Sunday 31 October 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார கொடுமை

மனநிலை தவறியவர்கள் கூட குழந்தை என்றால் அமைதியாகிவிடுவார்கள் என்று கேள்விபட்டிடுக்கிறேன். ஆனால் கோவையில் நடந்த சம்பவத்தை நினைத்து நெஞ்சு பதறுகிறது. ஒரு நாதாரி இரண்டு குழந்தைகளை துடிக்க துடிக்க தண்ணீரில் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறான். பெற்றவர்கள் மனம் என்ன கஷ்டப்பட்டிருக்கும். நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதுபோன்ற ஆட்களுக்கெல்லாம் தூக்கு தண்டனை எல்லாம் பத்தாது. அரபுநாடுகளில் பண்ணுவது போல, ரோட்டில் ஓடவிட்டு கல்லால் அடித்து சாகடிக்கவேண்டும். அய்யோ, மனிதஉரிமை என்று யாராவது பேசட்டும்..இருக்கு அவிங்களுக்கு..

இந்த வார பதிவுலகம்

வாரவாரம் பதிவுலக செய்திகள் – வழங்குவது அவியிங்க ராசா.

போனவாரம் பதிவர் ஒருவர் பற்றிய கிண்டலான பதிவால் சூடாகிப்போன பதிவுலகம், இந்த வார சற்று மந்தமாகவே தொடங்கியது. யார் என்ன சண்டை போடுவது என்று தெரியாமல் திணறிக்கொண்டிந்தவேளையில், ஆபத்பாந்தவனாக..சாரி..ஆபத்பாத்தவனாக..அய்யோ, ஒருதடவையாவது எலக்கியதரமா எழதணும் நினைச்சா வருதா பாரு..ஓகே..பதிவர் ஒருவர், மற்றொரு பதிவரின் திருமணத்திற்கு சென்றதை பதிவாக போட, அதில் அனானி ஒருவரின் கமெண்டால் பற்றி கொண்டது. இரு பக்கமும் சூடான விவாதங்கள் பரிமாறப்பட லேப்டாப்பும் சூடாகிப்போனது. புதன், வியாழக்கிழமைகளில் கனத்த இடியுடன் கூடிய கமெண்டுகளும், கேலிகளும் தாக்கி, வானிலை இன்னும் மோசமானது. இறுதியாக மேற்கு பக்கம் மையம் கொண்ட புயல், இப்போதைக்கு நமீதா படம் பார்க்க போயிருக்கிறது, அது திசை தடுமாறி அடுத்த வாரங்களுக்கு பதிவுலகத்தை தாக்கும் வாய்ப்பு உள்ளதால், அனைவரும் இப்போதே அனானிமஸ் ஐ.டிகளும், கெட்டவார்த்தை கமெண்டுகளும் எழுதி ரெடியாக வைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். விளம்பர இடைவேளைக்கு அப்பால நிகழ்ச்சி மீண்டும் தொடரும்..

(பதிவுலகம்…இந்த வாரம்…”அடிடா அவனை..குத்துடா..” சொல்லுகிறார், பதிவர் கும்மாங்குத்து…ஆக்சன் காட்சிகள் நிறைந்த உலகம்..சேர்ந்துவிட்டீர்களா..பதிவுலகம்..”கலக்கல்ணா..உங்க பதிவு பார்த்துத்துதான் எங்க வீட்டுல சோறே பொங்குச்சு..இதுவரைக்கும் கேப்மாறியா இருந்த என்னை கொலைகாரனாக மாத்தியிருக்கு உங்க பதிவு..பதிவுலகத்தை விட்டு போயிராதிங்க..நாங்க ஊரோட தற்கொலை பண்ணிக்குவோம்..” என்று செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த உலகம்..சேர்ந்துவிட்டீர்களாஆஆஆஆ பதிவுலகம்..”யோவ் கல்யாண மண்டபத்துல ஏன்யா ஆண்கள் கக்கூஸ்ன்னு எழுதியிருக்கிற இடத்துல பெயிண்ட் போயிருக்கு.. பதில் சொல்லாம என்னயா பதிவு எழுதுற..” என்று சரமாரியான கேள்விகள் நிறைந்த உலகம்..பதிவுலகம்..சேர்ந்துவிட்டீர்களாஆஆஆஆஆ)

இப்போது நேயர் ஒருவர் அவிங்க ராசாவிடம் ஒருகேள்வி கேட்க விரும்புகிறார்.

நேயர் : மிஸ்டர் சொரிங்க(நன்றி ஒரு அனானி நண்பர்)..சாரி..அவிங்க ராசா..நீங்கள் என்ன தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்..

அவிங்க ராசா : எங்க வீட்டு கல்யாணத்துக்கு ஒரு பயபுள்ளையும் கூப்பிடமாட்டேன்

இந்த வார படம்

வழக்கம்போல இரண்டு படங்கள். ஒன்று “தி ரெக்ரியூட்(The recruit) பாரில் வேலை செய்யும் ஹீரோ “காலின் பாரெல்”லுக்கு தேடி வந்து அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வில் வேலை சேர வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பு கொடுப்பவர், சி.ஐ.ஏ வின் பயற்சிகாலத் தலைவர் “அல் பாசினோ..” சி.ஐ.ஏவில் நடக்கும் பயிற்சி கால கெடுபிடிகளில் தாக்குபிடிக்கமுடியாமல் வெளியேற எல்லாம் ஒரு டிராமா என்று போக்கிரி, காக்கிசட்டை எபெக்ட் கொடுக்கிறார்கள். கிளைமாக்ஸ் நடக்கும் திடிர் திருப்பத்தில் அதிர்ந்து நம்மை அறியாமல் கைதட்டுகிறோம். சி.டி கிடைத்தால் பாருங்கள்.

அடுத்தது “டவுட்பயர்” படப்புகழ் எடி மர்பியின் “இமேஜின் தேட்”(imagine that) என்ற நகைச்சுவை படம். ஷேர் மார்க்கெட் கம்பெனியில் வேலை பார்க்கும் எடி.மர்பி வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளால் பின்னடைகிறார். எப்போதும் ஒரு சிறிய துண்டை போர்த்திக் கொண்டு கார்ட்டுன் கேரக்டர்கள் தன்னோடு பேசுவதாக நினைக்கும் தன் மகளை பார்க்கும்போது அவருக்கு கடுப்பாக வருகிறது. ஒருவேளை மனநிலை போயிருக்குமோ என்று. ஒருகட்டத்தில் நொடித்துப்போக, அவருடைய மகள் மற்றும் கார்ட்டுன் கேரக்டர்களின் உதவியானல் எப்படி முன்னேறுகிறார் என்பது கதை. இப்படி ஒரு கிரியேட்டிவான கதைக்கே கதாசிரியருக்கு ஒரு சல்யூட். நம்ம ஊரு டைரக்டர்களை ஏன் பாண்டி பஜாரின் பக்கம் அதிகம் பார்க்க முடிகிறது என்று தெரிய வருகிறது. எடி மர்பி நடிப்பு பற்றி சொல்லவேண்டுமானால், விவேக் சொல்வது போல் “சூரியனுக்கே டார்ச் அடிப்பது” மாதிரி..

இந்த வார பதிவு

சில நல்ல பதிவுகளைப் பார்க்கும்போது, அப்படியே செய்தித்தாள் படிப்பது போல இருக்கும். அந்த நேரேஷன் அப்படியே நம்மை இழுத்துச்செல்லும். அப்படி படித்த “தேவியர் இல்லம்” எழுதிய இந்த பதிவு

http://deviyar-illam.blogspot.com/

இந்த வார பாடல்

இந்த பாடல் எப்படி ஹிட் ஆகவில்லை என்று தலையை பிய்த்துக்கொண்டேன். உயிரை ஏதோ பண்ணுதுங்க..நீங்களும் கேளுங்களேன்.

படம் : குளிர் 100 டிகிரி

http://www.youtube.com/watch?v=Qe-X7Awb1e8&feature=related

இந்த வார பொன்மொழி(மாதிரி)

எங்கேயோ கேட்டது. யார் எழுதியது என்று தெரியவில்லை.

காதலிகள்..

சிலபேர்க்கு மனைவியாகிறார்கள்..

பலபேர் குழந்தைகளுக்கு பெயர்களாகிறார்கள்..

(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)

22 comments:

philosophy prabhakaran said...

இந்த வார கொடுமை பற்றிய செய்தியில் நீங்கள் எழுதாத செய்தி ஒன்று இன்றைய செய்தித்தாளில் வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்... கொடுமையிலும் கொடுமை...

// எங்க வீட்டு கல்யாணத்துக்கு ஒரு பயபுள்ளையும் கூப்பிடமாட்டேன் //
இந்த வரிகளுக்காக உங்களை திட்டி குறைந்தது பத்து பதிவுகளாவது போட்ருவாங்களே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து மண்டப வாடகை கேப்போம்ல..

அரபுத்தமிழன் said...

//(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)//
ஒரு வரிக்கவிதை ஓகேவா

'பேர் சொல்லும் பிள்ளை' (எப்பூடி :)

taaru said...

//காதலிகள்..
சிலபேர்க்கு மனைவியாகிறார்கள்..
பலபேர் குழந்தைகளுக்கு பெயர்களாகிறார்கள்..
//
என்னே, நீ எழுதி இருக்குறதே... கவிதை தானே....பல கவிஞ்ஞர்கள் இப்டி தான் கவிதைன்னு தெரியாம இருக்காங்க கவிஞ்ஞரே....

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து //
அப்போ..நான் வந்து மொய் எவ்ளோ எழுதினேன்னு கேட்பேண்ணே ...!!!!

// “தி ரெக்ரியூட்(The recruit)//
ஆல்-பசினோ உன்னைய மாதிரி [i mean ஊமைக்குசும்பனாட்டம்] செமையா கலக்கி இருப்பாரு... எதார்த்தமா போன மாசம் ஸ்டார்-மூவீஸ்ல பாத்தேன்..

Prasanna Rajan said...

டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
philosophy prabhakaran said...
இந்த வார கொடுமை பற்றிய செய்தியில் நீங்கள் எழுதாத செய்தி ஒன்று இன்றைய செய்தித்தாளில் வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்... கொடுமையிலும் கொடுமை...

// எங்க வீட்டு கல்யாணத்துக்கு ஒரு பயபுள்ளையும் கூப்பிடமாட்டேன் //
இந்த வரிகளுக்காக உங்களை திட்டி குறைந்தது பத்து பதிவுகளாவது போட்ருவாங்களே...
31 October 2010 6:57 PM
///////////////////////////
ஹி..ஹி..அரசியல் வாழ்க்கையில்ல இதெல்லாம் சகஜமப்பா...)

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து மண்டப வாடகை கேப்போம்ல..
31 October 2010 7:30 PM
//////////////////////////
ஆஹா..அப்படின்னா தப்பிக்கவே முடியாதா..))))

அவிய்ங்க ராசா said...

/////////////////////
அரபுத்தமிழன் said...
//(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)//
ஒரு வரிக்கவிதை ஓகேவா

'பேர் சொல்லும் பிள்ளை' (எப்பூடி :)
31 October 2010 10:13 PM
///////////////////////
நச்...

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
taaru said...
//காதலிகள்..
சிலபேர்க்கு மனைவியாகிறார்கள்..
பலபேர் குழந்தைகளுக்கு பெயர்களாகிறார்கள்..
//
என்னே, நீ எழுதி இருக்குறதே... கவிதை தானே....பல கவிஞ்ஞர்கள் இப்டி தான் கவிதைன்னு தெரியாம இருக்காங்க கவிஞ்ஞரே....

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து //
அப்போ..நான் வந்து மொய் எவ்ளோ எழுதினேன்னு கேட்பேண்ணே ...!!!!

// “தி ரெக்ரியூட்(The recruit)//
ஆல்-பசினோ உன்னைய மாதிரி [i mean ஊமைக்குசும்பனாட்டம்] செமையா கலக்கி இருப்பாரு... எதார்த்தமா போன மாசம் ஸ்டார்-மூவீஸ்ல பாத்தேன்..
1 November 2010 1:33 AM
///////////////////////
கவுஜையா...ஆஹா..இது என்னோடது இல்லீண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Prasanna Rajan said...
டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...
1 November 2010 5:20 AM
//////////////////////////
கரெக்டுண்ணே..தி மம்மா ஹவுஸ் என்பதற்கு பதில் தப்பா எழுதிட்டேன்..

அமுதா கிருஷ்ணா said...

இந்த வார கொடுமை இனி எப்போதும் வராமல் (நடக்காமல்) இருக்கணும். அந்த இரண்டு குழந்தைகளை பெற்றவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது.

Prasanna Rajan said...

டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...
1 November 2010 5:20 AM
//////////////////////////
கரெக்டுண்ணே..தி மம்மா ஹவுஸ் என்பதற்கு பதில் தப்பா எழுதிட்டேன்..

அது 'பிக் மாம்மாஸ் ஹவுஸ்'. அதுல நடிச்சது மார்ட்டின் லாரன்ஸ். எடி மர்ஃபி 'Dr.Do Little','Nutty Professor' படங்கள்ல நடிச்சவர்...

தென்னவன். said...

காதலிகள்..
சிலபேர்க்கு
மனைவியாகிறார்கள்..
பலபேர்
குழந்தைகளுக்கு
பெயர்களாகிறார்கள்..

அவ்வளவுதான் ஒன்னும் கீழ ஒன்னு போடச்சில்ல கவிதை

அவிய்ங்க ராசா said...

////////////////////
அமுதா கிருஷ்ணா said...
இந்த வார கொடுமை இனி எப்போதும் வராமல் (நடக்காமல்) இருக்கணும். அந்த இரண்டு குழந்தைகளை பெற்றவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது.
1 November 2010 6:23 AM
////////////////////
மிகவும் கஷ்டமாக இருக்கிறது...

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Prasanna Rajan said...
டவுட்ஃபயர்ல நடிச்சது ராபின் வில்லியம்ஸ் பாஸ்...
1 November 2010 5:20 AM
//////////////////////////
கரெக்டுண்ணே..தி மம்மா ஹவுஸ் என்பதற்கு பதில் தப்பா எழுதிட்டேன்..

அது 'பிக் மாம்மாஸ் ஹவுஸ்'. அதுல நடிச்சது மார்ட்டின் லாரன்ஸ். எடி மர்ஃபி 'Dr.Do Little','Nutty Professor' படங்கள்ல நடிச்சவர்...
1 November 2010 10:09 AM
////////////////////////////
என் கையை மடக்கி என் மூக்குநேராக வைத்து நான் என்னைப் பார்த்து வடிவேல் பாணியில் சொல்வதாக இதைப் படிக்கவும்..

"வேணுன்டா உனக்கு. இங்கிலீபீசு படமா பார்க்குற..போடுறேன்யா "குற்றம் நடந்தது என்ன" விமர்சனம் அடுத்த வாரம்..அப்ப கண்டுபிடிங்க பார்ப்போம்..ஹி..ஹி.."

அவிய்ங்க ராசா said...

///////////////////////
தென்னவன். said...
காதலிகள்..
சிலபேர்க்கு
மனைவியாகிறார்கள்..
பலபேர்
குழந்தைகளுக்கு
பெயர்களாகிறார்கள்..

அவ்வளவுதான் ஒன்னும் கீழ ஒன்னு போடச்சில்ல கவிதை
1 November 2010 12:31 PM
///////////////////////
ஆஹா..கவுஜ அம்புட்டு ஈசியா..அடுத்த வாரம் கவுஜ ஸ்பெசல்..

தேசாந்திரி-பழமை விரும்பி said...

//(யாராவது இதை கவிதை வடிவில் எழுதமுடியுமா..??)//
நான் நெனச்சேன் ,
தென்னவன் சொல்லிட்டாரு !

கும்மி said...

தென்னவன். said...
//காதலிகள்..
சிலபேர்க்கு
மனைவியாகிறார்கள்..
பலபேர்
குழந்தைகளுக்கு
பெயர்களாகிறார்கள்..//

மீதி பேர்
பாஸ்வேர்ட் ஆகிறார்கள்!

கும்மி said...

//கல்யாணத்துக்கு கூப்பிடளைன்னாலும் நாங்க வந்து மண்டப வாடகை கேப்போம்ல//

இப்பவே ப்ரிண்ட் அவுட் ரெடி பண்ணிருங்க. மொய் கொடுத்தவுடனே கைல ப்ரிண்ட் அவுட் கொடுத்தா மேட்டர் ஓவர்.

சிங்கக்குட்டி said...
This comment has been removed by the author.
சிங்கக்குட்டி said...

காதலி..!

சிலருக்கு மனைவி...!

பலருக்கு மகள் பெயரில்...!

பார்த்திபன் ஸ்டைலில் வெறி சிம்பிள் "அடடே ஆச்சரிய குறி..! "

(கவிதை கவிதை அபிராபி அபிராமி)

Anonymous said...

adichuverattungata blogaa vittu

Post a Comment