Tuesday, 16 June, 2009

போங்கய்யா நீங்களும் உங்க கிரிக்கெட்டும்நம்ம ஊரு பசங்க வாழ்க்கையில படிப்பு ஒரு அங்கமா இருக்கோ இல்லையோ, கிரிக்கெட் ஒரு அங்கமா இருந்திருக்கும்னே..நான் அஞ்சாப்பு படிக்கிறப்பல்லாம் அவனவன் கிரிக்கெட் வெறி புடிச்சு அலைய்ஞ்சாயிங்கண்ணே..நானும் அப்படித்தேன் திரிஞ்சேன்னே..உனக்கு பிடிச்ச ஆள் யாருன்னு வாத்தியார் கேட்டா, தெருக்கோடியில நிக்கிற ஆத்தா அப்பன் பெயர சொல்லாம “கவாஸ்கர், கபில்தேவ்னு” கோடியில சம்பாதிக்கிற ஆளுங்களை சொல்லுவோம்னே..சனி, ஞாயிறு வந்தா எங்களுக்கு கிரிக்கெட் சாமி பிடிச்சிடும்..ரெண்டு நாள் மலையேறவே மாட்டோம்..கையில தென்னை மட்டையில செஞ்ச பேட்டு, ஒரு பிளாஸ்டிக் பந்து கையில வச்சிக்கிட்டு சோழவந்தான்ல நாங்க விளையாடாத லார்ட்ஸ் மைதானமே இல்ல..பிச்சி உதறுவோம்..

கிரிக்கெட் டி.வில போட்டா அன்னைக்குத்தான் எங்களுக்கு ஊர்த்திருவிழா..வீட்டுல வேற டி.வி இருக்காதா..ரெண்டு மூனு மாடி வீட்டுலதான் டி.வி..இருக்கும்..அவிங்களும் ரொம்ப பகுமானம் பண்ணுவாயிங்க..சன்னல் கதவை முக்காவாசி சாத்திருவாயிங்க..அந்த சன்னல் உள்ள சின்ன ஓட்டையில கண்ணை வச்சித்தான் பார்ப்போம்..யாரவது சிக்ஸ், போர் அடிச்சா போதும், தொம்சம் பண்ணிடுவோம்..

எனக்கு ஒரு கிரிக்கெட் நண்பன் இருந்தான்..எங்கூட சேர்ந்து அஞ்சாப்பு படிச்சவன்..பெயர் “குட்டி”..அவனோடதான் கிரிக்கெட் பத்தி என்னோட கமெண்டரி இருக்கும்…..எங்க ஊருல ரெண்டு, மூணு பணக்கார பசங்க வீடு இருக்கும்..அவிங்க தேங்காய் கிட்டங்கிலதான் விளையாடுவாயிங்க..அதுவும் எப்படி, ஒரு கிளவுஸ், தொப்பி, சூப்பர் பேட்டு, அடிடாஸ் ஷூ..எங்களுக்கு மிட்டாய்கடைய பார்த்த மாதிரி ஆசையா இருக்கும்னே..நானும் குட்டியும் அந்த கிட்டங்கி மதில் சுவருல உக்காந்து ஆசையா பார்ப்போம்..விளையாண்டுக்கிட்டுருந்த பசங்க ஒரு நாள் எங்களை கூப்பிட்டாயிங்க..ஆசையா ஆசையா ஓடுனோம்னே..பார்த்தா, நாய் மாதிரு அவிங்க அடிக்கிற பந்தை பொறுக்கி போடனுமாம்..பணக்காரத் திமிருண்ணே..ஆனாலும் நாங்க விடலண்ணே..எனக்கும் குட்டிக்கும் போட்டி யாரு பந்தை எடுத்து போடுறதுண்ணு..அப்பத்தானே முதல் முறையா ரப்பர் பந்தை கையில தொட்டேன்..அந்த குட்டி பந்து கையில இருக்கிறப்ப அந்த் உலகப் பந்தே என் கையில இருக்குற மாதிரி ஒரு நினைப்புன்னே..அதை அப்படியே உள்ளங்கையில வச்சு அழுத்தினேன்..அந்த ஒரு நிமிசத்துல..”சோறு, தண்ணி, அம்மா, அப்பா, கணக்கு வாத்தியார், சூப்பர்ஸ்டார், மாரிமுத்துக் கடை தேங்கா முட்டாய், டி.வி, படிப்பு, ஒலியும் ஒளியும்” எல்லாம் மறந்திருச்சுண்ணே..உலகமே என் கையில இருக்குற மாதிரி அப்படியே மிதர்ந்தேன்னே..ஒரு நிமிசம்தான்..குட்டி அதுக்குள்ள என் கையில இருக்குற பந்தை பிடிங்கிட்டான்..

அன்னைக்கு அவிங்க டீமுல ஒரு ஆளு குறையவே, எங்கள்ல ஒரு ஆளை டீமுல சேர்க்க முடிவு பண்ணினாயிங்கண்ணே..அப்பவே நம்மளைப் பார்த்தா என்ன தோணும்னு தெரியல, குட்டிய செலக்ட் பண்ணிட்டாயிங்க..குட்டி குதிச்சுட்டான்..எனக்கு அழுகை, அழுகையா வந்ததுண்ணே..நம்ம இதுக்கு கூட லாயக்கு இல்லயா..எம்மேல எனக்கு முத தடவையா கோவம் வந்திச்சு..குட்டிக்கிட்ட போய்..”டே..குட்டி..என்னையும் டீமுல சேர்த்துக்க சொல்லுடா..”. குட்டி என்னை பரிதாபமா பார்க்க, என்னால அங்க இருக்க முடியாம ஓடி வந்துட்டேன்னே..

குட்டி நல்ல பௌலிங் போட்டு அந்த டீமுல பேமஸ் ஆகிட்டான்..ஏதோ இஞ்சினியரிங்க காலேஜ்ல சேக்குறதுக்கு ரெகமண்டேசன் பண்றது மாதிரி எனக்கு ரெகமண்ட் பண்ண என்னைய டீமுல டபுள் சைட் பேட்டிங் சேர்த்துக்கிட்டாயுங்க..ஓவர் எல்லாம் தர மாட்டாயிங்க..பிரேக் டைமுல காசு குடுத்து அவிங்களுக்கு டீ.காபி வாங்கி வரச் சொல்லுவாயிங்க..வேலைக்காரன் மாதிரி எல்லாத்தையும் செய்வேன்..அன்னைக்குப் பார்த்து எல்லாரும் அவுட் ஆகவே என்னை பேட்டிங்க பண்ண கூப்பிட்டாயிங்கண்ணே..பேட்டை வாங்குனேன்..தென்னை மட்டையில விளையாண்டுக்கிருந்த எனக்கு அடிடாஸ் பேட் குடுத்தா எப்படி இருக்கும்….மனசு நிறைய பெருமை..விளையாடுறத நிப்பாட்டிட்டு அம்மாகிட்டயும், பிரண்ட்ஸ்கிட்டயும் போய் சொல்லணும் போல இருந்துச்சு..

கிட்டங்கி ஓனர் பையந்தான் பௌலிங்க் போடுறான்..எனக்கு எங்கிட்டு இருந்து அந்த பவர் வந்துச்சுன்னு தெரியல..பேட்டை எடுத்து அடிச்சேன் அடி பாருங்கண்ணே..பந்து அப்பிடியே என் மனசு மாதிரியே ஆகாயத்துல பறந்து சிக்ஸர்..அந்த பேட்டை அப்படியே என் தோளில பீமன் கதாயுதத்த வச்சுக்கிற மாதிரி வச்சுக்கிட்டு பெருமையா ஹூரோ மாதிரி ஒரு பார்வை பார்த்தேன்..அந்த ஓனர் பையனுக்கு ரொம்ப கோவம் வந்திருச்சுண்ணே..யாரும் அவன் பௌலிங்க அடிச்சதில்லை போல..ஓடி வந்து, ஒரே எத்து விட்டான்..அப்பிடியே தரையில போய் விழுந்தேன்..நான் ஆசை, ஆசையா ஓடி விளையாண்ட எங்க ஊரு மண்ணெல்லாம் என் கண்ணுல காதுல மூக்குல..

“ஏண்டா நாயே..என் பந்துலயா சிக்சர் அடிக்கிற”..என்னதான் அப்ப நான் சின்ன பையனா இருந்தாலும் தன்மானம்னு ஒன்னு இருக்கும்லனே..கூனிக்குறுகி போய்ட்டேண்ணே..கண்ணுல மண்ணு அளவுக்கு தண்ணி..துடைச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடிப்போயி அம்மாவைக் கட்டிப்பிடிச்சு அழுதேன்னே..

“அம்மா..ஏம்மா..எனக்கும் அவிங்களை மாதிரியே ஒரு பேட், பந்து, ஷூ எல்லாம் வாங்கி தர மாட்டிங்கிறீங்க..”

“இல்லடா ராசா..அப்பா பாரு..நமக்காகத்தானே கஷ்டப்பட்டு உழைக்கிறாரு..நீ, நல்லா படிச்சு பெரிய ஆளா வருவியாம்..உனக்கு அப்பா எல்லாம் வாங்கி தருவாராம்..என்ன..”

அப்படியே என் கண்ணிரை துடைச்சு விட்டு அணைச்சுக்கிட்டாங்க..கிரிக்கெட்டால் பட்ட அவமானம் போய் எங்க அம்மா அணைப்பே சொர்க்கமா தெரிஞ்சுச்சுண்ணே..

(நீண்ட பதிவாய் இருப்பதால் அடுத்த பதிவில் தொடர்கிறேண்ணே….இந்த பதிவு உங்க பள்ளிக்கூடத்து கிரிக்கெட் நினைவுகளை தூண்டிச்சுன்னா கீழ உள்ள ஓட்டைப் போட்டு பின்னூட்டம் போடுங்கண்ணே.எங்களை மாதிரி பதிவர்களுக்கெல்லாம் அதுதானன்னே டானிக்..)

24 comments:

அப்பாவி முரு said...

வந்துட்டேன்....

//அப்பத்தானே முதல் முறையா ரப்பர் பந்தை கையில தொட்டேன்..அந்த குட்டி பந்து கையில இருக்கிறப்ப அந்த் உலகப் பந்தே என் கையில இருக்குற மாதிரி ஒரு நினைப்புன்னே//


அது என்ன புதுசா உலகப் பந்து?

அப்பாவி முரு said...

ஆனா மத்தெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.


ராசா, அழகா உங்களுக்குன்னு ஒரு தனி ட்ரெண்டை புடிச்சுட்டீங்க.

வாழ்த்துகள்

TAARU said...

am the third.....

இதோ வாங்கிக்கோங்க நம்ம ஊரு பீம புஷ்டி ஹல்வா......

///கண்ணுல மண்ணு அளவுக்கு தண்ணி..துடைச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடிப்போயி அம்மாவைக் கட்டிப்பிடிச்சு அழுதேன்னே..///

இதே அழுகை; but அம்மாவுக்கு பதிலா அம்மாச்சி[என்னை பாட்டி தன்னோட வளத்தாங்க] cricket கு பதிலா கிட்டி... இந்த blog ஐ கடந்த நிமிசத்துல இருந்து அந்த காட்சி என் மனசுல... கண்ணீர் தடம் கண்ணுல...!!!!!

சத்தியமா உன்னால மட்டும் தான் முடியும் பாஸு...

TAARU said...

//உனக்கு பிடிச்ச ஆள் யாருன்னு வாத்தியார் கேட்டா, தெருக்கோடியில நிக்கிற ஆத்தா அப்பன் பெயர சொல்லாம “கவாஸ்கர், கபில்தேவ்னு” கோடியில சம்பாதிக்கிற ஆளுங்களை சொல்லுவோம்னே.///

"சோழ" ராசா!! கம்பா எழுதி இருக்கீரு.... கங்கா இருக்கு...

Suresh said...

உண்மையான நல்ல அனுபவங்கள் ..

நான் கிரிகெட் கிரிகெட் என்று கெட்டு போய அரியர்ஸ் எல்லாம் வைச்சேன் இன்னுமும் மிகவும் நேசிக்கும் விளையாடும் கேம் எங்க காலினியில் ஒரு பெர்இய கூருப் பே இருக்கு தலை எல்லாம் கிர்கெட் வெறியர்கள் ;) சும்மா அதில் ஒரு ஜாலி விளையாட்டு அதில் அடி தடி எனறு நல்ல அனுபவம்

Suresh said...

நீங்க சொன்ன மாதிரி எங்க அப்பாகிட்ட பேட் பேட் என்று வாங்கியது ஒரு நாளுக்கு 3 பந்துகள் தொலைத்ததும், ரப்பர் பந்தில் இருந்து டென்னில் பாலுக்கு மாறிய போது ஏதோ இண்டர்நேஷனல் கிரிகெட் விளையாடுவது போலும் இருக்கும்..

இது ஒரு அழகிய அங்கம் வாழ்க்கையில்

Suresh said...

நான் அடிச்சா அடிச்சிகிட்டே இருப்பேன் அதுக்கு ஒரு பதிவு போட்டுடலாம்...

TAARU said...

//“ஏண்டா நாயே..என் பந்துலயா சிக்சர் அடிக்கிற”..//
நான் அடிச்சது five shot;அதும் ஒரு 200 மீட்டர் தள்ளி போய் விழுந்து இருக்கும் நே...

//என்னதான் அப்ப நான் சின்ன பையனா இருந்தாலும் தன்மானம்னு ஒன்னு இருக்கும்லனே..கூனிக்குறுகி போய்ட்டேண்ணே..////

அவீங்க நம்மள விட சுள்ளான் தான்னே... "எப்பிரா நீயி அடிக்கலாம்" னு கேட்டு ரெண்டு பேரு சேந்து தள்ளி விட்டாய்ங்கன்னே ..... வந்துச்சே ஒரு தன்மானம் .... நானும் கூனி குறுகி தான்னே போயிட்டேன்....அழுகை!!! வைகை டேம்ல 2002 ல தொறந்து விட்ட தண்ணி மாறி வந்துருசுன்னே.. அன்னிக்கி ஏதோ என்னால முடிஞ்சது.... மூஞ்சில மட்டும் ஒரு track போட்டுட்டு வந்தேன்...
இப்போலாம் வந்தாய்ங்க!!! ek குத்து kiyara தையல் தான்னே... [ஊருக்குள்ள பெரியா பெரியா ரவுடிகள்ள நாங்க..]

-- பெரும்படை அய்யனார்.

கலையரசன் said...

அருமையா எழுதுறீங்க...
நிறைய நக்கல,
நிறைய மரியாதை,
நிறைய யாதார்த்தம்,
நிறைய உண்மை,
இதுதான் உங்க வெற்றியின்
ரகசியம்! எந்த காரணத்தை
கொண்டும் நீங்கள் எழுதும்
ஸ்டைல் லை மாத்தாதிங்க!!

டானிக் குடுத்துட்டேன்...

Suresh said...

டேய் கலை மச்சான் எனக்கு மெயில் பண்ணு உன் மெயில் ஐடியை

/”டே..குட்டி..என்னையும் டீமுல சேர்த்துக்க சொல்லுடா..”./

நான் என் தம்பியிடல் கெஞ்சி இருக்கேன், அவன் நல்லா பேடிங் மற்றும் பந்து வீசுவான்... அவனை தான் பெரிய மேட்சுனா டீமில் எடுப்பாங்க அது மாதிரி நல்லா விளையாடனும் என்று .. வெரியோடு பிராக்டிஸ் செய்து பல சிக்ஸர் அடித்தும் பல டீம்களில் விளையாடி கடைசியில் கல்லூரி கிரிகெட் டீமில் சேர்ந்தேன்...

அது ஒரு போதை ..

என் பக்கம் said...

கிரிகட் எனக்கு அவ்வளவா பிடிக்காது.

ஆனா, உங்க எழுத்து நடையும் சொல்லுகிற விசயமும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

வாழ்த்துகள்

பித்தன் said...

எதிர் பதிவ எற்கனவே நான் எழுதிட்டேன் போல -:)


http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_08.html

roja said...

ரொம்ப யதார்த்தம்….மனதை நெகிழ வைத்த பதிவுங்க….

சூரியன் said...

தேங்க்ஸுங்க ....

Spice said...

Presentation Excellent... All The Best

பிரசன்னா இராசன் said...

அண்ணே!! உங்க பதிவு எல்லாத்தையும் படிச்சுகிட்டு தான் இருக்கேன். அது என்னமோ தெரியலைண்ணே, படிச்சப்புறம் பின்னூட்டம் போடனும்ங்கற விவஸ்தை எனக்கு இல்லை. மனசுக்குள்ள சிரிச்சுகிட்டு போயிருவேன். அது என்னமோ உங்க பதிவைப் படிச்சப்புறம் தான் ஏதாவது எழுதனும்னு தோனிச்சு. உங்க பதிவைப் படிக்குறப்ப என்னமோ என் சின்ன வயசு நினைப்பு எல்லாம் வருதுண்ணே. இன்னும் நிறைய எழுதுங்கண்ணே.வாழ்த்துக்கள்...

ராஜா said...

//////////////
அப்பாவி முரு said...
வந்துட்டேன்....

//அப்பத்தானே முதல் முறையா ரப்பர் பந்தை கையில தொட்டேன்..அந்த குட்டி பந்து கையில இருக்கிறப்ப அந்த் உலகப் பந்தே என் கையில இருக்குற மாதிரி ஒரு நினைப்புன்னே//


அது என்ன புதுசா உலகப் பந்து?
16 June, 2009 8:44 PM
அப்பாவி முரு said...
ஆனா மத்தெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.


ராசா, அழகா உங்களுக்குன்னு ஒரு தனி ட்ரெண்டை புடிச்சுட்டீங்க.

வாழ்த்துகள்
16 June, 2009 8:46 PM
///////////////////
நன்றி முருகன்..உலகத்தைத் தான் ஒப்புமைக்காக உலகப்பந்து என்று சொன்னேன்..

ராஜா said...

////////////////
16 June, 2009 9:30 PM
TAARU said...
//உனக்கு பிடிச்ச ஆள் யாருன்னு வாத்தியார் கேட்டா, தெருக்கோடியில நிக்கிற ஆத்தா அப்பன் பெயர சொல்லாம “கவாஸ்கர், கபில்தேவ்னு” கோடியில சம்பாதிக்கிற ஆளுங்களை சொல்லுவோம்னே.///

"சோழ" ராசா!! கம்பா எழுதி இருக்கீரு.... கங்கா இருக்கு...
16 June, 2009 9:44 PM
////////////////////
நன்றி தாரு…

ராஜா said...

//////////////////
16 June, 2009 9:50 PM
Suresh said...
நான் அடிச்சா அடிச்சிகிட்டே இருப்பேன் அதுக்கு ஒரு பதிவு போட்டுடலாம்...
16 June, 2009 9:51 PM
////////////////
சுரேஷ்..நல்ல, நல்ல அனுபவங்களை வைத்திருக்கிறீர்கள்..நீங்களும் எழுதலாமே..ஆவலுடன் உள்ளேன்..

ராஜா said...

//////////////////
TAARU said...
//“ஏண்டா நாயே..என் பந்துலயா சிக்சர் அடிக்கிற”..//
நான் அடிச்சது five shot;அதும் ஒரு 200 மீட்டர் தள்ளி போய் விழுந்து இருக்கும் நே...

//என்னதான் அப்ப நான் சின்ன பையனா இருந்தாலும் தன்மானம்னு ஒன்னு இருக்கும்லனே..கூனிக்குறுகி போய்ட்டேண்ணே..////

அவீங்க நம்மள விட சுள்ளான் தான்னே... "எப்பிரா நீயி அடிக்கலாம்" னு கேட்டு ரெண்டு பேரு சேந்து தள்ளி விட்டாய்ங்கன்னே ..... வந்துச்சே ஒரு தன்மானம் .... நானும் கூனி குறுகி தான்னே போயிட்டேன்....அழுகை!!! வைகை டேம்ல 2002 ல தொறந்து விட்ட தண்ணி மாறி வந்துருசுன்னே.. அன்னிக்கி ஏதோ என்னால முடிஞ்சது.... மூஞ்சில மட்டும் ஒரு track போட்டுட்டு வந்தேன்...
இப்போலாம் வந்தாய்ங்க!!! ek குத்து kiyara தையல் தான்னே... [ஊருக்குள்ள பெரியா பெரியா ரவுடிகள்ள நாங்க..]

-- பெரும்படை அய்யனார்.
16 June, 2009 9:52 PM
/////////////////////
ஆஹா..அய்யனாரே..உங்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கொஞ்சம் தள்ளியே நிக்கணும் போல

ராஜா said...

/////////////////
16 June, 2009 9:52 PM
கலையரசன் said...
அருமையா எழுதுறீங்க...
நிறைய நக்கல,
நிறைய மரியாதை,
நிறைய யாதார்த்தம்,
நிறைய உண்மை,
இதுதான் உங்க வெற்றியின்
ரகசியம்! எந்த காரணத்தை
கொண்டும் நீங்கள் எழுதும்
ஸ்டைல் லை மாத்தாதிங்க!!

டானிக் குடுத்துட்டேன்...
16 June, 2009 9:54 PM
/////////////////////
நன்றி கலை..டானிக் நல்லா இருந்துச்சு..:))

ராஜா said...

//////////////
16 June, 2009 10:00 PM
என் பக்கம் said...
கிரிகட் எனக்கு அவ்வளவா பிடிக்காது.

ஆனா, உங்க எழுத்து நடையும் சொல்லுகிற விசயமும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

வாழ்த்துகள்
16 June, 2009 10:59 PM
பித்தன் said...
எதிர் பதிவ எற்கனவே நான் எழுதிட்டேன் போல -:)


http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_08.html
17 June, 2009 5:41 AM
//////////////////////
நன்றி என்பக்கம்…பித்தன் கலக்கல் பதிவு..

ராஜா said...

////////////////
சூரியன் said...
தேங்க்ஸுங்க ....
17 June, 2009 11:52 AM
Spice said...
Presentation Excellent... All The Best
19 June, 2009 5:23 AM
/////////////
நன்றி சூரியன், ஸ்பைஸ்

ராஜா said...

/////////////////
பிரசன்னா இராசன் said...
அண்ணே!! உங்க பதிவு எல்லாத்தையும் படிச்சுகிட்டு தான் இருக்கேன். அது என்னமோ தெரியலைண்ணே, படிச்சப்புறம் பின்னூட்டம் போடனும்ங்கற விவஸ்தை எனக்கு இல்லை. மனசுக்குள்ள சிரிச்சுகிட்டு போயிருவேன். அது என்னமோ உங்க பதிவைப் படிச்சப்புறம் தான் ஏதாவது எழுதனும்னு தோனிச்சு. உங்க பதிவைப் படிக்குறப்ப என்னமோ என் சின்ன வயசு நினைப்பு எல்லாம் வருதுண்ணே. இன்னும் நிறைய எழுதுங்கண்ணே.வாழ்த்துக்கள்...
20 June, 2009 6:13 PM
/////////////////
நன்றி பிரசன்னா, நேரம் இருந்தா கண்டிப்பா பின்னூட்டம் போடுங்க..

Post a Comment