Saturday, 5 November, 2011

கோட்டூர்புரம் நூலகம் இடம் மாற்றம் – மங்காத்தாடா….
அயர்ச்சியாக இருக்கிறது “ஐயோ..அம்மா, இடத்தை மாத்திட்டாங்க..சமச்சீர் கல்வியை தடை பண்ணுறாங்க, அமைச்சரை நீக்குறாங்க, துப்பாக்கிச்சூடு நடத்துறாங்க..” என்று கோஷத்தைக் கேட்கும்போது…அப்படிக் கேட்பவர்களைப் பார்த்து, நாக்கை பிடுங்கிக்கொள்ளுதல் போன்று, இதைத்தான் கேட்கத்தோன்றுகிறது..”ங்கொய்யால...மாறி, மாறி, சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சித்தேர்தலிலும், ஓட்டுப்போட்டீங்கள்ள..அப்புறம் என்ன சவுண்டு..சவுண்டு என்ன ஜாஸ்தியா இருக்கு…இன்னும் அஞ்சு வருசத்துக்கு அப்படித்தான்..எங்களுக்கு எது தோணுதோ அதைத்தான் பண்ணுவோம்….நூலகத்து தூக்கி, ஹைகோர்ட் பக்கம் வைப்போம்..ஹைகோர்ட்டை தூக்கி, நூலகத்துல வைப்போம்..தலைமைச்செயலகத்தை தூக்கி, கடலுக்கு நடுவுல வைப்போம்..இல்லாட்டி துறைமுகத்தை அட் எ டயத்துல தூக்கிட்டு தலைமைச்செயலகத்துல வைப்போம்..

என்ன சவுண்டு..என்ன சவுண்டுங்குறேன்..உங்களோட வேலை என்ன…காலங்காத்தால க்யூவுல நின்னு ஓட்டு போடவேண்டியது..பல்லு விளக்காம காபிதண்ணிய குடிச்சுப்புட்டு, மாநகரப் பேருந்துல படியில தொங்கிக்கிட்டு, ஆபிஸுக்கு போகவேண்டியது..என்னது பஸ்ஸூ கூட்டமா இருக்கா, இன்னும் பஸ்ஸு விடணுமா..அடிங்க…இதுவே ரொம்ப ஜாஸ்தி…

அப்புறம் என்ன..நூலகம் ரொம்ப முக்கியமா..அத மாத்தக்கூடாதா..ஆமா..எல்லாம் படிச்சு அப்படியே ஐ.ஏ.எஸ் ஆகப்போறீங்க பாருங்கா..போங்கயா..போயி, அரசுப்பள்ளியில போய் குழந்தைகளைப் படிக்க வைக்கிற வேலையைப் பாருங்க..அதுதான் டெய்லி, ரெண்டு முட்டை தர்றோமுல்ல..ரொம்ப பேசுனா அதையும் கட் பண்ணிருவோம்..ஜாக்கிரதை…
ஐய்யோடா..சமச்சீர் கல்வி வேண்டுமாமில்ல..கல்வியே அதிகம்..இதுல சமச்சீர் கல்வியாமய்யா..புத்தகத்தை எல்லாம் எதிர்கட்சிக்காரய்ங்க கெடுத்து வைச்சிருக்காய்ங்க..அதையெல்லாம் படிச்சா உங்க குழந்தைங்க கதி என்ன ஆகுறது..என்னது நாலு மாசமா, புள்ளைங்க ஸ்கூலுக்கு போகலையா..போகலைன்னா என்னாங்குறேன்..எல்லாம், நாளைக்கு டாக்டராக போகுதுங்களா..அதுதான் இலவச கிரைண்டரு, மிக்சி, பேன் எல்லாம் தர்றோமுல்ல..அதையெல்லாம் போட்டுவிட்டு, வீட்டுல நல்லா சட்னி அரைச்சு சாப்பிடுங்க..

என்னது கரண்டு இல்லையா..ஒருநாளைக்கு 4 மணிநேரம் கரண்டு ஆப் பண்ணிடுறாய்ங்களா..அதுதான் பனஓலையில செஞ்ச விசிறி எதுக்கு வைச்சிருக்காய்ங்க..முகத்து பக்கத்துல வைச்சு வீசு..நல்லா காத்து வரும்…பின்ன..இம்புட்டு பேருக்கு கரண்டு கொடுக்கணும்னா சும்மாவா..யோவ்..அப்படித்தான்யா..இனிமேல் அப்படித்தான்யா…இருந்தா இரு..இல்லன்னா, செயின் திருடர்களோட சேர்ந்து நீயும் ஆந்திராவுக்கு ஓடிப்போயிடு..அங்க “தல்லி தெலுங்கானா” ன்னு கோஷம் போடலைன்னா வாயிலேயே அடிக்கிறாய்ங்களாம்…பிச்சு..பிச்சு..

ஏய்..இந்தா பாரு…இந்த ஆட்சிய விமர்சிக்குறவியிங்கலாம் நல்லா கேட்டுக்குங்க..ஓட்டு போடுறதோட உங்க கடமை முடிஞ்சு போச்சு..அத மீறி, சமச்சீர் கல்வி, நூலகம், துப்பாக்கிச்சூடுன்னு சவுண்டு..அதென்ன சவுண்டு..மூச்சு விட்டீங்க..இருக்குடி…

போறதுக்கு முன்னாடி, கடைசியா, உங்களுக்கெல்லாம் ஒரே டயலாக்குதான்…

“மங்காத்தாடா…”

7 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

MANGATHAda

Anonymous said...

தமிழ் நாட்டு மக்கள் வானத்த பாத்து எச்சி துப்பிடாங்க, அது அவங்க மூஞ்சில தான் விழும்!

-
வெங்கடேஷ்

Anonymous said...

மங்காத்தா ட்டா....

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Ganesh said...

தமிழ் நாட்டு மக்கள் வானத்த பாத்து எச்சி துப்பிடாங்க, அது அவங்க மூஞ்சில தான் விழும்!
-
வெங்கடேஷ்

Exactly said....

veedu said...

ராசா காமடியா இந்த குத்துகுத்துறீங்க....
என்ன பன்றது தெரியாம ஓட்டை போட்டுட்டு...உங்க கிட்ட வாங்கி கட்டிக்க வேண்டியிருக்கு அப்படியே நம்ம பக்கமும் வாங்க...என் பீலிங் புரியும்..
ராசா காமடியா இந்த குத்துகுத்துறீங்க....
என்ன பன்றது தெரியாம ஓட்டை போட்டுட்டு...உங்க கிட்ட வாங்கி கட்டிக்க
வேண்டியிருக்கு அப்படியே நம்ம பக்கமும் வாங்க...என் பீலிங் புரியும்..

அந்த Online வாந்திய தூக்குயா பெரிய ரோதனையா போச்சு

அத்திரி said...

:)))))))))))))))))))

Post a Comment