Sunday 17 July, 2011

தெய்வத்திருமகள் – பாசப்போராட்டம்

இனிமேல் எழுதவே வேண்டாம், பேஸ்புத்தகமே போதும் என்று இருந்த என் நினைப்பில் வண்டிவண்டியாக மண்ணையும், ஆஹா..தொல்லை ஒழிஞ்சுச்சுடா சாமி என்று நினைத்து நிம்மதியாக இருந்த, மழைக்காக என் ப்ளாக் பக்கம் ஒதுங்கும் நண்பர்களையும், ஒரேயடியாக தள்ளிவிட்டிருக்கிறது, இந்த படம்.

பொதுவாக, நான் ரொம்ப செண்டியான ஆள். ஆள் பார்க்க கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும், ஜூராசிக் பார்க் படத்தில் உள்ள டைனோசரை யாராவது அடித்தால் கூட தாங்க முடியாமல் அழுதுவிடுவேன். மீனாவை தூக்கிக் கொண்டு, “சோலை பசுங்கிளியே” என்று ராஜ்கிரண் ரம்பா மாதிரி தொடை தெரிய வேட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது, இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடவில்லை. ஒரே அழுகாச்சி..ராஜ்கிரணுக்கெல்லாம் மீனா மாதிரி ஒரு சூப்பர் பிகர் கிடைக்குது, நமக்கெல்லாம்….என்று துண்டை வாயில் பொத்திக்கொண்டு அழுதகாலங்கள் பல.

அப்புறம் கொஞ்சம் மெச்சூரிட்டு வந்தபிறகு, ங்கொய்யால, இனிமேல் எந்த படத்துக்கும் அழுகவே கூடாதுடா என்ற பிடிவாதத்தினாலேயே, எந்த செண்டிமெண்ட் படத்துக்கும் போவதில்லை. அப்படியே இருந்த பிடிவாதத்தை உடைத்துப் போட்ட படம் “7ஜீ ரெயின்போ காலனி.”. தக்காளி, பாவம் ஒன்னுமே தெரியாத ரவிகிருஷ்ணாவை, ஊட்டி பக்கம் கூட்டிட்டு போய் கற்பழிச்சுட்டு, அடுத்த சீனில் சடக்கென்று, செத்துப்போகும் சோனியா அகர்வாலை பார்க்கும்போது கண்டிப்பாக கோபம்தான் வரவேண்டும்..ஒரே அழுகாச்சி..தாங்கமுடியாம வாய்விட்டு அழுதுட்டு, பக்கத்து சீட்டு ஆளைப் பார்க்குறேன்.தக்காளி, என்ன சொல்லுறான் தெரியுமா..”என்ன சார்..ஊட்டியில ரெண்டு சீனு வரும்னு பார்த்தா, இப்படி பாட்டை போட்டு ஏமாத்திட்டாயிங்க சார்.”

என்னடா, தெய்வதிருமகள் படத்தைப் பற்றி எழுதாமல், இப்படி மொக்கை போடுறானே என்று ஓடுவதற்குள், இதோ, உங்களுக்காக விமர்சனம். சற்று மனநலம் சரியில்லாத விகரமுக்கு “நிலா” என்ற குழந்தை பிறக்கும்போது, அம்மா இறந்துவிடுகிறார்கள். கஷ்டப்பட்டு வளர்க்கும், அந்த குழந்தையை, அம்மாவீட்டிலிருந்து வந்து பிரித்துச்சென்று விட, அதற்கு பின் நடக்கும் பாசப்போரட்டமே, கதை. விக்ரமிற்கு, இதுபோன்ற கதாபத்திரங்கள், அல்வா சாப்பிடுவது மாதிரி, மனிதன் நடிக்கவில்லையென்றால்தான் ஆச்சர்யபடவேண்டும்.” நிலா, என்னோட நிலா” என்று எல்லோரிடம் வெகுளித்தனமாக கெஞ்சுவதாகட்டும், மகளோடு பேசுவதாய் நினைத்து நிலாவிடம் பேசுவதாகட்டும், கோர்ட்டில் மகளை பார்க்கவந்து தரையில் விழுந்து கிடப்பதாகட்டும், கோர்ட்டில், மகளோடு சைகை பாஷை பேசுவதாகட்டும், மனிதன் கிடைத்த பாலில் எல்லாம் சிக்சராக வெளுத்துக்கட்டுகிறார். இதோ, இன்னொரு தேசிய விருதும் ரெடி.

சில குழந்தைகளை பார்த்தவுடனே தூக்கி கொஞ்சலாம் போல் இருக்கும், அப்படி க்யூட்டான அந்த குழந்தையை பாரட்டிக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. “நீயெல்லாம் அப்பாவோடத்தானே இருக்க” என்று அமலாவிடம் கேட்கும்போது, க்ளாஸ். கிளைமாக்ஸ் காட்சியில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் விக்ரமோடு, சைகை பாஷை பேசும் அந்த காட்சி, கண்ணீரை வரவழைத்தது. அதில் குழந்தையின் நடிப்பையும், விக்ரமின் நடிப்பையும், ஜீ.வி பிரகாஷின் இசையையும் சேர்த்து பார்க்கும்போது, கல்நெஞ்சக்காரனையும் கண்ணீர்விடவைக்கும். நெடுநாளுக்கு அப்புறம், மனதுவலிக்கும் க்ளைமாக்ஸ்.

முதலில் துடுக்குத்தனமாக வந்தாலும், பின்னர் கோர்ட்டில் ஆர்க்யூமெண்ட் செய்யும் அனுஷ்காவை பார்க்கும்போது, தயவுசெய்து “வேட்டைக்காரன்” பக்கம் போயிராதீங்க என்று கெஞ்ச தோன்றுகிறது. அவரோட் சேர்ந்து சந்தானம் செய்யும் லூட்டிகள் அதிரவைக்கிறது. “கோர்ட்டுக்கு கேசுதான் வரும், இந்த மாதிரி லூசெல்லாம வரும்” என்ற அக்மார்க் சந்தானம் டயலாக், எல்லோரையும் சிரிக்கவைக்கும். வழக்கம்போல நாசர் அமர்க்களப்படுத்துகிறார்.

இயக்குநர் விஜய், மதராசப்பட்டினத்திற்கு அப்புறம், குடும்பத்தோடு எல்லோரும் சென்று பார்த்துவிட்டு கண்கலங்குமாறு திரைக்கதை அமைத்து ஜெயித்திருக்கிறார். வாழ்த்துக்கள் இயக்குநருக்கு.. இதுபோன்ற பல டைரக்டர்கள் இருக்கும்போது, தமிழ்திரையுலகத்தை தேடி, வடநாடு என்ன, ஹாலிவுட்டே வரும்.

அருமையான பாடல்கள், பிண்ணனி இசை, ஜீ.வி பிரகாஷ். “ஆரோ, ஆரிராரோ” என்ற மெலடியும், கிளைமாக்ஸ் காட்சியின் பிண்ணனி இசையும், அற்புதம் 21 வயதுதான் இருக்கும்..நானெல்லாம் 21 வயதில்…சரி..விடுங்க..இவ்வளவு ப்ளஸ்களை கொட்டிச் சொன்னாலும், சில மைனஸ்களை சொல்லாவிட்டால், ஊருக்குள்ள மதிக்கமாட்டாய்ங்க என்று நினைத்தாலும், மனம்வரவில்லை ஆனாலும், விக்ரம் கட்டிப்பிடிக்கும்போது, அனுஷ்காவோடு அந்த ட்ரீம் சாங்க், மேக்கிங்க் நன்றாக இருந்தாலும், படத்திற்கு, திருஷ்டிப்பொட்டு.

கடைசியாக, தெய்வதிருமகள் – தமிழ்சினிமாவின் இன்னொரு அற்புதம்..

7 comments:

Mahesh said...

http://www.youtube.com/watch?v=EROTbDCr5ag

intha padam naanum paarthen..migavum arumai..but intha padam I'm Sam yendra oru aangila padathin thaluval..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super feel good movie

அமுதா கிருஷ்ணா said...

//தமிழ்திரையுலகத்தை தேடி, வடநாடு என்ன, ஹாலிவுட்டே வரும்.?//

இது கொஞ்சம் ஓவர்.இந்த படம் காப்பியாமே.

Jayadev Das said...

\\இதுபோன்ற பல டைரக்டர்கள் இருக்கும்போது, தமிழ்திரையுலகத்தை தேடி, வடநாடு என்ன, ஹாலிவுட்டே வரும்.\\ வந்து, ஏன் எங்க கதையை திருடினாய் என்று மூஞ்சி மேல குத்தும். ஹா...ஹா..ஹா...

http://umajee.blogspot.com/2011/07/i-am-sam.html

Anonymous said...

ஆமாம் நண்பரே .இதே மாதிரி ஒரு படம் சில பல வருடம் முன்பு சுஷ்மித சென் /அஜய் தேவ்கன் நடித்து ஹிந்தியில் வந்தது ..விக்ரமின் நடிப்புக்காக கண்டிப்பாக தமிழ் படத்தை பாக்கணும் .

அவிய்ங்க ராசா said...

நன்றி மகேஷ், ரமேஷ்

நன்றி அமுதா, ஜெயதேவ்...நான் அந்த ஆங்கிலபடத்தை பார்த்துவிட்டு கமெண்டுகிறேன்..ஆனால், படத்தை இயக்கியவிதம் அருமை..

நன்றி அருமை.

Anonymous said...

mana saatchiye illama thirudapatta hollywood padam ithu. siratha senchi kitu vitta peela irukke iyio iyiooooo...... vekkamkettavanga..

Post a Comment