Saturday, 10 October, 2009

ஆறிப்போன இட்லி,காய்ஞ்சுபோன தோசை,ஊசிப்போன பொங்கல்,நமத்துப்போன வடை,கெட்டுப்போன சட்னி,சாம்பார்

ஊசிப்போன பொங்கல்

அண்ணே..பதிவுலகத்தில தெரியாம நுழைஞ்சுட்டுனேன்னு பயமா இருக்குண்ணே..நேத்து ஒரு பதிவு படிச்சப்பிறகுதான் இந்த நினைப்பு வந்துச்சு..ஒரு பதிவர், இன்னொரு பதிவரை வரவழைத்து மூக்குல ஒரு குத்து குத்துனதுல ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போய் காப்பாத்தியிருக்கிறாயிங்க..அண்ணே..உங்களில் யாரையாவது பத்தி தெரியாம எந்த பதிவுலயாவது கிண்டல் பண்ணியிருந்தா, மனசுக்குள்ள வைச்சுக்காம மன்னிச்சிருக்கண்ணே..அதை நினைப்புல வைச்சுக்கிட்டு சென்னையில ஏதாவது பதிவர் சந்திப்புக்கு வர்ரப்ப மூக்கைப் பார்த்து குத்திப்புடாதீங்கண்ணே..மனிசனுக்கு வாக்கு முக்கியமோ இல்லையோ, மூக்கு முக்கியம்னே..(யாருண்ணே..அது..மூக்குல குத்து வாங்குறதுக்கும் ஒரு முஞ்சி வேணும்னு பின்னூட்டம் போடுறது)

கெட்டுப்போன சட்னி, சாம்பார்

விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்று தினமலர் படத்துடன் செய்தி போட்டது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பேசியது என்பது என் கருத்து..அதுவும் நடிகர் விவேக் பேசியது ரொம்ப ஓவர்..உணர்ச்சிகளுக்கு அடிமையானவன் தான் மனிதன்..அதை யார் அடக்கி ஆள்கிறானோ, அவன் தான் சிறந்தவனாகிறான். ஆனால் பேசிய சில நடிகர்களைத் தவிர அனைவரும் கோப உணர்ச்சிக்கு அடிமையாகிப் போனார்கள்.

அதுவும் சின்னக் கலைவாணர், பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய விவேக் “உங்க ஆயாவெல்லாம் ரெயின் கோட்டு போட்டா குளிக்கிறாங்க” என்றபோது நமக்கே கோபம் வந்தது. மிகவும் ஆச்சர்யமானது நடிகர் சூர்யா பேசியது..மனிதர் படத்தில் நடிக்கிற நடிப்பைப் பார்த்து “மெச்சூரிட்டியாகி” விட்டார் என நினைத்தால்..ம்..ஹூம்..இரண்டு படி கீழிறிங்கி விட்டார்..சூர்யா, கமலிடம் நடிப்பைத் தவிர கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..

இதுல விஜயகுமார் அண்ணணும், அருண்விஜய் அண்ணணும் பேசியதுதான் சரியான காமெடி..பத்திரிக்கை அலுவலகத்தில் போய் நாலு பேரை வெட்டி போட்டு வந்திருப்பார்களாம்..அண்ணே..இது என்ன சினிமாவா..ஹீரோ மாதிரி தூக்கிப் போட்டு பந்தாடுறதுக்கு..நீங்க வந்து வெட்டுற வரைக்கும் எல்லாரும் தலைக்கு எண்ணை தடவிட்டு கழுத்தை காட்டிக்கிட்டு இருப்பாயிங்களா….சினிமாவுக்கு வந்துட்டா நாலு பேரு கவனிச்சிக்கிட்டே இருப்பாயிங்கண்ணே..பார்த்துக்குங்க..சேரன் பேசியது எந்த வீடியோவிலயும் காணவில்லை..யாராவது வைச்சிருந்தா கொஞ்சம் கொடுங்கண்ணே..ஆட்டோகிராப் என்ற உணர்ச்சிமிக்க படைப்பைத் தந்த அவரு எப்படி உணர்ச்சிவசப்பட்டுருக்காருன்னு பார்ப்போம்.

ஆறிப்போன இட்லி

நடிகர்கள் சரத்குமார், ராதிகா, ஷகீலா, மும்தாஜ், முதல்வருடன் சந்திப்பு..ஏன்ணே..நான் சென்னை வந்தா எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா..இல்லாட்டி நானும் நடிகர் சங்கத்தில உறுப்பினர் ஆகணுமா..என்ன ஆச்சு, எவ்வளவோ ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முதல்வரை சந்தித்து தங்கள் கஷ்டத்தை சொல்ல வருடக்கணக்காய் காத்திருக்கும்போது இவர்களுக்கு மட்டும் எப்படி உடனே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது….பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யும் நம் முதலமைச்சர், இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டாமென்பது என் கருத்து..இதைச் சொல்ல உனக்கு என்ன உரிமையிருக்கிறது என்று கேட்டால், நானும், என் வீட்டிலுள்ள 8 பேரும் தி.மு.க வுக்குதான் இதுவரை ஓட்டுப் போட்டுள்ளோம் என்று நெஞ்சை நிமிர்த்தி கூக்குரலிட்டு சொல்லுவேன்(என்னண்ணே..கமல் பேசுற மாதிரி, ஒரு புளோவா வருதா..அது சரி..கூடிய சீக்கிரம் வீட்டுக்கு ஆட்டோ வர்றதை யாரு தடுக்க முடியும்)

காய்ஞ்சுபோன தோசை

ஒபாமாவுக்கு நோபல் பரிசு சர்ச்சையைக் கிளப்பியிருந்தாலும், தமிழர்க்கு நோபல் பரிசு கிடைத்ததை நினைத்து ரொம்ப பெருமையா இருக்குண்ணே..முதலில் ஏ.ஆர் ரகுமான், பின்பு வெங்கி என்று தமிழன் உலக அளவில் முன்னேறுவதை பார்த்து “நான் தமிழன்” என்று தெருமுனையில் நின்று சத்தம் போடனும்னு ஆசையா இருக்குண்ணே..ஆனா “நியூசன்ஸ்” கேஸ்ல உள்ள போட்டுருவாயிங்களான்னு பயமா இருக்குண்ணே..

நமத்துப்போன வடை

எங்க ஊரு சோழவந்தானுல குண்டு வெடிச்சுருச்சுன்னு கேள்விப் பட்டதில இருந்து கையும் ஓடலை, காலும் ஓடலைண்ணே..அன்னைக்கு எங்க அம்மா அழுதது இன்னும் மனசுக்குள்ள இருக்குண்ணே..தினமும் என் அப்பா மாலை 6 மணிக்கு ரெயில் நிலையத்தில் வாக்கிக் செல்வது வழக்கம். அன்னைக்கு பார்த்து அப்பா மதுரை செல்வதாக சொல்ல, அம்மா வாக்கிங் செல்லுமாறு சொல்லியிருக்கிறார்கள்.பிடிவாதமாக அப்பா மதுரைக்கு செல்ல, தெய்வாதீனமாக தப்பித்து இருக்கிறார்கள். இறந்ததில் ஒருத்தர் எங்கள் பக்கத்து தெருக்காரர்..பக்கத்து தெருவில் டீக்குடிக்க செல்லும்போது, அவர் நேசமாக சிரித்தது இன்னும் மனசுல இருக்குண்ணே..அநியாமாக இரண்டு உயிருண்ணே..அதுவுமில்லாம் போன வாரம் தேக்கடியில் நடந்த படகு விபத்தைக் கேள்விப்பட்ட போது சாப்பிடக்கூட மனசு வரலைண்ணே..இரண்டு விபத்துக்களுமே, பயண விதிகளை மதிக்காத அலட்சியத்தால் வந்தது..எப்பண்ணே இதெல்லாம் மாறும்??..(((

35 comments:

மாதேவி said...

"ஊசிப்போன பொங்கல்" "நமத்துப்போன வடை" இரண்டிற்கும் அனுதாபங்கள்.

பிரபாகர் said...

ரொம்ப சரளமா நடப்புகளையெல்லாம் அற்புதமா எழுதுறீங்க.... உங்க நடை அருமையா இருக்கு. சில விஷயங்கள் மனசுக்கு ரொம்பவும் கஷ்டத்த கொடுக்குது.

அசத்துறீங்க தோழரே...

பிரபாகர்.

கபிலன் said...

கெட்டுப்போன இட்லி தோசை மாதிரி இல்லை...புதுசா சுட்ட இட்லி மாதிரி நல்லா இருக்குங்க பதிவு : )

சின்ன அம்மிணி said...

இவ்வளவு சுவையா இருக்கு. தலைப்புல கெட்டுப்போனது மாதிரி சொல்லீட்டீங்க.

கதிர் - ஈரோடு said...

//நான் சென்னை வந்தா எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா..//

அப்பாயிண்ட்மெண்டும் கிடையாது... கிப்பாயிண்ட்மெண்டும் கிடையாது

//இல்லாட்டி நானும் நடிகர் சங்கத்தில உறுப்பினர் ஆகணுமா..//

ம்ம்ம்ம்ம்ம்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

ராசாண்ணே, மினி டிபன் சூப்பர் :)

அதுல காய்ஞ்சு போன தோசை ருசியா இருந்ததுங்க :)

☀நான் ஆதவன்☀ said...

மினி டிபன் சூப்பர். ஆனா வயிறு ”கடமுடா”ங்குது. எல்லாம் தான் கெட்டு போனதாவுல இருக்கு :)

வானம்பாடிகள் said...

சுடச் சுட இடுகை போட்டு ஆறிப்போச்சு கெட்டுப்போச்சுன்னா எப்புடி? நடிகர் சங்க உறுப்பினரா? அண்ணண் வைகை சுனாமி ராசா வாழ்க.

கலகலப்ரியா said...

சிரிக்கிறதா .. அழுவுறதான்னு குழம்புற அளவுக்கு இடுகை போட உங்களாலதான் முடியும்ண்ணே... அசத்துங்க..

இரா.சுரேஷ் பாபு said...

அசத்துறிங்க பாஸ்...

தேவன் மாயம் said...

நல்லாத்தான் இருக்கு நண்பா!!

Kuselan said...

//முதல்வருடன் சந்திப்பு..ஏன்ணே..நான் சென்னை வந்தா எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா..இல்லாட்டி நானும் நடிகர் சங்கத்தில உறுப்பினர் ஆகணுமா..//

நச்சுன்னு அறைஞ்சது மாதிரி இருக்கு..

ராஜா | KVR said...

ராசா, உங்க பதிவை என்னுடைய “அடிக்கடி படிப்பவை” பகுதியிலே இணைக்கணும்ன்னு நினைச்சுப்பேன், ஆனா மறந்துடுவேன். இன்னைக்கு வெற்றிகரமா இணைச்சுட்டேன்

Shabeer said...

ஆறிப்போன இட்லிதான் ரொம்ப சூப்பர். ஆக்கபூர்வமான காரியங்களுக்கு டைம் ஒதுக்காமல் நடிகைகள் போடும் பத்தினி வேஷத்திற்கு முக்கியத்துவம் கொடுதுக்கொண்டிக்கிறார் CM.

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

-:(

அவிய்ங்க ராசா said...

//////////////////////
mments:

மாதேவி said...
"ஊசிப்போன பொங்கல்" "நமத்துப்போன வடை" இரண்டிற்கும் அனுதாபங்கள்.
10 October, 2009 7:28 PM
/////////////////////
ஹி..ஹி..சமையலில் அசத்துற நீங்க சொன்னா சரிதான்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
er, 2009 7:28 PM
பிரபாகர் said...
ரொம்ப சரளமா நடப்புகளையெல்லாம் அற்புதமா எழுதுறீங்க.... உங்க நடை அருமையா இருக்கு. சில விஷயங்கள் மனசுக்கு ரொம்பவும் கஷ்டத்த கொடுக்குது.

அசத்துறீங்க தோழரே...

பிரபாகர்.
10 October, 2009 8:08 PM
///////////////////////
நன்றி தோழர்..

அவிய்ங்க ராசா said...

////////////////////
ber, 2009 8:08 PM
கபிலன் said...
கெட்டுப்போன இட்லி தோசை மாதிரி இல்லை...புதுசா சுட்ட இட்லி மாதிரி நல்லா இருக்குங்க பதிவு : )
10 October, 2009 8:11 PM
///////////////////
நன்றி கபிலன்..எனக்கு பிடித்தது தோசைதான்..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
er, 2009 8:11 PM
சின்ன அம்மிணி said...
இவ்வளவு சுவையா இருக்கு. தலைப்புல கெட்டுப்போனது மாதிரி சொல்லீட்டீங்க.
10 October, 2009 9:10 PM
//////////////////////
நன்றி அம்மிணி,..கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதான்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
er, 2009 9:10 PM
கதிர் - ஈரோடு said...
//நான் சென்னை வந்தா எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா..//

அப்பாயிண்ட்மெண்டும் கிடையாது... கிப்பாயிண்ட்மெண்டும் கிடையாது

//இல்லாட்டி நானும் நடிகர் சங்கத்தில உறுப்பினர் ஆகணுமா..//

ம்ம்ம்ம்ம்ம்
10 October, 2009 9:12 PM
/////////////////////
ஹா..ஹா..அதை விடுங்க..போன பதிவின் பின்னூட்டத்தில் ஒரு கவிதை கேட்டிருந்தேனே..எங்கே??

அவிய்ங்க ராசா said...

///////////////////
er, 2009 9:12 PM
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
ராசாண்ணே, மினி டிபன் சூப்பர் :)

அதுல காய்ஞ்சு போன தோசை ருசியா இருந்ததுங்க :)
10 October, 2009 9:42 PM
//////////////////
நன்றிண்ணே..முறுகல் தோசைன்னு போட்டிருக்கனும்..)

அவிய்ங்க ராசா said...

///////////////////
r, 2009 9:42 PM
☀நான் ஆதவன்☀ said...
மினி டிபன் சூப்பர். ஆனா வயிறு ”கடமுடா”ங்குது. எல்லாம் தான் கெட்டு போனதாவுல இருக்கு :)
10 October, 2009 9:50 PM
///////////////////
ஆமாண்ணே..மேட்டர் அப்படி ஆகிப்போச்சு..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
ber, 2009 9:50 PM
வானம்பாடிகள் said...
சுடச் சுட இடுகை போட்டு ஆறிப்போச்சு கெட்டுப்போச்சுன்னா எப்புடி? நடிகர் சங்க உறுப்பினரா? அண்ணண் வைகை சுனாமி ராசா வாழ்க.
10 October, 2009 11:06 PM
///////////////////////
ஆஹா..நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////////
கலகலப்ரியா said...
சிரிக்கிறதா .. அழுவுறதான்னு குழம்புற அளவுக்கு இடுகை போட உங்களாலதான் முடியும்ண்ணே... அசத்துங்க..
11 October, 2009 12:06 AM
/////////////////////
நன்றி பிரியா..பாராட்டுறீங்களா, திட்டிறீங்களா என்று உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து குழம்பாமல், பாராட்டுகிறீர்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன்….ஹி..ஹி..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
இரா.சுரேஷ் பாபு said...
அசத்துறிங்க பாஸ்...
11 October, 2009 12:31 AM
தேவன் மாயம் said...
நல்லாத்தான் இருக்கு நண்பா!!
11 October, 2009 12:53 AM
Kuselan said...
//முதல்வருடன் சந்திப்பு..ஏன்ணே..நான் சென்னை வந்தா எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா..இல்லாட்டி நானும் நடிகர் சங்கத்தில உறுப்பினர் ஆகணுமா..//

நச்சுன்னு அறைஞ்சது மாதிரி இருக்கு..
11 October, 2009 4:24 AM
/////////////////////////
நன்றி சுரேஷ்பாபு, தேவன்மாயம், குசேலன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
ber, 2009 4:24 AM
ராஜா | KVR said...
ராசா, உங்க பதிவை என்னுடைய “அடிக்கடி படிப்பவை” பகுதியிலே இணைக்கணும்ன்னு நினைச்சுப்பேன், ஆனா மறந்துடுவேன். இன்னைக்கு வெற்றிகரமா இணைச்சுட்டேன்
11 October, 2009 5:26 AM
Shabeer said...
ஆறிப்போன இட்லிதான் ரொம்ப சூப்பர். ஆக்கபூர்வமான காரியங்களுக்கு டைம் ஒதுக்காமல் நடிகைகள் போடும் பத்தினி வேஷத்திற்கு முக்கியத்துவம் கொடுதுக்கொண்டிக்கிறார் CM.
11 October, 2009 5:51 AM
[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:(
///////////////////////
நன்றி ராஜா, சபீர், பித்தன் அண்ணே..(என்னண்ணே??எங்க இருக்கீங்க..நம்ம ஊருக்கு வந்துட்டீங்களா..?)

Anonymous said...

how will answer for the questions, any cinima industry people will see this or riporters will answer for this

anbudan-mani said...

//மனிசனுக்கு வாக்கு முக்கியமோ இல்லையோ, மூக்கு முக்கியம்னே..//
சூப்பர் பஞ்ச்.. ராசா டச்...

taaru said...

இன்னிக்கி காலைல தான் படிச்சேன்...
ஊசின பொங்கல்:இது வரை நாலு முறை போய்டிச்சி... [பதிவுலகத்துக்கு வர இன்னும் ட்ரைனிங் பத்தலையோ?? பாடி நெம்ப வீக்கா இருக்கோ??]

taaru said...

இந்த ஆட்சியில இதுவும் நடக்கும்.. இன்னமும் நடக்கும்..[ராசா அண்ணே... முடியலண்ணே.. :-) :-)]
எதுவும் கடந்து போகும்ன்னு பெரியவங்க தமிழ்ல சொல்லி வச்சுட்டு போய்ட்டாய்ங்க.. எல்லாமே கடந்து தாண்ணே போகுது.... முடியல அண்ணே...

எம்.எம்.அப்துல்லா said...

//இதுல விஜயகுமார் அண்ணணும், அருண்விஜய் அண்ணணும் பேசியதுதான் சரியான காமெடி //

மற்றவர்கள் பேசியதை விடுங்கள். இவர்கள் இருவரும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். திருமதி.மஞ்சுளா விபச்சாரம் செய்வதாய் ஃபோட்டோவோடு அந்தப் பத்திரிக்கையில் செய்தி வருகின்றது.அவர் வயது 55. அருண்விஜய் அவர் மகன். விஜயகுமார் அவரது கணவர். நம்முடைய தாயைப்பற்றியோ அல்லது மனைவியைப் பற்றியோ அப்படி செய்தி வந்தால் நம் வாயில் இருந்து கோபத்தில் என்ன வார்த்தை வருமோ அதுதான் அவர்கள் வாயில் இருந்தும் வந்தது. நீ சினிமாக்காரா நாய்...அப்படித்தான் சொல்வாய் என யாரேனும் என்னைச் சொல்வீர்களேயானால் என்னுடைய பதில் :(

SholavandhanTeashopOwner said...

ராசா நான் உன்னை பாத்து நேசமாக சிரித்தது பழைய பாக்கிய நீ செட்டில் பண்ணுவேன்னு... ஆனா நீ லிட்டர் லிட்டர் அஹ காபி பன் தின்னுட்டு எப்பிடி கடுக்கஹ் குடுதுட்டியே ராசா....

சிங்கக்குட்டி said...

பதிவு நல்லா இருக்குங்க :-)

கருவாச்சீ said...

ராசா அண்ணே... உங்க ஆறிப்போன அயிட்டம் ரொம்ப சூப்பர்ண்ணே.

I LOVE YOU said...

AV,無碼,a片免費看,自拍貼圖,伊莉,微風論壇,成人聊天室,成人電影,成人文學,成人貼圖區,成人網站,一葉情貼圖片區,色情漫畫,言情小說,情色論壇,臺灣情色網,色情影片,色情,成人影城,080視訊聊天室,a片,A漫,h漫,麗的色遊戲,同志色教館,AV女優,SEX,咆哮小老鼠,85cc免費影片,正妹牆,ut聊天室,豆豆聊天室,聊天室,情色小說,aio,成人,微風成人,做愛,成人貼圖,18成人,嘟嘟成人網,aio交友愛情館,情色文學,色情小說,色情網站,情色,A片下載,嘟嘟情人色網,成人影片,成人圖片,成人文章,成人小說,成人漫畫,視訊聊天室,a片,AV女優,聊天室,情色,性愛

Post a Comment