Sunday, 24 July, 2011

அவிய்ங்க ராசாவின் பார்வை

யப்பே…ஒருமாசம்தான் எழுதலை..எம்புட்டு நடந்திருக்கு அதுக்குள்ள..சரி, அதையெல்லாம், கலவையாய் “மிக்சர் ஜூஸ்” மாதிரி ஒன்னு எழுதாலமுன்னு பார்த்தா, தலைப்பை பார்த்து “மிக்சர் ஜூஸ் செய்வது எப்படின்னு எழுதியிருப்பான் போலன்னு, ஒரு பய தலை காட்ட மாட்டிங்குறாய்ங்க. சரி, ஏதாவது கேட்சியா ஒரு தலைப்பு வைக்கலாமுன்னு பார்த்தா, ஏற்கனவே “புரோட்டா, சாண்ட்விச்சு, இட்லி வடை, அவியல், பொரியல், கூட்டு, குழம்பு, சட்னி..” ன்னு எக்கச்சக்கமா வயித்துக்குள்ள போற சமாச்சாரத்தை வைச்சு எழுதிக்கிட்டு இருக்காய்ங்க..இதுல கோவாலு வேற சும்மா இருக்காம “ராசா..சாக்கடைன்னு பேர் வைடா” ங்கிறான். அது என்னடா சாக்கடைன்னு பேர்ன்னு கேட்டா, சாக்கடைதான் எல்லாத்தையும் அரிச்சுக்கிட்டு வருமாம். சரி, கொஞ்சம் டீசண்டா எண்ணங்கள், சிந்தனைகள், உக்கார்ந்து யோசிச்சதுன்னு எழுதாலமுன்னு, பார்த்தா ஏற்கனவே அந்த மாதிரி எழுதுறாய்ங்களாம். அடபோங்கையா, இதுக்கு என்ன வேணுமுன்னாலும் பேர் வைச்சுக்குங்க…படிச்சா போதும்…என்னது ஓட்டா…அதெல்லாம் கவர்ச்சி படம், கெட்டவார்த்தைன்னு எழுதனுமாமே..நம்மளுக்கு அதெல்லாம் எழுதவராது…

முதலில் சமச்சீர் கல்வி. அம்மாவின் பொற்கால ஆட்சி ஆரம்பமாகிவிட்டதாகவே கருதுகிறேன். அதன் முதல் படியே சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு. இனிமேல் தமிழ்நாடு எப்படி இருக்கப்போகுது பாருங்கண்ணே. ஹிலாரி கிளிண்டனே வந்து அம்மாவை வந்து பார்த்துட்டுபோனதில் இருந்தே தெரியவருகிறது, இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லையென்று. அம்மா பவர் அமெரிக்கா வரை பாய்ந்ததில் மிக்க மகிழ்ச்சி..

கோயம்பத்தூரில் நடுரோட்டில் துள்ளதுடிக்க கண்முன்னே கல்லைத் தூக்கிப்போட்டு துடிக்கதுடிக்க ஒரு கொலை. அதை பார்த்துக்கொண்டிருந்த மக்களை சொல்லி ஒரு குற்றமும் இல்லை. ஏதோ சினிமா சூட்டிங்க் போல என்று நினைத்திருப்பார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு நடக்காத வரை..ஆனால், இது ஆரம்பம்தான்…இன்னும் பலகொடுமைகள், நம் கண்முன்னே நடக்கலாம்..அதையெல்லாம் கைகட்டி வேடிக்கைதான் பார்க்கப்போகிறோம்..ஏனென்றால் அப்படியே வளர்ந்துவிட்டோம் பாருங்கள்.

அடுத்த நிகழ்வு நம்ம “கதவை திறங்கள், காற்று வரட்டும்” புகழ், நித்தியானந்தர்தான். இதுவரை பதுங்கியிருந்த எலி, ஆட்சி மாறியவுடன், வலையை விட்டு வெளியே வந்தது. எனக்கு அவர்மேல் உள்ள கடுப்பைவிட, இன்னமும் அவர் நடத்திய “குண்டலினி” யாகத்தில் உக்கார்ந்து, ப்ளைட் டிக்கெட் வாங்காமல் இன்னமும் பறப்போம் என்ற நம்பிக்கையில் உக்கார்ந்து டான்ஸ் ஆடியவர்கள் மேல்தான். அதிலும் ஒரு பெண், சும்மா விழுந்து, விழுந்து டான்ஸ்(உடான்ஸ்??) ஆடினார். அதுவும் மேடையில் தொப்பியைப் போட்டுக்கொண்டு, ஒரு பெண் ஆடி, ஆடி, அப்படியே ஆண்கள் இருக்கும் பகுதிக்கு ஊர்ந்து, ஊர்ந்து செல்ல, அங்கு இருக்கும் ஆண்களும் ஊர்ந்து, ஊர்ந்து, முன்வர “ஆஹா..கேமிரா வைச்சிருக்காய்ங்களா..” என்று நித்தியானந்தா தேடியது போல் இருந்தது..இந்த கூத்தைப் பார்ப்பதற்கே செமகாமெடியாகவும், அதே நேரத்தில், அந்த மக்களை பார்ப்பதற்கு கோபமாகவும் இருந்தது. விவேக் பாணியில் சொல்வதனால் “ஆயிரம் பெரியார் வந்தாலும், உங்களை திருத்தவே முடியாதுய்யா..”

இந்த பக்கம் நித்தி என்றால், அந்த பக்கம் சாட் புகழ் “சாரு”. முதலில் “நான் சாட் பக்கம் போவதே இல்லை என்றார்..” அடுத்தது “இல்லை, இல்லை..யாரோ என் பெயரைக் கெடுக்கிறார்கள்” என்றார்..அப்புறம், “என்னுடைய பாஸ்வேர்டை திருடிவிட்டனர் என்றார்..எல்லாவற்றிற்கும் அவருடைய பக்தர்கள் ஒன்றும் பதில் சொல்லமுடியவில்லை. அவர்களுக்கும் நடந்தது என்னவென்று தெரியும்..மனசாட்சி என்றும் ஒன்றும் இருக்கும். ஆனால் அவரே “நான் தவறு செய்தேன்” என்று ஒத்துக்கொண்டாலும், அவருடைய பக்தர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சாரு, எழுத்தாளர் இல்லை. ஒரு பிம்பம். அந்த பிம்பத்தை நம்பி, பல பாராட்டுரைகளை சொல்லிவிட்டார்கள். இப்போது “தவறு” என்று ஒத்துக்கொள்ளவும், தோற்று போகவும் விரும்பமாட்டார்கள். ஆனால் இதெல்லாம் சாரு மீது இல்லாத மரியாதை இல்லை. “அதெப்படி ஒத்துக்கொள்ளமுடியும்..அதெல்லாம் முடியாது” என்ற பிடிவாதமே காரணம்..தூங்குபவர்களை எழுப்பி விடலாம், ஆனால் தூங்குவது மாதிரி நடிப்பவர்களை….எனக்கென்னமோ, சாரு பக்தர்களுக்கும், நித்தி பக்தர்களுக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை..

அடுத்து, நம்ம சூப்பர்ஸ்டார் நல்லபடியாக சிகிச்சை முடித்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தது. எதிர்பார்த்தது போல, ஏர்போர்ட் முழுக்க ரசிகர்கள் குவிந்து வந்து, தலைவனை தரிசிக்க வந்து இருந்ததை பார்த்து புல்லரித்தது. அதிலும் உண்ர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள், “அடுத்த பாராளுமன்ற தேர்தலில்” 40 இடங்களும் நமக்குதான் என்று சொல்லிவேறு பயமுறுத்தினார்..இன்னொருவர் “எனக்கு குடும்பம் வேணாம்யா..சொத்து வேணாம்யா..சொகம் வேணாம்யா, தலைவன் போதும்யா..” என்று சொன்னபோது, தமிழகம்(கவனிக்கவும், இந்தியா இல்லை) சீக்கிரம் வல்லராசாகிவிடும்போல தோன்றியது. அடுத்து ரசிகர்களை குஷிப்படுத்த “ராணா” வருகிறான். இப்பவே காசு சேர்க்கவேண்டும். அப்போதுதான் முதல் காட்சி, முதல் ஷோ பார்க்கமுடியும்..அப்படியே காசு இல்லாவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது, மனைவி காது, கைகளில் உள்ள நகைகள்..நல்லா இருங்கய்யா…

11 comments:

இவன் சிவன் said...

காலங்காத்தால ஏங்க சாருவ பத்தி படிக்க வைக்குறீங்க.... சமச்சீர் கல்வி மேட்டரு ஒன்னியும் புரியலனே...என்னமோ போங்கண்ணே...

Anonymous said...

nice article....

தமிழ்வாசி - Prakash said...

லேட்டா வந்த லேட் நியூஸ் சொல்லியிருக்கிங்க..

அமுதா கிருஷ்ணா said...

ரஜினி ரசிகர்கள் பற்றிய பார்வை நச்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

// சாரு பக்தர்களுக்கும், நித்தி பக்தர்களுக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை..//
மிக உண்மை.

மாணவர்களின் எதிர்காலம்பற்றி எவருமே சிந்திக்கவில்லை.

கல்லால் அடித்துக் கொன்றதைப் பார்த்தேன். நான் நின்றால் கூட வேடிக்கைதான் பார்த்திருப்பேன் போல் உள்ளது. காரணம் இன்றைய உலகப் போக்கு.
ஊரோடில் ஒத்தோடு. சுயநலமே பிரதானமாகி வெகுநாளாகிவிட்டது.

ரஜனி நலம் பெறவேண்டும். ஆனால் இந்த ரசிகக் கூட்டத்தின் அலட்டல் சற்று மிகை!

Anonymous said...

///ஆனால் அவரே “நான் தவறு செய்தேன்” என்று ஒத்துக்கொண்டாலும், அவருடைய பக்தர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சாரு, எழுத்தாளர் இல்லை. ஒரு பிம்பம்.// நீங்கள் சொல்வதென்னமோ உண்மை தானுங்க

அவிய்ங்க ராசா said...

நன்றி சிவன், அனானி நண்பர், தமிழ்வாசி,யோகன், கந்தசாமி, அமுதா...

Jackiesekar said...

Ngoththa... Unnaiyellam tavusara kalateettu oda vidanum.....

Anonymous said...

indha Jackie yen ivvlov kobapaduraru?

புதிய கோணங்கி ! said...

அய்யய்யோ, நான் ஓட்டைப்போட்டு தொலைச்சிட்டேனே.
இதிலே கவர்ச்சி படமும் கெட்ட வார்த்தையும் ஒரு மண்ணும் இல்லையே இது தெரி்யாம ஒரு ஓட்டை வேஸ்ட் செஞ்சிட்டேனே.
யோவ் மருவாதியா, என் மெயிலுக்கு 2 கவர்ச்சி படம் பார்சல்........ :)

புதிய கோணங்கி ! said...

//Jackiesekar said...
Ngoththa... Unnaiyellam tavusara kalateettu oda vidanum....//

யோவ் யாருய்யா இது?
profilயை ஒளிச்சி வச்சிக்கிட்டு பொங்குறது

Post a Comment