Tuesday, 6 October, 2009

விபசாரம் செய்தது யார் யார்???

என்றைக்கும் இல்லாமல் கோவலு இன்னைக்கு ரொம்ப சந்தோசத்தில் இருந்தான்..முகமெல்லாம் ஒரே பூரிப்பு..

“என்னடா கோவாலு..லாட்டரி எதுவும் விழுந்துருச்சா..முகமெல்லாம் 100 வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி இருக்கு..”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா ராசா..இன்னைக்கு நியூஸ் படிச்சியா..விபசார வழக்கில நடிகையை கைது பண்ணிட்டாங்கடா..”

“சரி..அதுல சந்தோசப்படுறதுக்கு இருக்கு..”

“என்னடா இப்படி சொல்லிட்ட..உள்ள போனவங்க சும்மா இருப்பாங்களா….”இவுங்களையும் புடிங்கன்னு” ஒரு லிஸ்ட் கொடுத்திருக்காங்க..லிஸ்ட் பார்த்தா, சூப்பர்டா மச்சி..நிறைய பேரு மாட்டிருக்காயிங்கடா..”

“ஓ..அப்படியாடா கோவாலு..அய்யோ..இதுனால இந்திய பண்பாடு, கலாசாரத்திற்கு எதுவும் பங்கம் வந்துருச்சாடா..”

“டே ராசா..கிண்டல் பண்றியா..இவுங்களுக்கெல்லாம் வேணுன்டா..எப்படில்லாம் இருக்காயிங்க பாருடா..படத்துல ரொம்ப நல்லவங்க மாதிரி வர்றாங்கடா..”

“அய்யய்யோ….இனிமேல் அவுங்களை எல்லா படத்திலுயேயும் கெட்டவங்களா வர சொல்லிருவோமாடா..”

“டே..நீ என்ன அவுங்களுக்கு சப்போர்ட்டா..ஒரு மணி நேரத்துக்கு 2 லட்சம் வாங்கிருக்கதா சொல்றாங்கடா..”

“ஹும்….ஒரே ஒரு கேள்வி..இதனால பாமர மனிசனுக்கு ஏதாவது பாதிப்பு வந்திருக்கா..நாட்டோட மானம் ஏதாவது பாதிப்பு ஆயிருக்கா..யாருடா ஒருநாளைக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கிறா..பாமரனா..கோடிஸ்வரனா..நம்மளெல்லாம் ஒரு லட்சம் சம்பாதிக்குறதுக்கு 6 மாசம் ஆகுதேடா…”

“போடா..உங்கிட்ட சொன்னேன் பாரு..அதவிடு..அந்த லிஸ்ட்ல இருக்குற நடிகைகளோட படம் போட்டிருந்தாயிங்க பாரு..வயசானலும் செமயா..****** “

“சரி கோவாலு..இப்ப சொல்லு..அவுங்க உடம்புல இருக்குறது அசிங்கமா..இல்ல உன் மனசில இருக்குறது அசிங்கமா..”

“போடாங்க…”

கடுப்பாகி ஓடியே போயிட்டான்..எனக்கு ஒன்றும் புரியவில்லை..கைது செய்யப்பட்ட நடிகை மேல் சுமத்தப்பட்ட குற்றம் “விபசாரம்”. அது கண்டிப்பாக ஒரு பெண்ணால் மட்டும் செய்ய முடியாது..அப்படியானால் அவருடன் அந்த குற்றத்தை செய்த ஆண்களுக்கு என்ன தண்டனை..

மனசு நிறைய கேள்விகளுடன் வீட்டிற்கு சென்றேன்..நண்பன் தொலைபேசியில் அழைத்தான்..

“என்னடா ராசா..எப்படி இருக்க..”

“நல்லா இருக்கேன்டா..”

“ராசா..சந்தோசமான விசயம்டா..எனக்கு ஒரு பெரிய கம்பெனியல வேலை கிடைச்சிருக்கு..”

“வாவ்..சூப்பர்டா..எப்படா டிரீட்..”

“கண்டிப்பா..ஆனா ஒரே ஒரு சிரமம்டா..நிறைய டாக்ஸ் பிடிக்கிறாயிங்க..மாசம் சுளையா 10,000 போயிடுது..”

“அடப்பாவமே..ஏதாவது பார்மஸியில போய் நிறைய பில் வாங்கி “மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்” கிளைம் ப்ண்ணு..அப்புறம்..வீட்டு வாடகையை ஏத்திக் காமி..”

“ஆஹா..இப்படியெல்லாம் இருக்காடா..தெரியவே இல்லையே..சூப்பர்டா..உங்கிட்ட நிறைய கேக்கனும்..அப்புறம் கால் பண்றேன்..”

வைத்துவிட்டான்..என் மனைவி, நாங்கள் பேசியதை கவனித்திருப்பாள் போலும்..

“ஏங்க..இது தப்பில்லையா..”

“எது??”

“இப்படி டாக்ஸ் மாத்தி காமிக்கிறது..கவர்மென்ட்டுக்கு இதுனால லாஸ் இல்லையா..”

“அடிப் போடி..டாக்ஸ் கட்டினாலும் என்ன நடக்கப் போகுது..நம்ம காசை வைச்சு அரசாங்கம் எதுவும் கோயில் கட்டப் போறதில்லை..”

என்ன இருந்தாலும் ஒவ்வொருத்தனுக்கும் மனசாட்சி இருக்குமில்லையா..அது நேரம் பார்த்து கேள்வி கேட்டது..”ஏமாற்ற நினைக்கும் நீ ம்னிதனா..”. நாம் பதில் சொல்ல விரும்பாத ஒரே நபர் “மனசாட்சி” தான்..என்னால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை..

மனசுக்கும் மூளைக்கும் போராட்டம் நடக்கும் நேரத்தில் மனைவி அதை கலைத்தாள்..

“என்னங்க..இன்னைக்கு பேப்பர் பார்த்தீங்களா..நடிகையை விபசாரம் பண்ணினதுக்கு கைது பண்ணிட்டாங்களாம்,..”

“ம்..” என்னால் எதுவும் பேச முடியவில்லை..

“சே..படத்துல எல்லாம் எப்படி நல்லவங்களா நடிக்கிறாங்க..எல்லாம் ஏமாத்து வேலைங்க..இப்படி ஏமாத்துறாங்களே..அவுங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்காங்க”

என்னை யாரோ செருப்பைக் கழட்டி அடித்தமாதிரி இருந்தது..பதில் பேச முடியாமல் நகர்ந்து பக்கத்து அறைக்கு சென்றேன்..என் மனம் இதுபோல தவிக்கும் நேரத்தில் நான் செய்வது ஒன்றே ஒன்றுதான்..அலமாரியில் உள்ள பைபிளை எடுத்து கண்களில் படுகின்ற இரண்டு வசனங்களைப் படிப்பது..என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் அங்கேதான் விடை கிடைக்கும்..மனம் அப்படியே லேசாகி விடும்..அலமாரியில் இருந்து பைபிளை எடுத்து திறந்து படிக்க ஆரம்பித்தேன்..

“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”

53 comments:

சின்ன அம்மிணி said...

//“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…//

சத்தியமான வார்த்தைகள்

கபிலன் said...

பதிவு சூப்பர் : )

அருமையான வரிகளோடு முடித்திருக்கிறீர்கள்!

shirdi.saidasan@gmail.com said...

super super superespecially the last line

கிறுக்கன் said...

final touch.....great

வானம்பாடிகள் said...

ராஜா எழுதுறது இடுகை. அதும் கோவாலு வந்தா அந்த ரேஞ்சே தனி. நிறைய விஷயம் இருக்கு கடைசி வரியில்.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அருமை ராசாண்ணே, படிக்கற அத்தனை பேரையும் பொட்டுனு தட்டற மாதிரி இருந்தது.

taaru said...

//நம்மளெல்லாம் ஒரு லட்சம் சம்பாதிக்குறதுக்கு 6 மாசம் ஆகுதேடா…//
போங்க ராசா அண்ணே எப்பவுமே இப்புடி தான்... சந்து கேப்புல இப்புடியா ஆட்டோ எல்லாம் ஓட்டுறது..?? ஆறு மாசம் ஆகுதாம்ல... நம்பிட்டோம்... Accounts எல்லாம் அண்ணி தான் மைண்டைன் பண்றாங்களா..?? அதான் உங்களுக்கு தெர்ல...

கோவாலு நம்மள நல்லா தான் பிரதிபலிக்குராறு... என்னண்ணே?!!
பைபிள் வாசகம் - சடார் ....ர் ர் ர் ர் ர் ர்...... *@$ *@$*@$*@$*@$*@$

கதிர் - ஈரோடு said...

அருமைணே... ஆனா... 2 லட்ச ரூவா அதிகமா தெரியல....

ஆனாலும் இது வரைக்கும் ஒரு பெரிய மனுசன் கூட விபசாரத்துல மாட்னதேயில்லை...

சூரியன் said...

அவ்வ்வ்வ் கடைசி வரி , பொருத்தமான வரிகள் இன்றைய நிலவரத்துக்கு....

தமிழ்ப்பறவை said...

அருமையான தேவையான பதிவு...

Thirumathi Jaya Seelan said...

“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”
எனக்கும் பிடித்தவரிகள்: நல்ல பதிவு

புலவன் புலிகேசி said...

அருமையான வரிகளோடு முடித்திருக்கிறீர்கள்

துபாய் ராஜா said...

அருமைண்ணே....

அழகா சொல்லியிருக்கீங்க...

மஞ்சூர் ராசா said...

நச் பதிவு

velji said...

அருமையான பதிவு! படமும் கூட!

M.S.E.R.K. said...

அருமை நண்பா! அருமை!
'முதலில் நம் கண்ணில் உள்ள தூலத்தை எடுத்துவிட்டு, பிறர் கண்ணில் உள்ள தூசியைத் தேடலாம்'

ஆ.ஞானசேகரன் said...

//உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”//

சரியான வாதம்

chennailocal said...

நம்மையும் அறியாமால் நமக்குள் இருக்கும் மிருகம்

நல்ல சிந்தனை உள்ள பதிவு

T.V.Radhakrishnan said...

அருமை

நளன் said...

ரொம்ப அருமை ராசா!!

Anonymous said...

நச் பதிவு

ராஜா | KVR said...

அருமையாச் சொல்லிருக்கிங்க ராசா

kanavugalkalam said...

நுற்றில் ஒரு வார்த்தை..........அண்ணா......

Anonymous said...

Dear friend ,
Yes I wish to call you as my dear friend, because you are the one who has looked the other side of the Coin too. Yes, my question is also for the media and the public is this when the women is arrested for sex crime, why the other side is not punished so seriously,
Even in Sreena's case, the so called political figure was never even touched, except his name was published by this violent, vulgar specialist media

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

இவன் சிவன் said...

ராசா அண்ணாச்சி,
நொறுக்கி அள்ளிடீங்க!!!!!!!!!!! அதுவும் பைபிள் வாசகங்கள் இந்த பதிவுக்கு செம்ம finsh.... நம்ம சோழவந்தான்ல குண்டு வெடிசிருச்சிருசாம்லனே!!!!

அவிய்ங்க ராசா said...

/////////////////
சின்ன அம்மிணி said...
//“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…//

சத்தியமான வார்த்தைகள்
6 October, 2009 7:37 PM
//////////////////
வருகைக்கு நன்றி சின்ன அம்மணி..

அவிய்ங்க ராசா said...

///////////////////
er, 2009 7:37 PM
கபிலன் said...
பதிவு சூப்பர் : )

அருமையான வரிகளோடு முடித்திருக்கிறீர்கள்!
6 October, 2009 8:12 PM
//////////////////
நன்றி கபிலன்.எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..

அவிய்ங்க ராசா said...

/////////////////
shirdi.saidasan@gmail.com said...
super super superespecially the last line
6 October, 2009 8:30 PM
/////////////////
நன்றி சாய்தாஸன்..

அவிய்ங்க ராசா said...

///////////////
ctober, 2009 8:30 PM
கிறுக்கன் said...
final touch.....great
6 October, 2009 8:43 PM
////////////////
நன்றி அண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////
வானம்பாடிகள் said...
ராஜா எழுதுறது இடுகை. அதும் கோவாலு வந்தா அந்த ரேஞ்சே தனி. நிறைய விஷயம் இருக்கு கடைசி வரியில்.
6 October, 2009 8:53 PM
//////////////////
ஹா..ஹா..கோவாலு எனக்கு நண்பனாக கிடைத்தது என்னோட பாக்கியம்..

அவிய்ங்க ராசா said...

///////////////////
, 2009 8:53 PM
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அருமை ராசாண்ணே, படிக்கற அத்தனை பேரையும் பொட்டுனு தட்டற மாதிரி இருந்தது.
6 October, 2009 9:31 PM
//////////////////
தொரர் வருகைக்கு நன்றி செந்தில்

அவிய்ங்க ராசா said...

//////////////////////
taaru said...
//நம்மளெல்லாம் ஒரு லட்சம் சம்பாதிக்குறதுக்கு 6 மாசம் ஆகுதேடா…//
போங்க ராசா அண்ணே எப்பவுமே இப்புடி தான்... சந்து கேப்புல இப்புடியா ஆட்டோ எல்லாம் ஓட்டுறது..?? ஆறு மாசம் ஆகுதாம்ல... நம்பிட்டோம்... Accounts எல்லாம் அண்ணி தான் மைண்டைன் பண்றாங்களா..?? அதான் உங்களுக்கு தெர்ல...

கோவாலு நம்மள நல்லா தான் பிரதிபலிக்குராறு... என்னண்ணே?!!
பைபிள் வாசகம் - சடார் ....ர் ர் ர் ர் ர் ர்...... *@$ *@$*@$*@$*@$*@$
6 October, 2009 9:34 PM
//////////////
ஹாஹா..நான் என்னை சொல்லலண்ணே..நம்மைப் போன்ற பல இளைஞ்ர்களிம் சம்பளத்தை சொன்னேன்..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////
கதிர் - ஈரோடு said...
அருமைணே... ஆனா... 2 லட்ச ரூவா அதிகமா தெரியல....

ஆனாலும் இது வரைக்கும் ஒரு பெரிய மனுசன் கூட விபசாரத்துல மாட்னதேயில்லை...
6 October, 2009 10:04 PM
/////////////////
கரெக்டா சொன்னீங்க கதிர்..இதைப் பற்றி உங்களின் கவிதையை ஆவலாக எதிர்பார்க்கிறேன்,..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////
ober, 2009 10:04 PM
சூரியன் said...
அவ்வ்வ்வ் கடைசி வரி , பொருத்தமான வரிகள் இன்றைய நிலவரத்துக்கு....
6 October, 2009 10:08 PM
////////////////////
நன்றி சூரியன்..எனக்கு மிகவும் பிடித்த வரிகள்/..

அவிய்ங்க ராசா said...

////////////////////
தமிழ்ப்பறவை said...
அருமையான தேவையான பதிவு...
6 October, 2009 10:22 PM
//////////////////
நன்றி தமிழ்பறவை..

அவிய்ங்க ராசா said...

/////////////////
ber, 2009 10:22 PM
Thirumathi Jaya Seelan said...
“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”
எனக்கும் பிடித்தவரிகள்: நல்ல பதிவு
6 October, 2009 11:36 PM
////////////////
நன்றி..என்னுடைய உறவினர் பெயரும் ஜெயசீலன் தான்..அவரும் பெங்களூரில்தான் இருக்கிறார்..

அவிய்ங்க ராசா said...

/////////////////
புலவன் புலிகேசி said...
அருமையான வரிகளோடு முடித்திருக்கிறீர்கள்
6 October, 2009 11:45 PM
//////////////////
நன்றி புலிகேசி..))

அவிய்ங்க ராசா said...

/////////////////
er, 2009 11:45 PM
துபாய் ராஜா said...
அருமைண்ணே....

அழகா சொல்லியிருக்கீங்க...
7 October, 2009 12:04 AM
///////////////////
நன்றி ராஜா..

அவிய்ங்க ராசா said...

///////////////////
ber, 2009 12:04 AM
மஞ்சூர் ராசா said...
நச் பதிவு
7 October, 2009 12:47 AM
/////////////////
நன்றி ராசா..

அவிய்ங்க ராசா said...

//////////////////
velji said...
அருமையான பதிவு! படமும் கூட!
7 October, 2009 1:05 AM
//////////////////
நன்றி வல்ஜி..

அவிய்ங்க ராசா said...

////////////////
M.S.E.R.K. said...
அருமை நண்பா! அருமை!
'முதலில் நம் கண்ணில் உள்ள தூலத்தை எடுத்துவிட்டு, பிறர் கண்ணில் உள்ள தூசியைத் தேடலாம்'
7 October, 2009 2:06 AM
///////////////
நன்றி அண்ணே,,

அவிய்ங்க ராசா said...

/////////////////
chennailocal said...
நம்மையும் அறியாமால் நமக்குள் இருக்கும் மிருகம்

நல்ல சிந்தனை உள்ள பதிவு
7 October, 2009 3:31 AM
////////////////
நன்றி அண்ணே,,

அவிய்ங்க ராசா said...

//////////////////
ctober, 2009 3:31 AM
T.V.Radhakrishnan said...
அருமை
7 October, 2009 3:34 AM
/////////////////
நன்றி ராதாகிருஷ்ணன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
நளன் said...
ரொம்ப அருமை ராசா!!
7 October, 2009 5:20 AM
Anonymous said...
நச் பதிவு
7 October, 2009 5:55 AM
ராஜா | KVR said...
அருமையாச் சொல்லிருக்கிங்க ராசா
7 October, 2009 6:17 AM
kanavugalkalam said...

//////////////////

நன்றி நளன். அனானி, ராஜா, கனவுலகம்..

அவிய்ங்க ராசா said...

/////////////////
Dear friend ,
Yes I wish to call you as my dear friend, because you are the one who has looked the other side of the Coin too. Yes, my question is also for the media and the public is this when the women is arrested for sex crime, why the other side is not punished so seriously,
Even in Sreena's case, the so called political figure was never even touched, except his name was published by this violent, vulgar specialist media
7 October, 2009 7:11 AM
//////////////////////
100% ஒத்துக் கொள்கிறேன்..

அவிய்ங்க ராசா said...

///////////////
[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)
///////////////
நன்றி பித்தன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
இவன் சிவன் said...
ராசா அண்ணாச்சி,
நொறுக்கி அள்ளிடீங்க!!!!!!!!!!! அதுவும் பைபிள் வாசகங்கள் இந்த பதிவுக்கு செம்ம finsh.... நம்ம சோழவந்தான்ல குண்டு வெடிசிருச்சிருசாம்லனே!!!!
7 October, 2009 2:22 PM
///////////////////
ஆமாண்ணே..கேட்டதும் ஆடிப்போயிட்டேன்..வீட்டுக்கு போன் பண்ணி விசாரித்தேன்..

தமிழ் நாடன் said...

////“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”///

நல்ல முடிவு!

ஆதி மனிதன் said...

ராசா,
அப்ப நீங்க நல்லவரா கெட்டவரா?

அன்புடன்-மணிகண்டன் said...

அண்ணே.. எப்படின்னே எல்லா மேட்ச்'லயும் செஞ்சுரி அடிக்கறதோடில்லாம கடைசி பாலையும் சிக்ஸர் அடிக்கறிங்க???

சிங்கக்குட்டி said...

//உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்//

பொருத்தமான வாசகம் சரியான இடத்தில்.

நல்ல பகிர்வு.

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
தமிழ் நாடன் said...
////“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”///

நல்ல முடிவு!
7 October, 2009 9:58 PM
ஆதி மனிதன் said...
ராசா,
அப்ப நீங்க நல்லவரா கெட்டவரா?
7 October, 2009 11:43 PM
அன்புடன்-மணிகண்டன் said...
அண்ணே.. எப்படின்னே எல்லா மேட்ச்'லயும் செஞ்சுரி அடிக்கறதோடில்லாம கடைசி பாலையும் சிக்ஸர் அடிக்கறிங்க???
9 October, 2009 5:20 AM
சிங்கக்குட்டி said...
//உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்//

பொருத்தமான வாசகம் சரியான இடத்தில்.

நல்ல பகிர்வு.
10 October, 2009 12:08 AM
////////////////////
நன்றி தமிழ்நாடன், மணிகண்டன், ஆதிமனிதன், சிங்கக்குட்டி..

Post a Comment