Saturday 27 February, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனம்

சின்ன வயதில் தலை நிறைய முடியுடன் ஒருமாதம் திரிந்து விட்டு, ஒருநாள் ஞானதோயம் வந்து , நல்ல பிள்ளையாய் ஹேர்கட்டிங்க் செய்து விட்டு வீட்டுக்கு சென்றால், என் அம்மா சொல்லும் முதல் வார்த்தை, “இப்பதான் புள்ளையப் பார்த்த மாதிரி இருக்கு”. பஞ்ச் டயலாக் பேசாமல், விரலை கன்னாபின்னாவென்று ஆட்டாமல், பெண்களுக்கு அடக்க ஒடுக்கத்தை போதிக்காமல் அமைதியான சிம்புவை இந்தப் படத்தில் பார்க்கும் போது சொல்லத் தோன்றுகிறது “இப்பதான் புள்ளையப் பார்த்த மாதிரி இருக்கு”. இனிமேல் இப்படியே நடித்து விடுங்கள் சிம்பு. எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா... இதை விட்டு விட்டு நீங்கள் விரலால் வீடு கட்டும்போது எவ்வளவு கோபம் கோபமாக வருகிறது என்பது தமிழ்நாட்டில் நடக்கும் தற்கொலைகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இனி விமர்சனம்.

கார்த்திக் என்னும் வீர்குடி வெள்ளாளர் வகுப்பை சேர்ந்த(அடிக்க வராதீங்க..படத்துல அப்படிதான் சொல்லுறாயிங்க) சிம்புவுக்கும், கேரள கிறிஸ்தவ பெண்ணான திரிஷாவுக்கும் இடையில் நடக்கும் அஜால் குஜால்(அய்யோ..முதல் வரிசையில் உக்கார்ந்தது தப்பா போச்சே..) சாரி..காதலே படத்தின் கரு. இஞ்சினியரிங்க் படித்து விட்டு டைரக்டர் கே.எஸ் ரவிக்குமாரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்க்கும் சிம்புவும், பொலாரிஸ் சாப்ட்வேர் கம்பெனி பஸ்ஸில் மட்டுமே செல்வதாக சொல்லப்படும் திரிஷாவுக்கும் காதல் பற்றிக் கொள்கிறது(வேறு என்னதான் நடக்கும்). மதம் காரணமாக திரிஷா வீட்டில் கடுமையான எதிர்ப்பு(பின்ன இருக்காதா..) அவ்வப்போது நடக்கும் உரசல்களுக்கும் அப்புறம், கவுதம் மேனனுக்கு மட்டும் தெரிந்த சாரி திரிஷாவுக்கு மட்டும் தெரிந்த ஏதோ ஒரு காரணத்திற்காக நிரந்தரமாக பிரிகின்றனர்.பின்னர் ஒன்று சேர்ந்தார்களா என்பது கொடுத்த 100 ரூபாய்க்கு கொஞ்ச நஞ்ச தலைமுடியை பிய்த்து கொண்டு அப்பாவிகளாக படம் பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட கிளைமாக்ஸ்

துடிப்பான சிம்பு, அழகான திரிஷா, இதை வைத்து கொண்டு ஒவ்வொரு பாலிலும் 4, 6 என்று பின்னி இருக்க வேண்டாமா டைரக்டர் சார்..கவாஸ்கர் போல் ஒவ்வொரு ரன்னாக அடிக்கிறார். கடைசி ஒரு பாலில் 40 ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடிக்க முடிகிறது. சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை சுவாராஸ்யமாக படமாக்கியிருக்க வேண்டாமா..எடுத்துக்காட்டு சிம்பு வீட்டில் சிம்பு தங்கையுடன் திரிஷா வந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி..எவ்வளவு ஜாலியாக இருக்க வேண்டும்..ஹூம்… உரைநடையை வாசிப்பது போல் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும், திரிஷாவும் சிம்புவும் பேசிக் கொண்டிடேயிருக்கிறார்கள்.. அப்புறம் கவுதம் மேனனின் டிரேட்மார்க் வசனங்கள்..”நீ அழகா இருக்க..இது எப்படி நடந்ததுன்னு தெரியல..பட் ஐ ஆம் இன் லவ் வித்யூ..” “த்தா..போட்டுருவமா…” போன்ற ஒரே மாதிரியான டயலாக்குகள் மின்னலே படத்திலிருந்து.. இடைவேளையின் போது தியேட்டர் கேண்டினில் கேட்டது..

“இன்னா சார் வேணும்..”

“ப்ச்..சூடா இருக்கு..பார்க்கவும் நல்லா இருக்கு..எப்படி நடந்ததுன்னு தெரியல..ஐ திங்க்..ஐ வாண்ட் வெஜ் பப்ஸ்..”

“அய்ய..பிரியுற மாதிரி சொல்லு சார்..”

“த்தா.. ஒரு வெஜ்பப்ஸ் கொடு..”

“டேய்..யாரைப் பார்த்து “த்தா..” ன்னு சொல்லுற..*****”

“அய்யோ..சாரிண்ணே..ஒரு பப்ஸ் கொடுங்கண்ணே..”

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, படத்தில் நடிப்பதற்கு முன்னால் சிம்பு கையை கட்டியிருக்கவேண்டும்..கையால் வீடு கட்டுவதற்கு பதில் பணக்கார வீட்டு பையன்கள் மாதிரி அடிக்கடி தலையை கோதிக்கொண்டே நன்றாக நடித்திரிக்கிறார். திரிஷாவும் அழகாக இருக்கிறார்..நடிக்கிறார். ஆனால் ஒரு சுவாராஸ்யமும் இல்லாத திரைக்கதைதான் போரடிக்கிறது. அவ்வப்போது வரும் காட்சிகள் தலைநிமிர வைத்தாலும் பக்கத்து சீட்டில் ஒருவர் தூங்கி கொண்டிருந்ததை தெளிவாக பார்க்க முடிந்தது. ஒருவேளை நீங்கள் காதலித்து கொண்டிருந்தால் இந்தப்படம் உங்களுக்கு பிடிக்கலாம். அல்லது கல்லூரி மாணவர்களுக்கு பிடிக்க வாய்ப்பு உண்டு,.,

அடுத்து முக்கியமானது. இசை..ஏ.ஆர் ரகுமான்…வழக்கம்போல் பின்னியிருக்கிறார்..குறிப்பாக “ஓசன்னா..” “ஓமணப்பெண்ணே..” தியேட்டரே பாடுகிறது….உலகத்தரமான இசை. படம் முடிந்து விட்டு வரும்போது இசை மட்டுமே நெஞ்சில் நிற்கிறது. படத்தில் வேறு நகைச்சுவையே இல்லாததால் சிம்புவின் நண்பராக வரும் கேமிராமேன் கணேஷ் சீரியசாக பேசினாலே சிரிக்கிறார்கள். அவரை பச்சைகிளி முத்துச்சரம் படத்தில் டிரைவர் வில்லனாக பார்த்த ஞாபகம். இன்னும் ஒரு நல்ல ஆளைப் போட்டிருந்து நகைச்சுவையை தூக்கலாக கொடுத்திருக்கலாம்..

ஒளிப்பதிவு, எடிட்டிங் கலக்கல்..ஒவ்வொரு காட்சியிலும் இளமை துள்ளுகிறது..அடிக்கடி கட்டிப்பிடிப்பதும், கிஸ் பண்ணுவதும்தான் காதல் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சிம்பு திரிஷாவை அடிக்கடி கட்டிபிடிக்கிறார்..திரிஷாவும் அடிக்கடி, “நட்பு..காதல்” என்று குழப்பமாகி நம்மையும் குழப்புகிறார். ஆனால் குத்துப்பாட்டு, வன்முறை, பஞ்ச் டயலாக்குகள் இல்லாத ஒரு படம் எடுத்ததற்காக கவுதம்மேனனை பாராட்டலாம்..

மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…ஆள விடுங்கடா சாமி..


18 comments:

அப்பாவி முரு said...

//அழகான திரிஷா//

அழகான?? திரிஷா????

செந்தில் நாதன் Senthil Nathan said...

விமர்சனம் சூப்பர்...

//“ப்ச்..சூடா இருக்கு..பார்க்கவும் நல்லா இருக்கு..எப்படி நடந்ததுன்னு தெரியல..ஐ திங்க்..ஐ வாண்ட் வெஜ் பப்ஸ்..”
//

இந்த வரி ரெம்ப சூப்பர்...

☀நான் ஆதவன்☀ said...

:)))

நல்ல விமர்சனம் ராசாண்ணே :)

உயிரோடை said...

//மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…ஆள விடுங்கடா சாமி..//

WELL SAID....

நானும் அதே தான் சொல்றேன்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

இந்த விமர்சனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...

திருமனமாகிவிட்டதன் தாக்கம் விமர்சனத்தில் தெரிகிறது -:))))

சிநேகிதன் அக்பர் said...

//மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…ஆள விடுங்கடா சாமி..//

அப்படியா.

ராம்ஜி_யாஹூ said...

மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…ஆள விடுங்கடா சாமி..//
super lines.

அவிய்ங்க ராசா said...

////////////////////
அப்பாவி முரு said...
//அழகான திரிஷா//

அழகான?? திரிஷா????
27 February 2010 7:49 PM
//////////////////////
ஆமாண்ணே..உபயம் கேமிராமேன்..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ary 2010 7:49 PM
செந்தில் நாதன் said...
விமர்சனம் சூப்பர்...

//“ப்ச்..சூடா இருக்கு..பார்க்கவும் நல்லா இருக்கு..எப்படி நடந்ததுன்னு தெரியல..ஐ திங்க்..ஐ வாண்ட் வெஜ் பப்ஸ்..”
//

இந்த வரி ரெம்ப சூப்பர்...
27 February 2010 8:02 PM
/////////////////////
நன்றி செந்தில்

அவிய்ங்க ராசா said...

/////////////////////
☀நான் ஆதவன்☀ said...
:)))

நல்ல விமர்சனம் ராசாண்ணே :)
27 February 2010 8:13 PM
//////////////////////
நன்றி ஆதவன்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ary 2010 8:13 PM
உயிரோடை said...
//மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…ஆள விடுங்கடா சாமி..//

WELL SAID....

நானும் அதே தான் சொல்றேன்.
27 February 2010 10:00 PM
///////////////////////
படித்தேன் அண்ணே..சூப்பர்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
uary 2010 10:00 PM
வெற்றி-[க்]-கதிரவன் said...
இந்த விமர்சனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...

திருமனமாகிவிட்டதன் தாக்கம் விமர்சனத்தில் தெரிகிறது -:))))
28 February 2010 7:02 AM
//////////////////////
ஹா..ஹா..கரெக்டா எப்படி கண்டுபிடுச்சீங்க..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
அக்பர் said...
//மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…ஆள விடுங்கடா சாமி..//

அப்படியா.
28 February 2010 8:48 AM
யாஹூராம்ஜி said...
மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…ஆள விடுங்கடா சாமி..//
super lines.
28 February 2010 9:11 AM
/////////
ஆமா அக்பர் அண்ணே..நன்றி ராம்ஜி..

மணிப்பக்கம் said...

இதுக்கு மேல கிழிக்காம விட்டீங்களே ... நல்ல விசயம்!

// ஒருவேளை நீங்கள் காதலித்து கொண்டிருந்தால் இந்தப்படம் உங்களுக்கு பிடிக்கலாம். அல்லது கல்லூரி மாணவர்களுக்கு பிடிக்க வாய்ப்பு உண்டு,., //

உண்மைதான்!

கொஞ்சம் நல்ல மூடில் இருந்தாலே படத்தை ரசிக்கலாம்!

EKSAAR said...

அருமை.. பதிவுலகில் உண்மை சொல்லும் ஒருவர் நீங்கள்

என்னுடைய பார்வை
http://eksaar.blogspot.com/2010/03/blog-post.html

ஜான் கார்த்திக் ஜெ said...

//மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…ஆள விடுங்கடா சாமி.//

ஆமாம் ஆமா!! ஒத்துகிறேன்!

Jeeva said...

"விண்ணைத் தாண்டி வருவாயா" ஹைதராபாத்ல டிக்கெட் டே இல்ல அண்ணே, பட் அபிடேர் ரீடிங் யுவர் ப்ளாக் ,
youtube ல songs மட்டும் கேட்டுக்கலாம் போல.

Enjoy Music ....
http://singgingg.blogspot.com/

அனு win கனவுகள் said...

ஒரு அக்மார்க் விமர்சனத்திற்கு நன்றி.

அபுதாபியில் முன்பதிவு செய்து படத்தைப் பார்த்தபின்னர், விமர்சனங்கள் என்ன சொல்கின்றன் என்று பார்த்த எனக்கு ஒரு அதிர்ச்சி தான் காத்து இருந்தது! !

விண்ணைத் தாண்டி வருவாயா, தியேட்டருக்கே வராது என்று எனக்கு மட்டும் தான் தோன்றியது போல இருந்தது ! !

அழகான தித்திக்கும் திரிஷா, அடக்கமான ஜம்பம் விடாத சிம்பு நல்ல கேமரா, ம்யூசிக் ரீரெக்கார்டிங் என எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத ஃபீலீங்.

படம் பார்த்தபின் இரண்டு நாள் வரை தலைவலி என்றால், படத்தின் விமர்சனங்களால் மன வலி...
என்னமோ எனக்கு வயது ஆகிவிட்டதோ என்னுடைய ரசனை சரியில்லையோ என்று...

காதல் கதைகான அழுத்தம் இல்லை ! !
இருவரை நம்பி எடுத்த படம்.

நான் சரியாக தான் இருக்கிறேன் ! ! ! இன்னும் பதினாறில் தான் இருக்கிறேன் என்று உணர்த்தியது உங்கள் விமர்சனம்.

நன்றி நல்ல விமர்சனம் ! ! !

Post a Comment