Saturday, 24 October, 2009

திரை நட்சத்திரங்களின் தீபாவளி

என்னான்னு தெரியலண்ணே..எனக்கு மட்டும் வில்லங்கமான கனவா வருது….ஒருவேளை சாப்பிடுற சாப்பாடு சரியில்லையோ, இல்லாட்டி, கிழக்கு பக்கம் தலைவைச்சு படுக்க கூடாதோ..தீபாவளிக்கு நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டு தூங்கினா வர்ற கனவை பாருங்கண்ணே..

நண்பன் கோவாலு நிருபராகி, எல்லா திரை நட்சத்திரங்களிடம் தீபாவளிக்காக பேட்டி எடுக்க செல்லுகிறான்..முதலில் அவன் செல்லும் இடம், ராகவேந்திரா மண்டபத்திற்கு

கோவாலு : வணக்கம் சூப்பர்ஸ்டார்

ரஜினிகாந்த் : ஆ..வணக்கம், வணக்கம்..என்னம்மா கண்ணு..உனக்கு என்ன வேணும்

கோவாலு : சார்..ஒன்னுமில்லை..மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லனும்

ரஜினிகாந்த் : கண்ணு, நான் சந்தோசமா இருந்தா நிறைய பேசுவேன்..இப்ப கோவமா இருக்கேன்..

கோவாலு : அய்யோ சார்..பயமா இருக்கு..நீங்க கோபப்படுறுதலால சென்னையில எதுவும் சுனாமி வந்துருமா சார்..

ரஜினிகாந்த் : என்ன கிண்டலா…இதப்பார்..உன் வழியில நான் வரல அதுபோல என் வழியில..ஹா..ஹா..ஹா..

கோவாலு : சரிங்க சார்..நான் தள்ளியே நின்னுக்கிறேன்..

ரஜினிகாந்த் : ஏம்பா..அவுங்க எல்லாம் சுகத்துக்காகவா தப்பு பண்றாங்க..எல்லாம் 2 வேளை சோத்துக்காகதாம்பா..

கோவாலு : ஆமா சார்..கரெக்டுதான்..அப்படியே கொள்ளை அடிக்கிறவங்க..கூலிக்கு கொலை பண்றவங்களும், 2 வேளை சோத்துக்காகதான சார் பண்றாங்க….அவுங்களையும் விடுதலை பண்ணிரலாமா சார்..அது தவிர இந்த டயலாக்கை ஏற்கனவே கண்டன கூட்டத்துல பேசிட்டீங்க சார்..

ரஜினிகாந்த் : ஓ..ஏற்கனவே பேசியாச்சா..இப்ப பாருங்க..கலைஞர் தென்னகத்தின் முக்கியத்தலைவர்..அவர் ஒரு இலக்கியவாதி..

கோவாலு : சார்..இதுவும் ஏற்கனவே கலைஞருக்கான பாராட்டு விழாவில் பேசிட்டீங்க..

ரஜினிகாந்த் : ஓ..மை காட்..இதக் கேளுங்க …”ஜெயலலிதா, ஒரு தைரியலட்சுமி..அவர்கள் ஆட்சியில் தமிழ்நாடு செழிப்பாக இருக்கும்..”

கோவாலு: என்ன சார்..இதுவும் ஏற்கனவே பேசியாச்சு,..அடுத்த தடவை அம்மா முதலமைச்சர் வர்றப்ப பேசிக்கலாம்..

ரஜினிகாந்த் : யோவ்..என்ன விளையாடுறீங்களா..ம்ம்ம்ம்ம்…(மிகவும் யோசித்து) நான் அரசியலுக்கு வருவனான்னு தெரியாது..கடவுள்தான் முடிவு எடுக்கணும்..அப்புறம், இதுதான் என்னுடைய கடைசிப் படம்..

கோவாலு : சார்..டைமிங்க் மிஸ் ஆயிடுச்சே..இது அடுத்த படம் ரிலிஸ் ஆகுறதுக்கு முன்னாடி பேச வேண்டிய டயலாக் ஆச்சே..

ரஜினிகாந்த் : போங்கயா..நீங்களும் உங்க பேட்டியும்..எச்சச்ச கச்சச்ச..எச்சச்ச கச்சச்ச….இது எப்படி இருக்கு..

கோவலு : சூப்பர் ஸ்டார்..என்ன ஸ்டைல்..என்ன தெளிவான பேச்சு..என்ன ஒரு இலக்கியம்..என்ன ஒரு விளக்கம்..இந்த வார்த்தைகளில எவ்வளவோ அர்த்தம் அடங்கி கிடக்கு….தலைவர் அரசியலுக்கு வர்றது முடிவு ஆகிடுச்சு..நான் இப்பவே என் பொண்டாட்டி, அம்மா கால் கையில இருக்குற நகையெல்லாம் வித்து கும்பாபிஷேகத்துக்கும், கட் அவுட் பால் ஊத்துறதுக்கும் ரெடி பண்றேன்..

“நாசமா போங்கயா..இதனாலதான் தமிழன் எங்க போனாலும் அடிவாங்குறான்….” கணீர் குரல் கேட்டு திரும்பி பார்த்தால் உலகநாயகன் கமல்..

ரஜினிகாந்த் : வாவ்..வாங்க நண்பரே..என் நண்பன்யா..என் நண்பன்..

கமலஹாசன் : அதெல்லாம் இருக்கட்டும்…நீங்க ஏன் கமல்-50 நிகழ்ச்சிக்கு வர்றலே..

ரஜினிகாந்த் : அய்யோ..என்னப்பா..அதுக்குள்ள மறந்துட்டயா..மேடையில நம்ம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு கண்ணீர் விட்டோமே..

கமலஹாசன் : ஆங்..நேத்து சகிரா..சீ..அகிரா படம் பார்த்ததில கொஞ்சம் கன்பியூஸ் ஆகி மறதி ஆகிடுச்சு..,என்ன படம்யா அது..உலகத்தரம் படம்..படம்னா அதுமாதிரி எடுக்கனும்..

கோவாலு : சார்..என்னசார்..உலகத்தரம்னு ஒன்னுமேயில்லைன்னு நீங்க தானே போன பேட்டியில சொன்னீங்க..

கமலஹாசான் : யோவ்..ஏதோ பேட்டி பார்த்தோமா..கைதட்டுனுமோன்னு போயிடனும்..ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது….ஆமா..நீ யாரு..கமல்-50 க்கு வந்தியா..?? உன்னை மாதிரி ரசிகனுக்காகதானே நிகழ்ச்சி வைச்சிருந்தோம்..

கோவாலு : அய்யோ ஆமா சார்..கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வைச்சதெல்லாம் செலவழிச்சு மெட்ராஸ் நிகழ்ச்சி பார்க்க வந்தேன் சார்..உள்ளார விட மாட்டிங்குறாயிங்க..வி.வி.ஐ.பிங்களுக்குதான் அனுமதின்னு சொல்லிட்டாயிங்க…அப்புறம் என்ன பண்றது..பக்கத்துல

“ஷாம் – 8 ½” ன்னு ஒரு நிகழ்ச்சி வைச்சுருந்தாய்ங்க..அதுக்கு போயிட்டேன்..

“ஷாம் – 8 ½”..யா..எங்கயா நடக்குது..எப்படி கவர் பண்ணாம போயிட்டோம்..” குரல் கேட்டு திரும்பி பார்த்தால் விஜய் டீ.வி கோபிநாத்..

கோபிநாத் : ஷாம்..இந்திய வரலாற்றையே திருப்பிப் போட்டவர்..உலகச்சினிமாவை நோக்கி தமிழனை திருப்பியவர்….தொலைநோக்கு பார்வை உடையவர்..ஷாமும் தமிழும்..ஷாமும் இலக்கியமும்..இப்பேர்பட்ட மனிதருக்கு விழா எடுப்பதில் விஜய் டீ.வி உவகை கொள்கிறது..(கேமிராமேனைப் பார்த்து)..உஷாரா இருக்கனும்..யாராவது அழுக ஆரம்பிச்சா விடக்கூடாது..குளோசப் ஆக்கிடனும்..

கமலஹாசன் : அடப்பாவிங்களா..எனக்கு சொன்னா வார்த்தைகளையே அப்படியே ஷாமுக்கு போடுறீங்களேயா..அது என்னயா “ஷாம் – 8 ½”??

கோவாலு : அது ஒன்னுமில்ல சார்.ஷாம் வீட்டு டிரைவர் வேலைக்கு சேர்ந்து எட்டரை வருசம் ஆச்சாம்..அதுதான்..

“அடப்பாவிகளா..அடப்பாவிகளா..” குரல் கேட்டு திரும்பிபார்த்தால் விவேக்

ரஜினிகாந்த் : என்ன விவேக் டென்சன்..

விவேக் : பின்ன என்ன சார்..ஏதோ ஒரு நடிகை பிகினி போட்டு தீபாவளி வெடிவெடிச்சுச்சாம்..அத போட்டாவோடு போட்டுட்டாயிங்க சார்..இவிங்கட்டெல்லாம் ஒன்னு கேக்குறேன்..உங்க ஆயாவெல்லாம் ரெயின் கோட்டு போட்டுட்டா, வெடி வெடிக்கும்..ஒன்னு பண்றீயா..உங்க ஆயா போட்டாவை எனக்கு கொடு..நான் அதை மார்பிங்க் பன்ணி..

(எல்லாரும் காதைப் பொத்திக் கொள்கின்றனர்..)

“விடாதீங்க சார்..இவனுங்க எல்லாத்தையும் நசுக்கனும் சார்..ஆதவன் பிளாப்புன்னு சொல்றாயிங்க சார்..” கோபக்குரல் கேட்டு திரும்பிபார்த்தால் சூர்யா..கோபாலைப் பார்த்தவுடனே நிருபர் என்று உணர்ந்து ஜகா வாங்குகிறார்..

சூர்யா : அய்யோ..நான் சொன்னதை எல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க..நான் ஏதோ ஒரு நிருபரைத்தான் சொன்னேன்..பத்திரிக்கை சினிமாவுக்கு ரொம்ப அவசியம்…”

“அங்க ஏதோ சத்தம் கேக்குதே….அது யாரு மூணு பேரு..”

“அப்பாஆஆஆஆஆஆஆஅ..இந்த குறுந்தொகையில…” சிவக்குமார் டயலாக் பேசிக்கொண்டே வர எல்லாரும் டெர்ராகிறார்கள்..

“ஆதவன் பிளாப் தான்.. இதுக்கு ஒத்துக்குறவங்க எல்லாம் கையத் தூக்குங்க….” சத்யராஜ் பந்தாவா என்டர் ஆக..சூர்யாவும் மறந்து போய் கையை தூக்குகிறார்...

“ஏ..டண்டனக்கா..ஏ..டனக்குனக்கா..சிம்பு வந்து 25 வருசம் ஆகுதுடா..ஏண்டா..யாரும் சிம்பு-25 நடத்தல..ஈழத்தமிழன் சந்தோசமா இருக்க சிம்பு – 25 நடத்த வேண்டியதுதானடா..தமிழனெல்லாம் ஏமாளியாடா…ஏ..டண்டனக்கா..ஏ..டனக்குனக்கா..”

டீ.ஆர்..டெர்ராக என்டர் ஆக..எல்லாரும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடுகிறார்கள்..

(நீங்க..எங்க ஓடுறீங்க..கிழே உள்ள ஓட்டை போட்டுருங்கப்பூ…)

15 comments:

Jaleela said...

///கமலஹாசன் : அதெல்லாம் இருக்கட்டும்…நீங்க ஏன் கமல்-50 நிகழ்ச்சிக்கு வர்றலே..

///
ரஜினிகாந்த் : அய்யோ..என்னப்பா..அதுக்குள்ள மறந்துட்டயா..மேடையில நம்ம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு கண்ணீர் விட்டோமே..//

///ஹா ஹா செம்ம ஜோக்கு போங்க

Jaleela said...

“ஆதவன் பிளாப் தான்.. இதுக்கு ஒத்துக்குறவங்க எல்லாம் கையத் தூக்குங்க….” சத்யராஜ் பந்தாவா என்டர் ஆக..சூர்யாவும் மறந்து போய் கையை தூக்குகிறார்

.///உடனே சிவக்குமார் சொல்லலையா சூரியா வ பார்த்து அட்டேய் படுவா வா வீட்டுக்கு வா உன்னா பார்த்துக்குறேன்னு..... ஹி ஹி //

வானம்பாடிகள் said...

காலையில வெறும் வயித்தோட இத படிக்கறியே. வேணாம்டான்னு கோவாலு சொல்லியும் கேக்காம படிச்சேன். வயறு இழுத்து புடிச்சிகிட்டு வலிக்குது.=)).

நாஸியா said...

\\ஆமா சார்..கரெக்டுதான்..அப்படியே கொள்ளை அடிக்கிறவங்க..கூலிக்கு கொலை பண்றவங்களும், 2 வேளை சோத்துக்காகதான சார் பண்றாங்க….அவுங்களையும் விடுதலை பண்ணிரலாமா சார்..\\

சூப்பர் போங்க!

அன்புடன் மணிகண்டன் said...

நானும் நெனச்சேன்..

நாளைக்கு சிம்பு-25 , குறளரசன்-17 பகோடா காதர்-57 , மாஸ்டர் கணேஷ்-30, ஷாமிலி-ஷாலினி-27, இப்படியெல்லாம் கொண்டாட வேண்டி வருமென்று..

ராஜா | KVR said...

nice one.

தலைவா, உங்களை ஒரு தொடர்பதிவு எழுத அழைச்சிருக்கேன், நேரமிருந்தால் தொடருங்க

http://kvraja.blogspot.com/2009/10/2009.html

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு

அவிய்ங்க ராசா said...

///////////////////////
Jaleela said...
///கமலஹாசன் : அதெல்லாம் இருக்கட்டும்…நீங்க ஏன் கமல்-50 நிகழ்ச்சிக்கு வர்றலே..

///
ரஜினிகாந்த் : அய்யோ..என்னப்பா..அதுக்குள்ள மறந்துட்டயா..மேடையில நம்ம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு கண்ணீர் விட்டோமே..//

///ஹா ஹா செம்ம ஜோக்கு போங்க
24 October, 2009 10:00 PM
/////////////
நன்றி ஜலீலா…))

அவிய்ங்க ராசா said...

/////////////////////
er, 2009 10:00 PM
வானம்பாடிகள் said...
காலையில வெறும் வயித்தோட இத படிக்கறியே. வேணாம்டான்னு கோவாலு சொல்லியும் கேக்காம படிச்சேன். வயறு இழுத்து புடிச்சிகிட்டு வலிக்குது.=)).
24 October, 2009 11:00 PM
////////////////////
ஹா.ஹா..உங்கள் வடிவேல் பதிவராகிறாரை விட இது சுமார்தான்..)

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ber, 2009 11:00 PM
நாஸியா said...
\\ஆமா சார்..கரெக்டுதான்..அப்படியே கொள்ளை அடிக்கிறவங்க..கூலிக்கு கொலை பண்றவங்களும், 2 வேளை சோத்துக்காகதான சார் பண்றாங்க….அவுங்களையும் விடுதலை பண்ணிரலாமா சார்..\\

சூப்பர் போங்க!
24 October, 2009 11:23 PM
///////////////////////
நன்றி நாஸியா..)

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
er, 2009 11:23 PM
அன்புடன் மணிகண்டன் said...
நானும் நெனச்சேன்..

நாளைக்கு சிம்பு-25 , குறளரசன்-17 பகோடா காதர்-57 , மாஸ்டர் கணேஷ்-30, ஷாமிலி-ஷாலினி-27, இப்படியெல்லாம் கொண்டாட வேண்டி வருமென்று..
25 October, 2009 12:28 AM
///////////////////////
ஹா..ஹா..கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ber, 2009 12:28 AM
ராஜா | KVR said...
nice one.

தலைவா, உங்களை ஒரு தொடர்பதிவு எழுத அழைச்சிருக்கேன், நேரமிருந்தால் தொடருங்க

http://kvraja.blogspot.com/2009/10/2009.html
25 October, 2009 3:41 AM
///////////////////
தங்கள் அன்பிற்கு நன்றி ராஜா..

அவிய்ங்க ராசா said...

////////////////////
, 2009 3:41 AM
ஆ.ஞானசேகரன் said...
நல்லாயிருக்கு
25 October, 2009 10:33 PM
/////////////////////
நன்றி ஞானசேகரன்..

taaru said...

ஆக நாட்டு நடப்ப எல்லாம் நச்சுனு நிதமும் படிககுறீக.....
நடக்கட்டும் நடக்கட்டும்..

Anonymous said...

எவனோ நடிக்கிறான் , கோடி கணக்குல சம்பாதிக்கிறான் .. நமக்கு கால் காசு புண்ணியம் இல்ல... சினிமாகாரனை, ஒரு கூத்தாடி போல பாத்துவிட்டு , காசை போட்டுவிட்டு போயிகிட்டே இருக்கணும் ...
நம்ம குடும்பம் முக்கியம் , நம் எதிர்காலம் முக்கியம் .
அவங்கள மதிச்சு பதிவு எழுதி , எதுங்குங்க ?????

Post a Comment