Wednesday, 28 October 2009

நன்றியோடு விடைபெறுகிறேன்

தலைப்பைப் பார்த்ததுமே “சரியான முடிவு எடுத்தீங்க..”, “வயித்துல பாலை வார்த்தீங்க” ன்னு சந்தோசப்பட்டு பின்னூட்டம் போட்டுடாதீங்கண்ணே..எல்லார்ட்டயும் மிஞ்சி இருக்குற உயிரை எடுத்துட்டுதான் பதிவுலகத்தை விட்டுப் போவேன்..விஷயம் என்னவென்றால், நான் அமெரிக்கா வந்த கடமை இனிதே முடிந்தது(கொஞ்சம் தெளிவா சொன்னா, “துரத்தி விடுறாயிங்க..) அதனால நவம்பர் கடைசி நம்ம ஊருக்கு கிளம்புறேன். அதே கம்பெனியில, அதே பிராஜெக்ட்ல, இங்க வேலை பார்க்குறவயிங்க உசிரை எடுக்கப் போறேன்..

வீட்டுல இருக்குறவங்க எல்லாரையும் பார்க்கப்போறோம்னு சந்தோசமா இருந்தாலும், மனசோட மூளையில “அடடா..சொந்த வீடு மாதிரி 2 வருசம் இருந்துட்டு போறோமே” என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது..

எப்போதும் சினேகமாக சிரிக்கும் பக்கத்து வீட்டு அமெரிக்க குழந்தை, வெளியில் வந்தால் ஏதோ அதனுடைய உணவை அபகரிக்கப்போவதாய் நினைத்து உர்ரென்று பார்க்கும் டேஞ்சர் நாய், ரோட்டில் நின்று கண்ணை அகலத்திறந்து பார்த்தால் எந்திர ரோபோக்கள் போல் திரியும் கார்கள், யாரென்று தெரியாவிட்டாலும் நேருக்கு நேர் பார்க்கும்போது புன்னகை சிந்தும் மனிதர்கள், சூரியனோடு எப்போதும் மல்லுக்கு நிற்கும் மெல்லிய குளிர், “நாங்க எல்லாம் அழகுதாண்டா..” என்று இருமாப்போடு நிற்கும் பசுமை நிறைந்த மரங்கள், அரைகுறையாய் ஆடை அணிந்து இளைஞர்களின் மனதில் தினமும் புட்பால் விளையாடும் அபார்ட்மெண்ட் ரிஷப்சனிஸ்ட், இரவில் நிலா வெளிச்சத்தோடு சண்டை போடும் மின்விளக்குகள், “இவிங்களுக்கெல்லாம் குளிர் அடிக்காதா” என்று பார்த்தவுடன் கேட்கத்தோன்றும் யுவதிகள், எப்போதும் “பேஸ்பால்” கமெண்டரி ஓடிக் கொண்டிருக்கும் கேண்டின் தொலைக்காட்சி, இப்படி ஒரு கடையில வாங்குவதற்கு கொடுத்து வைத்திருக்கனும் என்று ஏங்க வைக்கும் “வால்மார்ட்”, பர்கர் சாப்பிடுவதை தினப்பழக்கமாக்கும் வீதிதோறும் “மெக்டொனால்ஸ்”, எப்போதும் மர்மமான புன்னைகயுடன் தீபம் ஏந்தி நிற்கும் சுதந்திர தேவி சிலை,…60 வயது தாத்தா கார் ஓட்டினாலும் கிளிப்பிள்ளைக்கு சொல்லுவது போல் விளக்கும் போக்குவரத்து விதிகளின் போர்டுகள், திரைப்படங்களில் கனவு காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிந்த பனி மழை, கொஞ்சம் ஏமாந்தாலும் சேர்த்து வைத்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளும் கேசினோக்கள், திருட்டுத்தனமாக போக நினைக்கும் நைட் கிளப்புகள், “ஹேய் டியூட்..ஹவ் ஆர் யூ” என்று தெனாவட்டாக கேட்கும் 4 வயது குட்டிப் பிசாசுகள்…”சீ..ரொம்ப மோசம்” என்று கண்ணை மூடிக்கொள்ள முயன்றாலும், விரல் இடுக்கில் கண்ணைத் திறந்து ஆவலாய் பார்க்கத் தோன்றும் நீச்சல் குளங்கள், சரவண பவன் மீல்ஸை கீழே கொட்டி சாம்பாரோடு சாப்பிடத் தோன்றும் சாலைகள், “என் புருசன் சாகக்கிடக்குறாரு..வந்து காப்பாத்துங்க” என்று கேட்டால் “சாரி…அப்பாயிண்ட்மென்ட் இருக்கா” என்று கேட்கும் மருத்துவமனைகள், எப்படா மாட்டுவாயிங்க என்று சாலை ஓரம் பதுங்கி நின்று கொடுத்த காசுக்கு மேல் வேலை பார்க்கும் 911 காவலர்கள், லஞ்சம் என்ற வார்த்தையையே அகராதியில் பார்த்திராத அரசு அலுவலகங்கள்…இன்னும் எவ்வளவோ…

நம்ம ஊருக்கு வந்து ஒரு நாளைக்கு மட்டும் எதையோ பிரிந்து வந்தார்போல் இருக்கும் என நினைக்கிறேன்..அடுத்த நாள், முனியாண்டி விலாஸில் 4 புரோட்டாவை சால்னாவில் ஊற வைத்து, பக்கத்தில் ஒரு ஆப்பாயில் வைத்து ஒரு சாத்து சாத்துனா..”போங்கையா, நீங்களும் உங்க அமெரிக்காவும்” என்று தோணும்…

56 comments:

dunga maari said...

welcome back! Write more!!

jigopi@yahoo.co.in

Anonymous said...

even u go to india, keep writing!

Pradeep

Senthil said...

vaanga ! vaanga!

Malini's Signature said...

தலைப்பை பாத்ததும் என்ன ஆச்சு இவிங்களுக்குன்னு தான் பார்த்தேன்...இங்கே ரசித்து எல்லாம் போதும் சொர்கமே என்றாலும் நம்ம ஊரு நம்ம ஊரூ தாங்க

//“என் புருசன் சாகக்கிடக்குறாரு..வந்து காப்பாத்துங்க” என்று கேட்டால் “சாரி…அப்பாயிண்ட்மென்ட் இருக்கா” என்று கேட்கும் மருத்துவமனைகள்//

ஆனா நீங்க விளையாட்ட சொன்ன இந்த விசயம் ரொம்ப உண்மைங்க...இதனாலே பாதி வியாதி காணாமலே போயிடும்.

உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் :-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ராசாண்ணே, நீங்க மட்டும் திரும்ப வர்றீங்களா? அப்ப கோவாலு? கோவாலப் பத்தி ஒன்னுமே சொல்லாதது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்குண்ணே!!

சென்ஷி said...

//முனியாண்டி விலாஸில் 4 புரோட்டாவை சால்னாவில் ஊற வைத்து, பக்கத்தில் ஒரு ஆப்பாயில் வைத்து ஒரு சாத்து சாத்துனா..”போங்கையா, நீங்களும் உங்க அமெரிக்காவும்” என்று தோணும்…//

:)

உண்மைதான்.. வெல்கம்முங்கோ!

உண்மைத்தமிழன் said...

வாங்க ராசா.. வாங்க..!

கவலையேபடாதீங்க.. ஏர்போர்ட்ல இறங்கினவுடனேயே நம்மாளுகளோட மல்லுக் கட்டத் தொடங்கிரலாம். அப்புறம் அதுவே போகப் போகப் பழகிரும்.. என்ன இருந்தாலும் நம்ம தாய்மொழில ஒருத்தனை ஒருத்தன் திட்டுறதுல இருக்குற சுகம் வேற எதுலயாச்சும் வருமாங்க..!

ஆட்டோக்காரன் உங்களுக்காக காத்துக்கிட்டிருக்கான்..!

Anonymous said...

All together only 2 years in USA? Come on! You should stay for few more!

Welcome back.

I hope you work for Infosys, Wipro or one of the top companies at Chennai or Bangalore.

லெமூரியன்... said...

வாழ்த்துக்கள்.....தாய் பூமியில உங்க காலடி பட்டு வந்து நம்ம பயகளோட ஜோதில கலந்துருங்க...பரவாஇல்ல நீங்க இங்க திரும்ப வந்த போதும் உங்களுக்கு ப்ராஜெக்ட் இருக்கே....நா வேலை செஞ்ச ப்ராஜெக்ட் ஊத்தி மூடிட்டாங்க...வெளியே போக சொல்லிட்டான் கம்பெனி காரன்(அமெரிக்கால இல்ல .....இங்கதான்..)

Anonymous said...

//“என் புருசன் சாகக்கிடக்குறாரு..வந்து காப்பாத்துங்க” என்று கேட்டால் “சாரி…அப்பாயிண்ட்மென்ட் இருக்கா” என்று கேட்கும் மருத்துவமனைகள்//

Sorry friend.. very wrong understanding... US is one of the best place in the world when comes to human life's value. If you call a 911 and your are taken for Emergency room for any reason even if its not life threatening. depending upon the severity of the condition, the treatment is given.

The humanity and medical system in India is pathetic.

~ An Indian who missed American life. :-(

☀நான் ஆதவன்☀ said...

வாங்கண்ணே வாங்க.... சென்னையே களைகட்ட போகுது உங்க வருகையால :)

vasu balaji said...

ஆஹா. வாங்க ராசா. சென்னைக்கா வறீங்க. மறக்காம கோவாலுவையும் கூட்டியாங்க.

Anonymous said...

Rassaa are welcome chennaipattinam

Local Gobaluu
Manthaveli.

தமிழ் நாடன் said...

அருமை! நீங்க ஊருக்கு வர்ரத இல்ல! நீங்க இழக்கழப்போறவைகளை சொன்ன விதம்.

பரோட்டா?!! சான்ஸே இல்ல. நம்மூரு நம்மூருதான்.

Sharah said...

Beautiful Presentation...

வெற்றி-[க்]-கதிரவன் said...

tamilnaattukku pora date ?

ரோஸ்விக் said...

நீங்க சொல்றது உண்மைதான் ராசா...மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். பகவத்கீதையின் வசனங்கள் தான்..."எதை கொண்டு வந்தோம்...இழந்ததற்காக வருந்துவதற்கு" ...நம்ம ஊருக்குத் தானே வாறீங்க...வாங்க... வாங்க...இங்குள்ள இனிமைகளை அனுபவிக்கலாம். நண்பர் சொன்னது மாதிரி சண்டை போட இங்க நிறைய (பேரு) இருக்கு....:-)

உங்கள் எழுத்துக்களுக்கு சொல்ல வேண்டியதில்ல....அருமையான இயல்பான நடையில்...நாங்க பார்க்காத அமெரிக்காவை கொண்டுவந்து அதைப் பாக்கணும்னு ஆவலை உண்டாக்கிட்டீங்க....

எப்புடியா இருந்தாலும் அவய்ங்கனால நம்ம இல்லாம வேலை பார்க்க முடியாது....

Vee said...

//முனியாண்டி விலாஸில் 4 புரோட்டாவை சால்னாவில் ஊற வைத்து, பக்கத்தில் ஒரு ஆப்பாயில் வைத்து ஒரு சாத்து சாத்துனா..”போங்கையா, நீங்களும் உங்க அமெரிக்காவும்” என்று தோணும்…

Very true. When we are in India we would envy people who is going to the US. But when we are here in US we would envy people who are going to India. (appo poga vendiyathane nu ellam kutharkkama kekkapidathu).

Vee said...

//Sorry friend.. very wrong understanding... US is one of the best place in the world when comes to human life's value. If you call a 911 and your are taken for Emergency room for any reason even if its not life threatening. depending upon the severity of the condition, the treatment is given.

The humanity and medical system in India is pathetic.

~ An Indian who missed American life. :-( //

அட போய்யா. குழந்தை கீழ விழுந்து ரத்தம் வருது. ரொம்ப serious இல்ல. ஆனா உடனே first aid பண்ணிட்டா நல்லது. இதுக்கும் 911 தான் கூப்புடனும். நம்ம ஊர்ல ல simple a முடியற விசயம். இங்கன படுத்திருவானுங்க.

Anonymous said...

இந்தியாவிற்கு திரும்ப போறீங்க.வாழ்த்துக்கள். நான் சிங்கைல இருந்து இந்தியா போக எப்படி எல்லாமோ என் மேலாளர்கிட்ட துண்டு போட்டு பாத்துகிட்டு இருக்கேன் ...ஒண்ணும் நடக்கிற மாதிரி தெரியல.

நீங்க சொன்ன விஷயங்களுக்காகவே இன்னொரு முறை அமெரிக்கா போக மனதின் மூலையில் ஒரு ஆசை உண்டு....
-பயபுள்ள.

Anonymous said...

anne vee... first aid kodukkura samacharkkkthuu ellam hospital poganum nenaikkira mentality iruthuchina onnum panna mudiyathu.... having personally experienced the medical facilities in Usa for a long time and after india return, its horrible here...

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
gopi g said...
welcome back! Write more!!

jigopi@yahoo.co.in
28 October, 2009 9:01 PM
Anonymous said...
even u go to india, keep writing!

Pradeep
28 October, 2009 9:25 PM
Senthil said...
vaanga ! vaanga!
///////////////////////
நன்றி கோபி, செந்தில், பிரதீப்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
r, 2009 9:44 PM
ஹர்ஷினி அம்மா said...
தலைப்பை பாத்ததும் என்ன ஆச்சு இவிங்களுக்குன்னு தான் பார்த்தேன்...இங்கே ரசித்து எல்லாம் போதும் சொர்கமே என்றாலும் நம்ம ஊரு நம்ம ஊரூ தாங்க

//“என் புருசன் சாகக்கிடக்குறாரு..வந்து காப்பாத்துங்க” என்று கேட்டால் “சாரி…அப்பாயிண்ட்மென்ட் இருக்கா” என்று கேட்கும் மருத்துவமனைகள்//

ஆனா நீங்க விளையாட்ட சொன்ன இந்த விசயம் ரொம்ப உண்மைங்க...இதனாலே பாதி வியாதி காணாமலே போயிடும்.

உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் :-)
28 October, 2009 9:48 PM
///////////////////////
நன்றி ஹர்ஷினி அம்மா..நான் விளையாட்டாக சொன்னாலும் அவசர மருத்துவ தேவைகளுக்கு இங்கு சிறப்பாக கவனிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்..

அவிய்ங்க ராசா said...

//////////////////
ber, 2009 9:48 PM
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
ராசாண்ணே, நீங்க மட்டும் திரும்ப வர்றீங்களா? அப்ப கோவாலு? கோவாலப் பத்தி ஒன்னுமே சொல்லாதது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்குண்ணே!!
28 October, 2009 9:49 PM
/////////////////
ஹி..ஹி..செந்திலண்ணே..கோவாலு இல்லாம ராசாவா..அவனையும் துரத்தி விடுறாயிங்க..அவனும் கூட வர்றான்..

அவிய்ங்க ராசா said...

///////////////////
ber, 2009 9:49 PM
சென்ஷி said...
//முனியாண்டி விலாஸில் 4 புரோட்டாவை சால்னாவில் ஊற வைத்து, பக்கத்தில் ஒரு ஆப்பாயில் வைத்து ஒரு சாத்து சாத்துனா..”போங்கையா, நீங்களும் உங்க அமெரிக்காவும்” என்று தோணும்…//

:)

உண்மைதான்.. வெல்கம்முங்கோ!
28 October, 2009 9:51 PM
//////////////////////
நன்றி சென்ஷி..அங்கு எல்லோரையும் சந்திக்க ஆசை..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
er, 2009 9:51 PM
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாங்க ராசா.. வாங்க..!

கவலையேபடாதீங்க.. ஏர்போர்ட்ல இறங்கினவுடனேயே நம்மாளுகளோட மல்லுக் கட்டத் தொடங்கிரலாம். அப்புறம் அதுவே போகப் போகப் பழகிரும்.. என்ன இருந்தாலும் நம்ம தாய்மொழில ஒருத்தனை ஒருத்தன் திட்டுறதுல இருக்குற சுகம் வேற எதுலயாச்சும் வருமாங்க..!

ஆட்டோக்காரன் உங்களுக்காக காத்துக்கிட்டிருக்கான்..!
28 October, 2009 10:00 PM
///////////////////////
ஹா..ஹா..29 வருசம் அங்கேயே இருந்ததால எல்லாம் பழகிப் போயிடுச்சு அண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Anonymous said...
All together only 2 years in USA? Come on! You should stay for few more!

Welcome back.

I hope you work for Infosys, Wipro or one of the top companies at Chennai or Bangalore.
///////////////////////
90% கரெக்டா சொல்லிட்டீங்கண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
lemurya said...
வாழ்த்துக்கள்.....தாய் பூமியில உங்க காலடி பட்டு வந்து நம்ம பயகளோட ஜோதில கலந்துருங்க...பரவாஇல்ல நீங்க இங்க திரும்ப வந்த போதும் உங்களுக்கு ப்ராஜெக்ட் இருக்கே....நா வேலை செஞ்ச ப்ராஜெக்ட் ஊத்தி மூடிட்டாங்க...வெளியே போக சொல்லிட்டான் கம்பெனி காரன்(அமெரிக்கால இல்ல .....இங்கதான்..)
28 October, 2009 11:04 PM
/////////////////////////
வருத்தமா இருக்கு லெமூரியா..((

அவிய்ங்க ராசா said...

////////////////////////
nonymous said...
//“என் புருசன் சாகக்கிடக்குறாரு..வந்து காப்பாத்துங்க” என்று கேட்டால் “சாரி…அப்பாயிண்ட்மென்ட் இருக்கா” என்று கேட்கும் மருத்துவமனைகள்//

Sorry friend.. very wrong understanding... US is one of the best place in the world when comes to human life's value. If you call a 911 and your are taken for Emergency room for any reason even if its not life threatening. depending upon the severity of the condition, the treatment is given.

The humanity and medical system in India is pathetic.

~ An Indian who missed American life. :-(
28 October, 2009 11:21 PM
////////////////////////
நகைச்சுவைக்காக கொஞ்சம் அதிகம் சொன்னதை ஒத்துக் கொள்கிறேன்…ஆனால் ஏதாவது அவசரம் என்று போனால், அப்பாயிண்ட்மென்ட், இன்சூரன்ஸ் பார்ம் என்று உயிரை எடுக்கிறார்கள்..

அவிய்ங்க ராசா said...

//////////////////
r, 2009 11:21 PM
☀நான் ஆதவன்☀ said...
வாங்கண்ணே வாங்க.... சென்னையே களைகட்ட போகுது உங்க வருகையால :)
28 October, 2009 11:39 PM
///////////////////////
ஆஹா…ஆதவன் அண்ணே..சென்னை என்னை “போடா” என்று சொல்லாமல் இருந்தால் சரி..

அவிய்ங்க ராசா said...

////////////////////
er, 2009 11:39 PM
வானம்பாடிகள் said...
ஆஹா. வாங்க ராசா. சென்னைக்கா வறீங்க. மறக்காம கோவாலுவையும் கூட்டியாங்க.
29 October, 2009 12:58 AM
//////////////////////
கோவாலு இல்லாம ராசா எப்படிண்ணே..))

அவிய்ங்க ராசா said...

////////////////
tober, 2009 12:58 AM
Anonymous said...
Rassaa are welcome chennaipattinam

Local Gobaluu
Manthaveli.
////////////////
ஆஹா..அங்க ஒரு கோவாலுவா..நாடு தாங்காதுண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////
r, 2009 1:49 AM
தமிழ் நாடன் said...
அருமை! நீங்க ஊருக்கு வர்ரத இல்ல! நீங்க இழக்கழப்போறவைகளை சொன்ன விதம்.

பரோட்டா?!! சான்ஸே இல்ல. நம்மூரு நம்மூருதான்.
29 October, 2009 2:49 AM
///////////////////
ஆமாண்ணே…சொர்க்கமே என்றாலும், நம்ம ஊரு போல வருமா..

அவிய்ங்க ராசா said...

//////////////////
er, 2009 2:49 AM
Spice said...
Beautiful Presentation...
29 October, 2009 3:13 AM
/////////////////
நன்றி ஸ்பைஸ்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
er, 2009 3:13 AM
[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
tamilnaattukku pora date ?
29 October, 2009 5:10 AM
////////////////////////
நவம்பர் 21 பித்தன்..பிரபல பதிவர் பற்றிய உங்கள் பதிவை திடீர்னு காணோம்..)

அவிய்ங்க ராசா said...

///////////////////////
ரோஸ்விக் said...
நீங்க சொல்றது உண்மைதான் ராசா...மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். பகவத்கீதையின் வசனங்கள் தான்..."எதை கொண்டு வந்தோம்...இழந்ததற்காக வருந்துவதற்கு" ...நம்ம ஊருக்குத் தானே வாறீங்க...வாங்க... வாங்க...இங்குள்ள இனிமைகளை அனுபவிக்கலாம். நண்பர் சொன்னது மாதிரி சண்டை போட இங்க நிறைய (பேரு) இருக்கு....:-)

உங்கள் எழுத்துக்களுக்கு சொல்ல வேண்டியதில்ல....அருமையான இயல்பான நடையில்...நாங்க பார்க்காத அமெரிக்காவை கொண்டுவந்து அதைப் பாக்கணும்னு ஆவலை உண்டாக்கிட்டீங்க....

எப்புடியா இருந்தாலும் அவய்ங்கனால நம்ம இல்லாம வேலை பார்க்க முடியாது....
29 October, 2009 5:46 AM
////////////////////////
கண்டிப்பா..வாழ்க்கையில ஒருமுறையாவது அமெரிக்கா போகணும்..

அவிய்ங்க ராசா said...

//////////////////
er, 2009 5:46 AM
Vee said...
//முனியாண்டி விலாஸில் 4 புரோட்டாவை சால்னாவில் ஊற வைத்து, பக்கத்தில் ஒரு ஆப்பாயில் வைத்து ஒரு சாத்து சாத்துனா..”போங்கையா, நீங்களும் உங்க அமெரிக்காவும்” என்று தோணும்…

Very true. When we are in India we would envy people who is going to the US. But when we are here in US we would envy people who are going to India. (appo poga vendiyathane nu ellam kutharkkama kekkapidathu).
29 October, 2009 8:11 AM
/////////////////
ஹா..ஹா..அமெரிக்காவுல எங்க இருக்கீங்க..

அவிய்ங்க ராசா said...

////////////////
er, 2009 8:11 AM
Vee said...
//Sorry friend.. very wrong understanding... US is one of the best place in the world when comes to human life's value. If you call a 911 and your are taken for Emergency room for any reason even if its not life threatening. depending upon the severity of the condition, the treatment is given.

The humanity and medical system in India is pathetic.

~ An Indian who missed American life. :-( //

அட போய்யா. குழந்தை கீழ விழுந்து ரத்தம் வருது. ரொம்ப serious இல்ல. ஆனா உடனே first aid பண்ணிட்டா நல்லது. இதுக்கும் 911 தான் கூப்புடனும். நம்ம ஊர்ல ல simple a முடியற விசயம். இங்கன படுத்திருவானுங்க.
29 October, 2009 8:17 AM
////////////////////
ஆமாம்..அவசரத்தேவை எனும்போது சிறப்பாக செயல்படுகிறார்கள்..ஆனால், இதுபோல விஷயங்களில் கொஞ்சம் கஷ்டம்தான்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
er, 2009 8:17 AM
Anonymous said...
இந்தியாவிற்கு திரும்ப போறீங்க.வாழ்த்துக்கள். நான் சிங்கைல இருந்து இந்தியா போக எப்படி எல்லாமோ என் மேலாளர்கிட்ட துண்டு போட்டு பாத்துகிட்டு இருக்கேன் ...ஒண்ணும் நடக்கிற மாதிரி தெரியல.

நீங்க சொன்ன விஷயங்களுக்காகவே இன்னொரு முறை அமெரிக்கா போக மனதின் மூலையில் ஒரு ஆசை உண்டு....
-பயபுள்ள.
29 October, 2009 8:20 AM
////////////////
நன்றி பயபுள்ள..தவறவிடாக்கூடாத நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று..

அவிய்ங்க ராசா said...

/////////////////
Anonymous said...
anne vee... first aid kodukkura samacharkkkthuu ellam hospital poganum nenaikkira mentality iruthuchina onnum panna mudiyathu.... having personally experienced the medical facilities in Usa for a long time and after india return, its horrible here...
29 October, 2009 9:08 AM
//////////////////////
அண்ணே..எதுனாலும் அங்கு வந்து பேசிக்கலாம்..))

குப்பன்.யாஹூ said...

change the heading as VIDAI PERUKIREN AMERICAVE- it is misleading like olden days malai murasu newspaper heading.

ரவிஷா said...

நம்மூருல எங்கே வேணும்னாலும் போங்க! ஆனா பதிவர் கூட்டத்துக்கு மட்டும் தனியாய்ப் போயிராதீங்க!

குப்பத்து ராசா said...

வாங்கண்ணே, முதலில் தலைப்பை பார்த்ததும் பகீர் என்று இருந்தது. உங்க பதிவுகளை படித்துவிட்டு சிரித்தவன் நான். புகுந்த வீடு பொண்ணாட்டம் திரும்பி வாறீங்க. தாய் வீட்டுக்காரர்கள் அன்புடன் வரவேற்கிறோம்.:-)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//அவிய்ங்க ராசா said...
///////////////////////
er, 2009 3:13 AM
[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
tamilnaattukku pora date ?
29 October, 2009 5:10 AM
////////////////////////
நவம்பர் 21 பித்தன்..பிரபல பதிவர் பற்றிய உங்கள் பதிவை திடீர்னு காணோம்..)
///

nalla paarunga anganayetthaan irukkum

வெற்றி-[க்]-கதிரவன் said...

nalla paarunga anganayetthaan irukku....

அன்புடன் மணிகண்டன் said...

வாங்க வாங்க..

பெசொவி said...

இன்னைக்குதான் உங்க பதிவுகளை எல்லாம் படிச்சேன். கலக்கறீங்க!

//அடுத்த நாள், முனியாண்டி விலாஸில் 4 புரோட்டாவை சால்னாவில் ஊற வைத்து, பக்கத்தில் ஒரு ஆப்பாயில் வைத்து ஒரு சாத்து சாத்துனா..”போங்கையா, நீங்களும் உங்க //

உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

taaru said...

வாராரு வாராரு அழகர் வாராரு.....
சப்பரம் [அட பிளைட்ட தாண்ணே சொன்னேன்]ஏறி வாராரு...
சக்கையா பிழிஞ்சு வாராரு - இல்ல இங்கனக்குள்ள இருக்குறவன்
சரக்க பிழிய வாராரு...

உங்க மூணு பேருக்கும் [மூணாறு?னு கேள்வி கேக்க கூடாது; அவீங்க, அண்ணி, மற்றும் கோவாலு] இனிய வாழ்த்துக்கள்... பாத்து வந்து சேருண்ணே....
NOTE: தலைக்கு [ஒரு ஆளுக்குன்ரத தான் அப்புடி சொன்னேன்] நல்லா நாலு face mask வாங்கிக்கொள்ளவும்.. உங்க ஊரு வண்டியில நாத்தம் அடிக்குதாமே.. ROTFL... :-P :-P

அவிய்ங்க ராசா said...

/////////////////
குப்பன்.யாஹூ said...
change the heading as VIDAI PERUKIREN AMERICAVE- it is misleading like olden days malai murasu newspaper heading.
29 October, 2009 10:50 PM
//////////////////
ஹா..ஹா..வருகைக்கு நன்றி..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
r, 2009 10:50 PM
ரவிஷா said...
நம்மூருல எங்கே வேணும்னாலும் போங்க! ஆனா பதிவர் கூட்டத்துக்கு மட்டும் தனியாய்ப் போயிராதீங்க!
30 October, 2009 7:38 AM
///////////////////
ஹெல்மெட்டை கழட்டவே மாட்டோம்ல..))

அவிய்ங்க ராசா said...

////////////////////////
er, 2009 7:38 AM
Kuppathu Raja said...
வாங்கண்ணே, முதலில் தலைப்பை பார்த்ததும் பகீர் என்று இருந்தது. உங்க பதிவுகளை படித்துவிட்டு சிரித்தவன் நான். புகுந்த வீடு பொண்ணாட்டம் திரும்பி வாறீங்க. தாய் வீட்டுக்காரர்கள் அன்புடன் வரவேற்கிறோம்.:-)
30 October, 2009 1:19 PM
//////////////////////
நன்றி ராஜா அண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////
er, 2009 12:17 AM
[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
nalla paarunga anganayetthaan irukku....
31 October, 2009 12:17 AM
/////////////////
பார்த்துட்டேன், பித்தன்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
r, 2009 12:17 AM
அன்புடன் மணிகண்டன் said...
வாங்க வாங்க..
31 October, 2009 3:21 AM
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இன்னைக்குதான் உங்க பதிவுகளை எல்லாம் படிச்சேன். கலக்கறீங்க!

//அடுத்த நாள், முனியாண்டி விலாஸில் 4 புரோட்டாவை சால்னாவில் ஊற வைத்து, பக்கத்தில் ஒரு ஆப்பாயில் வைத்து ஒரு சாத்து சாத்துனா..”போங்கையா, நீங்களும் உங்க //

உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.
31 October, 2009 9:20 PM
////////////////////////
நன்றி மணிகன்டன், நண்பரே..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
er, 2009 9:20 PM
taaru said...
வாராரு வாராரு அழகர் வாராரு.....
சப்பரம் [அட பிளைட்ட தாண்ணே சொன்னேன்]ஏறி வாராரு...
சக்கையா பிழிஞ்சு வாராரு - இல்ல இங்கனக்குள்ள இருக்குறவன்
சரக்க பிழிய வாராரு...

உங்க மூணு பேருக்கும் [மூணாறு?னு கேள்வி கேக்க கூடாது; அவீங்க, அண்ணி, மற்றும் கோவாலு] இனிய வாழ்த்துக்கள்... பாத்து வந்து சேருண்ணே....
NOTE: தலைக்கு [ஒரு ஆளுக்குன்ரத தான் அப்புடி சொன்னேன்] நல்லா நாலு face mask வாங்கிக்கொள்ளவும்.. உங்க ஊரு வண்டியில நாத்தம் அடிக்குதாமே.. ROTFL... :-P :-P
1 November, 2009 9:22 PM
/////////////////////////
ஆஹா.,.,தாரு வந்துட்டாரு..சென்னை வந்தவுடனே…முதல்ல உங்களைத்தான் வந்து பார்க்க்ப்போறேன்..ரெடியா இருங்க..)))

Anonymous said...

Welcome Back to India. Neenaga yeluthuvathai padikkum bothu, Oru nanbanidam pesuvathai polavey unarukiren..Thodaratum....

rajsteadfast@gmail.com

suvaiyaana suvai said...

என் புருசன் சாகக்கிடக்குறாரு..வந்து காப்பாத்துங்க” என்று கேட்டால் “சாரி…அப்பாயிண்ட்மென்ட் இருக்கா” என்று கேட்கும் மருத்துவமனைகள்

Lollu!!!

Post a Comment