Sunday, 16 August, 2009

ஏழையா பிறந்தது குத்தாமாயா??

வீட்டுல இருந்து கால் பண்ணியிருந்தாயிங்க..பக்கத்து வீட்டு வாட்ச்மேன் தாத்தாவை போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போயிருந்தாங்களாம். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…ரொம்ப அப்பிராணியான மனுசன்னே..நான் எப்ப ஊருக்கு போயிருந்தாலும் கண்டிப்பா வீட்டிற்கு பார்க்க வருவார்..என்னைப் பார்த்து ரொம்ப சந்தோசப்படுவார்..ஏதாவது முறுக்கு, சீடைன்னு வீட்டுல செய்து எனக்காக எடுத்து வருவார்..நான் சின்னப் பிள்ளையா இருந்த போது என்னை சில நேரம் தூக்கி வளர்த்திருக்கிறார்..அம்மா சொல்லியிருந்தாங்க..சுதந்திரம் வாங்குவதற்கு முன்னாடியே பிறந்தவர்..சில நேரம் என்னை மடியில் வைத்துக் கொண்டு பல சுதந்திரப் போராட்டக் கதைகளை சொல்லியிருக்கிறார்..

அவருக்கு 3 மகன்கள்… 2 மகன்கள் சென்னையில் வேலைப் பார்க்கிறார்கள். 1 பையன்தான் என் பக்கத்து வீட்டில் இருக்கிறான். பாட்டி இறந்து விட்டார்..நான் அமெரிக்கா கிளம்பும் போது, சென்னை போயிருப்பதாக சொன்னார்கள்.. அவருடைய கடைசி பையனிடம் காரணம் கேட்டேன்..

“ஆமா..பெரிசு, எப்ப மண்டையப் போடும்னு தெரியல..ஒரு சொத்தும் சேர்த்து வைக்கலை..நானே காப்பாத்தனும்னு எனக்கு விதியா என்ன..ரெண்டு பேர் இருக்காயிங்கள்ள..அவிங்க வீட்டுலயும் கொஞ்ச நாள் இருக்கட்டுமே..என்ன குடியா முழுகிப் போகுது..”

எனக்கு இந்த மாதிரி ஆட்களைப் பார்க்கும் போது பாரதியார் கோவம்தான் வரும்..பக்கத்துல ஏதாவது கல்லை எடுத்து அவன் மண்டையில போட்டுவிடலாம் போல ஆத்திரம்..இத்தனைக்கும் அந்தப் பையனுக்கு ஒருமுறை மஞ்சள் காமாலை வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தப் போது, அவனை மடியில் போட்டு வாட்ச்மேன் தாத்தா கதறியது இன்னும் என் நெஞ்சில் உள்ளது..என்ன மனுசங்க இவிங்க..பணத்தை எடுத்துதான் டெய்லி சாப்பிடுவாயிங்களா..மனுச உயிருக்கு மதிப்பே இல்லையா..வயதாகிவிட்டால் செத்து விட வேண்டுமா..ஒன்னும் சொல்லாமல் அமெரிக்கா கிளம்பி வந்துவிட்டேன்..இரண்டு வருடம் கழித்து இப்பத்தான் அவரைப்பற்றி கேள்விப்படுகிறேன்…

என்னால் இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் வாட்ச்மேன் தாத்தா வீட்டிற்கு போன் பண்ணியிருந்தேன்..கடைசிப் பையனின் மனைவிதான் எடுத்தார்..

“நான் ராசா பேசுறேன்..தாத்தா இருக்காரா..”

“அதுவா..அங்க உக்கார்ந்து இருக்கு..இருங்க கூப்பிடுறேன்..”

கொஞ்ச நேரம் கழித்து..பையனின் மனைவியே திரும்பவும் எடுத்த்தார்..

“அது வரமாட்டிங்குது..யார் கூடவும் பேச விரும்பலையாம்..”

“பரவாயில்லை..நான் கூப்பிடுறேன்னு சொல்லுங்க..”

சிறிது நேரம் கழித்து தாத்தாதான் எடுத்தார்..

“தாத்தா..நான் ராசா பேசுறேன்..என்ன ஆச்சி..”

ஒன்றும் பேசவில்லை..எதிர்முனை தாத்தா வாய்விட்டு அழுகும் சத்தம்தான் கேட்டது…தாத்தா அழுது நான் பார்த்ததேயில்லை..எப்போதும் சிரித்த முகமாகத்தான் இருப்பார்..எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது..

“என்ன தாத்தா..சின்னப்பிள்ளை மாதிரி அழுகுறீங்க..என்ன நடந்துச்சு..”

“ராசா..ஏண்டா உசிரோட இருக்கோம்னு இருக்குடா..கடவுள் ஏண்டா எங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் சாவு சீக்கிரம் தரமாட்டிங்குறார்..”

“தாத்தா..என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க..ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..”

“ராசா..நான் சம்பாதிக்குற வரைக்கும்தாண்டா மதிப்பு இருந்துச்சு..இவிங்க எல்லாம் வளர்ந்து என்னை காப்பாத்துவாய்ங்கன்னு கூட எதிர்பார்க்கலைடா..ஆனா ஒரு மனுசனா கூட மதிக்க மாட்டீங்குறாயிங்கடா..சொத்து சேர்த்து வைக்கலையாம்..நான் பார்த்தா வாட்ச்மேன் உத்தியோகம் வைச்சு என்ன சொத்துடா சம்பாதிக்க முடியும்..ஒவ்வொரு மகன் வீட்டுக்கும் சோத்துக்கு நாய் மாதிரு அலைஞ்சேண்டா..ஒவ்வொருத்தன் வீட்டுலயும் ஒரு வாரம்..என்னப் பொழைப்புடா சாமி இது..

எனக்கும் தன்மானம் இருக்கு ராசா.சென்னையில ஒரு வீட்டுல வாட்ச்மேனா வேலைக்கு சேர்ந்தேன்டா..ரெண்டு மாசம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு..திடீர்ன்னு அந்த வீட்டுப் பொண்ணு நகை காணாமல் போகிடுச்சாம்..என்னை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டுப் போய் அடிச்சே மிரட்டுறாய்ங்கடா….வயசானவர்ன்னு கூட பார்க்காம் நெஞ்சில மிதிச்சாயிங்கடா..வெள்ளைக்காரன் மிதிச்சப்பக் கூட நாட்டுக்காக மிதிவாங்கிறோம்னு சந்தோசமா இருந்துச்சுப்பா..இப்ப மிதிக்குறப்ப வலிகூட இல்லைப்பா..ஏன்னா என் உசிரு போய் எவ்வளவோ நாளு ஆச்சே..வெறும் உடம்பை அவுங்க என்ன செய்து விட முடியும்..எல்லாம் மறத்துப் போச்சுப்பா..ஏம்பா..எனக்கு ஒரு சந்தேகம்..ஏழையா பொறந்தது தப்பாப்பா..நாங்க எல்லாம் உயிர் வாழத் தகுதியே இல்லையாப்பா..”

என்னால் ஒன்றும் பேச முடியவில்லைண்ணே..ஏனென்றால் அவர் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடையும் இல்லை..

21 comments:

துளசி கோபால் said...

ப்ச்(-:

mvalarpirai said...

6 வயது வரை குழந்தைகளுக்கு நாம் வேலைகாரர்கள்
6 முதல் 16 வரை குழந்தைகள் நமக்கு வேலைகாரர்கள் !
16 முதல் பாகம் பிரிக்கும் வரை குழந்தைகள் நமக்கு தோழர்கள் !
அதற்கு பிறகு அவர்கள் நமக்கு தூரத்து சொந்தங்கள் ! - வைரமுத்து

இதை எல்லா பொற்றோரும் உணரவேண்டும் ! அதற்காக நீங்கள் சொன்ன இந்த சம்பவத்தின் மகன்களை நான் ஆதரிக்கவில்லை..இப்படி எத்தனையோ பெற்றொர்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள்..ஆனால் இதற்கு தீர்வு பெற்றோர்கள் தங்கள் கடைசிகாலத்திற்கு கொஞ்சம் சேர்த்து வைக்கவேண்டும் ! தங்கள் கடைசிகாலத்தில் யாரையும் எதிர்பார்க்க வண்ணம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் ! எதிர்பார்ப்பு இருந்தால் தான் ஏமாற்றம் வரும் ..

சூர்யா ௧ண்ணன் said...

//தங்கள் கடைசிகாலத்தில் யாரையும் எதிர்பார்க்க வண்ணம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் ! எதிர்பார்ப்பு இருந்தால் தான் ஏமாற்றம் வரும் //

யாசவி said...

nothing to say

:-(

வானம்பாடிகள் said...

நகை கிடைச்சுடுச்சுன்னா சொல்லக் கூட மாட்டானுவ. அப்படி கிடைச்சா வாங்கின அடியும் , பட்ட அவமானமும் இல்லைன்னு போயிடுமா? மனுசத்தனம் மொத்தமா இல்லாம போயிடிச்சிண்ணே. அவ்வளவுதான். சொத்தே சேர்த்து வச்சிருந்தாலும் இதென்னா பெரிய சொத்துன்னு தான் பேசுவாய்ங்க.

suresh said...

kanneer thaan enakku kadaisiyil vandhu..ungal padaippuhal unmailaye maarupatta nalla pathivugal.. thodarattum ungal pani...

இராகவன் நைஜிரியா said...

பெற்ற தாய் தந்தையரைக் கவனிக்க கூட இயலாத மக்கள் என்று சொல்ல கூடாது.. இவர்கள் மாக்கள். இவ்வளவு தூரம் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதற்கு காரணமே, தாய் தந்தை என்பதை மறந்து விட்டனர்.

குருத்து மட்டையும் ஒரு நாள் பழுத்த மட்டையாகும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை / புரியவில்லை.

ராம்ஜி.யாஹூ said...

but not in all families, This is one of the rare case I have seen

யோ (Yoga) said...

எல்லா உறவுகளையும் அளவிடும் அளவுகோலாக பணம் இருக்கும் வரை, இந்த மாதிரி தாத்தாக்கள் மாத்திரமல்ல எல்லா வித சொந்தங்களும் வாழ்க்கையின் முக்கிய காலகட்டத்தில் கஷ்ட படுவாங்க. சொந்தம் மட்டும் இல்லை. நான் என் நண்பர்களிடமும் இந்த மாதிரி விடயங்களை பார்த்திருக்கிறேன். காசு இருந்தால் பின்னால் வருவதும் என்னை விட அதிமாக காசு உள்ளவன் வந்தால் என்னை விட்டு விட்டு அவன் பின் போவதும் தான் அவர்கள் நட்பு. எல்லாரும் அல்ல சில நண்பர்கள் மட்டுமே.

எந்த எதிர்பார்ப்பையும் கொண்டிருக்காத சொந்தங்களும் நட்புமே நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

உங்கள் இந்த பதிவு ரொம்பவே என்னை கஷ்டபடுத்துகிறது..

ஏழையா பிறந்தா குத்தம் தான்யா. அதிலும் கஷ்டப்பட்டு புள்ளங்கள பெத்து, வளர்த்து ஆளாக்கின ரொம்பவே குத்தம் தான்

கதிர் - ஈரோடு said...

மௌனமாய் வலிக்கிறது

sarath said...

நீயா நானா நிகழ்ச்சியில் ஏழ்மை பற்றி பேசினார்கள் . பணக்காரர்கள் தாங்கள் வரம் வாங்கி வந்தோம் என்று கதைத்தார்கள். ஆனால் திருட்டு பட்டம் எழைக்கு மட்டும் ஏன் என ஒரு பதிலும் சொல்ல வில்லை . அதைப் பற்றிய அக்கறையும் இல்லை.

இது தான் பெரும்பாலான பணம் படைத்தவர் நிலை.
இங்க நீங்க சொன்ன நிகழ்ச்சியின் முக்கிய சாரமே ஏழைகளின் திருட்டு பட்டம் பற்றி. பின்னூட்டம் இட்ட மற்றவர் கருத்து தெரிவித்து எல்லாம் பிள்ளை -பாசம் பற்றி.

அவர்களுக்கும் அவரை அடித்தது பற்றி கவலை இல்லை போல.

உடன்பிறப்பு said...

இந்த வயதிலும் வேலைக்கு போன அந்த பெரியவரின் வைரக்கியம் வியக்க வைக்கிறது ராசா

Suresh said...

Romba touching, i love my thatha he is so friend of mine, eppovum kathai pesuvom ;) unmaiya super a solli irukinga manase baram agiduchu panathai thandi manithargal irukanga... romba santhosam rasa unnai nanbanai petrathukku

MJV said...

கோவம்தான் வருது. அது அவரின் குற்றம் இல்லை..... அந்த மகன்கள் .... விடுங்க பாஸ் இன்னிக்கி இல்லனா எப்பயோ அவர்கள் பதில் சொல்லும் நேரம் வரும். ஏழை என்றாலே தாழ்வாக பார்த்து அடிக்கும் இந்த சமூகத்தில் தான் நாமும் இருக்கிறோம் ..... வெட்கமாக இருக்கிறது !!!!

ஆண்மை குறையேல்.... said...

நீங்க‌ள் க‌ண்டிப்பாக‌ அவ‌ருக்கு உத‌வியிருப்பீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்... அன்பாலும், அமெரிக்க‌ டால‌ராலும்....

ராஜா said...

///////////////////
துளசி கோபால் said...
ப்ச்(-:
16 August, 2009 8:30 PM
mvalarpirai said...
6 வயது வரை குழந்தைகளுக்கு நாம் வேலைகாரர்கள்
6 முதல் 16 வரை குழந்தைகள் நமக்கு வேலைகாரர்கள் !
16 முதல் பாகம் பிரிக்கும் வரை குழந்தைகள் நமக்கு தோழர்கள் !
அதற்கு பிறகு அவர்கள் நமக்கு தூரத்து சொந்தங்கள் ! - வைரமுத்து

இதை எல்லா பொற்றோரும் உணரவேண்டும் ! அதற்காக நீங்கள் சொன்ன இந்த சம்பவத்தின் மகன்களை நான் ஆதரிக்கவில்லை..இப்படி எத்தனையோ பெற்றொர்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள்..ஆனால் இதற்கு தீர்வு பெற்றோர்கள் தங்கள் கடைசிகாலத்திற்கு கொஞ்சம் சேர்த்து வைக்கவேண்டும் ! தங்கள் கடைசிகாலத்தில் யாரையும் எதிர்பார்க்க வண்ணம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் ! எதிர்பார்ப்பு இருந்தால் தான் ஏமாற்றம் வரும் ..
16 August, 2009 8:47 PM
சூர்யா ௧ண்ணன் said...
//தங்கள் கடைசிகாலத்தில் யாரையும் எதிர்பார்க்க வண்ணம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் ! எதிர்பார்ப்பு இருந்தால் தான் ஏமாற்றம் வரும் //
16 August, 2009 9:52 PM
//////////////////
நன்றி துளசி, வளர்பிறை(சரியா சொன்னீங்க), சூர்யா

ராஜா said...

///////////////////////
யாசவி said...
nothing to say

:-(
16 August, 2009 10:48 PM
வானம்பாடிகள் said...
நகை கிடைச்சுடுச்சுன்னா சொல்லக் கூட மாட்டானுவ. அப்படி கிடைச்சா வாங்கின அடியும் , பட்ட அவமானமும் இல்லைன்னு போயிடுமா? மனுசத்தனம் மொத்தமா இல்லாம போயிடிச்சிண்ணே. அவ்வளவுதான். சொத்தே சேர்த்து வச்சிருந்தாலும் இதென்னா பெரிய சொத்துன்னு தான் பேசுவாய்ங்க.
17 August, 2009 12:59 AM
suresh said...
kanneer thaan enakku kadaisiyil vandhu..ungal padaippuhal unmailaye maarupatta nalla pathivugal.. thodarattum ungal pani...
17 August, 2009 1:23 AM
///////////////////////
வருகைக்கு நன்றி யாசவி, வானம்படிகள், சுரேஷ்..

ராஜா said...

///////////////////////
ராம்ஜி.யாஹூ said...
but not in all families, This is one of the rare case I have seen
17 August, 2009 2:16 AM
யோ (Yoga) said...
எல்லா உறவுகளையும் அளவிடும் அளவுகோலாக பணம் இருக்கும் வரை, இந்த மாதிரி தாத்தாக்கள் மாத்திரமல்ல எல்லா வித சொந்தங்களும் வாழ்க்கையின் முக்கிய காலகட்டத்தில் கஷ்ட படுவாங்க. சொந்தம் மட்டும் இல்லை. நான் என் நண்பர்களிடமும் இந்த மாதிரி விடயங்களை பார்த்திருக்கிறேன். காசு இருந்தால் பின்னால் வருவதும் என்னை விட அதிமாக காசு உள்ளவன் வந்தால் என்னை விட்டு விட்டு அவன் பின் போவதும் தான் அவர்கள் நட்பு. எல்லாரும் அல்ல சில நண்பர்கள் மட்டுமே.

எந்த எதிர்பார்ப்பையும் கொண்டிருக்காத சொந்தங்களும் நட்புமே நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

உங்கள் இந்த பதிவு ரொம்பவே என்னை கஷ்டபடுத்துகிறது..

ஏழையா பிறந்தா குத்தம் தான்யா. அதிலும் கஷ்டப்பட்டு புள்ளங்கள பெத்து, வளர்த்து ஆளாக்கின ரொம்பவே குத்தம் தான்
17 August, 2009 2:27 AM
கதிர் - ஈரோடு said...
மௌனமாய் வலிக்கிறது
17 August, 2009 2:52 AM
/////////////////////////
வருகைக்கு நன்றி ராம்ஜி, யோ, கதிர்

ராஜா said...

/////////////////////////
sarath said...
நீயா நானா நிகழ்ச்சியில் ஏழ்மை பற்றி பேசினார்கள் . பணக்காரர்கள் தாங்கள் வரம் வாங்கி வந்தோம் என்று கதைத்தார்கள். ஆனால் திருட்டு பட்டம் எழைக்கு மட்டும் ஏன் என ஒரு பதிலும் சொல்ல வில்லை . அதைப் பற்றிய அக்கறையும் இல்லை.

இது தான் பெரும்பாலான பணம் படைத்தவர் நிலை.
இங்க நீங்க சொன்ன நிகழ்ச்சியின் முக்கிய சாரமே ஏழைகளின் திருட்டு பட்டம் பற்றி. பின்னூட்டம் இட்ட மற்றவர் கருத்து தெரிவித்து எல்லாம் பிள்ளை -பாசம் பற்றி.

அவர்களுக்கும் அவரை அடித்தது பற்றி கவலை இல்லை போல.
17 August, 2009 4:48 AM
உடன்பிறப்பு said...
இந்த வயதிலும் வேலைக்கு போன அந்த பெரியவரின் வைரக்கியம் வியக்க வைக்கிறது ராசா
17 August, 2009 8:40 AM
Suresh said...
Romba touching, i love my thatha he is so friend of mine, eppovum kathai pesuvom ;) unmaiya super a solli irukinga manase baram agiduchu panathai thandi manithargal irukanga... romba santhosam rasa unnai nanbanai petrathukku
17 August, 2009 10:11 AM
MJV said...
கோவம்தான் வருது. அது அவரின் குற்றம் இல்லை..... அந்த மகன்கள் .... விடுங்க பாஸ் இன்னிக்கி இல்லனா எப்பயோ அவர்கள் பதில் சொல்லும் நேரம் வரும். ஏழை என்றாலே தாழ்வாக பார்த்து அடிக்கும் இந்த சமூகத்தில் தான் நாமும் இருக்கிறோம் ..... வெட்கமாக இருக்கிறது !!!!
18 August, 2009 2:49 AM
ஆண்மை குறையேல்.... said...
நீங்க‌ள் க‌ண்டிப்பாக‌ அவ‌ருக்கு உத‌வியிருப்பீர்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்... அன்பாலும், அமெரிக்க‌ டால‌ராலும்....
18 August, 2009 3:41 AM
///////////////////////
வருகைக்கு நன்றி சரத்(கண்டிப்பாக இதைப்பற்றி இன்னொரு பதிவு உண்டு), உடன்பிறப்பு, சுரேஷ், எம்.ஜே.வி, ஆண்மை குறையேல் நண்பர்(உதவியுருக்கிறேன்)

ராசுக்குட்டி said...

ரொம்ப வருத்தமா இருக்குந்துங்க தாத்தாவின் நிலையை பார்த்து... இது மாதிரி இன்னும் எத்தனை தாத்தாக்கள் இருக்கிறார்களோ... இவருக்காவது உங்களை மாதிரி ஒருத்தர் ஆறுதல் கூறவாவது இருக்கிறார்... அதை நினைத்து கொஞ்சம் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

Pradeep said...

பணம் இல்லாட்டி பிணம்தான் அப்படிங்கிறது உண்மைதான் போல..
நல்ல ஒரு வருத்தமான பதிவு

Post a Comment