Wednesday, 27 July, 2011

மைதானம் - திரைப்பட விமர்சனம்

பொதுவாக போரடிக்கும் நேரங்களில், எது கண்ணில் மாட்டுகிறதோ அதைப் பார்ப்பதுண்டு. சிலநேரம் அப்படி மாட்டிய திரைப்படங்கள், பலநேரம் கடுப்பேற்றி, கோவாலுவை அடிக்கும் அளவுக்கு வெறியேற்றுவதுண்டு..போனவாரம் அப்படி பார்த்த படம் “துரோகம் நடந்தது என்ன..” அதைப் பற்றி சொன்னால், படிக்கும் ஒன்று இரண்டு பெண்களும் வராமல் போக வாய்ப்பு இருப்பதால், விமர்சனம் எழுதவில்லை.

சில படங்களை “மொக்கை” படங்கள் என நினைத்து பார்க்கும்போது, நம்மையறியாமல் “அட” போடவைக்கும். அப்படி பார்த்த படம்தான் “மைதானம்”. மெதுவாக நாடகத்தன்மையோடு படம் ஆரம்பிக்கும்போது, எழுந்து டி.வியை ஆப் செய்ய நினைத்தேன். ஆனால் போக, போக….

படத்தின் கதை இதுதான். திருப்பூர் மாவட்டத்தில் நான்கு நண்பர்கள். வழக்கம்போல வெட்டியாக சுற்றாமல், ஆளுக்கு ஒரு வேலையாக, நேரம் கிடைக்கும்போது, இலக்கணம் மாறாமல் தம்மடிக்கிறார்கள், தண்ணியடிக்கிறார்கள்.முக்கியமாக, கடைக்கு, கடை டீ அடிக்கிறார்கள். அதில் ஒரு நண்பரின் தங்கைதான், நம் நாயகி..அவரை ஏதோ ஒரு மொக்கைப் படத்தில் பார்த்ததாக ஞாபகம். தங்கை, அண்ணனுடைய நண்பனை, லவ்வோ, லவ்வுகிறார். ஆனால் அந்த அட்டு நண்பரோ, தெலுங்குபட அப்பா வயசு ஹீரோக்கள், அசின், சார்மி மாதிரியான சூப்பர்பிகர்கள் மேலே, மேலே விழுந்து லவ்பண்ணும்போது, ஒரு டயலாக் சொல்லுவார்களே, “சாரிம்மா..உன்னை நான் அப்படி நினைக்கவே இல்லை..” என்று சொல்லுகிறார். அந்த வார்த்தையை சொல்லும்போது நமக்கே கவுண்டமனி ஸ்டைலில் “அடேய்” என்று கத்திக்கொண்டு கொலை செய்யலாம்போல இருந்ததென்றால், லட்சம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு எப்படி இருக்கும். ஆனாலும் வேறு வழியில்லாமல் தாங்கிகொள்கிறார்.

இப்படி போகும் சமயத்தில், தங்கைக்கு பெண்..ச்சீ.மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை பயபுள்ளைக்கு சோத்தை நாலு நாளைக்கு காட்டாதது போல பாவமாக வருகிறார். வேறுவழியில்லாமல் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. திருமண வேலைகள் நடக்கும்போது, நம் நாயகி காணாமல் போகிறார். நண்பர்கள் தேடுகிறார்கள், தேடுகிறார்கள். 2 ரீல் முழுக்க தேடுகிறார்கள். தியேட்டரில் கடலைமுட்டாய் விற்கும் பயனும் கூட தேடும்நிலைக்கு வந்தவுடன் ஒரு கட்டத்தில் டயர்டாகிறார்கள். அப்பதான் டைரக்டர் வாங்கின காசுக்கு வைக்கிறார் பாருங்க டிவிட்டர்…இது டிவிஸ்டு..அந்த டிவிஸ்டு கடைசி வரைக்கும் தொடர, நிமிர்ந்து உக்கார்கிறோம்(ஸ்பைனல் ப்ராப்ளம் இல்லிங்க)

இயக்குநர் அகத்தியன் நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார். மகளோடு பாசம் காட்டுவதாகட்டும், மகள் காணாமல் போனவுடன் பதறுவதாகட்டும், போலிஸ் ஸ்டேசனில் கூனி குறுகி போவதகட்டும், மனிதர் கிராமத்து அப்பாவை அப்படியே கண்முன் நிறுத்திகிறார். தமிழ்சினிமாவில், ஏன் இன்னும் இவரை உபயோகிக்கவில்லை என்று தெரியவில்லை. நண்பனாக நடித்த நான்கு பேர்களும் அடக்கி வாசித்திருக்கிறார்கள். நண்பனின் தங்கையை தேடும்போது, நட்பை வெளிப்படுத்துகிறார்கள். அதில் நாயகியின் அண்ணனாக நடித்தவர், வெளிச்சத்துக்கு வருவார் என நம்பலாம்.

அதிசயமாக படத்தில் உள்ள பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இசை சபேஷ்முரளியாம். பிண்ணனி இசை பெரிய லெட்டவுண்(நன்றி கேபிள்). சிலநேரங்களில் எங்கள் ஊர் சர்ச்சில் ஆர்மோனியம் போடுவது போல் இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு, திரைக்கதையில் விறுவிறுப்பு காட்டிய இயக்குநர், இடைவேளைக்கு முன்பும் காட்டியிருக்கலாம். டீட்டெயிலாக காட்டுகிறேன் என்ற பெயரில் போரடிக்கவைக்கிறார். ஆனாலும் அந்த கிளைமாக்ஸ், இன்ப அதிர்ச்சி..படத்தில் ஒரு கிழவி, படம் முழுவதும் பேசாமல் இருக்கிறார். அவர் பேசும்போது கிளைமாக்ஸ். அவர் மெதுவாக நடந்து செல்லும்போது, வணக்கம் போடுகிறார்கள். டைரக்டர் டச்..??

இதுபோன்ற படங்களுக்கு நல்ல விளம்பரம் செய்தாலே, படம் ஆவரேஜ் ஹிட்டாவது ஆயிருக்கும். தயாரிப்பாளருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், ஆபாசகுப்பைகளுக்கும், வன்முறைகளுக்கு நடுவில் காணாமல் போன இந்தப்பூ, நல்ல விளம்பரம் கொடுத்திருந்தால், மணந்திருக்கும். என்ன பண்ண, இதுதான் தமிழ்சினிமாவின் தலைவிதி போல…

9 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல விமர்சனம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று இன் வலையில்

உறவு வலுப்பட என்ன செய்யலாம்

அமுதா கிருஷ்ணா said...

அந்த ட்விஸ்டையும் சொல்லி இருக்கலாம் இல்லையா?எந்த தியேட்டர்ல ஓடுது என்றே தெரியவில்லை.எப்படியும் பார்க்க போவதில்லை.

! சிவகுமார் ! said...

வாழ்க ராஜ்தமிழ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Unable to read this font in symbian phones please try to change it. Thanks in advanceUnable to read this font in symbian phones please try to change it. Thanks in advance

அவிய்ங்க ராசா said...

நன்றி ராஜா..கிருஷ்ணா,சிவகுமார்..

நன்றி ரமேஷ்..இன்னைக்கு ஸ்மைலிதானா...

நன்றி கேரளாக்காரன்,..புரியவில்லை...

Muna Dave said...

அசல் இந்த நட்சத்திர அனைத்து முக்கியம் போது, அது அவரது எதிர்கால அசல் வண்ணங்களுடைய வகுத்தன என்பதை ஆச்சரியம் இல்லை. எப்படி அசல் பற்றி ரஜினி பேச்சு அனைத்து வேறு மேல் உள்ளன மற்றும் ஒரு வெற்றி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

டக்கால்டி said...

Naanum parthen sir...

Nalla padam...

Post a Comment