Monday, 24 August, 2009

நமீதா என்னிடம் செய்த குறும்புஇந்த உலகத்துல முதல்ல பிறந்தது குரங்குகள்னு சொல்லுவாங்க..இல்லைண்ணே..முதல்ல பிறந்தது எங்க அபார்ட்மெண்டில் வாழும் வானரக் கூட்டம் அண்ணே.. என்ன புரியலையா..எங்க அபார்ட்மெண்டில் 5 வயசுக்கு மேலே 12 வயசுக்குள்ளாற 10 பசங்க இருக்காயிங்கண்ணே..எல்லாம் வாலுங்க..உசிரோட கொளுத்திருவாயிங்கண்ணே..இவிங்க பொறந்தவுடனே பார்த்த முதல் படம் அஞ்சலின்னு நினைக்கிறேன்..சேட்டையின் மொத்த உருவமே இவிங்கதான்..அபார்ட்மெண்ட்ல ஒரு பயலையும் விட மாட்டாயிங்க..பாசமா “அங்கிள்” ன்னு பக்கத்துல வருவாயிங்க..தூக்கி வைச்சு கொஞ்சுனா, கன்னத்துல நல்லா இருக்குற 4 பல்லும் பதியிற மாதிரி ஒரு கடி கடிப்பாயிங்க பாருங்க..மறுநாள் ஆஸ்பத்திரியில போய் கட்டுதான் போடணும்..

ஒருநாள் மதியம் நல்லா தூங்கிக்கிட்டு இருந்தேன்..யாரோ காலை சுரண்டற மாதிரி இருந்துச்சுண்ணே..பயந்துகிட்டு யாருன்னு பார்த்தா, பக்கத்து வீட்டு பொடுசு..

“என்ன அங்கிள் பயந்துட்டீங்களா..சும்மாதான் எழுப்புனேன்..தூங்கிட்டீங்களா..எனக்கு ஒரு டவுட் அங்கிள்..”

ஐயோ புள்ளை அக்கறையா கேக்குதுன்னு ஆசைப்பட்டு கேளுப்பான்னு சொன்னா, கேக்குறான் பாருங்க..

“அங்கிள் நீங்க வெறும் ராசாவா..இல்ல மன்மதராசாவா..”

எனக்கு தூக்கமே போச்சுண்ணே….ஒரு வாண்டு எங்கிட்ட வந்து கேக்குறான்..

“அங்கிள்..இந்த புளூ பிலிம்னு சொல்றாயிங்களே..அந்த பிலிம் எந்த கலர்ல இருக்கும்..புளூ கலர்லயா..”

கேக்குற கேள்வியைப் பாருங்கண்ணே..இதுக எல்லாம் பிஞ்சுல பழுத்து வெம்பி போயிருச்சுண்ணே..கல்யாணம் பண்ணி முதல் தடவையா என் பொண்டாட்டிய அபார்ட்மெண்டுக்கு கூட்டிட்டு வர்றேன், படியில் நம்ம வானரங்க..10 பேர் அஞ்சாதே ஹீரோ மாதிரி உக்கார்ந்து இருக்காயிங்க..என் பொண்டாட்டிக் கிட்ட முதல்லே சொல்லிட்டேன்..இங்க ஒரு கூட்டம் இருக்கு..அவிங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருண்ணு..

“அங்கிள்..அங்கிள்..”

“ஏங்க..சின்னப் பசங்க எவ்வளவு ஆசையா கூப்பிடுறாயிங்க பாருங்க..போலாங்க..”

“அடியே..வேணான்டி..இப்படித்தான் ஆசையா கூப்பிட்டு அடியில நெருப்பு வைச்சுருவாயிங்க..அப்படியே பார்க்காத மாதிரி வந்துடு..”

அப்படியே கண்டுக்காத மாதிரியே நடந்து வந்துக்கிட்டு இருக்கோம்..ஓடியே எங்க முன்னாடி வந்துட்டாயிங்க..

“என்ன அங்கிள்..ஆண்டிக்கிட்ட எங்களை இன்டிரிடியூஸ் பண்ண மாட்டீங்களா..”

இன்னைக்கு கிரகம் சரியில்லைன்னு நினைக்குறேன்..

“ஐயோ..அப்பிடி இல்லைப்பா..மீட் மிஸ்டர் வாலுப்பசங்க..இது என் மனைவி..”

என் மனைவியும் சூது தெரியாம வணக்கம் சொன்னாள்..ஒரு பையன் சொல்லுறான்..

“என்ன அங்கிள் பக்கத்து வீட்டு கவிதாவ கரெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தீங்க..செட் ஆகலையா..”

சூடம் அணைச்சு சத்தியம் செய்றேண்ணே..எனக்கு கவிதான்னு யாருமே தெரியாது..பக்கத்து வீட்டு பொண்ணு பேறு கூட கவுசல்யான்னே..

“டே..யாருடா கவிதா..சும்மா பொய் சொல்லாதீங்கடா..”

என் பொண்டாட்டி ஒரு உஷ்ணப் பார்வை பார்த்தா பாருங்க..இன்னொரு பையன் சளைக்காம சொல்றான்..

“ஆண்ட்டி..நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க..எங்க அங்கிளுக்கு தண்ணியடிக்குற பழக்கத்த தவிர ஒரு பழக்கம் இல்லை..சிகரெட் புடுச்சுட்டு இருந்ததைக்கூட நிப்பாட்டிறாரு..”

எப்படியெல்லாம் குருவிக்கூட்டை கலைக்குராயிங்க பாருங்கண்ணே..என் பொண்டாட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் கிளம்பி போயிட்டா..வீட்டுக்குள்ள போறேன்..ஒரே அழுகாச்சிண்ணே..

“அடியே..அவிங்க சொல்றத நம்பாதடி..”

“அது எப்படிங்க..சின்ன குழந்தைங்க பொய்யா சொல்லும்..”

“அடப்பாவி..இதுக குழந்தைகள் இல்லடி..வாலுக் கூட்டங்க..”

ரெண்டு நாளா பேச்சுவார்த்தையே இல்லண்ணே..இதுல அந்தக் கூட்டத்துல “நமீதா” ன்னு ஒரு நாய்க்குட்டி வளர்க்குறாயிங்கண்ணே..அடுத்த நாள் வெளியே வர்றேன்..எப்போதும் என்னைப் பார்த்து குலைக்கும்(சொல்லிக் குடுத்துருப்பாயிங்க போல)..அன்னைக்கு என்னையப் பார்த்து “உன்னையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு..உன்னையப் பார்த்து குலைக்கனுமா என்ன” ன்னு ஒரு ஏளனப்பார்வைப் பார்த்து புறவாலைக் காட்டிட்டு ஓடுதுண்ணே..நமீதா குறும்பைப் பாருங்கண்ணே..எனக்கு அழுகையா வந்துருச்சுண்ணே.. ஐயோ, பேசுக்கிட்டு இருக்கும் போது ஏன்னே அடிக்குறீங்க..அண்ணே..அடிக்காதீங்கண்ணே..பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்….அது சரிண்ணே..ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..அது என்னன்னே நமீதா பயபுள்ள மேல அம்புட்டு பாசம்..

15 comments:

யோ வாய்ஸ் said...

அஞ்சலி எபெக்ட்லயே எழுதி இருக்கீங்களோ?

வானம்பாடிகள் said...

அய்யா ராசா. எப்புடி ராசா இப்புடி. வாலுப்பசங்களே தேவலாம் போல இருக்கே.ம்ம்ம். அசத்துங்க.என்னா பீலிங்கு யப்பா.

கதிர் - ஈரோடு said...

கொஞ்சம் அந்த வாலுப்பசங்க மெயில் ஐடி இருந்தா கொடுங்கண்ணே

துபாய் ராஜா said...

//“அது எப்படிங்க..சின்ன குழந்தைங்க பொய்யா சொல்லும்..”//

அதானே.... !! :))

//என்ன அங்கிள் பக்கத்து வீட்டு கவிதாவ கரெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தீங்க..செட் ஆகலையா..”

சூடம் அணைச்சு சத்தியம் செய்றேண்ணே..எனக்கு கவிதான்னு யாருமே தெரியாது..பக்கத்து வீட்டு பொண்ணு பேறு கூட கவுசல்யான்னே..//

அப்ப அவிய்ங்கதான் பேரை மாத்திச் சொல்லிட்டாங்களாண்ணே.. ??!! :))

நாடோடி இலக்கியன் said...

ஹா ஹா

Jaleela said...

ஹா ஹா ஹி ஹி

வாங்க இந்த அவார்டை வாங்கிக்கங்க..

http://allinalljaleela.blogspot.com/2009/08/blog-post_25.html

பிரபா said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

Pradeep said...

good one....

ராஜா said...

/////////////////////
யோ வாய்ஸ் said...
அஞ்சலி எபெக்ட்லயே எழுதி இருக்கீங்களோ?
24 August, 2009 8:38 PM
வானம்பாடிகள் said...
அய்யா ராசா. எப்புடி ராசா இப்புடி. வாலுப்பசங்களே தேவலாம் போல இருக்கே.ம்ம்ம். அசத்துங்க.என்னா பீலிங்கு யப்பா.
24 August, 2009 9:04 PM
//////////////////
நன்றி யோ..வானம்பாடிகள்..)))

ராஜா said...

///////////////
24 August, 2009 9:04 PM
கதிர் - ஈரோடு said...
கொஞ்சம் அந்த வாலுப்பசங்க மெயில் ஐடி இருந்தா கொடுங்கண்ணே
24 August, 2009 10:44 PM
துபாய் ராஜா said...
//“அது எப்படிங்க..சின்ன குழந்தைங்க பொய்யா சொல்லும்..”//

அதானே.... !! :))

//என்ன அங்கிள் பக்கத்து வீட்டு கவிதாவ கரெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தீங்க..செட் ஆகலையா..”

சூடம் அணைச்சு சத்தியம் செய்றேண்ணே..எனக்கு கவிதான்னு யாருமே தெரியாது..பக்கத்து வீட்டு பொண்ணு பேறு கூட கவுசல்யான்னே..//

அப்ப அவிய்ங்கதான் பேரை மாத்திச் சொல்லிட்டாங்களாண்ணே.. ??!! :))
24 August, 2009 11:15 PM
////////////////////////
வேணாம் கதிர் அண்ணே..நான் பாடுற பாடே போதும்….
ராஜா..கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே..)))

ராஜா said...

/////////////////////////
நாடோடி இலக்கியன் said...
ஹா ஹா
25 August, 2009 12:12 AM
Jaleela said...
ஹா ஹா ஹி ஹி

வாங்க இந்த அவார்டை வாங்கிக்கங்க..

http://allinalljaleela.blogspot.com/2009/08/blog-post_25.html
25 August, 2009 3:24 AM
பிரபா said...
//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//
25 August, 2009 5:08 AM
Pradeep said...
good one....
25 August, 2009 5:31 AM
/////////////////////////////
நன்றி இலக்கியன்,,,அவார்டுக்கு நன்றி ஜலீலா, ப்ரதீப், பிரபா

T.V.Radhakrishnan said...

:-)))

Kutty Ponnu said...

Nice,n i really enjoy reading ur article.. vallu pasage irrukaleh teriyaleh.. annal unga eluthu umaiyileh vaalu pa..
nice shot..

கலகலப்ரியா said...

அய்ய்.. நாய்க்குட்டி சட்டை நல்லா இருக்குண்ணே..! இப்டி அடக்க ஒடுக்கமா உக்காந்திருக்கிற நாய்க்குட்டிய போயாண்ணே குலைக்குதுன்னு சொல்றீங்க.. நம்பவே முடியலண்ணே..!

ராஜா said...

//////////////////
T.V.Radhakrishnan said...
:-)))
25 August, 2009 5:52 PM
Kutty Ponnu said...
Nice,n i really enjoy reading ur article.. vallu pasage irrukaleh teriyaleh.. annal unga eluthu umaiyileh vaalu pa..
nice shot..
25 August, 2009 11:52 PM
கலகலப்ரியா said...
அய்ய்.. நாய்க்குட்டி சட்டை நல்லா இருக்குண்ணே..! இப்டி அடக்க ஒடுக்கமா உக்காந்திருக்கிற நாய்க்குட்டிய போயாண்ணே குலைக்குதுன்னு சொல்றீங்க.. நம்பவே முடியலண்ணே..!
26 August, 2009 2:02 PM
/////////////////////
நன்றி குட்டிப்பொண்ணு, ராதா கிருஷ்ணன், பிரியா..ஹீ..ஹீ..

Post a Comment