Monday, 1 June 2009
என்னைப்பற்றி 32 கேள்விகள்
சக்கரை சுரேஷ் இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்..முதலில் தொடர் பதிவு என்ன என்றால் என்றே தெரியவில்லை..இன்று காலையில் தான் எனக்கு தெரிந்த பதிவரிடம் கேட்டேன்..நான் பதிவுலகத்துக்கு புதியவனாதலால் இந்த பதிவுலக வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை…இங்கே கீழே 32 கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளேன்..முடிந்தவரை உண்மையுடன்…
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா
"ஏண்டி..புதுசா பிளாக் போடலாம்னு இருக்கேன்..என்ன பெயர் வைக்கலாம்…."
"ஏங்க..ஏங்க..எங்க தாத்தா பேர் வைங்க.."
"அடிப்பாவி..நான் என்ன குழந்தைக்கு பேர் வைக்கவா போறேன்..சரி..என்ன பெயர் சொல்லு…"
"சொரிமுத்து என்ற சுடலைமாடன்"
"அய்யோடா சாமி..வேணாண்டி, ஒரு பய வர மாட்டான்…"
"சரி எதைப் பத்தி எழுதப் போறீங்க.."
"கிம் கி டுக், பின்நவீனத்துவம், அரபி இலக்கியம் ஒரு பார்வை..சூபி தத்துவங்கள்.."
"ஒரு எழவும் புரியலீங்க…அவிங்களை பத்தி தான எழுதப் போறீங்க.."
"அய்யோ..புடிச்சுட்டேண்டி..அவீங்க.காம்"
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
(ஹோட்டலில்)"சார் என்ன சாப்பிடுறீங்க…"
"ஐயோ சார்..நீங்க தமிழா..ரொம்ப சந்தோசமா இருக்கு..அமெரிக்காவுல தமிழ் கேட்டு ரொம்ப நாளாச்சு..நான் மதுரைக்காரந்தான்..இங்க வந்து ரெண்டு வருசம் ஆச்சு…ஜுலை மாசம் நம்ம நாட்டுக்கு போறேன்…"
"ரொம்ப சந்தோசம் சார்..எனக்கு ஒரே ஒரு உதவி பண்ண முடியுமா..நான் ஒரு ஆயிரம் டாலர் தரேன்..எங்க ஆத்தா கிட்ட குடுக்க முடியுமா.."
"சார்..நம்ம அறிமுகம் ஆகி ஐந்து நிமிசம் தான் ஆச்சு..அதுவும் இல்லாம, இப்பதான் ஊருக்கு பணம் அனுப்புறதுக்கு நிறைய ஆன்லைன் வழி இருக்கே.."
"நாங்க ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் சார்..சோத்துக்கே வழி இல்லை..எங்கம்மா தினமும் என்னை இட்லி சுட்டு தான் என்னை படிக்க வச்சுச்சு…ஸ்கூல் பீஸ் கட்ட எத்தனையோ நாள் சாப்பிடாம இருந்துருக்கும் சார்..ஒரு வைராக்கியத்தோட கேட்டரிங் படிச்சு இங்க வந்தேன் சார்..என்னோட ஆசையெல்லாம் என்னோட முதல் சம்பளத்த எங்கம்மா கையால தொட்டு பார்க்கணும் சார்…."
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
இரண்டு வருசத்துக்கு முன்னாடி சென்னையில் ஒரு போஸ்ட் ஆபிஸில்..
“சார்….விரலுல நகச்சுத்தி..வீட்டுக்கு ஒரு லெட்டர் எழுதணும்..கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா..”
“கொண்டாங்க சார்…”
“அன்புள்ள அண்ணனுக்கு..சிங்கப்பூர் எப்படி இருக்கு..”
““அன்புள்ள அண்ணனுக்கு..சிங்கப்பூர் எப்படி இருக்கு..”
4.பிடித்த மதிய உணவு என்ன?
"அய்யோ..ரொம்ப பசிக்குதுடி..எனக்கு புடிச்ச சாம்பார், வெண்டிக்காய் பொரியல், அப்பளம் செய்ய சொன்னேனே..கொண்டா.."
"சாரிங்க…திருமதி செல்வம் பாக்குற அவசரத்துல உப்புக்கு பதிலா சக்கரைய போட்டுட்டேன்..நேத்து வச்ச சோறு இருக்கு..தண்ணில போட்டு புளிஞ்சு தரவா.."
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
"யாருங்க அது..அடிக்கடி ஆபிஸ்ல இருந்து ஒரு பெண் வீட்டுக்கு போன் பேசுது…."
"ஐயோ..அது டீம் மேட்டுடீ…"
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
"என்னங்க..நானும் பார்க்கிறேன்..தலையில எண்ணைய வச்சிட்டு அப்பிடியே ஆபிஸ் கிளம்புறீங்க..குளிக்கிற பழக்கம் இருக்கா…"
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
"மச்சான்..எதை பார்த்துடா பேசுவ.."
"ஆம்பிளைனா கண்ணைப் பார்த்துடா.."
"பொம்பிளைனா…??"
"அது வந்து…"
"மச்சான்..உன் பொண்டாட்டி வராடா.."
"பொம்பிளைனா..மண்ணைப் பார்த்துடா…"
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என்னங்க..எப்ப பார்த்தாலும் பிளாக், பிளாக்ன்னு அலையிறீங்களே..உங்களுக்கு வேற வேலையேயில்லையா…இங்க வந்து கொஞ்சம் காய்கறி வெட்டிக் கொடுத்தா என்னவாம்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
"ஏங்க…காலையில ஆபிசுக்கு போகும்போது பார்த்து போயிட்டு வாங்க..சாமிய கும்பிட்டுக்குங்க..நல்லா வேலை பாருங்க"
"ஏங்க..குஷ் மேடம் மானாட மயிலாடவுல என்னமா டான்ஸ் ஆடுறாங்க பாருங்க…"
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
"தம்பி ராசா..எப்படிபா இருக்க, அம்மா பேசுறேம்பா..அமெரிக்காவுல ஏதொ பன்னிக் காய்ச்சல் பரவுதுன்னு டி.வில சொல்லுறாங்களேப்பா..நீ சம்பாதுச்சதெல்லாம் போதும்பா..வீட்டுப்பக்கம் வந்துடுப்பா.."
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அய்யோ கண்றாவிய இருக்கு..ஏற்கனவே சூப்பர் கலருல இருக்கீங்க..அதே கலருல சட்டை வேறயா..கண்ணு கூசுதுங்க..
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கொஞ்சம் அந்த கரண்டிய எடுத்து தரீங்களா..
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு…
14.பிடித்த மணம்?
மசாலா வாசம் தூக்குதே…
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
பித்தன்..நல்லா எழுதுறாரு..கவனிக்கப்பட வேண்டியவர்….பிச்சு உதருறாரு..எனக்கு அவரிடம் பிடித்த பதிவு..”உலகின் தலைசிறந்த எழுத்தாளர்..”
http://paarvaigalpalavitham.blogspot.com/
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
எல்லாமே..எதை தனியே சொல்லுவதன்று தெரியவில்லை..முக்கியமா..அரசு பள்ளி பற்றி அவர் எழுதியது..
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட் விளையாண்டுட்டு வந்தா காலைக் கழுவிட்டு உள்ள வாங்கன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..
18.கண்ணாடி அணிபவரா?
"சார்..ரோட்டைக் கடக்க நான் வேணா ஹெல்ப் பண்ணவா.."
"ஐயோ சார்..எனக்கு நல்லா கண்ணு தெரியும்..இது கூலிங்கிளாஸ்..ஹி..ஹி.."
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
அவீங்க ராசா..நீங்க நல்லவரா..கெட்டவரா..
தெரியலேயேப்பா…
20.கடைசியாகப் பார்த்த படம்?
டே..உனக்கு என்னடா பாவம் செஞ்சேன்..சர்வம் படத்துக்கு கூட்டி போயி பழிவாங்கிட்டேயேடா..
21.பிடித்த பருவ காலம் எது?
கல்லூரி…
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
தாமுவின் சமையல் கலைகள்…
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வருசத்துக்கு ஒன்னு..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : எந்த நல்ல இசையும்..
பிடிக்காதது..இது உங்கள் ஏர்டெல் சூப்பர் சிங்கர்..தமிழகத்தின் மிக பிரண்டமான குரல் தேடல்..தங்க்யூ..
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா..
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
பம்பரம் நல்லா சுத்துவேன்..
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அடுத்த படத்துல இருந்து கைய கால ஆட்டாம நடிப்பேன் – சிம்பு..
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
மைடியர் குட்டிச்சாத்தான்
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே இருக்கனும்டு..
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சமையல்..
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
சக்கரை சுரேஷ் மாதிரி எப்போதும் கலகலப்பா..
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
Super Questions & Best answers...
2 ஆவது கேள்விக்கு பதில் : என் கண்கள் குளம் ஆயின. [என்னை நினச்சேன்..]
1,3,3,3,3,3,5,5,7,7,7,7,7,7,7,11,24,27 க்கு பதில்: என் கண்கள் குளம் ஆயின [அட வயிறு வலிக்குது..] [manager வர்றதுக்குள்ள நம்ம பயலுக எல்லாம் பாத்து ரசித்து சிரிச்சோம்; [மானாட மயிலாட set மாதிரி.. அதிரி புதிரி ஆயிடுச்சு oppice ] தக்காளி..... Nasser மூக்கேன் வந்துட்டான்]
19: அண்ணே அட்டகாசம்னேஇய்..
26 க்கு: same to U... ஒரு ஆட்டம் போடலாமா?
அல்லா கேள்விக்கும் பதில் : பின் நவீனத்துவ திருவள்ளுவர் [சுருங்க சொல்லி பெருசா வெளக்குறீங்களே அதான்..]
லாஸ்ட் பட் நாட் least உங்கள பதில் சொல்ல கூப்புட்டு இருக்காரு.... சரி!!!!! அதுக்காக இப்டியா எல்லாத்துலயும் சக்கரை [கேள்வி 4 ல எல்லாம்] புராணம் பாடுறது..... :-) :-P :-P
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ராசா...
--- அய்யனார்.
வந்த்ட்டேன் படிச்சிட்டு வரேன் முதல் பதிலே சூப்பர் ..
//"பொம்பிளைனா…??"
"அது வந்து…"
"மச்சான்..உன் பொண்டாட்டி வராடா.."
"பொம்பிளைனா..மண்ணைப் பார்த்துடா//
ஓவ்வொரு பதிலுக்கும் உங்க பானியில் ஒரு சிறுகதை மாதிரி நக்கலோட பதில் இதை படித்தது குபீர் என்று சிரித்து விட்டேன்..
இப்படியா பல்டி அடிக்கிறது
//"யாருங்க அது..அடிக்கடி ஆபிஸ்ல இருந்து ஒரு பெண் வீட்டுக்கு போன் பேசுது…."
"ஐயோ..அது டீம் மேட்டுடீ…"/
ஹீ ஹீ ஒரே கேள் பிரண்ட்ஸ் அதுக்கு டீம் மேட்ஸ்னு போய் வேற அண்ணிக்கிட்ட சொல்லனும் இவர போய் நம்புறிங்களானு
உங்க மனைவியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று பதிவியிலே தெரியுது..
அவங்களையும் இன்வால் செய்து நகைச்சுவையோடு எழுதி இருக்கிங்க (அவங்கள பத்தி சொல்ல வில்லை என்றால் பூரி கட்டை வரும் என்று நீங்க சொல்லுறது கேட்க்குது. )"
சூத்தி போட சொல்லுங்க :-) ரொம்ப சந்தோசமா இருக்கு
//"நாங்க ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் சார்..சோத்துக்கே வழி இல்லை..எங்கம்மா தினமும் என்னை இட்லி சுட்டு தான் என்னை படிக்க வச்சுச்சு…ஸ்கூல் பீஸ் கட்ட எத்தனையோ நாள் சாப்பிடாம இருந்துருக்கும் சார்..ஒரு வைராக்கியத்தோட கேட்டரிங் படிச்சு இங்க வந்தேன் சார்..என்னோட ஆசையெல்லாம் என்னோட முதல் சம்பளத்த எங்கம்மா கையால தொட்டு பார்க்கணும் சார்…."/
கண்கள் நனைந்துவிட்டது ரொம்ப கஷ்டமா இருக்கு நல்ல மனுஷன்யா அவன்..
உன்னை பார்த்ததும் அவருக்கு நல்லவரு தெரிந்து போச்சு..நம்ம கலருக்கு உள்ள மவுசு
//"என்னங்க..நானும் பார்க்கிறேன்..தலையில எண்ணைய வச்சிட்டு அப்பிடியே ஆபிஸ் கிளம்புறீங்க..குளிக்கிற பழக்கம் இருக்கா…"//
ஹீ ஹீ நான் காக்கா குளியல் தான்
//என்னங்க..எப்ப பார்த்தாலும் பிளாக், பிளாக்ன்னு அலையிறீங்களே..உங்களுக்கு வேற வேலையேயில்லையா…இங்க வந்து கொஞ்சம் காய்கறி வெட்டிக் கொடுத்தா என்னவாம்.//
அப்பா இங்க மட்டும் தான் அப்படினு நினைத்தேன் அங்கயும் என்று ஒரு சந்தோசம் ;)
//"ஏங்க…காலையில ஆபிசுக்கு போகும்போது பார்த்து போயிட்டு வாங்க..சாமிய கும்பிட்டுக்குங்க..நல்லா வேலை பாருங்க"//
இது நல்ல விஷியம் தானே மே மீ அண்ணி வேலைய பாருங்கனு சொன்னது வேணா உங்களுக்கு பிடிக்காம இருந்து இருக்கும்
//அய்யோ கண்றாவிய இருக்கு..ஏற்கனவே சூப்பர் கலருல இருக்கீங்க..அதே கலருல சட்டை வேறயா..கண்ணு கூசுதுங்க../
ஹா ஹா
//கருப்பு…/
அட நம்ம கலரு அதான் ஏற்கனவே நம்ம பேனர்களாய் தானே இருக்கோம் ;)
//பித்தன்..நல்லா எழுதுறாரு..கவனிக்கப்பட வேண்டியவர்….பிச்சு உதருறாரு..எனக்கு அவரிடம் பிடித்த பதிவு..”உலகின் தலைசிறந்த எழுத்தாளர்..”
http://paarvaigalpalavitham.blogspot.com//
வாழ்த்துகள் நண்பா பித்தா தலைவர் ஆப் ராசா ரசிகர் மன்றம் வாழ்க
//எல்லாமே..எதை தனியே சொல்லுவதன்று தெரியவில்லை..முக்கியமா..அரசு பள்ளி பற்றி அவர் எழுதியது//
நல்ல வேளை அரசு பள்ளினு ஒன்னாவது சொன்னிங்க எல்லாமேனா என் பாஷையில் ஒன்னும் சரி இல்லைனு அர்த்தம் ;)
//கிரிக்கெட் விளையாண்டுட்டு வந்தா காலைக் கழுவிட்டு உள்ள வாங்கன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..//
ஹா ஹா அங்கயுமா ஆனா பதிலை நேரடியாக சொல்லாமல் இருந்தது வித்தியாசம்
//"சார்..ரோட்டைக் கடக்க நான் வேணா ஹெல்ப் பண்ணவா.."
"ஐயோ சார்..எனக்கு நல்லா கண்ணு தெரியும்..இது கூலிங்கிளாஸ்..ஹி..ஹி.."//
ஹி ஹி
//அவீங்க ராசா..நீங்க நல்லவரா..கெட்டவரா..
தெரியலேயேப்பா…//
சூப்பர் ;) சொல்லம சொல்லிட்டிங்க
//டே..உனக்கு என்னடா பாவம் செஞ்சேன்..சர்வம் படத்துக்கு கூட்டி போயி பழிவாங்கிட்டேயேடா..//
ஹா ஹா அங்கயுமா
//என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
தாமுவின் சமையல் கலைகள்…//
ஹீ ஹி ரொம்ப முக்கியம் தான்
//வருசத்துக்கு ஒன்னு..//
அது ஏன் கண்ணு :-)
//பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : எந்த நல்ல இசையும்..
பிடிக்காதது..இது உங்கள் ஏர்டெல் சூப்பர் சிங்கர்..தமிழகத்தின் மிக பிரண்டமான குரல் தேடல்..தங்க்யூ..//
ஹா ஹா ஹா ஹா ஹா
//உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
பம்பரம் நல்லா சுத்துவேன்..//
சுகன்யா தொப்புல விட்டனால வா ;)
//
அடுத்த படத்துல இருந்து கைய கால ஆட்டாம நடிப்பேன் – சிம்பு..//
ஹா ஹா ஹா
//
மைடியர் குட்டிச்சாத்தான்//
இருந்தாலும் அண்ணிய இப்படியா சொல்லுறது ;) கோவிக்க போறாங்க
//
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…//
பாட்டு வேற
//.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சமையல்..//
சரி காமெடி ஹீ ஹீ
//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
சக்கரை சுரேஷ் மாதிரி எப்போதும் கலகலப்பா..//
இதல ஏதோ உள் குத்து வெளி குத்து :-)
சந்தோசாம் இருக்கனும் நீங்களும், அண்ணியும் அம்மாவும் வாழ்த்துகிறேன்..
//இந்த பதிவு எழுத வாய்ப்புக் கொடுத்த சக்கரை சுரேஷ்க்கும், நான் எழுத அழைக்கும் பித்தனுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்....//
நன்றி நண்பா ஒவ்வொரு பதிலும் உன் பானியில் இருக்கு சரி நக்கல் குறும்புதணம் உண்மை எல்லாம் சூப்பர்..
பித்தனுக்கு வாழ்த்துகள்
கலக்கல் ,
இவ்வளோ நாளா உங்க பிளாக்கை கவனிக்காம விட்டுவிடேனே.
பதில் சொன்ன விதம் அருமை...
யாரும் இந்த மாதரி பதில எதிர்பாத்திருக்க மாட்டாங்க.
என்னை எழுத கூப்பிட்டதுக்கு நன்றி. தம்பி லோகுவும் கூப்பிடிருக்கறு
விரைவில் எழுதுகிறேன் :)
கலக்கல் பதில்கள்
யப்பா சாமி!
நான் இதுவரை 25 தொடர் பதிவு படிச்சேன்,
ஆனா உங்க அளவுக்கு பதிலே, பதில் சொல்லுற மாதிரி பதிவு இப்பதான் படிக்கிறேன்.
டைம் இருந்தா நம்ம பதிலையும் படிங்க!
பதிவு உங்கள் கேள்வி உங்கள் பதில், பதிலைச்சொன்ன விதம் மிகவும் அருமை.
எப்படீங்க உங்களால மட்டும் முடியுது.
Dey naadhari, neeyum sureshyum enna appidi? avan blogla un photo podra alavukku avlo naerukkamada? Enimae neeyo illa avano enna pathi yaeluthininga avlo thaan.. kaanamo pooduvinga... Lucky lookah ungala paakuradhum rowday lookah paakuradhum unga kaiyulae thaan da irukku.. Vartaah!!!!!!
//LuckyLook said...
Dey naadhari, neeyum sureshyum enna appidi? avan blogla un photo podra alavukku avlo naerukkamada? Enimae neeyo illa avano enna pathi yaeluthininga avlo thaan.. kaanamo pooduvinga... Lucky lookah ungala paakuradhum rowday lookah paakuradhum unga kaiyulae thaan da irukku.. Vartaah!!!!!!
//
நான் கமெண்ட் subscribe செய்து இருந்தேன்..
தம்பி இது அனானி கமெண்ட் நீ கொடுத்த லிங் வேற எங்கோ போகுது, நெருக்கமா இருந்தா தான் போட்டோ போடனுமா என்ன, அது சரி லக்கிலுக் ஏதா இருந்தாலும் நேரடியா பேசுவார், அவரது பெயரில் யாரு அனானி அதுவும் சீண்டு முடிக்க..
இந்த வார பதிவராய் அடுத்து எவர் வந்தாலும் அவர் எனக்கு நெருக்கமாய் இருக்கனும் அவசியமில்லை...
இந்த பின்னூட்டத்துக்கு பயந்து ஏதாச்சும் அவர திட்டி போடுவோம் என்று நினைத்தால் அது தவறு தலைவா :-)
ஆமாம் லக்கி பின்னூட்டம் போட்டா தமிழில் தான் போடுவாரு உங்களுக்கு தெரியாது போலி அனானி
//"மச்சான்..உன் பொண்டாட்டி வராடா.."//
எஸ்கேப் ... எத்த்னை நாளைக்கு ?
நானும் உங்களை இந்த பதிவிற்கு அழைத்திருந்தேன், மின்னஞ்சல் கூட அனுப்பினேன். கிடைக்கவில்லை போல. நான் படித்த தொடர் பதிவுகளில் மிகவும் ரசித்து படித்து உங்களுடையது தான். ரொம்ப நல்ல இருக்கு.
நான் சித்துவ கூப்பிட்டேன் தொடர் பதிவுக்கு .
அவர் உங்கள கூப்பிட்டார்.. ஆனா நீங்க இப்போதன் எழுதுறீங்க.. சூப்ப்பர்..
உங்கள மாதிரி யாரும்பதில் சொல்லல... :-)
அருமை..
உண்மையிலேயே சிரிக்கவும் ஆச்சரியப்படவும் வைத்தப் பதிவு :-)
//26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
பம்பரம் நல்லா சுத்துவேன்..
//
இது நம்ம மண்ணின் விளையாட்டு தல..,
அது எப்படித்தான் சாமாளிகிரயோ? கஷ்டம்டா சாமி!
Post a Comment