Sunday, 7 June, 2009

பாசக்கார அனானிங்க

அனானிங்க(அனானிமஸ் என்ற பெயரில் திட்டுபவர்கள்) எனக்கு ரொம்ப பிடிக்கும்ணே..ரொம்ப பாசக்கார பயலுக..உங்களுக்கு தெரியுமா, ரொம்ப கூச்சக்கார பயலுக அண்ணே..தன் பெயரை போட்டு எழுதினா நம்ம மனசு கஷ்டப்படும்னு அனானிங்கற பேரில் எழுதுறாயிங்கண்ணே..இதைப் புரிஞ்சுக்காம யாராவது அவிங்களை திட்டுனா எனக்கு கோவம் வரும் பார்த்துங்க..

நான் பிளாக் எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பிளாக்ல ஏற்கனவே எழுதுற நம்ம சேக்காளிங்க எச்சரிச்சாயிங்கண்ணா..”டே ராசா, பார்த்து எழுதுடா…யாரையும் திட்டி எழுதாத..அவிங்க மோசமாவானவயிங்க..” நம்பியார் மாதிரி கையத் தேயிக்காத குறைதாண்ணே..அடப்பாவி ஏதோ பழைய படத்துல வர்ற பண்ணையார் கேரக்டர் மாதிரி சொல்லுறேயேடா..

நான் ஒருத்தரை கிண்டல் பண்ணி முதல் பதிவு எழுதியிருந்த நேரம்ணே..ஒரு அனானி நண்பர் “குமார்” ங்கிற பேரில் சாட்டில் வந்திருந்தார்..எடுத்தவுடனே இப்படித்தான் ஆரம்பித்தார்..

“டே..பொறம்போக்கு..”

“யு மீன் வேஸ்ட் லாண்ட்..”

“டே..உனக்கு பெரிய இவன்னு நினைப்பாடா..”

“நீங்க..சாதா குமாரா, கொக்கி குமாரா…”

அவ்வளவுதான்..கெட்ட வார்த்தை சரமாரியா வருதுண்ணே..எனக்கு சாரு வெப்சைட் படிக்கிறதுனாலே, கெட்ட வார்த்தை கேக்கிறது ரொம்ப பிடிக்கும்னே..2 வருசமா, அமெரிக்காவுல கெட்ட வார்த்தை கேக்காம ரொம்ப போரடிச்சுருச்சுண்ணே..அப்பிடியே காதுல இன்பத்தேன் வந்து பாயுதுங்கண்ணே..

“அனானி அண்ணே..இன்னும் நல்லா பேசுங்கண்ணே..எனக்கு கெட்ட வார்த்தை ரொம்ப பிடிக்கும்னே..”

குமாரு ஒரு மாதிரி டயர்ட் ஆகிட்டாங்கண்ணே..அனானிங்களை யாரும் திட்டாதிங்கண்ணே..அடுத்தவங்களை என்டர்டெயின் பண்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படுராயிங்க தெரியுமா..

அடுத்த அனானி, சூப்பர்ங்கண்ணா..எப்படித்தான் போன் நம்பர் கண்டுபிடிச்சாயிங்கன்னு தெரியல..போன் எடுத்தா..

“ஹலோ..யார் பேசுறது..”

“நான் அனானி பேசுறேன்..”(அனானிங்க எல்லாம் எவ்வளவு அப்பாவிங்க இருக்காயிங்க பாருங்கண்ணே..இனிமே திட்டாதிங்கண்ணே..)

“சொல்லுங்க”

“உனக்கு என்ன தைரியம்..எப்படியா நீ எழுதலாம்..”

ஆகா..சிக்கிட்டான்யா..சிக்கிட்டான்யா..எனக்கு ரொம்ப சந்தோசம்னே..அவர் பேச பேச சூப்பரா இருக்குதுண்ணே..கூச்சத்தை விட்டே கேட்டுப்புட்டேன்..

“அனானி அண்ணே..அனானி அண்ணே..இதுவரை பேசுன அனானில நீங்கதான் ரொம்ப அப்பாவியா இருக்கீங்க..ஏதாவது கெட்ட வார்த்தை தெரியுமா..தெரிஞ்சா ரெண்டு வார்த்தை பேசுங்களேன்..”

அவரு ஒரு மாதிரி ஆகிட்டாரு போல..உடனே கட் பண்ணிட்டாரு..இதுல என் பொண்டாட்டி குசும்பு பாருங்கண்ணே..

“ஏங்க..உங்களுக்கு தான் அனானிங்க நிறைய தெரியும்ல..ஒரு 10,000 ரூபா கைமாத்தா கேளுங்களேன்..”

அடிப்பாவி, ஏதோ ஈட்டிக்காரயிங்க ரேஞ்சுக்கு பேசுரேயேடி..

சில அனானிங்க இன்னும் அப்பாவியா இருப்பாங்கண்ணே..நான் ஒரு தடவை லக்கிலுக் அண்ணணை பத்தி பதிவு போட்டுட்டேண்னு, அவர் பெயரிலே கமெண்ட் எழுதுறாங்களாம்..

இதுதான்னே கமெண்ட்

LuckyLook said...

Dey naadhari, neeyum sureshyum enna appidi? avan blogla un photo podra alavukku avlo naerukkamada? Enimae neeyo illa avano enna pathi yaeluthininga avlo thaan.. kaanamo pooduvinga... Lucky lookah ungala paakuradhum rowday lookah paakuradhum unga kaiyulae thaan da irukku.. Vartaah!!!!!!

எவ்வளவு அப்பாவியா இருக்காயிங்க பாருங்கண்ணே….முதல்ல லக்கிலுக் இப்பிடி ஆங்கிலத்துல எழுத மாட்டாருண்ணே..அப்புறம் லிங்க கிளிக் பண்ணினா ஏதோ ஒரு சைட்டுக்கு எடுத்துட்டு போவுது…..அப்புறம் அவருக்கு கோவம் வந்தா இப்படி அனானி பேருல திட்ட மாட்டாருண்ணே..இதுகூட தெரியாம எப்படி அப்பாவியா இருக்காங்க பாருங்கண்ணே..

இது மாதிரி, அனானி ஒருத்தர் லைனுக்கு வர,

“அனானி சார், அனானி சார்..எல்லாரும் நல்லா பேசுறீங்க..எழுதுறீங்க..ஏன் சார் நம்ம எல்லாம் சேர்ந்து “பாரு ஆன்லைன்.காம்” ன்ற ஒரு சைட் ஆரம்பிக்க கூடாது…

பின்னங்கால் பிடறியில அடிக்க ஓடுறாருண்ணே..யாரும் அனானிய திட்டாதிங்கண்ணே..அவுங்க ரொம்ப அப்பாவிங்கண்ணே..

27 comments:

அப்பாவி தமிழன் said...

ஹ ஹ ஹ ரசித்தேன் தல .....உசாரா இருங்க இதுக்கும் யாரவது வந்து திட்ட போறாங்க

தமிழ்நெஞ்சம் said...

s u p e r

Suresh said...

//“ஹலோ..யார் பேசுறது..”

“நான் அனானி பேசுறேன்..”(அனானிங்க எல்லாம் எவ்வளவு அப்பாவிங்க இருக்காயிங்க பாருங்கண்ணே..இனிமே திட்டாதிங்கண்ணே..)//

இந்த இடத்தில் வாய் விட்டு சிரித்து விட்டேன்..

Suresh said...

//“டே..பொறம்போக்கு..”

“யு மீன் வேஸ்ட் லாண்ட்..”

“டே..உனக்கு பெரிய இவன்னு நினைப்பாடா..”

“நீங்க..சாதா குமாரா, கொக்கி குமாரா…”/


ஹா ஹா

ஆமாம் நீங்க அப்போ ரொம்ப பிரபல போல அப்பவே திட்டு எல்லாம் வாங்கி இருக்கிங்க

;) செந்தமிழ் ** ஸாரி தேன் வந்து பாயுது காதினிலே

Suresh said...

//அவ்வளவுதான்..கெட்ட வார்த்தை சரமாரியா வருதுண்ணே..எனக்கு சாரு வெப்சைட் படிக்கிறதுனாலே, கெட்ட வார்த்தை கேக்கிறது ரொம்ப பிடிக்கும்னே..2 வருசமா, அமெரிக்காவுல கெட்ட வார்த்தை கேக்காம ரொம்ப போரடிச்சுருச்சுண்ணே..அப்பிடியே காதுல இன்பத்தேன் வந்து பாயுதுங்கண்ணே..

“அனானி அண்ணே..இன்னும் நல்லா பேசுங்கண்ணே..எனக்கு கெட்ட வார்த்தை ரொம்ப பிடிக்கும்னே..”//

ஹா ஹா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏதாச்சும் சும்மா பேசினாக்க்கூட ஒரு அடை மொழி யோடு தான் ஆரம்பிப்போம்..

என்ன செய்ய இது மாதிரி நிறையா பேருக்கு சொல்லி கொடுத்து கேரளா பசங்க இப்பவும் ரொம்ப பாசமா அதை சொல்லி சிரிச்சு பேசுவாங்க..

என்ன செய்ய இப்போ எல்லாம் ரொம்ப கம்மி ஆச்சு ;)

Suresh said...

/“அனானி அண்ணே..அனானி அண்ணே..இதுவரை பேசுன அனானில நீங்கதான் ரொம்ப அப்பாவியா இருக்கீங்க..ஏதாவது கெட்ட வார்த்தை தெரியுமா..தெரிஞ்சா ரெண்டு வார்த்தை பேசுங்களேன்..//

ஹா ஹா அப்போ அந்த ஆப்ஷனை நான் ஆண் செய்ய போறேன் நல்ல காமெடியன்ஸ் போல

Suresh said...

//“ஏங்க..உங்களுக்கு தான் அனானிங்க நிறைய தெரியும்ல..ஒரு 10,000 ரூபா கைமாத்தா கேளுங்களேன்..”//

ஹா ஹா ;) இது செம சேட்டை

Suresh said...

//எவ்வளவு அப்பாவியா இருக்காயிங்க பாருங்கண்ணே….முதல்ல லக்கிலுக் இப்பிடி ஆங்கிலத்துல எழுத மாட்டாருண்ணே..அப்புறம் லிங்க கிளிக் பண்ணினா ஏதோ ஒரு சைட்டுக்கு எடுத்துட்டு போவுது…..அப்புறம் அவருக்கு கோவம் வந்தா இப்படி அனானி பேருல திட்ட மாட்டாருண்ணே..இதுகூட தெரியாம எப்படி அப்பாவியா இருக்காங்க பாருங்கண்ணே..//

நானும் பார்த்தேன் இப்படி ரொம்ப ரொம்ப காமெடினஸ் தப்பாய் பேச கூடாது, செய்யுறத கூட தப்பாய் செய்யுறாங்க

என்ன செய்ய ;)

Suresh said...

//“அனானி சார், அனானி சார்..எல்லாரும் நல்லா பேசுறீங்க..எழுதுறீங்க..ஏன் சார் நம்ம எல்லாம் சேர்ந்து “பாரு ஆன்லைன்.காம்” ன்ற ஒரு சைட் ஆரம்பிக்க கூடாது…

பின்னங்கால் பிடறியில அடிக்க ஓடுறாருண்ணே..யாரும் அனானிய திட்டாதிங்கண்ணே..அவுங்க ரொம்ப அப்பாவிங்கண்ணே..//

உங்க நக்கலில் சரியான பதிவு தலைவா..

இதுக்கு எத்துனை அப்பாவிங்க பின்னூட்டம் வருதுனு பார்ப்போம்

Suresh said...

அந்த 32 கேள்வி பதில் பதிவில்..

நான் அந்த அனானிக்கு பதில் சொன்ன பின்னூட்டம் இங்கே

//Suresh said...

//LuckyLook said...

Dey naadhari, neeyum sureshyum enna appidi? avan blogla un photo podra alavukku avlo naerukkamada? Enimae neeyo illa avano enna pathi yaeluthininga avlo thaan.. kaanamo pooduvinga... Lucky lookah ungala paakuradhum rowday lookah paakuradhum unga kaiyulae thaan da irukku.. Vartaah!!!!!!
//

நான் கமெண்ட் subscribe செய்து இருந்தேன்..

தம்பி இது அனானி கமெண்ட் நீ கொடுத்த லிங் வேற எங்கோ போகுது, நெருக்கமா இருந்தா தான் போட்டோ போடனுமா என்ன, அது சரி லக்கிலுக் ஏதா இருந்தாலும் நேரடியா பேசுவார், அவரது பெயரில் யாரு அனானி அதுவும் சீண்டு முடிக்க..

இந்த வார பதிவராய் அடுத்து எவர் வந்தாலும் அவர் எனக்கு நெருக்கமாய் இருக்கனும் அவசியமில்லை...

இந்த பின்னூட்டத்துக்கு பயந்து ஏதாச்சும் அவர திட்டி போடுவோம் என்று நினைத்தால் அது தவறு தலைவா :-)

ஆமாம் லக்கி பின்னூட்டம் போட்டா தமிழில் தான் போடுவாரு உங்களுக்கு தெரியாது போலி அனானி
/

ஆ.ஞானசேகரன் said...

//பின்னங்கால் பிடறியில அடிக்க ஓடுறாருண்ணே..யாரும் அனானிய திட்டாதிங்கண்ணே..அவுங்க ரொம்ப அப்பாவிங்கண்ணே..//

ரொம்ப நல்லா இருக்கே

Anonymous said...

அருமையான பதிவுங்க. நானு உண்மைலயே நல்ல அனானிங்க. ஒரு அம்பது ரூவா கைமாத்தாத் தர முடியுங்களா?

டக்ளஸ்....... said...

:)

Satheesh said...

டேய் பொத்துகிட்டு போடா வெண்ணெய்.. ரொம்ப தான் பேசுறே மவனே கானமோ போடுவே.. தல பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன யோகிதை இருக்கு .. நீ எல்லாம் ஒரு ஆளா தூ தேறி!! சல்லி பயலே.. தைரியம் இருந்த அண்ணனோட ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா

Anonymous said...

அருமையான பதிவுங்க. நானு உண்மைலயே நல்ல அனானிங்க. ஒரு அம்பது ரூவா கைமாத்தாத் தர முடியுங்களா?

எனக்கும் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும் :))

கடைக்குட்டி said...

//“ஏங்க..உங்களுக்கு தான் அனானிங்க நிறைய தெரியும்ல..ஒரு 10,000 ரூபா கைமாத்தா கேளுங்களேன்..” //

யப்பா.. என்னா நக்கலு...?? உண்மைலேயே சிரித்தேன் :-)

கலையரசன் said...

அருமையா இருக்குண்ணே...
மனசுல உள்ளத நொங்கியிருக்கீங்க!
அடிச்சி ஆடுங்க! யாருக்காகவும்
எதற்காகவும் இறங்கவேண்டாம்..

Joe said...

நம்ம பயலுக எப்பவுமே இப்படி தான் பாசக்காரப் பயலுக, உணர்ச்சிவசப்பட்டு கத்துவானுங்க.

பாரு ஆன்லைன்.காம், நானும் சேந்துக்கிறேன், இப்போ தான் காக்டைல் பதிவு ரெண்டு போட்டுருக்கேன், அதுனாலே நல்ல தகுதி இருக்குன்னு நினைக்கிறேன், ஹீ ஹீ!
http://joeanand.blogspot.com/2009/06/blog-post_03.html

தமிழ்நாட்டுத்தமிழன். said...

இன்னொன்று. அனானி பசங்க இல்லையென்றால் கொஞ்சம் போர் அடிக்கும்.
ஆனால் வரம்பு மீறி பேசினால், லக்கிலுக் முன்பு சொன்னது போல, செருப்படிதான் கொடுக்கவேண்டும்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//ஒரு மாதிரி டயர்ட் ஆகிட்டாங்கண்ணே..அனானிங்களை யாரும் திட்டாதிங்கண்ணே..அடுத்தவங்களை என்டர்டெயின் பண்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படுராயிங்க தெரியுமா//


என்ன ஒரு பாசம்

கார்த்திகைப் பாண்டியன் said...

அசத்தல்..:-))))))))

பாலா... said...

இதும் நல்லாத்தான் இருக்கு:))

பித்தன் said...

-:)

Suresh said...

மச்சான் உலவில் வைரஸ் முதலில் அந்த வோட்டு ப்ட்டையை தூக்கு மேலும் விவரங்களுக்கு என் பதிவை பார்

SUMAZLA/சுமஜ்லா said...

///“ஏங்க..உங்களுக்கு தான் அனானிங்க நிறைய தெரியும்ல..ஒரு 10,000 ரூபா கைமாத்தா கேளுங்களேன்..”///

ஹா! ஹா! ஹா! சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு! என்னமா நகைச்சுவை வருது உங்களுக்கு?! கீப் இட் அப்!

அருள் said...

பதிவுலகம் வாழ்றதே இந்த அனானி பயபுள்ளகளாலதேன்....அவிகல கலய்க்காதீக பாசு..

என்ன கொடும சார் said...

Inviting you to visit http://eksaar.blogspot.com

Post a Comment