாக இருந்தது. திரையுலகத்திற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கடந்த ஒரு மாதமாக தொடர் இறப்புகள். மாரடைப்புக்கு பகல், இரவு, ஆண், பெண், நல்லவர், கெட்டவர் பார்ப்பதில்லை. ஒருநிமிடத்தில் கனவுகளை மறக்கடித்துவிடுகிறது. நீங்கள் இதுவரை ஜிம்முக்கு செல்லாதவராக இருந்தால், கண்டிப்பாக இனிமேல் செல்ல ஆரம்பியுங்கள். உடம்பு கொஞ்சம் வெயிட் போடுவதாக எண்ண ஆரம்பித்தால், கண்டிப்பாக வாயைக் கட்டுங்கள். அல்லது ஜிம்மிற்க்கு சென்று, நடைபயிற்சி செய்யுங்கள். அப்படியும் முடியவில்லையென்றால், காலையில் பிகர்களை பார்ப்பதற்காகவது பார்க் சென்று நடங்கள். மனது குதூகலமாவதுடன் உடம்பும் சரியாகும். குடிப்பழக்கம் இருந்தால், முடிந்தவரை நிறுத்த முயற்சி செய்யுங்கள். என்னடா பெரிய இவன் மாதிரி அறிவுரை செய்கிறான் என்று எண்ணினாலும் சரி, பரவாயில்லை, படிக்கும் ஒருவர் முயற்சி செய்தால் எனக்கு சந்தோசம். ஏனென்றால் திட்டுக்கள் வாங்கி எனக்கு மறத்து போய் விட்டது..

இந்த வார பாடல்

சாயங்கால வேளைகளில் இரண்டு பாடல்களை கேட்க முடிந்தது. யார் இசையமைப்பாளர் என்று தெரியவில்லை. யாருக்கும் அவ்வளவு பரிட்சயமும் இல்லை. ஆனால் என்னவோ தெரியவில்லை, கேட்டவுடன் ஈர்க்கிறது. இந்த நாளில் மட்டும் நாலு தடவை கேட்டுவிட்டேன். முடிந்தாலும் நீங்களும் கேட்கலாமே..

சிம்பு அடக்க ஒடுக்கமாக நடித்த முதல் படமான தொட்டிஜெயா படத்தில் வரும் இந்த பாடல்

http://www.youtube.com/watch?v=DLsZ3RPCYV8&feature=related

நடிகர் விக்னேஷ் ஓவர் ஆக்டிங்க் செய்த சூரி படத்தில் வரும் இந்த பாடல்

http://www.youtube.com/watch?v=rNZcQmfzoYU&p=FC2A427716D4D4D0&playnext=1&index=39

கற்க கசடற படத்தில் வரும் இந்த பாடல்

http://www.youtube.com/watch?v=TC3QjPkI76c

பாடலில் நடித்த விஜய் தம்பி விக்ராந்தை பார்த்தபோது, என் நண்பன் அடித்த கமெண்ட் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

“என்னடா காலரா வந்த விஜய் மாதிரி இருக்கான்…”

இந்த வார திரைப்படம்

படம் பார்த்தால் ரிலாக்ஸாக இருக்க வேண்டும், அல்லது சிரிக்கவேண்டும், அழவைக்கவேண்டும், அல்லது கடுப்பேற்றாவது வேண்டும், தலையை பிய்த்துக் கொள்ளவைக்கவைத்தால் எப்படி இருக்கும், அப்படித்தான் ஒரு படம் பார்த்தேன். படம் பெயர் “தி பாக்ஸ்”. தினமும் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு குடும்பத்திற்கு நள்ளிரவில் ஒரு பார்சல் கிப்டாக வருகிறது. குழம்பி போகிறார்கள். பார்சலை திறந்து பார்த்தால் ஒரு பாக்ஸ் ஒரு சின்ன பட்டனோடு. அடுத்த நாளில் ஒரு பெரியவர் வருகிறார். அவர் இரண்டு ஆப்சன் கொடுக்கிறார், ஒன்று அந்த பாக்ஸை திருப்பி கொடுத்துவிடலாம். அல்லது பட்டனை தட்டினால் இரண்டு நடக்கும், அவர்களுக்கு 1 மில்லியன் டாலர் கொடுப்பார், ஆனால் அவருக்கு தெரியாத ஒருவர் அன்று இறப்பார். நீங்கள் என்ன செய்வீர்கள், எவனோ ஒருத்தன் தானே சாகிறான், இருக்கட்டுமே என்று பட்டனை அழுத்துவீர்களா. அழுத்தினால் யாரோ இருத்தர் இறக்கிறார். ஆனால் நாட் என்ன தெரியுமா, இறந்தவரிடம் அதே பாக்ஸ் ஒன்று இருந்திருகிறது. எப்போது உங்கள் சாவு. இப்பொழுது கெஸ் பண்ணுங்கள் பார்ப்போம், முடிந்தால் உங்கள் கெஸ்ஸை கமெண்டுங்களேன்.

இந்த வார பதிவு

இந்த பதிவு இளைஞர்களுக்கு செய்த சமூக சேவையை பாராட்டமல் இருக்கமுடியவில்லை. படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை. சி.பி செந்தில் குமாரின் இந்த பதிவு கலக்கல்.

http://adrasaka.blogspot.com/2010/10/18.html

விசாபக்கங்களின் எந்திரனைப் பற்றிய இந்த பதிவு

http://writervisa.blogspot.com/2010/10/blog-post_1380.html

9 comments:

நாஞ்சில் பிரதாப் said...

//என்னடா காலரா வந்த விஜய் மாதிரி இருக்கான்…”//

ஹஹஹ ராசாண்ணே சிரிப்பை அடக்க முடில...


தி பாக்ஸ் படத்தை பார்த்து ரத்தக்கண்ணீர் வடிச்சேன்...நீங்களுமா??
இதுக்கு ஒரு விமர்சனம் கூட எழுதி உலகமக்களை காப்பாத்திருக்கேன்...நீங்க அதை படிக்காததனால மாட்டிகிட்டீங்க... அது உங்க தப்பு:))

எஸ்.கே said...

எஸ்.எஸ். சந்திரன் அவர்கள் மிகவும் நல்ல நகைச்சுவை நடிகர்.
தொகுப்பு நன்றாகவே இருந்தது!

Viji said...

ஹலோ
என்னங்க தி பாக்ஸ் பத்தி எப்படி சொலிடீங்க.என்னக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.மனித மனச பத்தி கிளியரா சொல்லி IRUKAANGA.
மனஷங்க எவ்ளோ பேராசை பாருங்க.காசுனா உயிர் கூட பெருசு இல்ல இவங்களுக்கு.
இந்த மாதிரி குழப்பமான படங்கள் நெறைய இருக்குங்க.ஷுட்டெர் island ,dejavu ,premonition நு நெறைய படம்.பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருக்குனு?

அவிய்ங்க ராசா said...

/////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
//என்னடா காலரா வந்த விஜய் மாதிரி இருக்கான்…”//

ஹஹஹ ராசாண்ணே சிரிப்பை அடக்க முடில...


தி பாக்ஸ் படத்தை பார்த்து ரத்தக்கண்ணீர் வடிச்சேன்...நீங்களுமா??
இதுக்கு ஒரு விமர்சனம் கூட எழுதி உலகமக்களை காப்பாத்திருக்கேன்...நீங்க அதை படிக்காததனால மாட்டிகிட்டீங்க... அது உங்க தப்பு:))
10 October 2010 11:12 PM
///////////////////////
இப்பதாங்க பார்த்தேன். ஒருநாளைக்கு முன்னாடி படிச்சிருந்தா கூட, முடியை பிச்சிக்காம தப்பிச்சிருப்பேன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
எஸ்.கே said...
எஸ்.எஸ். சந்திரன் அவர்கள் மிகவும் நல்ல நகைச்சுவை நடிகர்.
தொகுப்பு நன்றாகவே இருந்தது!
11 October 2010 3:12 AM
//////////////////////////////
நன்றி எஸ்கே..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
Viji said...
ஹலோ
என்னங்க தி பாக்ஸ் பத்தி எப்படி சொலிடீங்க.என்னக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.மனித மனச பத்தி கிளியரா சொல்லி IRUKAANGA.
மனஷங்க எவ்ளோ பேராசை பாருங்க.காசுனா உயிர் கூட பெருசு இல்ல இவங்களுக்கு.
இந்த மாதிரி குழப்பமான படங்கள் நெறைய இருக்குங்க.ஷுட்டெர் island ,dejavu ,premonition நு நெறைய படம்.பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருக்குனு?
11 October 2010 1:26 PM
////////////////////////
கிளைமாக்ஸ் முன்னால் வரைக்கும் திரில்லராக இருந்தது என்பதை ஒத்துக் கொள்ளதான் வேண்டும். டேஜாவூ பார்த்து ஒருநாள் முழுக்க தலைசுத்தி கிடந்தேன்..மற்ற படங்களை கண்டிப்பாக பார்க்கிறேன்..

unmai said...

இனிவரும் காலங்களில் மிக்சர் ஜூஸ் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் தவறாமல் வரும்
// yaendha sirrae... pirabala pathivar aayittingalo?

Viji said...

டேஜாவூ பார்த்து ஒருநாள் முழுக்க தலைசுத்தி கிடந்தேன்//////////

Super comment.Ennakum inniku varaikum puriyala.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஇனிவரும் காலங்களில் மிக்சர் ஜூஸ் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் தவறாமல் வரும்ஃஃஃஃ
அட வார நாள அப்ப குடிக்கக் கொஞ்சம் பிந்தப் போகிறது...

Post a Comment