Wednesday, 29 July, 2009

18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்

இந்த பதிவை எழுதணுமான்னு யோசிச்சேன்.ஏற்கனவே “பலான படம்” ன்னு ஒரு பதிவு போட்டிருப்பதால், என்னுடைய பிளாக்கிற்கு வேற சாயம் வந்துவிடுமான்னு ஒரு பயம்தான். ஆனா இதைக் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் இதை பதிவு செய்கிறேன்..இது ஆபாச பதிவல்ல..ஆனாலும் சில வார்த்தைகளை அப்படியே எழுத வேண்டியிருப்பதால் இந்த தலைப்பு..

நம்ம ஊருல கேபரே கிளப் இருக்கும்லனே..அது போல அமெரிக்காவுல “பப்” ன்னு சொல்றாயிங்க. சாப்பிடுற பப்ஸ் இல்லண்ணே..புரியுற மாதிரி சொல்லனும்னா பெங்களூரில எம்.ஜி ரோடுல அப்பன் காசைக் கரைக்கிறதுக்கு குடிச்சுட்டு கும்மாளம் போடுவாயிங்களண்ணே..அதுமாதிரி இங்க நிறைய இடத்துல இருக்குண்ணே..இந்த ஊருக்கு வந்தவயிங்க எல்லாம் ஒரு தடவையாவது இங்க வந்துட்டு போயிருவாயிங்க..

அதெல்லாம் பேச்சிலர் பசங்களுக்குதான்..நம்மளுக்குதான் கால் கட்டு போட்டுருக்காயிங்களே….அது பத்தி நம்மளெல்லாம் யோசிக்குறதேயில்லைண்ணே..பக்கத்து வீட்டுல “கணேஷ்” ன்னு ஒருத்தர் நம்மளை மாதிரி கல்யாணம் ஆனவருண்ணே..மனைவி ஊருக்குப் போயிருக்காங்க..நம்ம பசங்களுக்குத்தான் மனைவி ஊருக்குப் போனா சுதந்திர தினம் கொண்டாடுவாயிங்களே..நம்ம ஆளுக்கு பொறுக்க முடியலே..இதை எப்படியாவது கொண்டாடியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டார்….

“ராசா..என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா(ஜனகராஜ் ஸ்டைலில் வாசிக்கவும்)….எனக்கு 1 மாசம்தான் டைம்..அதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவிச்சருனும்டா..டே..பப்புக்கு போகலாமா?..”

“டே கணேசு..என் பொண்டாட்டி ஊருக்கு போகலடா..செருப்பைக் கழட்டி அடிப்பா..”

“ராசா..இதை விட்டா சான்ஸ் கிடைக்காதுடா..நாம் ஒன்னும் தப்பு பண்ண போகலையே..சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு வந்துடுவோம்..”

எல்லாத்துக்கிட்டயும் ஒரு மிருகம் இருக்கும்..அது சமயம் பார்த்துதான் எட்டிப் பார்க்கும்னு சொல்லுவாயிங்களண்ணே..அன்னைக்கு எனக்கு அந்த மிருகம் கும்மி போட்டு விளையாட்டுண்டு இருந்துச்சு போல..

“டே..எனக்கு சரியாத் தோணல..எதுக்கும் நம்ம கோவாலுக்குகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுவோம்..”

கோவாலு பத்தி ஏற்கனவெ உங்களுக்கு சொல்லியுருக்கேண்ணே..தெரியாதவங்க என்னோட “உயிர் பயமும் சூப்பர் பிகர்களும்” பதிவைப் பாருங்க….நம்ம ஊருக்கார பயபுள்ள..ரெண்டு பேரும் நேரா அவங்கிட்ட போனோம்..நல்ல பையன்னே..

“வாங்கடா..என்ன இந்த பக்கம்..”

“கோவாலு, நம்ம கணேசு பொண்டாட்டி ஊருக்கு போயிருக்காங்கல..அதனால..”

“டே..ராசா..சூப்பர்டா..எல்லாரும் சேர்ந்து பப்புக்கு போகலாமாடா..”

அடப்பாவி..கொடுமை, கொடுமைன்னு கோவிலுக்குப் போனா..உன்னைப் போயி நல்ல பையன்னு ஒரு பாராவுக்கு முன்னாடிதானடா அறிமுகம் கொடுத்தேன்..

எல்லார் மனசுலயும் மிருகங்கள் அட் எ டையத்துல எட்டிப்பார்க்க சனிக்கிழமை போவதாக முடிவானது..என் வீட்டுக்காரம்மாகிட்ட சனிக்கிழமை ஆபிஸ்ஸில் வேலை இருப்பதாய் சொல்வதாக முடிவானது..கோவாலு படு எதிர்பார்ப்பில் இருப்பான் போல , ரெண்டு நாளா அவுத்துவிட்ட கோழி மாதிரியே திரிஞ்சான்..இதுல

“மச்சான்..பேர்னஸ் கிரீம்மை நல்லா அப்பிக்குவோம்டா.., அப்பத்தான் நம்மளை மதிப்பாயிங்க” ன்றான்..ஒரு நயா பைசா கூட செலவழிக்கமாட்டான் பயபுள்ள, அன்னைக்கு என்னான்னு பார்த்தா புது டிரஸ், புது கேப், புது கூலிங்கிளாஸ்..அப்படியே நம்ம தமிழ்நாடு பாலகிருஷ்ணா மாதிரியே இருந்தான்னே..

நான் இதுவரைக்கும் என்னோட பொண்டாட்டிக்கிட்ட பொய் சொன்னதே இல்லண்ணே..முதல் முறையா சொல்லப் போனேன்..வார்த்தை குழறவே கைகாலெல்லாம் நடுங்குச்சுண்ணே..

“இந்த..இன்னைக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு..கொஞ்சம் லேட் ஆகும் எனக்காக வெயிட் பண்ணாதே..நீ, தூங்கு..”

“என்னாச்சுங்க..ஏதாவது அவசர வேலையா..பரவாயில்லைங்க..நீங்க போயிட்டு வாங்க..நான் வேணா பிளாஸ்க்ல டீ போட்டுத் தரவா..”

எனக்கு அப்பவே பாதி உசிரை எடுத்த மாதிரி இருந்துச்சுண்ணே..

“ஐயோ..வேண்டாம் பரவாயில்லை..நீ தூங்கு..” அப்படின்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம கிளம்பிட்டேன்னே..வெளியே வர்றேன்..நம்ம கோவாலும் கணேசும் ரெடியா இருந்தாயிங்க..

எல்லோரும் கிளம்பி போனோம்…

அமெரிக்காவுல ரெண்டு உலகம்னே..முதல் உலகம் காலை முதல் சாயங்காலம் வரை, ஆபிஸில்..உசிரைக் குடுத்து வேலை பார்ப்பாயிங்கண்ணே..அடுத்த உலகம் இரவு உலகம்..உசிரை எடுக்குற உலகம்..கிளப்பு, பப்னு உசிரை எடுக்குற வரைக்கும் ஆடுவாயிங்க, ஏதோ நாளைக்கு உலகமே அழியப் போறது மாதிரி..நாங்க போன ஒரு இடமும் அப்படித்தான் இருந்தது..இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் 20-20 மேட்ச் போல ஒளிவிளக்குகள்..கையில் ட்ரிங்க்ஸை தட்டில் எடுத்துக் கொண்டு பரிமாறும், அரைகுறை ஆடை அணிந்த பெண்கள், காது கிழிஞ்சு போகும் அளவுக்கு இரைச்சலான இசை..எங்கு பார்த்தாலும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் செக்யூரிட்டிகள்..பாதி போதையுடன் செருகிய கண்களுடன் இளவட்டங்கள்..சோமாலியாவில் பஞ்சத்துக்கு உடுத்தும் ஆடைகளை ஸ்டைலாக அணிந்து உலா வரும் யுவதிகள்..

அந்த பப் மூன்று பகுதி பகுதிகளாக இருந்தது..ஒரு புறம் பெரிய மேடையில் அரைகுறை ஆடையுடன் “இப்ப என்னாங்குற” தோரனையில் கேட்வாக் வரும் பெண்கள்..இன்னொரு பகுதி..நீ யாரோட புருசனாயிருந்தா எனக்கென்ன என்று யார் வந்தாலும் குத்தாட்டம் போடும் பெண்கள்..இன்னொரு பகுதி, ஏதாவது காரணம் சொல்லி நம்ம ஊருக்காரங்க போகும் “பார்”..நீங்க அங்கு உக்கார்ந்திருந்தால் சில யுவதிகள் வந்து உங்களை விசாரிக்கும்..நீங்கள் அவர்களுக்கு ஒரு ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தால் உங்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கும்..

இதெல்லாம் அந்த பொண்ணுக்கு உங்களை பிடித்திருந்தால்தான்..இல்லையெனில் “போடா வெளக்கெண்ணை” சொல்லிட்டு கிளம்பிக்கிட்டே இருக்கும்..நான் கவனித்த வரையில் எங்கும் தவறு நடக்கவில்லை..கோவாலு மாதிரி ஆர்வக்கோளாறுல ஏதாவது பண்ணிணா, அவனை சுண்டுவிரலுல தூக்கி வெளியே போடுறதுக்கு இம்மாந்தண்டி செக்யூரிட்டி அண்ணயிங்க(ஒரு சேப்டிக்காகத்தான் மரியாதை..தப்பித் தவறி இந்த பதிவை அவிங்க படிச்சிட்டா..ஹி.ஹி)

கோவாலு அலறிட்டான்..இதெல்லாம் இங்கிலிபீசு படத்துலதான் பார்த்திருக்கோமா..கோவாலு காலை தரையில் ஊன்ற முடியலை..சொர்க்கத்துல மிதக்குற மாதிரி கத்த ஆரம்பிச்சான்..

“ராசா..இதுதாண்டா உலகம்..வாடா, நம்மளும் போய் டான்ஸ் போடுவோம்..”

“டே..கோவாலு..ஆளை விடுடா..நம்ம எல்லாம் ஆடுனா கரகாட்டம் ஆடுற மாதிரி இருக்கும்..”

“போடாங்க..நீயெல்லாம் ஏண்டா பொறந்த..” எங்கப்பாவுக்கு அப்புறம் இப்பத்தாண்ணே இப்படித் திட்டு வாங்குறேன்..

கோவாலு அங்க போய் கைய காலை டான்ஸ்ங்கிற பேர்ல ஆட்டிக்கிட்டு இருந்தான்., எனக்கு கண்ணைக் கட்டிக்கிட்டு வரவே அங்கு உள்ள சோபாவில் அமர்ந்தேன்..ஒரு தேவதை என்னை நோக்கி வரவே எனக்கு பயமா போச்சுண்ணே..

“ஹாய்…நான் கிளாரா..நீங்க இண்டியாவா..?

“நான் ராசா..”

“நான் இந்த கிளப்லதான் வேலை பார்க்குறேன்..ஏன் இங்க வந்து உக்கார்ந்து இருக்கீங்க..டான்ஸ் ஆடலையா..”

“இல்லீங்க..பரவாயில்லை..ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..இவ்வளவு தைரியமா வெக்கமில்லமா கேட் வாக் வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலையா..”

இதுக்கு பேர்தாண்ணே ஆணாதிக்கம்..நம்ம ஊருல தான் இதெல்லாம்..இங்கெல்லாம் பளார்ன்னு ஒரு அறைதான்..திருப்பிக் கேட்டா பாருங்க..

“இதுல என்ன வெட்கம்..சரி நான் பண்றது தப்புனே எடுத்துகிட்டாலும், அதையும் வெக்கமில்லாம நீங்க பார்க்க வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலை..”

இப்படி நாலு பேர் பளார்ன்னு அறைஞ்சாத்தான்னே நம்மளுக்கெல்லாம் புத்தி வரும்..அப்படியே வளர்ந்துட்டோம் பாருங்க..ஆடி முடிச்ச கணேசும், கோவாலும் திரும்பி வந்தார்கள்..களைப்பு முகத்தில் தெரிந்தாலும், நான் கிளாராவிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் கருகும் வாசனையும் வந்தது..வந்தவுடனே ஆரம்பிச்சாயிங்க..

“ஹாய்..நான் கணேஷ்..”

கிளாராவுக்கு கணேசை பிடிக்கவில்லை போலும்..எழுந்து போக எத்தனித்தாள்..கணேசுக்கு வந்ததே கடுப்பு..

“போடி பிராஸ்டியூட்..”

கணேஷ் அப்படி பேசியிருக்ககூடாதுண்ணே..கிளாராவுக்கு சரியான கோவம்..நேரா அவனிடம் வந்தாள்..

“நான் அவுத்துப் போடுறதைப் பார்த்து என்னை பிராஸ்டியூட் என்று சொல்கிறாயே..வீட்டில் உன் பொண்டாட்டி இருக்க என்னைப் பார்க்கிறதுக்கு கிளம்பி வந்துருக்கிறாயே..நீ பிராஸ்டியூட் இல்லையா..”

செருப்பைக் கழட்டி அடிச்ச மாதிரு இருந்துச்சுண்ணே..அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை..நியாயம் பேசும்போது, அநியாயம் மௌனமாகத்தானே இருக்க வேண்டும்..சக்கையாய் காரில் ஏறில் உக்கார்ந்தோம்..யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..ஏதோ உடம்புதான் காரில் பயணிப்பது போலவும், மனசு நசுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட போலவும் ஒரு பிரமை..நேரா வீட்டிற்கு வந்தேன்..

என் மனைவி படுத்திருந்தாள்..பாவம்னே..எனக்கு சமையல் செய்து போடுறதை தவிர அவளுக்கென்று ஒரு உலகமும் இல்லைண்ணே..அவளுடைய கண்களை கவனித்தேன்..நாளெல்லாம் வீட்டு வேலை செய்து களைத்து தூங்கியிருந்தன..”என் புருசன் இருக்கான் எனக்காக..என் வாழ்நாள் முழுக்க கூட இருப்பான்”..என்ற நம்பிக்கையில் நிம்மதியான தூக்கம்..இன்னும் நல்லா ஞாபகம் இருக்குண்ணே..மதுரையில கல்யாணம் பண்ணி அடுத்த நாள் அமெரிக்கா கிளம்புறோம்..பல வருடங்களாய் பார்த்து பார்த்து செய்த அப்பா அம்மாவை விட்டுட்டு ஒரு நிமிசத்துல என்னோட கிளம்பி என்னை நம்பி வந்தாண்ணே..என்னை கல்யாணத்துக்கு முன்னாடி யாருண்ணே அவளுக்கு தெரியாதுண்ணே..எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..இப்படிப் பட்ட தங்கத்தை விட்டு பொய் சொல்லிட்டு போனேனே..என்ன மனுசன்னே நான்..

“சாரிங்க..நீங்க வர்ற வரைக்கும் முழுச்சுருக்கனும்தான் நினைச்சேன்..அலுப்புல தூக்கம் வந்திருச்சு..டயர்டா இருக்கா..காபி போட்டு தரட்டா..”

சே..இதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியலண்ணே..எழுந்து குளியலறைக்கு வந்து கண்ணாடி முன்னால் என் முகத்தைப் பார்த்தேன்..முதல் முறையா என்மேல எனக்கே வெறுப்பு வந்துச்சுண்ணே..மனுசனா நீ..”…..தூ……”

கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து துப்பினேன்..நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது.. பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..

45 comments:

Cable Sankar said...

எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..

அப்பாவி தமிழன் said...

என் மனசிலையும் குற்ற உணர்ச்சி உண்டு பண்ணிடீன்களே தல

Raja said...

Actually Title should be 35+.

கிறுக்கன் said...

யோவ் கொஞ்சம் ஓவருன்னு தெரியலயா..?

ச.செந்தில்வேலன் said...

//
எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..இப்படிப் பட்ட தங்கத்தை விட்டு பொய் சொல்லிட்டு போனேனே..என்ன மனுசன்னே நான்..
//

கலக்கீட்டீங்க ராசா...

கலையரசன் said...

//தமிழ்நாடு பாலகிருஷ்ணா மாதிரியே இருந்தான்னே//

சாமீமீமீ.. பாலகிருஷ்ணா தமிழ்நாடா? ஆந்தராகாரனுங்க அடிப்பனுங்க!
ஏன் நம்ம ஊரு ராமராஜன், விசயகாந்து, டி.ஆர் டெரர் எல்லாம் ஞாபகம் வரலையோ?

பதிவு யூத்துக்காக எழுதப்பட்டது போல.. ம்ம்.. எனக்கு வயசாயிடுச்சு!!

taaru said...

//.நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது..//
ராஜாவின் தொடுதல் [அதாண்ணே touch]...

எகைன் ஒரு U'turn....[நெஞ்சை பிசையுற பதிவு]
பல ஹேர் பின் bends...[மனது மயங்கிச் சொறுகி பின் தெளிவுற்ற பதிவு]..

bxp36027 www.fotosearch.com
அகைன் Raja's குசும்பு. [நாங்க எல்லாரும் நம்பிட்டோம் இந்த போட்டோ அந்த பப்ல எடுக்கலைன்னு]

taaru said...

//Raja said...
Actually Title should be 35+...///
இதை நான் வழிமொழிகிறேன்...
அவீங்க ராசா அண்ணே..
நாங்க எல்லாம் யூத் அண்ணே...
Plz change the title... :-)

துபாய் ராஜா said...

//பாவம்னே..எனக்கு சமையல் செய்து போடுறதை தவிர அவளுக்கென்று ஒரு உலகமும் இல்லைண்ணே..அவளுடைய கண்களை கவனித்தேன்..நாளெல்லாம் வீட்டு வேலை செய்து களைத்து தூங்கியிருந்தன..”என் புருசன் இருக்கான் எனக்காக..என் வாழ்நாள் முழுக்க கூட இருப்பான்”..என்ற நம்பிக்கையில் நிம்மதியான தூக்கம்..இன்னும் நல்லா ஞாபகம் இருக்குண்ணே..மதுரையில கல்யாணம் பண்ணி அடுத்த நாள் அமெரிக்கா கிளம்புறோம்..பல வருடங்களாய் பார்த்து பார்த்து செய்த அப்பா அம்மாவை விட்டுட்டு ஒரு நிமிசத்துல என்னோட கிளம்பி என்னை நம்பி வந்தாண்ணே..என்னை கல்யாணத்துக்கு முன்னாடி யாருண்ணே அவளுக்கு தெரியாதுண்ணே..எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..//

பெண்ணின் பெருமை பேசும் டச்சிங்கான வரிகள்.

//பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..//

இந்த மாதிரி குற்றஉணச்சி தோணும்னுதான் நாங்கெல்லாம் கல்யாணத்துக்கப்ப்புறம் கிளப்பு, பப்புக்கெல்லாம் போறதில்லைண்ணே.

ரெட்மகி said...

//
பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..
//

நெசமா அண்ணே

S J T Raja said...

//எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..//

தலைவா உங்கள் எழுத்துக்கள் எப்போதுமே பிடிக்கும். பொண்டாட்டிக்கு அல்வா கொடுக்கும் ஆட்களுக்கு சரியான செருப்படி.

Raja
Chennai

பாவக்காய் said...

anne, andha 'pub' peru enna?. ;-)

mayil said...

good :)

Anonymous said...

enna kodumai sir ithu

Balaji said...

திரும்பவும் இன்னொரு தப போயிட்டு வந்து feel பண்ணுங்க sir

sikkandar said...

sathiyamanna ore oru vaatiyaachum pub-kku poittu vanthu ungalai mathiri feelagnum... enna soldringa....

KISHORE said...

கருத்து எல்லாம் நல்லா தான் இருக்கு.. லென்த் தான் கொஞ்சம் ஓவரா இருக்கு..

Rajinikanth AJ said...

palanisaamy athu enna poittu vanthu, paavamanippu?? clara contact number enna? LOL

Anonymous said...

konjam overaa thaa irrukkuu
http://www.mytitbits.com

Suresh V Raghav said...

excellent post... Ovuru pub vaasalyum idhai thonga vitta... Ungalai thaedi Auto Varum Raasa...(americavil irundhalum).

" உழவன் " " Uzhavan " said...

நல்ல அட்வைஸ்னு சொல்றதத் தவிர வேறென்ன சொல்ல... நல்லா எழுதியுந்தீங்க

சூரியன் said...

//எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..//

ரொம்ப ரொம்ப .... பீலிங்க்ஸ் ஆப் இண்டியா இன் அமெரிக்கா ..

சூரியன் said...

///பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..////

அதாண்ணே கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த இடத்துக்கெல்லாம் போய்ட்டு வந்துரணூம்னு முடிவு பண்ணிட்டேன்

அபுஅஃப்ஸர் said...

இந்த பதிவு கல்யாணமானவங்களுக்கா இல்லே ஆகாதவங்களுக்காண்ணே...

இருந்தாலும் ஃப்லோ நல்லா யிருந்தது

சென்னையிலேயும் இதே மாதிரி பப் வந்ததா கேள்வி...

குப்பன்_யாஹூ said...

ALL DUE TO HARMONES

Senthil said...

present sir!!!!!!!!

பீர் | Peer said...

//Cable Sankar said...

எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..//

:)))

jothi said...

////பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..//

ச, இப்படி எல்லோரும் நினைச்சா எதுக்கு விபசாரம் நடக்கிறது?? இல்லை நடக்குமா??

ஆனால் இந்த கல்யாணம் பண்ணாத சின்ன பசங்கல்லாம் என்ன பண்ணுவாங்க?? இனிமேல் வரப்போறவளுக்கு சுத்தமாக இருக்க வேண்டியதுதான்,..

[பி]-[த்]-[த]-[ன்] said...

நல்ல ஐஸ் வச்சி ஐஸ் வச்சி உங்க தங்கமணிக்கு ஜன்னி வந்துடபோகுது -:)

Raasa Raasa Manmadha Raasa said...

Raasa Nee sariyaana pondaati dhaasan.
Lifa enjoy pannuviya,
adha vittutu pondaati,pondaati nu koovikittu irukaadhae raasaa..
varatumaa raasaa.

என்.கே.அஷோக்பரன் said...

இது வாழ்க்கை முறை வித்தியாசத்தால் வருகிற பிரச்சினை. ஒவ்வொரு சமூகத்திற்கும் (ஏன் சமூகத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கத்துக்கும் கூட) தனிப்பட்ட வாழ்க்கை முறையுண்டு. தீடிரென வேற்று வாழ்க்கை முறைக்கு மாறும் போதோ அல்லது வேறோரு வாழ்ககை முறையை அனுபவித்துப் பார்க்க முயலும் போதோ எங்கள் மனம் பல வேளைகளில் அதை உடனே ஏற்பதில்லை.

விபச்சாரிகள் என்றால் இன்று தமிழன் அவர்களைக் கேவலமாகப் பார்க்கிறான் ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் மருதநிலத்துப் பண்பில் பரத்தையர் குலம் முக்கிய இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இன்று அது அவ்வாறு இல்லை - கால ஓட்டத்தில் வாழ்கை முறை மாற நாங்களும் எங்கள் எண்ணங்கள், இயல்புகள், ஒழுக்கங்கள் எல்லாம் மாறுகிறது....

அமெரிக்கனின் வாழ்க்கை முறையை அனுபவிக்க விளைந்தது யார் தவறு..?? - நாம் நாமாக இருக்கும் வரைதான் எமக்கு கௌரவம் மட்டுமல்ல நிம்மதியும் திருப்தியும் கூட.

நிலாமதி said...

இது ஒவ்வொரு ஆண் மகன் நெஞ்சையும் தொட்டு சொல்ல வைத்தால் ........குடும்பம் கோவிலாகும். உங்களை ஆத்துக்காரி தெய்வமாக் மதிப்பாள். .

Suresh said...

பதிவை சிரிக்க சிரிக்க படிச்சிட்டு கடைசி பத்திகளில் அழுதே விட்டேன்

Suresh said...

கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து துப்பினேன்..நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது.. பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே.

இந்த வரிகளில் அர்த்தம் ஆயிரம் ராசா

ரொம்ப அருமையான வரிகள்

கல்யாணத்துக்கு முன்னாடி எக்க சக்க கேள் பிரண்ட்ஸ் இப்போ கல்யாணம் ஆகி ஒரு பெண் கிட்டே பேசியே 2 வருசம் ஆக போகுது

ராஜா said...

/////////////////
Cable Sankar said...
எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..
29 July, 2009 8:26 PM
//////////////////////////
நன்றி சங்கர் அண்ணே..நெஞ்சை நக்குறதுன்னு முடிவு பண்ணியாச்சு..இனி, கொஞ்சம் என்ன, நிறைய என்ன..)))

ராஜா said...

////////////////
அப்பாவி தமிழன் said...
என் மனசிலையும் குற்ற உணர்ச்சி உண்டு பண்ணிடீன்களே தல
29 July, 2009 8:31 PM
Raja said...
Actually Title should be 35+.
29 July, 2009 8:59 PM
//////////////////////
நன்றி தமிழன், ராஜா

ராஜா said...

//////////////////
29 July, 2009 8:59 PM
கிறுக்கன் said...
யோவ் கொஞ்சம் ஓவருன்னு தெரியலயா..?
29 July, 2009 9:19 PM
ச.செந்தில்வேலன் said...
//
எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..இப்படிப் பட்ட தங்கத்தை விட்டு பொய் சொல்லிட்டு போனேனே..என்ன மனுசன்னே நான்..
//

கலக்கீட்டீங்க ராசா...
29 July, 2009 9:22 PM
கலையரசன் said...
//தமிழ்நாடு பாலகிருஷ்ணா மாதிரியே இருந்தான்னே//

சாமீமீமீ.. பாலகிருஷ்ணா தமிழ்நாடா? ஆந்தராகாரனுங்க அடிப்பனுங்க!
ஏன் நம்ம ஊரு ராமராஜன், விசயகாந்து, டி.ஆர் டெரர் எல்லாம் ஞாபகம் வரலையோ?

பதிவு யூத்துக்காக எழுதப்பட்டது போல.. ம்ம்.. எனக்கு வயசாயிடுச்சு!!
29 July, 2009 9:40 PM
//////////////////////
நன்றி கிறுக்கன், செந்தில்வேலன், கலை

ராஜா said...

////////////////////////
taaru said...
//Raja said...
Actually Title should be 35+...///
இதை நான் வழிமொழிகிறேன்...
அவீங்க ராசா அண்ணே..
நாங்க எல்லாம் யூத் அண்ணே...
Plz change the title... :-)
29 July, 2009 10:09 PM
துபாய் ராஜா said...
//பாவம்னே..எனக்கு சமையல் செய்து போடுறதை தவிர அவளுக்கென்று ஒரு உலகமும் இல்லைண்ணே..அவளுடைய கண்களை கவனித்தேன்..நாளெல்லாம் வீட்டு வேலை செய்து களைத்து தூங்கியிருந்தன..”என் புருசன் இருக்கான் எனக்காக..என் வாழ்நாள் முழுக்க கூட இருப்பான்”..என்ற நம்பிக்கையில் நிம்மதியான தூக்கம்..இன்னும் நல்லா ஞாபகம் இருக்குண்ணே..மதுரையில கல்யாணம் பண்ணி அடுத்த நாள் அமெரிக்கா கிளம்புறோம்..பல வருடங்களாய் பார்த்து பார்த்து செய்த அப்பா அம்மாவை விட்டுட்டு ஒரு நிமிசத்துல என்னோட கிளம்பி என்னை நம்பி வந்தாண்ணே..என்னை கல்யாணத்துக்கு முன்னாடி யாருண்ணே அவளுக்கு தெரியாதுண்ணே..எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..//

பெண்ணின் பெருமை பேசும் டச்சிங்கான வரிகள்.

//பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..//

இந்த மாதிரி குற்றஉணச்சி தோணும்னுதான் நாங்கெல்லாம் கல்யாணத்துக்கப்ப்புறம் கிளப்பு, பப்புக்கெல்லாம் போறதில்லைண்ணே.
29 July, 2009 10:19 PM
ரெட்மகி said...
//
பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..
//

நெசமா அண்ணே
29 July, 2009 10:56 PM
//////////////////////////
நன்றி ராஜா, அய்யனார், ரெட்மகி

ராஜா said...

///////////////
S J T Raja said...
//எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..//

தலைவா உங்கள் எழுத்துக்கள் எப்போதுமே பிடிக்கும். பொண்டாட்டிக்கு அல்வா கொடுக்கும் ஆட்களுக்கு சரியான செருப்படி.

Raja
Chennai
29 July, 2009 11:17 PM
பாவக்காய் said...
anne, andha 'pub' peru enna?. ;-)
29 July, 2009 11:29 PM
mayil said...
good :)
30 July, 2009 12:08 AM
//////////////////////
நன்றி ராஜா, பாவக்காய், மயில்

ராஜா said...

///////////////////////
Balaji said...
திரும்பவும் இன்னொரு தப போயிட்டு வந்து feel பண்ணுங்க sir
30 July, 2009 12:24 AM
sikkandar said...
sathiyamanna ore oru vaatiyaachum pub-kku poittu vanthu ungalai mathiri feelagnum... enna soldringa....
30 July, 2009 12:47 AM
KISHORE said...
கருத்து எல்லாம் நல்லா தான் இருக்கு.. லென்த் தான் கொஞ்சம் ஓவரா இருக்கு..
30 July, 2009 12:52 AM
//////////////////////////
நன்றி பாலாஜி, சிக்கந்தர், கிஷோர்

ராஜா said...

////////////////////
Suresh V Raghav said...
excellent post... Ovuru pub vaasalyum idhai thonga vitta... Ungalai thaedi Auto Varum Raasa...(americavil irundhalum).
30 July, 2009 1:38 AM
" உழவன் " " Uzhavan " said...
நல்ல அட்வைஸ்னு சொல்றதத் தவிர வேறென்ன சொல்ல... நல்லா எழுதியுந்தீங்க
30 July, 2009 4:40 AM
சூரியன் said...
//எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..//

ரொம்ப ரொம்ப .... பீலிங்க்ஸ் ஆப் இண்டியா இன் அமெரிக்கா ..
30 July, 2009 4:50 AM
/////////////////////////
நன்றி சுரேஷ், சூரியன், உழவன்

ராஜா said...

/////////////////////
அபுஅஃப்ஸர் said...
இந்த பதிவு கல்யாணமானவங்களுக்கா இல்லே ஆகாதவங்களுக்காண்ணே...

இருந்தாலும் ஃப்லோ நல்லா யிருந்தது

சென்னையிலேயும் இதே மாதிரி பப் வந்ததா கேள்வி...
30 July, 2009 5:45 AM
குப்பன்_யாஹூ said...
ALL DUE TO HARMONES
30 July, 2009 6:08 AM
Senthil said...
present sir!!!!!!!!
30 July, 2009 6:32 AM
பீர் | Peer said...
//Cable Sankar said...

எனக்கென்னவோ கொஞ்சம் ஓவரா நெஞ்ச நக்கிட்டா மாதிரி தெரியுது ராசா..//

:)))
//////////////////////
நன்றி, அபு, குப்பன், பீர், செந்தில்

ராஜா said...

///////////////
jothi said...
////பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..//

ச, இப்படி எல்லோரும் நினைச்சா எதுக்கு விபசாரம் நடக்கிறது?? இல்லை நடக்குமா??

ஆனால் இந்த கல்யாணம் பண்ணாத சின்ன பசங்கல்லாம் என்ன பண்ணுவாங்க?? இனிமேல் வரப்போறவளுக்கு சுத்தமாக இருக்க வேண்டியதுதான்,..
30 July, 2009 6:44 AM
[பி]-[த்]-[த]-[ன்] said...
நல்ல ஐஸ் வச்சி ஐஸ் வச்சி உங்க தங்கமணிக்கு ஜன்னி வந்துடபோகுது -:)
30 July, 2009 6:50 AM
Raasa Raasa Manmadha Raasa said...
Raasa Nee sariyaana pondaati dhaasan.
Lifa enjoy pannuviya,
adha vittutu pondaati,pondaati nu koovikittu irukaadhae raasaa..
varatumaa raasaa.
30 July, 2009 7:06 AM
என்.கே.அஷோக்பரன் said...
இது வாழ்க்கை முறை வித்தியாசத்தால் வருகிற பிரச்சினை. ஒவ்வொரு சமூகத்திற்கும் (ஏன் சமூகத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கத்துக்கும் கூட) தனிப்பட்ட வாழ்க்கை முறையுண்டு. தீடிரென வேற்று வாழ்க்கை முறைக்கு மாறும் போதோ அல்லது வேறோரு வாழ்ககை முறையை அனுபவித்துப் பார்க்க முயலும் போதோ எங்கள் மனம் பல வேளைகளில் அதை உடனே ஏற்பதில்லை.

விபச்சாரிகள் என்றால் இன்று தமிழன் அவர்களைக் கேவலமாகப் பார்க்கிறான் ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் மருதநிலத்துப் பண்பில் பரத்தையர் குலம் முக்கிய இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இன்று அது அவ்வாறு இல்லை - கால ஓட்டத்தில் வாழ்கை முறை மாற நாங்களும் எங்கள் எண்ணங்கள், இயல்புகள், ஒழுக்கங்கள் எல்லாம் மாறுகிறது....

அமெரிக்கனின் வாழ்க்கை முறையை அனுபவிக்க விளைந்தது யார் தவறு..?? - நாம் நாமாக இருக்கும் வரைதான் எமக்கு கௌரவம் மட்டுமல்ல நிம்மதியும் திருப்தியும் கூட.
30 July, 2009 8:37 AM
நிலாமதி said...
இது ஒவ்வொரு ஆண் மகன் நெஞ்சையும் தொட்டு சொல்ல வைத்தால் ........குடும்பம் கோவிலாகும். உங்களை ஆத்துக்காரி தெய்வமாக் மதிப்பாள். .
30 July, 2009 3:39 PM
Suresh said...
பதிவை சிரிக்க சிரிக்க படிச்சிட்டு கடைசி பத்திகளில் அழுதே விட்டேன்
31 July, 2009 10:03 AM
/////////////////
நன்றி ஜோதி, பித்தன், சுரேஷ், நிலாமதி, அஷோக்

உடன்பிறப்பு said...

அண்ணே! அந்த கோவாலு கிட்டேயும் கணேசு கிட்டேயும் கொஞ்சம் தள்ளியே இருங்கண்ணே

திவ்யாஹரி said...

நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது.. பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே..

போறதுக்கு முன்னாடியே யோசிச்சிருந்தால் நல்ல இருக்கும்.. late pick up.. உங்கள நம்பி அமெரிக்காவுக்கு வாழ வந்திருக்காங்க.. அவங்களுக்காக நீங்கள் மதுரை போகாவிட்டால் கூட பரவாயில்லை.. உண்மையா வாழுங்க நண்பா அது போதும்.. நல்ல பதிவு.

Post a Comment