Sunday 5 December, 2010

எந்திரன் vs நந்தலாலா – ஒரு அறிவிஜீவியின் ஒப்பீடு

சமிபத்தில் ஒரு பதிவு படித்தேன். எந்திரனையும் நந்தலாலவையும் ஒப்பீடு செய்யும் அறிவுஜீவிகள் என்று. உங்களுக்குதான் தெரியுமே, நானும் ஒரு அறிவுஜீவியென்று(ப்ச்..நம்புங்கப்பா..ஓ..மை காட்..சத்தியமா நான் அறிவுஜீவிதாம்பா..ஹலோ..நம்புங்க..). அந்தப் பதிவைப் பார்த்ததுமே பொங்கி எழுந்துவிட்டேன். ஒரு அறிவிஜீவியாக இருந்துகொண்டு எந்திரனையும் நந்தலாலவையும் ஒப்பீடு செய்யாவிட்டால் எப்படி..இதோ உங்கள் பார்வைக்கு. முன்பே சொல்லிவிடுகிறேன். இந்த ஒப்பீட்டில் வரும் அனைத்தும் இந்த அறிவிஜீவியின் சீரியஸ் எண்ணங்கள். காமெடிபீசுன்னு நினைச்சுக்கிட்டு, சிரிச்சீங்க..அம்புட்டுத்தேன்…

நந்தலாலா

எந்திரன்

தாயைத்தேடி ஒரு பயணம்

ரங்கூஸ்கி கொசுவைத் தேடி ஒரு பயணம்

“டாடி”களை நம்பி எடுக்கப்பட்ட சினிமா

“கோடி”களை நம்பி எடுக்கப்பட்ட சினிமா

உலகதரத்தில் உள்ளூர் திரைப்படம்

உள்ளூர் தரத்தில் உலகத்திரைப்படம்

6 வயது நாயகரை நம்பி எடுக்கப்பட்ட படம்

64 வயது நாயகரை நம்பி எடுக்கப்பட்ட படம்

இசைஞானியின் இசைத்தாலாட்டு

இசைப்புயலின் செமபீட்டு

தாயின் புறக்கணிப்பின் வலி

ஐஸ்வர்யா ராயின் புறக்கணிப்பின் வலி

மெதுவாக செல்லும் திரைக்கதை

எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும் திரைக்கதை

6 வயது சிறுவனுக்கும், 30 வயது இளைஞனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு

64 வயது இளைஞருக்கும், 30 வயது இளைஞிக்கும் உள்ள காதல்பிணைப்பு

மனதை தொட்டு செல்லும் லாங்க்ஷாட் காட்சிகள்

நிமிடத்திற்கு நிமிடம் மாறும் பரபர காட்சிகள்

ஆஹா..இதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..கிகிஜிரோ இயக்குநர் கதறல்

அனைத்து ஹாலிவுட் இயக்குநர்களும் கதறல்

படத்தின் மொத்த செலவு 2 கோடி

படத்தின் கேசட் வெளியீட்டு விழா செலவு 2 கோடி

கதையோடு இணைந்து செல்லும் நகைச்சுவை

கதைக்கு தேவையே இல்லாத சந்தானத்தின் நகைச்சுவை

அம்மா……..

ரோபோ….மே….

மிஸ்கினின் யதார்த்த சினிமா

சங்கரின் பதார்த்த சினிமா

ஜில்லென்ற மோர்…

கும்மென்ற பாரின் பீர்

திரையரங்கம் முழுவதும் நிசப்தம்

வருங்கால முதல்வர் வாழ்க..உடல் மண்ணுக்கு..உயிர் ரஜினிக்கு..

படம் முடிந்ததும் மனதுக்குள் இடிச்சத்தம்

படம் முடிந்ததும் தியேட்டருக்கு வெளியே வெடிச்சத்தம்

33 comments:

ம.தி.சுதா said...

கவனம் மிஸ்கினும் சங்கரம் உங்களுக்கு கெஸ் போடப் போறாங்க...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Unknown said...

ஒப்பீடு என்னவோ நல்லாத்தான் இருக்கு... ஆனா படிச்ச பொறவு எனக்குத்தான் எப்டியோ இருக்கு... (நீ என்ன திட்னாலும் சரி....சிரிக்காம எப்படி பாஸ்...கொஞ்சமா சிரிச்சுகறேன் பாஸ் )

Prathap Kumar S. said...

//ஆஹா..இதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..கிகிஜிரோ இயக்குநர் கதறல்

அனைத்து ஹாலிவுட் இயக்குநர்களும் கதறல்//

ஹஹஹ ஒப்பீட்டுலேயே டாப்பு இதுதான் ராசாண்ணே... கொன்னுட்டீங்க...


நீங்க ஒரு அறிவு ஜீவியான்னு இதுவரைக்கும் டவுட்டாத்தான் இருந்துச்சு... இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு :)))

CrazyBugger said...

bossu avanavan koodi koodiyah padam yaedutha ungallukku ellaam nakkala pochu...

nogaama nongu thingalam...

கலகலப்ரியா said...

||உலகதரத்தில் உள்ளூர் திரைப்படம்


உள்ளூர் தரத்தில் உலகத்திரைப்படம்||

=))...

செம...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த ஆராய்ச்சியை படிக்கும்போது படிப்புல காட்டிருந்தா. .....சரி விடுங்க

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ம.தி.சுதா said...
கவனம் மிஸ்கினும் சங்கரம் உங்களுக்கு கெஸ் போடப் போறாங்க...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?
4 December 2010 10:33 PM
/////////////////////////
நன்றி சுதா..கெஸ் போடப்போறாங்களா??? ஓ கேஸா???..)))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Hanif Rifay said...
ஒப்பீடு என்னவோ நல்லாத்தான் இருக்கு... ஆனா படிச்ச பொறவு எனக்குத்தான் எப்டியோ இருக்கு... (நீ என்ன திட்னாலும் சரி....சிரிக்காம எப்படி பாஸ்...கொஞ்சமா சிரிச்சுகறேன் பாஸ் )
5 December 2010 12:05 AM
///////////////////////////////
நல்லாவே சிரிங்கண்ணே..அதுக்குதான் இம்புட்டு கஷ்டப்படுறேன்..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
நாஞ்சில் பிரதாப்™ said...
//ஆஹா..இதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..கிகிஜிரோ இயக்குநர் கதறல்

அனைத்து ஹாலிவுட் இயக்குநர்களும் கதறல்//

ஹஹஹ ஒப்பீட்டுலேயே டாப்பு இதுதான் ராசாண்ணே... கொன்னுட்டீங்க...


நீங்க ஒரு அறிவு ஜீவியான்னு இதுவரைக்கும் டவுட்டாத்தான் இருந்துச்சு... இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு :)))
5 December 2010 12:22 AM
////////////////////////////////
ஆஹா..அறிவுஜீவி பட்டத்திற்கு நன்றிண்ணே..அறிவுஜீவின்னாலே அடுத்தவங்களை குழப்புறதுதான். இந்த பதிவுல எந்திரனை பாராட்டுறேனா, கிண்டல் பண்றேனா சொல்லுங்க பார்ப்போம்..என்ன குழம்புதா..அப்ப நான் அறிவுஜீவிதேன்..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Maduraimalli said...
bossu avanavan koodi koodiyah padam yaedutha ungallukku ellaam nakkala pochu...

nogaama nongu thingalam...
5 December 2010 1:33 AMய்
///////////////////////////
ஏம்பா..கோடிலே படம் எடுத்தா விமர்சிக்க கூடாதா.. கோடிக்கு மதிப்பே தெருக்கோடில இருக்குற நாங்க குடுக்குற 40 ரூபா டிக்கெட்டுதான்..(அதுவா வருது..)

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த ஆராய்ச்சியை படிக்கும்போது படிப்புல காட்டிருந்தா. .....சரி விடுங்க
5 December 2010 8:23 AM
/////////////////////////////
எனக்கு பிடிக்காத படிப்பு விஷயம் பத்தி பேசுனீங்க..அப்புறம்...))))))

Viji said...

அண்ணே
வர வர ரொம்ப சூப்பரா எழுதறீங்க.கலக்கல் போங்க.
உங்க பதிவ விட நீங்க கமெண்ட்ஸ் கு பதில் சொல்ற விதம் ரொம்ப சூப்பர்.
மனைவி உடல்நலம் suguma ?
நான் இன்னமும் இந்திரன் பர்கள?
blockbuster ல twilight நு ஒரு படம்,பார்த்துட்டு விமர்சனம் சொல்ல முடியுமா?

"ராஜா" said...

அடே அடே அடே என்ன ஒரு ஞானம்... கலக்கல் நண்பரே ... இதுல யார குத்தி இருக்கீங்க .. ஷங்கரா இல்ல மிஷ்கினையா?

Anonymous said...

கலக்கல்ஸ் :)

சேவியர்
http://sirippu.wordpress.com

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

You have missed one comparison

Nandhalala is flop and Enthiran Is Blockbuster

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

Some Corrections

Rajini’s age is 61 not 64

Aish age is 37 not 30

நசரேயன் said...

அண்ணே நீங்க இன்னும் எந்திரனை விட்டு வெளிய வரலையா ?

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
அண்ணே
வர வர ரொம்ப சூப்பரா எழுதறீங்க.கலக்கல் போங்க.
உங்க பதிவ விட நீங்க கமெண்ட்ஸ் கு பதில் சொல்ற விதம் ரொம்ப சூப்பர்.
மனைவி உடல்நலம் suguma ?
நான் இன்னமும் இந்திரன் பர்கள?
blockbuster ல twilight நு ஒரு படம்,பார்த்துட்டு விமர்சனம் சொல்ல முடியுமா?
5 December 2010 5:41 PM
////////////////////
நன்றி விஜி..கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
"ராஜா" said...
அடே அடே அடே என்ன ஒரு ஞானம்... கலக்கல் நண்பரே ... இதுல யார குத்தி இருக்கீங்க .. ஷங்கரா இல்ல மிஷ்கினையா?
5 December 2010 8:17 PM
//////////////////////////////
யாரையும் குத்தலண்ணே..படம் பார்க்குற நாமளே குத்திகிட்டாதான் உண்டு..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Anonymous said...
கலக்கல்ஸ் :)

சேவியர்
http://sirippu.wordpress.com
5 December 2010 9:55 PM
////////////////////////////
நன்றி சேவியர்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
You have missed one comparison

Nandhalala is flop and Enthiran Is Blockbuster
6 December 2010 3:24 PM
தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
Some Corrections

Rajini’s age is 61 not 64

Aish age is 37 not 30
6 December 2010 3:26 PM
/////////////////////////
வரலாறு முக்கியம் அமைச்சரே...))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
நசரேயன் said...
அண்ணே நீங்க இன்னும் எந்திரனை விட்டு வெளிய வரலையா ?
6 December 2010 4:38 PM
////////////////////////
அது எப்படிண்ணே வரமுடியும்..அவிங்களை விட சொல்லுங்க நானும் விட்டுறேன்..))

Mohamed Faaique said...

NALLAYIRUKKU...

Anonymous said...

idhuvaraikum ennoda favourites list la iruntha unga address a eduthitten... unga pathivu muzhuvathum rajini mela oru kaazhpunarchi theriyuthu... nalla nagaichuvai nadunilaya irukkanum... neenga solra pathivayum nan padichen.. avaruku mishkin antha padam thannoda original nu sonna kovathil antha padam korian padathoda copy than enbathai evidence odu solliyirukar... aana neenga ivvalavu mattama compare pannuveengannu nenachu parkala rasa..

Anonymous said...

rajiniku jodi aishwarya na thappu... mishkinukku jodi rohini na thappilla...

intha padam antha chinna payana nambi edukala... ilayaraja ennum periya manithara nambi edukapattathu

background music illama intha padatha pathutu sollunga, athu evvalavu bore adikumnu theriyum

Anonymous said...

mothalla ulaha tharam ulloor tharam enbatharku oru vilakkam kodungal pls.. slow motion scenes, long shots, dialogue illama oru pathu nimisham.. ithellam iruntha athu ulaha tharama... ithu ulaha maha nadipuda saami..

enthiran is a commercial cinema.. athula ayirethettu logic parthu kindal pannalam, aana "ulaga tharathula" edukira cinemala logic paka koodathu... ithuthane unga nyayam ?

Anonymous said...

rajiniya kindal panrennu solli ungaloda unmayana mugatha kaattiteenga.. thanks rasa...

Arun said...

என்னப்பா ராசா மறுபடியும் குரங்கு சேட்டை ஆரம்பிச்சிட்ட போல..
எந்திரன் முடிஞ்சி நாங்க வேற வேலை பார்க்க போயிட்டோம்.. நீங்க எல்லாம் இன்னுமா அதுலயே இருகிங்க...
மன்னன் koundamani ஸ்டைல "இந்த bloggers தொல்லை தாங்கலட சாமீ..."

Arun said...

"திரையரங்கம் முழுவதும் நிசப்தம்" --
..theatre ல ஆளு இருந்ததானே சத்தம் வரும்.. இருகிறவங்களும் தூங்கிடுறங்க

"மெதுவாக செல்லும் திரைக்கதை" -- ரொம்ப மெதுவபா..

நல்ல படம் தான் ஒத்துகிறோம்.. ஆனா எந்திரன் படத்தோட கம்பர் பண்றது டூ மச்..both are of different genre

Anonymous said...

enna raasa, aduthathu rajiniya eppadi mattam thattalaamnu room potu yosikira pola iruku? suriyana pathu nai kuracha kathaya iruku !!

SamKamalesanA said...

nice post !!

கத்தார் கனவுகள் !!! said...

நல்ல ஆராய்ச்சி..நந்தலாலா படத்தை நான் இன்னும் பாக்கல..உங்களோட இந்த போஸ்ட் பாத்ததும் அந்த படத்தை கண்டிப்பா பாக்கணும்னு தோணுது..

Deepa said...

Dont continue nandala with endhiran..

Endhiran is an original story certified by oliver 3 time oscar award winner...

Post a Comment