போன வாரம் என்னுடைய நண்பர் ஒருவரை ஒரு ஹோட்டலில் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. நண்பரும் ஒரு பதிவர்தான்..புதிதாக திருமணம் ஆனவர்..மனைவியுடன் ஹோட்டலுக்கு சாப்பிட வந்திருந்தார்..பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தோம்..அவருடைய மனைவி நம்ம ஊருப்பக்கம்..அவர் மனைவியுடைய உறவினர்கள் பற்றி விசாரிக்கும் போதுதான் தெரிந்தது, எனக்கு தூரத்து சொந்தம். தங்கை முறை வந்தது..நண்பருக்கு அவசரமாக போன் வந்ததால் எழுந்து வெளியே சென்று பேசிக் கொண்டிருந்தார்..உறவினர் என்பதால் நலம் விசாரிப்பதற்காக கேட்டேன்..
“என்னம்மா..திருமணம் மற்றும் அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கு..”
அவரிடம் எந்த பதிலும் வரவில்லை..எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சியாகிவிட்டது..என் மனைவி கொஞ்சம் அருகில் சென்று கேட்டாள்..
“என்னக்கா..எதுவும் பிரச்சனையா..?”
அவ்வளவுதான்..அந்த பெண் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்கவே எனக்கு தூக்கி வாரிப் போட்டது..இதற்கு மேல் கேட்பது நாகரிகம் இல்லாததால் நான் ஒன்றும் பேசவில்லை..ஒரு வழியாய் அழுகையை நிறுத்தி விட்டு தொடர்ந்தார்..
“அண்ணா..ஏண்டா திருமணம் செஞ்சோம்னு இருக்கு..எப்ப பார்த்தாலும் ப்ளாக்,ப்ளாக்தான்….இரவில் 2 மணி வரைக்கும் ப்ளாக் எழுதுறார்..தினமும் ஒரு பதிவு..காலையில் எழுந்தவுடனே பல் கூட விளக்குவதில்லை..தனக்கு எத்தனை ஓட்டு மற்றும் ஹிட்ஸ் வந்திருக்கு என்று பார்க்கிறார்..யாராவது பின்னூட்டம் இட்டால் அதற்கு கமெண்ட்ஸ் எழுதுகிறார்..ஆபிஸ் செல்கிறார்..இரவு 6 மணிக்கு வருகிறார்..திரும்பவும் எல்லாரோட பதிவுகளை படிக்க ஆரம்பிக்கிறார்..திரும்பவும் பதிவு எழுதல்..என்ன வாழ்க்கைண்ணே..அப்புறம் எதுக்கு என்னைத் திருமணம் செய்துக்கணும்..நான் வீட்டில் ஒரு விருந்தினர் போலக் கூட இல்லை..ஒரு பொம்மை போல் இருக்கிறேன்….ஒரு நாய்குட்டி வளர்த்தாக் கூட அதுகூட கொஞ்சம் நேரம் செலவழிப்போம்ணே..அது போலக் கூட நான் வீட்டில் இல்லைண்ணே..எனக்கும் மனசு இருக்குலண்ணே..யாரோ கண்ணுக்கு தெரியாதா நாலுபேர் பாராட்டுக்காகவும், வாழ்த்துக்காகவும் பல மணி நேரத்தை செலவழிக்கும் அவர், கண்ணுக்கு நேரா அவருக்காகவே வாழ்ந்துக்கிட்டு இருக்குற ஒரு உயிருள்ள மனுசியோட ஒருமணி நேரம் செலவழிக்க முடியாதாண்ணே..அவருக்காகத்தானே எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன்..ஏண்ணே..அவர் எனக்காக நேரம் செலவழிக்கணும்னு நான் கேக்குறது தப்பாண்ணே..நானும் மனுசிதானண்ணே..”
என்னால எதுவும் பேச முடியவில்லைண்ணே..
“ஏம்மா..அவன் கிட்ட இது பத்தி சொல்லி இருக்கலாமே..”
“இல்லை அண்ணா..எதுவும் தப்பா நினைச்சுக்கிறுவாரோன்னு பயமா இருக்கு..”
என் நண்பனை தனியே கூப்பிட்டு விவரம் சொன்னவுடனே அதிர்ந்து விட்டான்..
“ராசா..என்னடா சொல்லுற..இது எனக்கு தெரியவே தெரியாதுடா..அவ ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்டா..நான் பதிவு எழுதுறதை அவ ரசிக்குறான்னுல நினைச்சுக்கிட்டு இருந்தேன்..சே..அவ மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்..பாவிடா நான்..”
அண்ணே..இது சொல்லுறதுனால நீங்க என்னைத் திட்டுனாலும் பரவாயில்லை..அல்லது இதை 10001 அறிவுரையாகவோ ஆலோசனையாகவே எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை..கீழே உள்ளதை மட்டும் பதிவை படிச்சு முடிச்சவுடனே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..
1) பதிவு எழுதுவதை பொழுதுபோக்காக மட்டுமே வைத்து இருங்கள்..அதுவே வாழ்க்கை இல்லை..
2) தினமும் ஒரு பதிவு போட வேண்டிய அவசியம் இல்லை..தினமும் பதிவு எழுதுவதால், உங்களுக்கும் எதுவும் கின்னஸ் அவார்டு கொடுக்கப் போவதில்லை..
3) உங்களுடைய தனிப்பட்ட மற்றும் அலுவலக வாழ்க்கை மிகவும் முக்கியம்..பதிவுலக நேரம் அந்த வாழ்க்கையை தின்று விட அனுமதிக்காதீர்கள்
4) வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் எதுவும் சொல்லவில்லை என்று நினைக்காதிர்கள்..அவர்கள் உள்ளே புழுங்கி கொண்டிருக்கலாம்..ஒருநாள் வெடித்து தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கலாம்
5) முடிந்த வரை, அலுவலகத்தில் பதிவு எழுதுவதையோ, கமெண்ட் போடுவதையோ நிறுத்துங்கள்..எவ்வளவோ பேர் வேலைக்காக க்யூவில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கால்கடுக்க நிற்கிறார்கள்..நமக்கு ஒரு வேலை கொடுத்து, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்..பதிவு திறக்கும்முன் ஒரு கணம் உங்களை அந்த கம்பெனியின் முதலாளியாக நினைத்துப் பாருங்கள்..அப்புறம் தெரியும்..
6) முகம் தெரியாத நண்பர்களின் பாராட்டுகளுக்கு நேரம் செலவழிக்க ஆசைப்பட்டு நமக்காக வாழ்ந்து கொண்டு இருக்கும் உறவுகளை இழந்து விடாதிர்கள்
7) உங்களுக்கு உள்ள அதிகப்படியான நேரத்தை மட்டுமே பதிவுலகத்தில் செலவழியுங்கள்..உங்கள் பெற்றோர் , மற்றும் குழ்ந்தையின் சிரிப்பைக் காட்டிலும் பதிவு முக்கியமில்லை..ஒரு வாரம் முழுவதும் உங்கள் தனிப்பட்ட, மற்றும் அலுவலக நேரம் தவிர எதுவும் கிடைக்கவில்லையென்றால், கவலைப்பட வேண்டாம்..நீங்கள் பதிவுலம் பக்கம் வரவில்லையென்று யாரும் சாப்பிடாமலோ, ஸ்டிரைக் பண்ணப் போவதில்லை..அவரவருக்கு சொந்த வாழ்க்கை உள்ளது..
8) பதிவுலகம் ஒரு போதை என்று சொல்லி தப்பிக்க வேண்டாம்..போதை என்றால் அதற்கு அடிமையாவது நம்முடைய தவறு….ஒவ்வொருவருடைய உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவரே பொறுப்பு..தவிர பதிவுலகம் உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை..
ஏதோ மனசுக்கு பட்டது சொன்னேன்னே..என் நண்பனுக்கு நடந்தது போல் நம்மில் யாருக்கும்…..இருங்கண்ணே., ஏதோ போன் கால் வருது..ஊருல இருந்து அம்மாண்ணே..அவிங்கதான் முக்கியம்..
39 comments:
ஹைய்யோ...... சரியாச் சொல்லிட்டீங்க.
அவ்வளவும் 10001 சதம் உண்மை.
நல்லா சொல்லி இருக்கிங்க.
நல்ல இடுகை நண்பா. இப்பல்லாம் குடும்ப நண்பர்கள் பேசிக் கொள்வது மிகவும் குறைந்துவிட்டது. அதனால்தான் பிரச்சினைகள் விவகாரத்துவரைகூட போய்விடுகிறது. கணவ/ மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மனம்விட்டு பேசிக் கொண்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
நல்ல வேளை உங்களுக்கு பதில் சொல்லனும்னு இருந்தேன்.... இருங்க... இனி உங்களுக்கு பதில் கிடையாது... வரட்டா..
:-)
என்ன சொல்றதுன்னு தெரியலே!
கொஞ்சம் ஓவரா எழுதிட்டீங்க போல?
நீங்க சொல்றத பார்த்தால், கல்யாணத்துக்கு அப்புறம் எழுதிறதெல்லாம் மூட்டை கட்டி வைக்கணுமா?
அப்போ எழுத்தாளர்கள் எல்லாம், வீட்டிலே பர்மிசன் வாங்கிட்டு தான் எழுதனுமா?
அது தான் விடிய விடிய எழுதறாங்களா? அரசாங்க உத்தியோகத்தில் போய் உட்கார்ந்துக்கிட்டு, மத்தியானம் நல்லா தூங்கலாம்!
சரி ஒரு க்வேச்டியன், அந்த தங்கச்சியும் ஒரு ப்ளாக் எழுதலாம், தன் நிலைமை பற்றி. அப்பவாவது புருஷன் தெரிஞ்சிகிட்டும். அப்புறம் கம்ப்யுட்டர் கத்துகிட்டால், வேலைக்கு போகலாம் ( அமேரிக்காவில், டெஸ்டிங் தொழில் ஈசி )... பணம் வந்தவுடன் ஜாலியா சுத்தலாம். பல நாடுகள் பார்க்கலாம்....
ஹி...ஹி...ஹி...
ராஜா.....பளிச்சுன்னு உண்மையை சொல்லிட்டீங்க....
நல்லாச் சொன்னீங்க ராசா
அருமையா சொன்னீங்க!
ரொம்ப அழகா எழுதறீங்க. பாராட்டுகள்.
நீங்க அப்படியிருக்காதீங்கண்ணே.. பாத்து சூதானமா இருங்கண்ணே..
நீ சொன்னா கரிக்டாதான் இருக்கும் பா !
என் நண்பன் ஒருத்தன் பல தில்லாலங்கடி கதைகளாச் சொல்லிகிட்டே இருப்பான், கதையில கேள்வி கேட்டால், இது என் கதையில்லை என் ஃப்ரண்டோட கதைன்னு முடிச்சிடுவான்.
அது நீ இல்லையே ராசா????
எத்துணையோ பதிவர்கள் குடும்பத்தில் நடக்கும் சத்தியமான உண்மை என்று தான் தோன்றுகிறது. நானும் முதலில் அப்படித்தான் என்று என் வீட்டார் நினைத்தார்கள். இப்போ, சமைக்கும் நேரத்தில் யோசித்து விடுகிறேன். குக்கர் விசில் வருவதற்குள் பதிவிட்டு விடுகிறேன். அதனால், நேரம் கணிசமாக குறைந்து, இல்லை நானே குறைத்து விட்டேன்.
அண்ணே அருமையான அறிவுரைங்க. பொழுது போக்கிற்கு பதிவுப் போடலாம் தப்பில்லை.
Appo bossu, pathivi yaeluthamattaenu solringala? illa kammiya yaelutha poringala?
நிதர்சனமான உண்மை
வாழ்த்துக்கள்
இயல்பு வாழ்க்கை நமது பிளாக்கினால் மாறாமல் உள்ளதா என சரி பார்க்கத்தான் வேண்டும்
தினமும் ஒரு பதிவு போட வேண்டிய அவசியம் இல்லை..தினமும் பதிவு எழுதுவதால், உங்களுக்கும் எதுவும் கின்னஸ் அவார்டு கொடுக்கப் போவதில்லை //////////
இது சரி...
nice and useful post. But this is internet years. we will be crazy on this Blog, chat, googling for some more years then it will be boring.
But 95% of the bloggers are Indian living/working in abroad. so to come out of/forget home sick, other worries, Blog and chats r the outlets.
When they go back to India they do not spend much time in blogging.
:-) anubava pathiva ha ha ha nan mulichikitaen eppavo ennoda wife kita nan romba freedom koduthu irukan so sollitanga ha ha anga eppadi athai thana ha ha :-)
கரெக்டுங்க...
சக பதிவர்கள் மீது கொண்டிருக்கும்(?) காதலுக்கு நன்றி....முற்றிலும் உண்மை..
ஒரு சிலரோட பதிவுகளையும் படிக்கும் போது உடனடியா அவங்ளோட அனைத்து பதிவுகளையும் படிக்க தோணும். அந்த பதிவர்களில் நீங்களும் ஒருத்தர்.
ரொம்ப நல்ல எழுதறீங்க. வாழ்த்துக்கள்.
உங்கள் ஒவ்வொரு ஆலோசனைகளும் முத்துக்கள். பதிவர்கள் அனைவரும் கட்டாயம் அவதானிக்க வேண்டியவை. நன்றி
பதிவர்கள் அனைவரும் படித்து உணர்ந்து திருந்த வேண்டிய பதிவு இது. நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள்,
வாழ்க வளமுடன்,
வேலன்.
////////////////
துளசி கோபால் said...
ஹைய்யோ...... சரியாச் சொல்லிட்டீங்க.
அவ்வளவும் 10001 சதம் உண்மை.
3 August, 2009 9:59 PM
கோவி.கண்ணன் said...
நல்லா சொல்லி இருக்கிங்க.
3 August, 2009 10:06 PM
குடந்தை அன்புமணி said...
நல்ல இடுகை நண்பா. இப்பல்லாம் குடும்ப நண்பர்கள் பேசிக் கொள்வது மிகவும் குறைந்துவிட்டது. அதனால்தான் பிரச்சினைகள் விவகாரத்துவரைகூட போய்விடுகிறது. கணவ/ மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மனம்விட்டு பேசிக் கொண்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
3 August, 2009 10:25 PM
//////////////////////
வருகைக்கு நன்றி துளசி சார், கோவி கண்ணன், அன்புமணி
////////////////////
நையாண்டி நைனா said...
நல்ல வேளை உங்களுக்கு பதில் சொல்லனும்னு இருந்தேன்.... இருங்க... இனி உங்களுக்கு பதில் கிடையாது... வரட்டா..
3 August, 2009 10:52 PM
///////////////////
ஆஹா..நைனா..ஏன் இப்பிடி..)))
//////////////////////////
Raju said...
:-)
என்ன சொல்றதுன்னு தெரியலே!
கொஞ்சம் ஓவரா எழுதிட்டீங்க போல?
நீங்க சொல்றத பார்த்தால், கல்யாணத்துக்கு அப்புறம் எழுதிறதெல்லாம் மூட்டை கட்டி வைக்கணுமா?
அப்போ எழுத்தாளர்கள் எல்லாம், வீட்டிலே பர்மிசன் வாங்கிட்டு தான் எழுதனுமா?
அது தான் விடிய விடிய எழுதறாங்களா? அரசாங்க உத்தியோகத்தில் போய் உட்கார்ந்துக்கிட்டு, மத்தியானம் நல்லா தூங்கலாம்!
சரி ஒரு க்வேச்டியன், அந்த தங்கச்சியும் ஒரு ப்ளாக் எழுதலாம், தன் நிலைமை பற்றி. அப்பவாவது புருஷன் தெரிஞ்சிகிட்டும். அப்புறம் கம்ப்யுட்டர் கத்துகிட்டால், வேலைக்கு போகலாம் ( அமேரிக்காவில், டெஸ்டிங் தொழில் ஈசி )... பணம் வந்தவுடன் ஜாலியா சுத்தலாம். பல நாடுகள் பார்க்கலாம்....
3 August, 2009 11:11 PM
/////////////////////////////
நன்றி ராஜூ..தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்..
முதலில் இந்த பதிவு எழுத்தை தொழிலாக கொண்டவர்களுக்கு பொருந்தாது..
அடுத்து கடைசி பாரா எனக்கு புரியவில்லை..அமெரிக்காவில் டெஸ்டிங்க் வேலை வாங்குவதும் எளிதல்ல..
/////////////////////////
3 August, 2009 11:11 PM
தண்டோரா said...
ஹி...ஹி...ஹி...
3 August, 2009 11:14 PM
raja said...
ராஜா.....பளிச்சுன்னு உண்மையை சொல்லிட்டீங்க....
3 August, 2009 11:31 PM
S.A. நவாஸுதீன் said...
நல்லாச் சொன்னீங்க ராசா
4 August, 2009 12:08 AM
/////////////////////////
நன்றி தண்டோரா, ராஜா..நவாஸ்
/////////////////////////
ஜோ/Joe said...
அருமையா சொன்னீங்க!
4 August, 2009 12:50 AM
பாமரன்.. said...
ரொம்ப அழகா எழுதறீங்க. பாராட்டுகள்.
4 August, 2009 12:55 AM
கலையரசன் said...
நீங்க அப்படியிருக்காதீங்கண்ணே.. பாத்து சூதானமா இருங்கண்ணே..
4 August, 2009 2:54 AM
இளைய கவி said...
நீ சொன்னா கரிக்டாதான் இருக்கும் பா !
4 August, 2009 3:40 AM
///////////////////////////////
நன்றி பாமரன், ஜோ, இளைய கவி(ஆமாம்பா..), கலை
///////////////////
அப்பாவி முரு said...
என் நண்பன் ஒருத்தன் பல தில்லாலங்கடி கதைகளாச் சொல்லிகிட்டே இருப்பான், கதையில கேள்வி கேட்டால், இது என் கதையில்லை என் ஃப்ரண்டோட கதைன்னு முடிச்சிடுவான்.
அது நீ இல்லையே ராசா????
4 August, 2009 3:41 AM
///////////////////////////
என் நண்பன் ஒருவன் உண்மை மட்டும்தான் பேசுவான்..அது நீங்கள் இல்லையே..)))
///////////////////////////
SUMAZLA/சுமஜ்லா said...
எத்துணையோ பதிவர்கள் குடும்பத்தில் நடக்கும் சத்தியமான உண்மை என்று தான் தோன்றுகிறது. நானும் முதலில் அப்படித்தான் என்று என் வீட்டார் நினைத்தார்கள். இப்போ, சமைக்கும் நேரத்தில் யோசித்து விடுகிறேன். குக்கர் விசில் வருவதற்குள் பதிவிட்டு விடுகிறேன். அதனால், நேரம் கணிசமாக குறைந்து, இல்லை நானே குறைத்து விட்டேன்.
4 August, 2009 6:03 AM
கும்மாச்சி said...
அண்ணே அருமையான அறிவுரைங்க. பொழுது போக்கிற்கு பதிவுப் போடலாம் தப்பில்லை.
4 August, 2009 6:30 AM
Unmai said...
Appo bossu, pathivi yaeluthamattaenu solringala? illa kammiya yaelutha poringala?
4 August, 2009 7:59 AM
நிகழ்காலத்தில்... said...
நிதர்சனமான உண்மை
வாழ்த்துக்கள்
இயல்பு வாழ்க்கை நமது பிளாக்கினால் மாறாமல் உள்ளதா என சரி பார்க்கத்தான் வேண்டும்
4 August, 2009 9:10 AM
/////////////////////////
நன்றி சுமஜ்லா, கும்மாச்சி,உண்மை, நிகழ்காலம்
//////////////////////
வண்ணத்துபூச்சியார் said...
தினமும் ஒரு பதிவு போட வேண்டிய அவசியம் இல்லை..தினமும் பதிவு எழுதுவதால், உங்களுக்கும் எதுவும் கின்னஸ் அவார்டு கொடுக்கப் போவதில்லை //////////
இது சரி...
4 August, 2009 10:49 AM
குப்பன்_யாஹூ said...
nice and useful post. But this is internet years. we will be crazy on this Blog, chat, googling for some more years then it will be boring.
4 August, 2009 4:09 PM
குப்பன்_யாஹூ said...
But 95% of the bloggers are Indian living/working in abroad. so to come out of/forget home sick, other worries, Blog and chats r the outlets.
When they go back to India they do not spend much time in blogging.
4 August, 2009 4:15 PM
Suresh said...
:-) anubava pathiva ha ha ha nan mulichikitaen eppavo ennoda wife kita nan romba freedom koduthu irukan so sollitanga ha ha anga eppadi athai thana ha ha :-)
4 August, 2009 4:58 PM
சரவணகுமரன் said...
கரெக்டுங்க...
4 August, 2009 5:43 PM
////////////////////
வருகைக்கு நன்றி வண்ணத்துப்பூச்சி, சுரேஸ்(எப்போ ரீஎண்ட்ரி??), குப்பன், சரவணா
///////////////////////
கிறுக்கன் said...
சக பதிவர்கள் மீது கொண்டிருக்கும்(?) காதலுக்கு நன்றி....முற்றிலும் உண்மை..
5 August, 2009 3:44 AM
Balakumar said...
ஒரு சிலரோட பதிவுகளையும் படிக்கும் போது உடனடியா அவங்ளோட அனைத்து பதிவுகளையும் படிக்க தோணும். அந்த பதிவர்களில் நீங்களும் ஒருத்தர்.
ரொம்ப நல்ல எழுதறீங்க. வாழ்த்துக்கள்.
5 August, 2009 11:46 AM
Dr.எம்.கே.முருகானந்தன் said...
உங்கள் ஒவ்வொரு ஆலோசனைகளும் முத்துக்கள். பதிவர்கள் அனைவரும் கட்டாயம் அவதானிக்க வேண்டியவை. நன்றி
5 August, 2009 7:35 PM
வேலன். said...
பதிவர்கள் அனைவரும் படித்து உணர்ந்து திருந்த வேண்டிய பதிவு இது. நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள்,
வாழ்க வளமுடன்,
வேலன்.
5 August, 2009 9:49
/////////////////////////
நன்றி பாலா, கிறுக்கன், முருகானந்தன், வேலன்
//அமெரிக்காவில் டெஸ்டிங்க் வேலை வாங்குவதும் எளிதல்ல// :-)
அப்படிதான் ஏற்கனவே அங்கு இருக்கும் நம் நண்பர்கள் சொல்லுவார்கள். அவர்கள் மனைவிமார்களை அங்கு வேலை செய்ய வைக்க இது எளிய வழி!
மற்றவர்கள் அங்கு வந்துவிட்டால் ப்ராப்ளெம். எங்களுக்கே இப்போ ரிசசென். எதுக்கு நீங்க வரீங்க?
என் ஆண் நண்பர்கள் அங்கு கல்யாணம் செய்து சென்றவுடன் மனைவிகளுக்கு ( திறமை இருந்தால் தான்.. டிகிரீ..) உடனே வேலை வாங்கி கொடுக்கிறார்கள், குறைந்த பட்சம் அறுபதாயிரம் டாலர்கள் சம்பளம்.
அப்புறம் இன்னும் ஒன்று, பே ஏரியாவில் வயர்லேச்ஸ் நெட்வர்க் ஆட்கள் தேவை என்று எவ்வளவு விளம்பரங்கள் மான்ச்டரில் இருக்கு தெரியுமா? நான் வேறு எஸ்.ஏ.பி. படித்துவிட்டேன், பெருஞ்செலவுடன். அதனால், அந்த வழியில் போகவேண்டும்.
நானும் கம்ப்யுட்டர் சாப்ட்வேர் துறையில் பத்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டேன். அந்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என் சொந்த கருத்து தான்...திணிக்கவில்லை.. )
http://www.linkedin.com/in/rajusundaram
Link with me...
வேலன் சார் நீங்க கொடுத்த லிங்கில் படித்து விட்டு பதில் போட முடியல.
நன்றி இந்த பதிவை லிங்க் கொடுத்ததற்கு,
கீழே உள்ள மெசேஜ் ராஜா பிளாக்கில் அவிங்க
..
சரியாக சொல்லி இருக்கீஙக ராஜா
பாவம் அந்த பெண் எவ்வளவு நாள் கணவரிடன் சொல்லமல் இருந்திருக்கிறார்கள்.
நீங்கள் சொல்லி உள்ளது அனைத்தும் உண்மை தான்.இதை எல்லோரும் படிக்கனும்,
அருமையான பதிவு...
//..நீங்கள் பதிவுலம் பக்கம் வரவில்லையென்று யாரும் சாப்பிடாமலோ, ஸ்டிரைக் பண்ணப் போவதில்லை..அவரவருக்கு சொந்த வாழ்க்கை உள்ளது..//
ஹா ஹா பாயிண்ட் பாயிண்ட் நச்சுன்னு பொளந்து கட்டிட்டீஙக//
தங்களின் பதிவுக்கு எனது பதிவில் லிங்க் கொடுத்திருந்தேன் . பதிவர் கரு்த்துரையை உங்களுக்கு சொல்லியுள்ளார். எனது பதிவின் முகவரி:-http://velang.blogspot.com/search/label/வேலன்:-நமது%20செல்போனுக்கு%20பதிவின்%20கருத்துக்களை%20வரவழைக்க
வாழ்க வளமுடன்,
வேலன்.
to solve this problem..everyone in the family should blog and do most of their contact through blogging... so their friendship and understanding will also grow :)
நெத்தியடி அடிச்சீங்க பாருங்க .அருமை அருமை
அன்புடன் லோகநாதன்
Post a Comment