Saturday, 2 October 2010

எந்திரன் – கெட் ரெடி போக்ஸ் – விமர்சனம்

நான் ஏற்கனவே “எந்திரன் பார்ப்பேன்” என்று சொல்லியபடி, இன்று எந்திரன் பார்த்தேன். அமெரிக்காவில் எங்கள் ஊரில் ஒரே நாளில் மூன்று ஷோக்கள் என்று தியேட்டரே களை கட்டியிருந்தது. டிக்கெட் வாங்குமிடத்தில் வைத்திருந்த எந்திரன் பேனரில் “ரஜினி பேன் கிளப்” என்று கட்டப்பட்டிருந்த பேனரைப் அமெரிக்கர்கள் வித்தியாசமாக பார்த்து சென்றார்கள். சில ரசிகர்கள், ரஜினி படம் பொறித்த எந்திரன் பனியனை, இதற்காகவே ஆர்டர் செய்திருந்தார்கள். அமெரிக்கர்களுக்கு இந்த அனுபவமே வித்தியாசமாக இருந்திருக்கும்.

படம் தொடங்கியதும், ஒருவர் எழுந்து “சூப்பர்ஸ்டார் வாழ்க” என்று கத்தவே எல்லோரும் ஒரே ஆராவாரம். எல்லார் முகத்திலும் சந்தோசத்தைப் பார்க்க இன்னும் சந்தோசமாக இருந்தது. முதல் நாளிலே டிக்கெட் வாங்கிட்டோம்ல என்ற பெருமிதம் நிறைய பேரிடம் காண முடிந்தது.

இனி விமர்சனம். ஏறக்குறைய 60 எந்திரன் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அனைத்து பேரும் படத்தின் கதையை அலசி காயப்போட்டுவிட்டதால், நானும் அதை சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. படத்தைப் பற்றிய என்னுடைய எண்ணங்களை எழுதவே விரும்புகிறேன்.

இந்தியாவிலும் ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கமுடியும் என்று நிரூபிப்பதற்காகவே வந்த படம் என்று சொல்லலாம். எந்த பஞ்ச் டயலாக், பில்டப்புகள், ஓபனிங்க் சாங்க் இல்லாமல் ரஜினியைக் காண்பிக்கும்போதே கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று உணரத் தொடங்குகிறோம். சங்கரின் ஆளுமையும் அதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. வசீகரன் ரஜினி 10 வருட ஆராய்ச்சி முடிவாக, “சிட்டி” என்ற ரோபோவைக் கண்டுபிடிக்க படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.

படத்தின் உயிர்நாடி ரஜினி. ரஜினியைத்தவிர இந்தப் படத்திற்கு யாரையும் யோசித்து பார்க்கமுடியவில்லை. சிட்டி ரோபாவாக வந்து கலக்குவதாகட்டும், வில்லன் ரோபாவாக வந்து “மே..மே..” என்று பழிப்பு காட்டுவதாக ஆகட்டும், பழைய மூன்று முகம் ரஜினியை திரையில் பார்க்கமுடிகிறது. சங்கர் சொல்லுவதைக் கேட்டு, அப்படியே நடித்து எல்லோர் மனதையும் அள்ளிவிட்டு போகிறார். அதுவும் வில்லன் ரஜினி பண்ணும் அட்டகாசத்தில் தியேட்டரே அதிர்கிறது. இந்தப் படத்தில் முழுவதும் வேறுமாதிரியான ரஜினியைப் பார்க்க முடிவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

ஒவ்வொரு பிரேமிலும் டைரக்டர் சங்கரின் கைவண்ணம் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டம். ஒவ்வொருவர் உழைப்பும் காட்சிக்கு காட்சி வெட்டவெளிச்சம். இது ரஜினி படமா, சங்கர் படமா என்று கேட்டால், சங்கர் படம் என்று சொல்லலாம். அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பு தெரிகிறது. ரோபா என்ற சயன்டிபிக்கான கதையை எல்லோருக்கும் புரியும்படி எடுத்த சங்கர் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார் என்றே சொல்லலாம்.

நான் ஏற்கனவே எந்திரன் பாடல் விமர்சனத்தில் சொல்லியபடி அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட் அடித்திருக்க, படக் காட்சிகளோடு பார்க்க கலக்கல். எனக்கு பிடித்த காதல் அணுக்கள், பூம் பூம் ரோபோடா, இரும்பிலே ஓர் இருதயம், அனைத்தும் ரசிக்கும்படி படமாக்கப்பட்டு இருக்கின்றன. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான், இதற்குமேல் என்ன சிறப்பான இசையைக் கொடுக்கமுடியும். ஹேட்ஸ் ஆப்..

பொதுவாக ரஜினி படங்களில் கதாநாயகிக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை எனலாம். உலக அழகி, ஐஸ்வர்யாராயை திரையில் பார்க்கும் அனைவரும் சொக்கிபோகிறார்கள். நண்பர் ஒருவர் , ஐஸ்வர்யாராய் கோபப்படும்போதெல்லாம் கோபப்படுகிறார். அழும் போது, கலங்கி போகிறார். சிரிக்கும்போது சிரிக்கிறார். ஐஸ்வர்யா பச்ச்ன் என்று பேர் போடும்போது பெருமூச்சு விடுகிறார். எனக்கு என்னமோ, அவரைப் பார்த்துதான் “கபர்தார்” என்று சொல்லத் தோன்றியது.

அடுத்த பாராட்டுகள் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. பிரைம் நம்பர், பிபோனாசி , ஜிகா பைட், டெரா பைட் என்று சொல்லும்போது அவரே மனதில் தெரிகிறார். சீக்கிரம் இழந்துவிட்டோமோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. வசனங்கள் முழுவதும் சுஜாதா வாசனை.

அடுத்த பாராட்டுகள் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும். எல்லோரிடமும் சங்கர் பாராபட்சம் பார்க்காமல் வேலை வாங்கியுள்ளார். கலை சாபு, சண்டைப் பயிற்சி பீட்டர்,கிராபிக்ஸ் துணைநடிகர்கள் என்று அனைவரும் தத்தம் வேலையை செவ்வனே செய்துள்ளனர். கடைசி அரைமணிநேரம் வரும் கிராபிக்ஸ் காட்சிகள், இந்திய திரைப்படத்திற்கு புதுசு. சற்று நீளமாக இருந்தாலும், இதுபோன்ற சயண்டிபிக் படங்களுக்கு இது அவசியமாகிறது.

அடுத்து குறைகள்

1) சங்கர் படத்தில் வரும் லாஜிக் மீறல்கள்(கிளைமாக்ஸிஸ் அவ்வளவுபேர் சுட்டும், ஐஸ்வர்யாராய்க்கு ஒன்றும் ஆகாதது, அவ்வளவு கஷடப்பட்டு செய்த ரோபோவை குப்பையில் போடுவது…இது போன்ற காட்சிகளில், ரசிகர்கள் காதில் பூ..)

2) மொக்கையான வில்லன்(யாரோ சிக்கிம் நடிகராம்..இன்னும் நல்ல நடிகராக தேர்வு செய்திருக்கலாம்)

3) விஞ்ஞானி ரஜினிக்கு மேக்கப். முதல் காட்சியில் ஒட்டுதாடி அப்படியே தெரிகிறது. 190 கோடி செலவழிக்கும்போது, இதற்கும் ஏதாவது செய்திருக்கலாம். எனக்கு என்னமோ மேக்கப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ரஜினியை இன்னும் இளமையாக காட்டியிருக்கலாம் என்று தியேட்டரில் ரசிகர்கள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது)

4) சுஜாதாவுக்கும், அனிபாவுக்கும் ஒரு மரியாதைக்காகவாது, ஒரு அஞ்சலி செலுத்தியிருக்கலாம்.

எனக்கு தெரிந்த மேலே உள்ள நான்கு குறைகள்தான். அனைத்தும், ரஜினி, மற்றும் சங்கரின் ஆளுமைகளில் மறைந்து போகிறது.

இறுதியாக, எந்திரன்..தமிழ் ரசிகர்களுக்காக ஒரு ஹாலிவுட் படம்..ரஜினி ரசிகர்களுக்கு புல்மீல்ஸ் விருந்து. கெட் ரெடி போக்ஸ்…

14 comments:

Suni said...

very nice review

sunitha @
http://tamiltospokenenglish.blogspot.com

Prathap Kumar S. said...

//யாரோ சிக்கிம் நடிகராம்..இன்னும் நல்ல நடிகராக தேர்வு செய்திருக்கலாம்.//

அவர் நேபாள நாட்டுக்காரணே.... நல்ல நடிகராச்சே...
நல்லவேளை பிரகாஷ் ராஜையே, கோட்டா சீனிவாசராவையோ போட்டாமவுட்டவரைக்கும் சந்தோஷம்... :)

இவன் சிவன் said...

cool review raasaane !!!...

appo paathuda vendiyathu thaan

Viji said...

விமர்சனம் நல்ல சொல்லி இருக்கீங்க.இங்க கூட பாலபிஷேகம் நு சொல்றாங்க.அப்படியா?
எப்படியோ சன் pictures கு நல்ல லாபம் தான்.

நீங்க சொன்ன மாதிரி சுஜாதா வுக்கு ஒரு அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.நான் இன்னும் படம் பார்கள,ஆனா ரஜினி கேட்டுப் கொஞ்சம் ஓவர் செயற்கைய தெரியுது.அந்நியன் விக்ரம் ரெமோ மாதிரி ட்ரை பண்ணன்களோ?

Anonymous said...

Padam oru kuppai... idukku rama narayanan kitta kuduthurundha mukka kodila superaa kattirupparu... waste... we can call it junk Graphics, or graphics kuppai... indha lakshanathula Hollywood.... seruppala kooda adichukka mudiyadhu indha padatha patha... hello naan oru Rajini Rasigan...

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Sunitha said...
very nice review

sunitha @
http://tamiltospokenenglish.blogspot.com
///////////////////////
நன்றி சுனிதா

அவிய்ங்க ராசா said...

///////////////////
நாஞ்சில் பிரதாப் said...
//யாரோ சிக்கிம் நடிகராம்..இன்னும் நல்ல நடிகராக தேர்வு செய்திருக்கலாம்.//

அவர் நேபாள நாட்டுக்காரணே.... நல்ல நடிகராச்சே...
நல்லவேளை பிரகாஷ் ராஜையே, கோட்டா சீனிவாசராவையோ போட்டாமவுட்டவரைக்கும் சந்தோஷம்... :)
1 October 2010 11:53 PM
/////////////////////////
ஓ..ஒருவேளை இந்தபடத்தில் அவருக்கு நடிப்பதற்கு ஸ்கோப் இல்லாமல் இருந்திரிக்கலாம். நன்றி பிரதாப்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
இவன் சிவன் said...
cool review raasaane !!!...

appo paathuda vendiyathu thaan
2 October 2010 12:51 AM
/////////////////////////
கண்டிப்பா சிவன்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
Viji said...
விமர்சனம் நல்ல சொல்லி இருக்கீங்க.இங்க கூட பாலபிஷேகம் நு சொல்றாங்க.அப்படியா?
எப்படியோ சன் pictures கு நல்ல லாபம் தான்.

நீங்க சொன்ன மாதிரி சுஜாதா வுக்கு ஒரு அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.நான் இன்னும் படம் பார்கள,ஆனா ரஜினி கேட்டுப் கொஞ்சம் ஓவர் செயற்கைய தெரியுது.அந்நியன் விக்ரம் ரெமோ மாதிரி ட்ரை பண்ணன்களோ?
2 October 2010 1:52 AM
///////////////////////////////
இங்கே ஒரே ஆர்ப்பாட்டம்தான்..அமெரிக்காகாரன் ஆடிப்போயிட்டான்..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
Padam oru kuppai... idukku rama narayanan kitta kuduthurundha mukka kodila superaa kattirupparu... waste... we can call it junk Graphics, or graphics kuppai... indha lakshanathula Hollywood.... seruppala kooda adichukka mudiyadhu indha padatha patha... hello naan oru Rajini Rasigan...
2 October 2010 1:49 PM
///////////////////////////
கிராபிக்ஸ்..ஓகேதான் நண்பா..

Anonymous said...

Aveenga Rasa...

Padayappa, annamalai, Batsha.... indha mari oru padangalathan kandippa rajini rasigargalala ethukka mudiyum... indha padam OK than but... rajinikitta idhallam kekkave illa... as a rajini rasigana sollren...

Viji said...

Are yo9u in florida or washington?

Arun said...

வாழ்க வளர்க... விம்சரனதுல நல்ல ஒரு ரஜினி ரசிகர் இருக்கிறார்.. ஆனால் அடிக்கடி குரங்கு சேட்டை வந்துருது :D

-Arun

Arun said...

Danny actor yaarune yenga erukavangaluku therila...ana yepaditan mesathaviya kattikirangunu theriyala..
yov he's bollywood villan actor of 80's

Post a Comment