Friday 19 February 2010

மிரட்டுராங்கையா…..

நம்ம கோவாலு இருக்கானே..பச்சை மண்ணுன்னே..நாட்டு நடப்பு தெரியாத பய…இன்னைக்கு கலைஞருக்கு ஏதும் பாராட்டு விழா நடக்கலைன்னு சொன்னாகூட அப்படியே நம்பிடுவாண்ணே..எப்படித்தான் இந்த சென்னைப் பட்டணத்திலே பொழைக்குறான்னே தெரியலைண்ணே..

போன வாரம் பரபரப்பா எங்கிட்ட வந்தான்..

“ராசா..ராசா..பார்த்தியாடா..எங்க தல அஜீத்..சிங்கம்டா..எவ்வளவு துணிஞ்சு மேடையில பேசிருக்காரு..”

கோவாலு எந்த நடிகருக்கும் தொண்டன் இல்லைண்ணே..ஆனா யாராவது புரட்சிகரமா பண்ணினா உடனே நம்பியிருவான்..ஒருநாள் மசாலா, பஞ்ச் டயலாக் இல்லாத ஒரு படத்துல விஜய் நடிக்கப் போறாருன்னு செய்தி கேட்டு எவ்வளவு சந்தோசப்பட்டான் தெரியுமாண்ணே..

“டே..கோவாலு..இந்த காலத்துல யாரையும் நம்பமுடியாதுடா..நீ வேணா பாரேன்..இன்னும் ஒரு வாரத்துல உங்க தல கலைஞரைப் பார்க்குறாரா இல்லையான்னு..”

“போடா வெண்ணை..எங்க தல புலி..பசிச்சாலும் புலி பர்கர் சாப்பிடாதுடா..”

இன்னைக்கு காலைல தினத்தந்தியப் புரட்டுனவுடனே நேரா கோவாலுகிட்டத்தான் போனேன்..பயபுள்ள ஜன்னி வந்த மாதிரி போர்வையை நல்லா போர்த்திக்கிட்டு தூங்கிகிட்டு இருந்தான்..

“மச்சான் கோவாலு..காலையில பேப்பரைப் பார்த்தியா..”

“அதப்பார்த்துதாண்டா ஜன்னி வந்து படுத்துக்கிடக்கேன்..”

“உலக விவரம் தெரியாத பயபுள்ள இருக்கேயேடா…கவர்மெண்டை பகைச்சுக்க அஜீத் என்ன உன்னை மாதிரி விவரம் தெரியாத புள்ளையா..”

கோவாலு டல்லாகிட்டான்..

“ராசா..இந்த உலகத்தில யாருமே தைரியமா கடைசி வரைக்கும் இருக்க முடியாதாடா..”

“ஏன் இருக்க முடியாது..எங்க பக்கத்து வீட்டு குழந்தைக்கு எவ்வளவு தைரியம் தெரியுமாடா.. தன்னந்தனியா சிம்பு படம் பார்க்கும் தெரியுமா..”

திடிரின்னு எழுந்துட்டான்..

“ராசா..கேக்க மறந்துட்டேன்..சூப்பர் ஸ்டார் ரஜினி கூட அஜீத் பேசுறப்ப எழுந்து கைதட்டுனாருல்ல..டே..அவர் சிங்கம் மாதிரி…

“கோவாலு..இன்னைக்கு முதல் பக்கமே ரஜினி-கலைஞர் சந்திப்புதான்..அஜீத் சந்திப்பு கூட இரண்டாம் பக்கம்தான்..இதுல நடிகர்களை யாரும் மிரட்டவில்லைன்னு பேட்டி வேற..”

பயபுள்ள திரும்பவும் ஒரு மாதிரி ஆகிட்டான்..

“ராசா..ரஜினி அரசியலுக்கு வருவாராடா..” ஏக்கமாக கேட்டான்..

“எந்திரன் படம் ஜூலைல வரப் போகுதுல்ல..அதுக்குள்ள வந்துட்டு திரும்ப போயிருவாரு..”

“ராசா..சீரியசா சொல்லுடா..யாராவது ஒரு தலைவராவது காமராஜர், கக்கன் மாதிரி….”

கோவாலை விடுங்கண்ணே..நீங்க சொல்லுங்க..கோவாலை திருத்த முடியுமாண்ணே..

22 comments:

gumi said...

யோவ்... அஜித்து, தமிழ் திரைப்பட உலகத்திலே , மீச வச்ச, முதுகெலும்பு உள்ள ஒரே ஆம்பள நீ தான்யா..............

யோசிப்பவர் said...

கோவாலு,
இவிய்ங்கள இன்னுமா இந்த ஊரு நம்பிகிட்டு கெடக்கு?!

gumi said...

காலையிலருந்து ஒரு யோசனை, நம்ம எல்லாம், அதான் எல்லா பதிவரும் சேந்து தலைவருக்கு ஒரு விழா எடுக்கலாமா? எல்லோருக்கும் கம்ப்யூட்டர், முடிஞ்சா நெலம். எல்லாரும் யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க.

வானம்பாடிகள் said...

:))

குப்பன்.யாஹூ said...

Thala is always Thala

அன்புடன்-மணிகண்டன் said...

அண்ணே... ஒரு விஷயம் சொல்லுங்க...
ரஜினியோ.. அஜித்தோ.. எதாவது சொல்லலன்னாலும் நொள்ளை.. சொன்னாலும் நொள்ளை...
அஜித்தோ, ரஜினியோ முதல்வரின் வீட்டுக்குப் போனது மன்னிப்பு கேட்கவா என்பது உங்களுக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது..
மன்னிப்பு தான் கேட்டாங்கன்னே வச்சிக்கிட்டாலும், மத்தவங்களால் பேசமுடியாத, பேசக் கூட தைரியம் இல்லாத, விஷயத்தை பேசிட்டு/செஞ்சிட்டு தானேண்ணே, மன்னிப்பு கேக்குறாய்ங்க... அதுகூட அந்த "மத்தவங்க" இவங்களுக்கு ஆதரவு தராததினால தான்...
கரெக்டா???

ச.செந்தில்வேலன் said...

ராசாண்ணே, இப்பத்தான் உங்க பழைய "ஃபார்ம்" வந்திருக்கு. கோவாலு வந்தாத்தாண்ணே ஒரு சுவாரஸ்யம். ஏன்னா நாங்கெல்லாம் கோவாலோட ரசிகர்கள் :)

Dr.P.Kandaswamy said...

gumi said...

//காலையிலருந்து ஒரு யோசனை, நம்ம எல்லாம், அதான் எல்லா பதிவரும் சேந்து தலைவருக்கு ஒரு விழா எடுக்கலாமா? எல்லோருக்கும் கம்ப்யூட்டர், முடிஞ்சா நெலம். எல்லாரும் யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க//
சூப்பர் ஐடியாங்க. எப்போன்னு சொல்லுங்க, நான் மொத ஆளா ஆஜர் ஆகிடரேன்

சி. கருணாகரசு said...

நல்லா சொன்னிங்க... கோபாலுக்கு நாட்டு நடப்பே தெரியல.

ஆதி மனிதன் said...

நக்கலும் நையாண்டியும் கலந்து ஒரு நல்ல பதிவு.

jawaharlal said...

GOOD TO SEE

அவிய்ங்க ராசா said...

/////////////////////
ents:

gumi said...
யோவ்... அஜித்து, தமிழ் திரைப்பட உலகத்திலே , மீச வச்ச, முதுகெலும்பு உள்ள ஒரே ஆம்பள நீ தான்யா..............
18 February 2010 10:40 PM
///////////////////////
என்ன சொல்லுறது..)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
யோசிப்பவர் said...
கோவாலு,
இவிய்ங்கள இன்னுமா இந்த ஊரு நம்பிகிட்டு கெடக்கு?!
18 February 2010 11:09 PM
////////////////////////////
கோவாலு பச்சை மண்ணுன்னே..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ary 2010 12:45 AM
வானம்பாடிகள் said...
:))
19 February 2010 1:10 AM
////////////////////////
நன்றி வானம்பாடிகள்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ary 2010 1:10 AM
குப்பன்.யாஹூ said...
Thala is always Thala
19 February 2010 1:14 AM
/////////////////////
யாருண்ணே தல..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
ruary 2010 1:14 AM
அன்புடன்-மணிகண்டன் said...
அண்ணே... ஒரு விஷயம் சொல்லுங்க...
ரஜினியோ.. அஜித்தோ.. எதாவது சொல்லலன்னாலும் நொள்ளை.. சொன்னாலும் நொள்ளை...
அஜித்தோ, ரஜினியோ முதல்வரின் வீட்டுக்குப் போனது மன்னிப்பு கேட்கவா என்பது உங்களுக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது..
மன்னிப்பு தான் கேட்டாங்கன்னே வச்சிக்கிட்டாலும், மத்தவங்களால் பேசமுடியாத, பேசக் கூட தைரியம் இல்லாத, விஷயத்தை பேசிட்டு/செஞ்சிட்டு தானேண்ணே, மன்னிப்பு கேக்குறாய்ங்க... அதுகூட அந்த "மத்தவங்க" இவங்களுக்கு ஆதரவு தராததினால தான்...
கரெக்டா???
19 February 2010 3:09 AM
///////////////////////
கரெக்டுதாண்ணா..ஆனா இவிங்களை நம்பி ஏமாறுறாயிங்க பாருங்க..அவியிங்களைத் தான் கிண்டல் பண்ணினேன்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
uary 2010 3:09 AM
ச.செந்தில்வேலன் said...
ராசாண்ணே, இப்பத்தான் உங்க பழைய "ஃபார்ம்" வந்திருக்கு. கோவாலு வந்தாத்தாண்ணே ஒரு சுவாரஸ்யம். ஏன்னா நாங்கெல்லாம் கோவாலோட ரசிகர்கள் :)
19 February 2010 3:48 AM
//////////////////////////
ஆமாண்ணே..இப்பதான் நம்ம பழைய சோறு சாப்பிட்டமாதிரி இருக்கு,.,.)))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Dr.P.Kandaswamy said...
gumi said...

//காலையிலருந்து ஒரு யோசனை, நம்ம எல்லாம், அதான் எல்லா பதிவரும் சேந்து தலைவருக்கு ஒரு விழா எடுக்கலாமா? எல்லோருக்கும் கம்ப்யூட்டர், முடிஞ்சா நெலம். எல்லாரும் யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க//
சூப்பர் ஐடியாங்க. எப்போன்னு சொல்லுங்க, நான் மொத ஆளா ஆஜர் ஆகிடரேன்
19 February 2010 4:11 AM
////////////////////////
பிரசென்ட் சார்..))

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ary 2010 4:11 AM
சி. கருணாகரசு said...
நல்லா சொன்னிங்க... கோபாலுக்கு நாட்டு நடப்பே தெரியல.
19 February 2010 4:31 AM
//////////////////////
கோவாலு பச்சை மண்ணுன்னே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ary 2010 4:31 AM
ஆதி மனிதன் said...
நக்கலும் நையாண்டியும் கலந்து ஒரு நல்ல பதிவு.
19 February 2010 8:44 AM
jawaharlal said...
GOOD TO SEE
19 February 2010 10:15 AM
///////////////////
நன்றி ஆதி, ஜவஹர்..

Veliyoorkaran said...

@“ராசா..சீரியசா சொல்லுடா..யாராவது ஒரு தலைவராவது காமராஜர், கக்கன் மாதிரி….”
கோவாலை விடுங்கண்ணே..நீங்க சொல்லுங்க..கோவாலை திருத்த முடியுமாண்ணே..//
வாயை கொடுத்து வாங்கிகட்டிகொண்ட தல ஒழிக.. இந்தியாவின் ஜனாதிபதி கோவாலு வாழ்க...கோவாலை திருத்த முயற்சி பண்ணும் அவிங்க ராசா ஒழிக...!!
இப்படிக்கு,
வெளியூர்க்காரன்.
விஜய் ரசிகர் மன்றம்,
சிங்கப்பூர் கிளை...

adam said...

அவங்க நடிகங்க சரி.. அவரு ?

Post a Comment