Monday, 22 February, 2010

அய்யா சாமி…தர்மபிரபு…

அப்போதுதான் அவளைக் கவனித்தேன். ஒடிசலான தேகம், கருப்பேறிய தோல், கிழிந்துபோய் கந்தலாக உடம்பை அங்கெங்கு பற்றியிருக்கும் சேலை..பட்டினியை காட்டுவதற்கு ஏதுவாக ஒடுங்கி போயிருக்கும் வயிறு, தண்ணீர் குடிக்காமல் உலர்ந்து போன நாக்கு, பிச்சை எடுப்பதற்காகவே இவ்வுலகில் தருவிக்கப்பட்ட ஒரு பாவமும் அறியாத குழந்தை.. நான் குளிர்பானம் அருந்துவதைப் பார்த்து மெதுவாக என் அருகில் வந்தாள்..

“அய்யா சாமி..தர்மபிரபு..”

எனக்கு எரிச்சலாக வந்தது. நண்பன் ஒருவனுக்காக காத்திருந்து இந்த பழமுதிர் கடையில் ஒதுங்கியிருந்தேன். பகல் 2 மணி.,மதிய உணவு வேறு சாப்பிடவில்லை. வெயில் மூளையை ஊடுருவி, நரம்பை சோதித்தது. எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் நாக்கு கூட இன்று மௌனமாக தண்ணீர் கேட்டது. ஏதாவது கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாம் என்று கடைப்பக்கம் ஒதுங்கினால் இப்படி ஒரு தொல்லை.

“இல்லைம்மா..போ..”

“அய்யா சாமி..தர்மபிரபு..வெயில் தாங்கலை சாமி..ஒரு சர்பத் வாங்கிக் கொடுங்க சாமி..”

“இல்லைன்னு சொன்னா போ…”

அவள் போகவில்லை..மாறாக நான் குடிக்கும் கூல்டிரிங்க்ஸை ஆசையாக பார்த்தாள். என்னால் குடிக்க முடியவில்லை. திரும்பிக் கொண்டேன்.. அவளால் தாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை போலும்..இந்த முறை குரல் இன்னும் அழுத்தமாக கேட்டது..

“அய்யா சாமி..தர்மபிரபு..இந்த குழந்தைக்காகவாவது..”

திரும்பி குழந்தையைக் கவனித்தேன். 2 வயது இருக்கும். அம்மாவை இறுகப் பற்றி இடுப்பில் அமர்ந்திருந்தது..அதனுடைய கைகள் அம்மாவின் கழுத்தை இறுக சுற்றியிருந்தது. பசி கண்களில் தெரிய அம்மாவின் தோள்களில் சாய்ந்திருந்தது.”அம்மா பார்த்து கொள்வாள்” என்ற நம்பிக்கை பார்வையில் தெரிந்தது.. உடம்பு முழுவதும் புழுதி..என் மனம் ஒரு நிமிடத்தில் ஆடிபோனது. இவர்களுக்கு வாங்கி கொடுத்தால் இது போன்றவர்களை ஊக்குவிப்பது போலாகாதா..மனம் சடுகுடு ஆடியது.. நான் ஒன்றும் பேசவில்லை. செல்பேசி அழைத்தது. நண்பன் தான்..

“டே..ராசா..எங்கேடா இருக்கே..”

“சீக்கிரம் வாடா..டிக்கெட் புக் பண்ணிட்டியா..”

“சத்யம் இல்லைடா..புல் ஆகிடுச்சு..”

“சரி..ஐநாக்ஸ்”

“டிரை பண்ணுறேன்..”

“எவ்வளவு டிக்கெட்..”

“120 ரூபாய்..பிளஸ் டாக்ஸ்”

“சரி..வேற என்ன பண்றது..மூணு வாரமா ஹௌஸ் புல்..புக் பண்ணிடு..”

இப்போது குழந்தை வீய் என்று அழுக ஆரம்பித்தது. பசி, தாகம், வெயில், அனைத்தும் சேர்ந்து அழுத்தியது போல..கடைக்காரர் வாசலுக்கு வந்தே விட்டார்..

“வந்திட்டியா..ஒரு தடவை சொன்னா உனக்கு பத்தாது..போறியா, இல்லை சுடு தண்ணியை ஊத்தவா..”

வார்த்தைகளிலேயே சுடுதண்ணீரை ஊற்றினார்..என்னைத் திரும்பிப் பார்த்தார்..

“இதுகளுக்கு இதே பொழைப்பா போச்சு சார்..தெருவுக்கு தெரு இதுகதான் திரியுது சார்..பிச்சை எடுக்கறதுக்குன்னே பெத்து விட்டுருக்காயிங்க..நீ எதுவும் குடுக்காத சார்..”

சட்டைப் பையில் எடுத்த காசை அப்படியே திரும்ப வைத்தேன்..

“பசிக்குது சாமி..ஒரு ரூபாயாவது குடுங்க சாமி..நல்லா இருப்பிங்க..குழந்தைக்கு ஏதாவது வாங்கிக்குருவேன்..”

கடைக்காரர் கையை ஓங்கினார்..

“இப்ப போறியா..இல்லையா..”

அந்தப் பெண் பயந்து பின்வாங்கினாள்..குழந்தை இன்னும் சத்தமாக அழுக ஆரம்பித்து.இந்த முறை தேம்பி தேம்பி….அழுகையில் சத்ததில் பசி ஒன்றே தெரிந்தது..அவள் கண்களை பார்த்தேன்....”ஒரு தண்ணீராவது வாங்கி தாயேன்டா..” என்று கெஞ்சுவது போலிருந்தது..அவள் ஆற்றாமையுடன் பின்வாங்கினாள்.. அடுத்த கடை நோக்கி மெதுவாக நடந்து சென்றாள்..

திரும்பவும் செல்பேசி அழைக்கவே, எடுத்தேன்..அம்மா..

“தம்பி ராசா..எங்க இருக்க..”

“நண்பனை பார்க்க வந்தேன்..அப்படியே ரோட்டோரமா..”

“அய்யோ..வெயிலிலுயா நிக்குற..வெயில் கொளுத்துது ராசா..ஏதாவது கடையோரம நின்னுக்கப்பா..ஒரு தண்ணியாவது வாங்கி குடிப்பா..என்ன..வாங்கினியா..”

என்னால் பேசமுடியவில்லை..திரும்பி அவளைப் பார்த்தேன்..இந்த முறை மிகவும் தளர்ந்திருந்தாள்..கூல்டிரிங்க்ஸ் குடிக்கும் இன்னொருத்தரைப் பார்த்து சன்னமாக கேட்டாள்..

“அய்யா சாமி..தர்மபிரபு..”

11 comments:

தாராபுரத்தான் said...

நானும் ஒவ்வொரு முறையும் கொடுக்காமல் விட்டு விட்டு தூக்கம் வராம இருக்க வேண்டியதாகி விடுகிறது. இனி மேல் கொடுத்துவிடணும் சார்.

தாராபுரத்தான் said...

நானும் ஒவ்வொரு முறையும் கொடுக்காமல் விட்டு விட்டு தூக்கம் வராம இருக்க வேண்டியதாகி விடுகிறது. இனி மேல் கொடுத்துவிடணும் சார்.

Kuppathu Raja said...

அண்ணே ! இதே மாதிரி எனக்கு ஒரு சம்பவம் நடந்தது! கொடுக்காமல் இருந்து ஒரு வித மன அழுத்தத்தோடு மீண்டும் தேடி சென்று கொடுத்தேன். மனசு செத்துப்போச்சுண்ணே

Saravana said...

Ennavo ponga Raja.
Romba nehilva irundhadhu.
Rendu sottu kanneer kooda....
Pala naeram yedho idhu oru emaathu velayonnu nenaichi kodukkama vandhudarom.
Aana unmai ennannaa, idhula emaarnthalum nammoda selavu kanakkula, idhu onnum periya visayame illa. Adhunala ippellam yaar kettalum koduthuradhu

ராமுடு said...

Konjam kashtam thaan raasa.. Always there is a fight between Heart and Mind and finally Heart will win and it should.

Thanks for excellent article.

sekar said...

6 மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு பிச்சை எடுக்கும் பெண்ணைப் பார்த்தேன். நான் பிச்சை எடுப்பதை ஊக்குவிக்கக் கூடாதென்று எதுவும் தரவே இல்லை.(எழவெடுத்த நாகரிகம் தான்) கடையிலிருந்து வேகமாக நடக்க ஆரம்பித்து 5 நிமிடம் கழித்து மனசு உறுத்தி திரும்பிப் போய் அந்த பெண்ணைத் தேடினேன். காணவே இல்லை. இப்பொழுதும் அந்த குற்ற உணர்வு உள்ளது.

taaru said...

Raja said...
“அய்யா சாமி..தர்மபிரபு..”
ஏன் இப்பிடி?!! போதும் இத்தோட நிறுத்திக்குவோம்... அது என்னாண்டே தெரியல வைகை தண்ணி குடிச்சு இருந்தாலே இப்படி தான் போல... ஏண்ணே இப்டி மனச பிரான்டிட்டு இருக்குறத மறுக்கா ஞாபகப்படுத்துறது... நடக்கட்டும் வேலைகள்..

adam said...

என்ன சார் இது.. என் டைம idhungalukaga வேஸ்ட் பண்ணிட்டிங்களே !!

晴天娃娃 said...

情人視訊聊天室 |
影音視訊交友聊天室 |
中部人聊天室 |
免費視訊聊天室 |
豆豆成人聊天室 |
免費視訊 |
土豆網免費影片 |
小高聊天室 |
小高深情聊天室 |
夢幻家族聊天室 |
383成人視訊 |
情人視訊辣妹聊天網 |
影音聊天網 |
免費視訊聊天 |
辣妹視訊 |
免費視訊聊天室 |
UKISS聊天室 |
完美女人視訊聊天室 |
免費視訊聊天室 |
視訊美女hibb |
視訊妹妹 |
視訊激麻館 |
完美女人視訊 |
完美女人視訊網 |
完美女人影音視訊 |
完美女人免費贈點視訊 |
免費完美女人視訊 |
完美女人影音聊天網 |
完美女人視訊聊天室 |
情色皇朝聊天網 |
影音聊天秀 |
UT視訊辣妹免費聊天室 |
MSN視訊哈拉交友聊天王國 |
影音視訊交友網 |
麻辣視訊聊天網 |
一對一視訊辣妹 |
ONS視訊聊天室 |
漂亮寶貝視訊聊天 |
全球華人視訊網 |
亞洲成人視訊下載 |
UT哈拉聊天室 |
視訊交友 |
大陸戀愛 |
后宮免費視訊影音 |
后宮視訊 |
0401視訊聊天室 |
一夜情聊天室 |
免費視訊交友 |
視訊交友 |
网络視訊交友 |
0204視訊交友 |
辣妹视訊 |
情人视訊网d760 |
168视訊聊天室一對一 |
168视訊聊天室 |
辣妹妹影音视訊聊天室 |
影音视訊聊天室 |
546视訊聊天室 |
交友視訊網 |

அவிய்ங்க ராசா said...

Thanks thaaraapurathhan, taru,ramudau, sekar, kuppathu raja,adam and china karar..

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Post a Comment