Friday, 15 October, 2010

பதிவுலக சண்டை

கோவாலு எப்ப பார்த்தாலும் சுடுதண்ணிய காலுல ஊத்துன மாதிரியே இருப்பாண்ணே. அன்னைக்கு ரொம்ப ஆவேசமா வந்தான். அவன் நார்மலா வந்தாவே நான் கொல்லப்புறம் போயிருவேன். இதுல கோவமா வந்தா, ஓடியே போயிருவேன். அன்னைக்கு ஓடுறதுக்கு முயற்சி பண்ண, தடுமாறி கீழே விழுந்ததால மாட்டிகிட்டேன்.

“ராசா..உனக்கு சமூக பொறுப்புணர்ச்சியே இல்லையா..”

“ஏண்டா கோவாலு..ராஜபக்சே காமன்வெல்த்துக்கு வர்றத எதிர்த்து எதுவும் இங்க ஸ்ட்ரைக் பண்ணனுமா..”

“போடாங்க..பதிவுலகத்துல என்னமா சண்டை நடந்துக்கிட்டுருக்கு..நீ ஒரு வார்த்தை..”

“நிறுத்து..நீ என்ன சொல்லவர்றேன்னு தெரியுது..”

“என்ன..”

“நிறுத்துங்க..எல்லாத்தையும் நிறுத்துங்க..சண்டை போடாதிங்க..சமாதானமா போங்கன்னு பம்பாய் பட டயாலாக்கு தானே..”

“ஆமா..எப்படிடா கரெக்டா சொன்ன..”

“பின்ன..நம்மளால அது மட்டும்தானே பண்ணமுடியும்..எப்படியும் என்ன சொன்னாலும் ஒரு பயபுள்ளையும் கேக்க போறதில்லை….அதனால பேசாம இருந்துக்குறது உசிருக்கு பாதுகாப்பு..ஏற்கனவே எந்திரன் பத்தி எழுதின பதிவால, ரெண்டு பேரு மீனம்பாக்கத்துல, கையில கத்தியோட, என் போட்டாவை வைச்சு சுத்திக்கிட்டு இருக்காய்ங்களாம். கேட்ட மாத்திரத்துலயே “அமெரிக்கா என் தாய்நாடு..அமெரிக்க மக்கள் எல்லாரும் என் உடன்பிறந்தவர்கள்” ன்னு வாய் ஆட்டோமேட்டிக்கா உளறுது.. இதுல அறிவுரை வேறயா..”

“சரிடா ராசா..அதுதான் பதிவர் இமெயில் குழுமத்துல இருக்கியே..ஒரு இமெயில் எழுதலாமே..”

“கோவாலு., கடந்த ஒரு மாசமா 2000 மெயில் இந்த சண்டை விசயமா மட்டும் வந்து இருக்கு..அதெல்லாம் இன்னும் படிக்காம இருக்கு. அதை படிச்சு முடிச்சிட்டு கருத்து சொல்றதுக்குள்ள, சண்டை போட்டவயிங்க சமாதனம் ஆகி பதிவர் சந்திப்புல வந்து காபி சாப்பிட்டிருக்குவாயிங்க..எதுக்கு இந்த வேண்டாத வேலை..”

“சரிடா..எதுக்கு அதெல்லாம் படிக்கிற..சும்மா ஒரு புதுமெயில் கிரியேட் பண்ணி..”சண்டை போடாதிங்கப்பா” ன்னு பொதுவா சொன்னா, சூப்பரா இருக்குமுல்ல..”

“எங்கிட்டு..ஒரு மெயில் டைப்பண்றதுக்குள்ள நாலு மெயில் “டே..அடங்குடா..நீதாண்டா..போடாங்கொய்யால..” இப்படின்னு கண்டினியூஸா வந்து இன்டெர்நெட்டையே கன்பியூஸ் பண்ணுது. நான் என்ன மெயில் டைப் பண்றேன்னு எனக்கே மறந்துடுது..”

“அடப்பாவி ராசா..உனக்கு பிரபல பதிவர் ஆகணுமுன்னு ஆசை இருக்கா இல்லையா..”

“ம்..அது வந்து..”

“அப்ப..இடையில புகுந்து யாரையாவது திட்டி குழுமத்துக்கு ஒரு மெயில் அனுப்பு..யாரை திட்டுறதுன்னு கூட சொல்ல வேண்டாம்..உதாரணாம..”யோவ்..டப்பா…ங்கொக்காமக்கா..ஜந்து..” அப்படின்னு கலந்து கட்டி எழுது..நடுநடுவுல “சாவுங்கடா..நாயே..பேயே” ன்னுலாம் சேர்த்துக்கலாம்..”

“கோவாலு.,.உண்மையிலயேயா சொல்லுறா..இப்படியெல்லாம் எழுதுனா நான் பிரபலபதிவர் ஆகிடுவேனா..”

“சான்ஸ் நிறைய இருக்கு,.முதல்ல உன் மெயில பார்க்குறவயிங்க, யாருடா இவன், யாரைத் திட்டுறான்னு, இவன் எங்கிட்டு நடுவுல புகுந்தான்னு மண்டைய பிச்சிக்குருவாயிங்க..அப்புறம் தானா நீயும் ஜோதியில ஐக்கியமாயிரலாம்..”

“பரங்கிமலை ஜோதியா..”

“போடா டுபுக்கு..சரி.மெயில் குழுமத்தால ஏதாவது நல்லது பண்ணிருக்கீங்களா..”

“ஆமா..எம்புட்டு பஞ்சாயத்து பண்ணிருக்கோம்..”ப்ளீஸ்..சண்டை போடாதிங்க..இதோட முடிச்சுக்கலாம்..பதிவுலகம் ஏன் இப்படி ஆகிவிட்டது..நான் வெளியே போறேன்….நீதாண்டா…டே..இந்தா ஸ்கிரீன் சாட்டு..இந்தா பார்..நீதாண்டா அயோக்கியன்..”

கோவாலு தலையை புடிச்சு உக்கார்ந்துட்டாண்ணே..

“ராசா..தலை கிறுகிறுதுன்னு..கொஞ்சம் தண்ணி கொடு..”

பயபுள்ள கலங்கி போயிட்டான்..

“ராசா,,நீ வேணா எந்திரன் பத்தி ஏதாவது தாக்கி..”

“ஏண்டா கோவாலு..அவனவன் கொலைவெறியில இருக்காயிங்க..ஏற்கனவே மொத்தம் நாலு ஓட்டுதான் விழுகுது. அதுலயும் இரண்டு பேரு..”சாரிங்க..கை தெரியாம ஓட்டு பட்டையில பட்டுருச்சுன்னு சொல்லி மெயில் அனுப்புறப்ப அழுகை, அழுகையா, வருது தெரியுமா..”

“ராசா..கடைசியா ஒன்னு கேக்குறேன்..இந்த பதிவுலக சண்டையெல்லாம் எப்ப தீரும்..”

“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”

54 comments:

நாஞ்சில் பிரதாப் said...

//கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்//
hhahaha ராசாண்ணே நச்சுன்னு சொன்னீங்க...
இலவசமா பிளாக்கரை கொடுத்தாலும் கொடுத்தானங்க....யப்பா முடில... பேசாம நீங்க பிளாக்கர் டீம்க்கு ஒரு மெயிலைப்போடுங்கண்ணே... ஒங்க ஊரு கம்பெனிதானண்ணே நீங்க சொன்னா கேப்பாய்ங்க:))

Anonymous said...

அதுக்குப் பிறகு எல்லாரும் வேர்ட்பிரஸ்ல ப்ளாக் ஆரம்பிச்சு அடிச்சுக்குவாங்க. :))

லெமூரியன்... said...

ha ha ha ha nice post raasa..!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கோவாலு ராசாண்ணே காம்பினேசன்ல கலக்கல் டிஸ்கஸ்ன்

சென்ஷி said...

:)))

வெட்டிப்பேச்சு said...

//ராசா..கடைசியா ஒன்னு கேக்குறேன்..இந்த பதிவுலக சண்டையெல்லாம் எப்ப தீரும்..”

“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”//

!!:)))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”]]]

நிச்சயமா..! அன்னிக்குத்தான் முக்கால்வாசிப் பேர் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓடப் போறாங்க..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”//

அப்பகூட நிறுத்த மாட்டாங்க. தனி மடல்ல சண்டை போடுவாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2010/10/tamilbloggers-forum.html

இத பாருங்க அண்ணா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//“ஆமா..எம்புட்டு பஞ்சாயத்து பண்ணிருக்கோம்..”ப்ளீஸ்..சண்டை போடாதிங்க..இதோட முடிச்சுக்கலாம்..பதிவுலகம் ஏன் இப்படி ஆகிவிட்டது..நான் வெளியே போறேன்….நீதாண்டா…டே..இந்தா ஸ்கிரீன் சாட்டு..இந்தா பார்..நீதாண்டா அயோக்கியன்..”//

chat record irukkaa?

கக்கு - மாணிக்கம் said...

// “கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…” //

சிரிப்போ சிரிப்பு ! :))))))))))))

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”
//
ha ha ha........ correct...

சேலம் தேவா said...

// “கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…” //

இப்டி எல்லாம் ஐடியா கொடுக்காதீங்கண்ணே..!!

V.Radhakrishnan said...

ஹா ஹா! உலகத்தில நாட்டுல ஊருல வீட்டுல நடக்கிற சண்டைக்கு கூட இப்படி கவலை பட மாட்டோம்! ;)

DrPKandaswamyPhD said...

கூகிள்காரன் காசு கேட்டா மொதல் அம்பேல் நாந்தான!

taaru said...

ஸ்ஸ்ஸ்ஸாரி சார் .... உங்களுக்கு ஒட்டு போட்டு ரொம்ப நாள் ஆச்சு அண்ணே.... பாருங்க இந்த இன்ட்லி ஆபிஸ்ல அறுத்து விட்டாய்ங்க.....\
ஏன் அண்ணே? அப்டி என்னா தான் நடக்குது இந்த பதிவுலகத்துல?? ஒரு information உம் வர மாட்டேங்குது? இத பத்தி, இங்கனக்குள்ள வேண்டாம்... மெயில் அனுப்புங்க.. சரியாய்... அங்க பேசிக்குவோம்....

ஜோதிஜி said...

நக்கலில் ஒரு நறுக்

எஸ்.கே said...

ரொம்ப சூப்பர்!

அபி அப்பா said...

:-))))))))))))))))))))))))))

enthiran said...

”சாரிங்க..கை தெரியாம ஓட்டு பட்டையில பட்டுருச்சுன்னு சொல்லி மெயில் அனுப்புறப்ப அழுகை, அழுகையா, வருது தெரியுமா..”

:)))))))))

மாதேவி said...

சிரிப்பு அலையாக இருக்கே.

நல்லா :)கிட்டேன்.

விஜி said...

கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…//

இது சூப்பரு :)))

Anonymous said...

படிக்காத பொறுக்கிகள் பப்ளிக் டாய்லட்ல கிறுக்கி வைப்பானுங்க. படிச்ச பொறுக்கிகள் பப்ளிக் பிளாக்ல கிறுக்கி வைக்குறானுங்க. இவனுங்க எழுதி கிழிச்சுதான் தமிழ் வளரனுமாம். எல்லாம் நம்ம தலை எழுத்துண்ணே.
Sakthi

jothi said...

//“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”//

ha ha ha

சண்டையும் சச்சரவும் தமிழனின் பரம்பரை சொத்து,.. அதை மாற்ற யாராலும் முடியாது,.. ஆனா நீங்க சொன்னது ரொம்ப சரி,.. பாதி பேரு சண்டை போட்டே பேமஸாயிட்டு இருக்கான்ய்கண்ணே,... அவிங்க கெடக்கிறாய்ங்க விடுங்கண்ணே,.. அடுத்த ரஜினி படம் எப்பண்ணே வருது???

jothi said...

//ஏற்கனவே மொத்தம் நாலு ஓட்டுதான் விழுகுது. //

அது சரி,.. நீங்க யாருக்காச்சும் போட்டீங்கதானே உங்களுக்கு ஓட்டு விழும்,.. 93 பதிவு போட்டு 95 ஓட்டுதான் போட்டுருக்கீங்க??? அதுல 93 ஓட்டு உங்க பதிவுக்கு,..மீதி ரெண்டுதான் அடுத்தவனுக்கு,.. இது எந்த விதத்தில நியாயமண்ணே?? ம்ம்ம்,.. எல்லா உஷாரத்தான் இருக்காங்க,..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////

14 October 2010 10:56 PM
/////////////////////////
ஒபாமா கூட ஒருநாள் பேசுறப்ப கூட சொன்னேண்ணே..பயபுள்ள, சின்னப்புள்ளைத்தனாமா இருக்குன்னு சொல்லி கிண்டல் பண்ணிட்டு போயிட்டன்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Anonymous said...
அதுக்குப் பிறகு எல்லாரும் வேர்ட்பிரஸ்ல ப்ளாக் ஆரம்பிச்சு அடிச்சுக்குவாங்க. :))
14 October 2010 11:01 PM
//////////////////////////
ஆஹா..அப்படி ஒன்னு இருக்கா..கடைசி வரைக்கும் தப்புக்க முடியாது போல இருக்கே..

அவிய்ங்க ராசா said...

//////////////////
லெமூரியன்... said...
ha ha ha ha nice post raasa..!
14 October 2010 11:03 PM
//////////////////
நன்றி லெமூரியன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
கோவாலு ராசாண்ணே காம்பினேசன்ல கலக்கல் டிஸ்கஸ்ன்
14 October 2010 11:07 PM
////////////////////////
நன்றி செந்தில்..கோவாலு இல்லாத பதிவை நினைச்சு கூட பார்க்க முடியலை..)))

அவிய்ங்க ராசா said...

////////////////////
சென்ஷி said...
:)))
14 October 2010 11:18 PM
////////////////////
நன்றி சென்ஷி..

அவிய்ங்க ராசா said...

//////////////////
வெட்டிப்பேச்சு said...
//ராசா..கடைசியா ஒன்னு கேக்குறேன்..இந்த பதிவுலக சண்டையெல்லாம் எப்ப தீரும்..”

“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”//

!!:)))
14 October 2010 11:29 PM
////////////////////
நன்றி அண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”]]]

நிச்சயமா..! அன்னிக்குத்தான் முக்கால்வாசிப் பேர் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓடப் போறாங்க..!
14 October 2010 11:53 PM
/////////////////////
அண்ணே..அந்தநாள்தான் இனியநாள்..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”//

அப்பகூட நிறுத்த மாட்டாங்க. தனி மடல்ல சண்டை போடுவாங்க
15 October 2010 12:06 AM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
http://sirippupolice.blogspot.com/2010/10/tamilbloggers-forum.html

இத பாருங்க அண்ணா
15 October 2010 12:06 AM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//“ஆமா..எம்புட்டு பஞ்சாயத்து பண்ணிருக்கோம்..”ப்ளீஸ்..சண்டை போடாதிங்க..இதோட முடிச்சுக்கலாம்..பதிவுலகம் ஏன் இப்படி ஆகிவிட்டது..நான் வெளியே போறேன்….நீதாண்டா…டே..இந்தா ஸ்கிரீன் சாட்டு..இந்தா பார்..நீதாண்டா அயோக்கியன்..”//

chat record irukkaa?
/////////////////////////
வருகைக்கு நன்றி..நல்ல பதிவுண்ணே..சாட்டுதான் இப்ப லேட்டஸ்ட் டெரெண்டு போலிருக்கே..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
கக்கு - மாணிக்கம் said...
// “கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…” //

சிரிப்போ சிரிப்பு ! :))))))))))))
15 October 2010 12:10 AM
//////////////////////////
நன்ரி மாணிக்கம்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
வழிப்போக்கன் - யோகேஷ் said...
//
கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”
//
ha ha ha........ correct...
15 October 2010 12:28 AM
//////////////////////
நன்றி யோகேஷ்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
சேலம் தேவா said...
// “கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…” //

இப்டி எல்லாம் ஐடியா கொடுக்காதீங்கண்ணே..!!
15 October 2010 1:44 AM
//////////////////////////
பின்ன..எப்படி நாடு முன்னேறுறதாம்..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
V.Radhakrishnan said...
ஹா ஹா! உலகத்தில நாட்டுல ஊருல வீட்டுல நடக்கிற சண்டைக்கு கூட இப்படி கவலை பட மாட்டோம்! ;)
15 October 2010 2:02 AM
///////////////////////////
பெரிய சமூக பிரச்சனையில்ல இது..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////////
DrPKandaswamyPhD said...
கூகிள்காரன் காசு கேட்டா மொதல் அம்பேல் நாந்தான!
15 October 2010 2:11 AM
/////////////////////////////////
அடுத்த ஆள் நாந்தாண்ணே..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
taaru said...
ஸ்ஸ்ஸ்ஸாரி சார் .... உங்களுக்கு ஒட்டு போட்டு ரொம்ப நாள் ஆச்சு அண்ணே.... பாருங்க இந்த இன்ட்லி ஆபிஸ்ல அறுத்து விட்டாய்ங்க.....\
ஏன் அண்ணே? அப்டி என்னா தான் நடக்குது இந்த பதிவுலகத்துல?? ஒரு information உம் வர மாட்டேங்குது? இத பத்தி, இங்கனக்குள்ள வேண்டாம்... மெயில் அனுப்புங்க.. சரியாய்... அங்க பேசிக்குவோம்....
15 October 2010 2:55 AM
///////////////////////
கண்டிப்பா அய்யனாரே..மெயில் பண்ணுங்க..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
ஜோதிஜி said...
நக்கலில் ஒரு நறுக்
15 October 2010 3:18 AM
/////////////////////
நன்றி ஜோதி..

அவிய்ங்க ராசா said...

//////////////////
எஸ்.கே said...
ரொம்ப சூப்பர்!
15 October 2010 6:00 AM
/////////////////
நன்றி எஸ்கே..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
அபி அப்பா said...
:-))))))))))))))))))))))))))
15 October 2010 6:24 AM
//////////////////////////
நன்ரி அபி அப்பா..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
enthiran said...
”சாரிங்க..கை தெரியாம ஓட்டு பட்டையில பட்டுருச்சுன்னு சொல்லி மெயில் அனுப்புறப்ப அழுகை, அழுகையா, வருது தெரியுமா..”

:)))))))))
15 October 2010 7:59 AM
/////////////////////
நன்றி எந்திரன்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
மாதேவி said...
சிரிப்பு அலையாக இருக்கே.

நல்லா :)கிட்டேன்.
15 October 2010 8:13 AM
///////////////////////////
நன்றி மாதேவி..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
விஜி said...
கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…//

இது சூப்பரு :)))
15 October 2010 8:30 AM
////////////////////////
நன்றி விஜி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Anonymous said...
படிக்காத பொறுக்கிகள் பப்ளிக் டாய்லட்ல கிறுக்கி வைப்பானுங்க. படிச்ச பொறுக்கிகள் பப்ளிக் பிளாக்ல கிறுக்கி வைக்குறானுங்க. இவனுங்க எழுதி கிழிச்சுதான் தமிழ் வளரனுமாம். எல்லாம் நம்ம தலை எழுத்துண்ணே.
Sakthi
15 October 2010 8:59 AM
/////////////////////////
நன்றி சக்தி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
jothi said...
//“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…”//

ha ha ha

சண்டையும் சச்சரவும் தமிழனின் பரம்பரை சொத்து,.. அதை மாற்ற யாராலும் முடியாது,.. ஆனா நீங்க சொன்னது ரொம்ப சரி,.. பாதி பேரு சண்டை போட்டே பேமஸாயிட்டு இருக்கான்ய்கண்ணே,... அவிங்க கெடக்கிறாய்ங்க விடுங்கண்ணே,.. அடுத்த ரஜினி படம் எப்பண்ணே வருது???
15 October 2010 9:30 AM
jothi said...
//ஏற்கனவே மொத்தம் நாலு ஓட்டுதான் விழுகுது. //

அது சரி,.. நீங்க யாருக்காச்சும் போட்டீங்கதானே உங்களுக்கு ஓட்டு விழும்,.. 93 பதிவு போட்டு 95 ஓட்டுதான் போட்டுருக்கீங்க??? அதுல 93 ஓட்டு உங்க பதிவுக்கு,..மீதி ரெண்டுதான் அடுத்தவனுக்கு,.. இது எந்த விதத்தில நியாயமண்ணே?? ம்ம்ம்,.. எல்லா உஷாரத்தான் இருக்காங்க,..
15 October 2010 9:37 AM
///////////////////////////////
ஜோதி..த்மிழிஷில் முடிந்த வரை ஓட்டு போட்டிருக்கிறேன். கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன். தமிழ்மண்த்தில் என் ஐ.டியில் உள்ள ஒரு பிரச்சனை காரணமாக ஓட்டு போடமுடியவில்லை. கண்டிப்பாக சரிசெய்கிறென்..

கலகலப்ரியா said...

;))

Anonymous said...

Nallaa Sonneenga Poanga.

Kadaisee line thaan neththi adi.

Super matter....:)

அவிய்ங்க ராசா said...

//////////////////////
கலகலப்ரியா said...
;))
16 October 2010 2:29 AM
//////////////////////////
நன்றி பிரியா..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Anonymous said...
Nallaa Sonneenga Poanga.

Kadaisee line thaan neththi adi.

Super matter....:)
16 October 2010 10:17 AM
/////////////////////////
நன்றி நண்பா..

SHANTHINI said...

“கூகிள்காரன் பிளாக்குக்கு காசு வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம்…

nalla irukeh intha yavaram........

julie said...

Sir,

" கோவாலு தலையை புடிச்சு உக்கார்ந்துட்டாண்ணே "

அவர் விஜய் ரசிகர் ஆச்சே
அவரே தலைய புடிச்சி உட்காருற லெவலுக்கு பதிவுலக சண்டை இருக்கா

அப்போ நாங்க எல்லாம் என்ன ஆவது

Julie

Anonymous said...

அண்ணே இன்னிக்கு திங்கள்கிழமை. மிக்சர் ஜூஸ் இன்னும் வரல.

Post a Comment