Saturday, 11 December, 2010

டாக்குடரு இலை(ளை)ய தளபதி விசய் வாளுக..வாளுக..

நம்ம கோவாலு என்னிக்கும் இல்லாம அன்னிக்கு ரொம்ப ‘குஷி’ யா(இப்படி சொன்னாத்தேன் பயபுள்ளயும் சந்தோசப்படுறான்..) வந்தாண்ணே.. என்னது கோவாலைத் தெரியாதா..என்னண்ணே இப்படி சொல்லிப்புட்டீங்க..தமிழக அரசியலையும், சினிமாவையும் உன்னிப்பா கவனிச்சுட்டு வர்றதுல்ல நம்ம நாட்டுலயே இரண்டாவது ஆளு நம்ம கோவாலுதேன்..முதல் ஆளு யாரா??கண்டுபிடிங்க பார்ப்போம்..வேணுமின்னா க்ளூ ஒன்னு தர்றேன். அவரு மதுரைக்காரருண்ணே..முதல் எழுத்து “ரா” ல ஆரம்பிச்சு “சா” ல முடியும். இன்னமும் முடியலயா..இன்னொரு க்ளூ தர்றேன்..மொத்தமே இரண்டு எழுத்துதான்..என்னது கஷ்டமா இருக்கா..ரெண்டு எழுத்துக்கு நடுவுல வேற எழுத்தே இல்லேங்குறேன். புரியலையா..அவரை பிரபல பதிவர், அறிவுஜீவின்னு வேற சொல்லிக்கிறாயிங்க..யாருப்பே அது, பேசிக்கிட்டு இருக்குறப்ப செருப்பை கழட்டுறது..சரி விடுங்க..மேட்டருக்கு வருவோம்..பயபுள்ள கோவாலு முகத்துல அப்படி ஒரு சந்தோசம்.

“ராசா..ராசா..இந்தாடா..சுவீட்டு எடுத்துக்க..எனக்கு காலும் ஓடலை..கையும் ஓடலை..”

“வேணுமின்னா எந்திரன் கிளைமாக்ஸ் மாதிரி கையையும் காலையும் கழட்டி கொடுத்திடேன்..”

“கெட்ட வார்த்தை கமெண்டு போட்டாலும், நீ திருந்தவே மாட்டியாடா ராசா..இதுவேற..எங்க கண்டுபிடி பார்ப்போம்..”

“ம்..நீ இன்னைக்குதான் பொறந்து தொலைச்சியா..”

“இல்லியே..”

“ஏதாவது பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணி வாழ்க்கைய தியாகம் பண்ணுறதா முடிவாயிருக்கா..”

“உன் வீட்டுக்காரம்மா பண்ணுன தியாகத்தை விடவா..அதவிடு..கரெக்டா சொல்லு..”

“ப்ச்..சொல்லித் தொலைடா..இதுவே மூணுபக்கத்துக்கு இழுக்கும் போல..”

அடித்தொண்டையில் கத்தினான்..

“டாக்குடரு..இலைய தளபதி விசய் கட்சி ஆரம்பிக்கப் போறாருடோய்..அம்மாவோட கூட்டணி..2011 ல வேட்டை 2016 ல கோட்டை..”

“அடங்கலியா உன்னோட சேட்டை..ஏண்டா..நீ வேற நடிகரோட தொண்டனுல்ல..இப்ப எப்படி மாறிட்ட..”

“ப்ச்..அவருதான் ஒரு முடிவு சொல்ல மாட்டுறாரே..”

“ஒருவேளை அடுத்த படம் ரீலீஸ் ஆகுறப்ப சொல்லுவாரா இருக்கும்..”

“அதுக்கும் நான் பிளான் வைச்சிருக்கேன்..இப்பவே என்னோட பையன தலைவரோட ரசிகனா மாத்தி வைச்சிட்டேன். தலைவரோட பேரன் எப்படியும் அரசியலுக்கு வந்துதான் ஆகணும்..அப்ப நம்ம பையன் மாவட்ட செயலாளராயிருவானில்ல..”

“ஆஹா..இத படிக்கிறதுல்ல காட்டியிருந்தா, இன்னைக்கு அம்பானியாயிருப்பேயேடா..”

“விடுடா ராசா..எங்க தளபதி விசய் அரசியலுக்கு வந்துட்டாருல்ல..இப்ப அஜீத்து ரசிகர்களுக்கெல்லாம் வைச்சோமா ஆப்பு..”

“ஐய்..அவரும் அரசியலுக்கு வந்துட்டா என்ன பண்ணுவ..”

“அவரு “ஐ..யா..மி..ர..ட்டு..ராங்க..யா….அ..து..” அப்படின்னு சொல்லுறதுக்குள்ள எலெக்சனே முடிஞ்சுரும்..அதுக்குள்ள நாங்க ஜெயிச்சுருவொமே..”

“படா கில்லாடிடா..”

“நாங்க, கடலுல சுறா..சாப்பிடுறதுக்கு இறா..அமைதில புறா..”

“பார்றா…”

“ராசா..இப்பவே சொல்லிப்புட்டேன்..விசய்க்கு தான் நீ ஓட்டுப்போடணும்..”

“சரி..சொல்லு..அவருக்கு நான் ஏன் ஓட்டுப்போடணும்..என்ன பண்ணியிருக்காரு..”

“என்னடா, இப்படி சொல்லிப்புட்ட..இளைஞர்களின் விடிவெள்ளி..எவ்வளவு புரட்சி பண்ணியிருக்காரு..”

“எது..சுறா படத்துல தமன்னா போட்டுருக்குற பேண்ட்டை தூக்கி தூக்கி விடுவாரே..அத சொல்லிறியா..”

“சும்மா இருடா..எவ்வளவு நல்ல கருத்து சொல்லி இருக்காரு..”வாழ்க்கை ஒரு வட்டம்டா..அதுல ஜெயிக்கிறவன் தோப்பான்..தோக்கிறவன் ஜெயிப்பான்..”

“அப்படின்னா..படத்தோட டைரக்டர்தான் அரசியலுக்கு வரணும்..”

“போடாங்க..எவ்வளவு சேவை பண்ணிருக்காரு தெரியுமா..”

“எது..ரசிகன் படத்துல மாமியார் முதுகுல சோப்பு போட்டு ஒரு சேவை பண்ணிருப்பாரே..அத சொல்லுறியா..”

“டே..வெண்ணை..கொன்னுபுடுவேன்..எம்புட்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்காரு..”

“அது வடபழனி கோயிக்குப் போனா யாரு வேணுன்னாலும் பண்ணிக்கலாம்..”

“எவ்வளவு இரத்ததான முகாம் தொறந்து வைச்சுருக்காரு..”

“அது நேத்து வந்த காதல் பரத் கூட பண்ணுறாரு..வேற என்ன பண்ணியிருக்காரு சொல்லு..”

“இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சி தர்ற மாதிரி எவ்வளவு கருத்து சொல்லியிருக்காரு தெரியுமா..”

“எது..”தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டபுரோட்டா..பம்பாய் குட்டி..சுக்கா ரொட்டி” ன்னா..ஆமா..எவ்வளவு ஆழமான கருத்துக்கள்..

“உனக்கு பொறாமைடா..எவ்வளவு அழகா பேசுவாரு தெரியுமா..”

“முதல்ல அவர வாயத் தொறந்து பேசச் சொல்லு.. அவரு அரசியலுக்கு வந்தா முதல்ல வேலைய விட்டுபோறவன் மைக் செட்டுகாரனாத்தான் இருக்கும்..பின்ன எம்புட்டு வால்யூம் வைச்சாலும் ஒன்னும் கேக்காதே..”

“ராசா..ரொம்ப ஓவராப் பேசுற..முதல்ல எங்க தலைவனைப் பத்திப் பேசுன..இப்ப டாக்குடரு விசய் பத்தி பேசுற..மீனம்பாக்கம் வந்தா அருவாதான் பேசும்..பார்த்துக்க..”

ஆஹா..என்னதான் நம்ம விறைப்பா பேசுனாலும் உசுருன்னு வந்துட்டா, மட்டையா மடங்கி போயிருவோமுண்ணே..

“ஆஹா..கோவாலு..உண்ர்ச்சி வசப்பட்டு எதுவும் முடிவெடுத்துறாதீங்கடா..இப்ப பாரு..”இளைஞர்களின் விடிவெள்ளி..நாளைய முதலமைச்சர்..குடும்ப குத்துவிளக்கு(பயத்துல என்னலாம் வருது பாருங்க..), தமிழ்நாட்டின் ஒபாமா..சரித்திர நாயகன்..டாக்குடரு விசய் வாளுக..வாளுக…”

கழுத..ஜனநாயகம் விளங்கும்றீங்க....??????

26 comments:

karthikkumar said...

“வேணுமின்னா எந்திரன் கிளைமாக்ஸ் மாதிரி கையையும் காலையும் கழட்டி கொடுத்திடேன்..”

“கெட்ட வார்த்தை கமெண்டு போட்டாலும், நீ திருந்தவே மாட்டியாடா ராசா..///

உங்கள நீங்களே கலாய்ச்சுக்கறீங்க.

karthikkumar said...

“எது..சுறா படத்துல தமன்னா போட்டுருக்குற பேண்ட்டை தூக்கி தூக்கி விடுவாரே..அத சொல்லிறியா..///

அப்போ நீங்க சுறா பாத்துடீங்க. அப்படிதானே.

ம.தி.சுதா said...

present sir..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:)

கார்க்கி said...

:)))

வானம் said...

எத்தன பதிவருங்க அடிச்சாலும் டாகுடரு தாங்குறானே. ரொம்ம்ம்ப நல்லவனா இருப்பான் போலருக்கே. அவ்வ்வ்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)))

Maduraimalli said...

Phone pannunga sir...

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////////
karthikkumar said...
“வேணுமின்னா எந்திரன் கிளைமாக்ஸ் மாதிரி கையையும் காலையும் கழட்டி கொடுத்திடேன்..”

“கெட்ட வார்த்தை கமெண்டு போட்டாலும், நீ திருந்தவே மாட்டியாடா ராசா..///

உங்கள நீங்களே கலாய்ச்சுக்கறீங்க.
11 December 2010 7:24 AM
//////////////////////////////////
நன்றி..கலாய்க்கிறதுல்ல மகிழ்ச்சிதான்..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////////
karthikkumar said...
“எது..சுறா படத்துல தமன்னா போட்டுருக்குற பேண்ட்டை தூக்கி தூக்கி விடுவாரே..அத சொல்லிறியா..///

அப்போ நீங்க சுறா பாத்துடீங்க. அப்படிதானே.
11 December 2010 7:26 AM
//////////////////////////////
என்ணண்ணே இப்படி சொல்லிப்பிட்டீக..சுறா பார்க்காம யாராவது இருப்பாய்ங்களா...

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
ம.தி.சுதா said...
present sir..
11 December 2010 7:37 AM
////////////////////////////
நன்றி சுதா..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
:)
11 December 2010 8:29 AM
////////////////////////////////
நன்றி செந்தில்..)

அவிய்ங்க ராசா said...

////////////////////////
கார்க்கி said...
:)))
11 December 2010 8:56 AM
////////////////////////
நன்றி கார்க்கி..வேற மாதிரி எதிர்பார்த்தேன்..ஹி..ஹி..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
வானம் said...
எத்தன பதிவருங்க அடிச்சாலும் டாகுடரு தாங்குறானே. ரொம்ம்ம்ப நல்லவனா இருப்பான் போலருக்கே. அவ்வ்வ்...
11 December 2010 9:37 AM
//////////////////////////////
ஹி..ஹி..))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
:)))
11 December 2010 9:54 AM
Maduraimalli said...
Phone pannunga sir...
11 December 2010 11:05 AM
//////////////////////////////
நன்றி ரமேஷ்..மதுரை மல்லி, உன் ஆபிசுக்கு கால் பண்ணினே..நீ கிளம்பிட்ட...

Anonymous said...

இந்திய தமிழ்நாட்டு ஜனநாயகம் பாரின்லே இருக்கிறே கழுதைகள் சொல்லியா வெலங்கும்? பொழப்ப பாருங்க அவிங்க.

ரஹீம் கஸாலி said...

நாங்களும் விஜயை கலாய்ச்சு இருக்கோம்ல....நம்ம கடையில வந்து பாருங்க....
http://ragariz.blogspot.com/2010/12/jayalalithaa-meets-sachandasekaran.html

http://ragariz.blogspot.com/2010/12/jeyalalitha-vijay-meets.html

raja said...

இந்த அளவுக்கு நேர்த்தியாக அல்லக்கை பெரிய பத்திரிகைகள் கூட எழுதுவதில்லை.. வாழ்த்துக்கள் நண்பனே. என்ன சிரிக்கவைத்ததற்கு நன்றி.

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Anonymous said...
இந்திய தமிழ்நாட்டு ஜனநாயகம் பாரின்லே இருக்கிறே கழுதைகள் சொல்லியா வெலங்கும்? பொழப்ப பாருங்க அவிங்க.
11 December 2010 11:05 PM
///////////////////////////
அதானே..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
ரஹீம் கஸாலி said...
நாங்களும் விஜயை கலாய்ச்சு இருக்கோம்ல....நம்ம கடையில வந்து பாருங்க....
http://ragariz.blogspot.com/2010/12/jayalalithaa-meets-sachandasekaran.html

http://ragariz.blogspot.com/2010/12/jeyalalitha-vijay-meets.html
12 December 2010 4:28 AM
////////////////////////////
கலக்கல்..நன்றி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
raja said...
இந்த அளவுக்கு நேர்த்தியாக அல்லக்கை பெரிய பத்திரிகைகள் கூட எழுதுவதில்லை.. வாழ்த்துக்கள் நண்பனே. என்ன சிரிக்கவைத்ததற்கு நன்றி.
12 December 2010 8:23 AM
///////////////////////////////////
நன்றி ராஜா..

tharuthalai said...

பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு. புரிஞ்சிக்குங்க!

பொங்குனா பூகம்பம்
சீறுனா சுனாமி
தாங்கமாட்டே!

"சைலன்ஸ்" - இந்த ஒரு வார்த்தைய ஆவேசமா சொன்ன அந்த குரலுக்கு ஒரு மரியாத வேண்டாம்?
இனிமேல் 'டாக்குடர்' அப்படின்னு எழுதி கேவலப்படுத்தக் கூடாது. 'Dogடர்' அப்படின்னு எழுதணும். அப்படியும் ஆசை அடங்கலைன்ன ' அல்சேஷன்' , 'டெரர்' Dogடர் அப்படி எழுதலாம்.

---------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -டிச'2010 )

Arun said...

Hits vaanga yepadi elam try panna vendi eruku.. 1st Rajni yepo Vijay ya... Kamal, Ajith, Surya, Vikram ku yepo varum? Kamal ah criticize panni ezhutha dil eruka?

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////

tharuthalai said...
பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு. புரிஞ்சிக்குங்க!

பொங்குனா பூகம்பம்
சீறுனா சுனாமி
தாங்கமாட்டே!

"சைலன்ஸ்" - இந்த ஒரு வார்த்தைய ஆவேசமா சொன்ன அந்த குரலுக்கு ஒரு மரியாத வேண்டாம்?
இனிமேல் 'டாக்குடர்' அப்படின்னு எழுதி கேவலப்படுத்தக் கூடாது. 'Dogடர்' அப்படின்னு எழுதணும். அப்படியும் ஆசை அடங்கலைன்ன ' அல்சேஷன்' , 'டெரர்' Dogடர் அப்படி எழுதலாம்.

---------------------------
தறுதலை

//////////////////////////////////
நோ கமெண்ட்ஸ்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
Arun said...
Hits vaanga yepadi elam try panna vendi eruku.. 1st Rajni yepo Vijay ya... Kamal, Ajith, Surya, Vikram ku yepo varum? Kamal ah criticize panni ezhutha dil eruka?
12 December 2010 9:46 PM
//////////////////////////
கரப்பான்பூச்சிக்கு அடிக்குற ஹிட்ஸ் மட்டும்தான் வீட்டுல இருக்கு. கமலென்ன, ரஜினியென்ன யார் தப்பு பண்ணாலும் எழுதுவோம்னே. கமல்-50 விழாவைப் பத்தி பழைய பதிவுல எழுதியிருக்கேன்..படிச்சுக்குங்க..

Anonymous said...

சூப்பர்.. தப்பு எங்க நடந்தாலும் நீங்க வருவீங்கங்கற பயம் எல்லாத்துக்கும் இருக்கணும்..ஏன் இந்த மீடியாக்கள் எல்லாம் உங்கள கண்டுக்காம கிடக்கரானுக?? அது என்ன "வாளுக வாளுக".. அது "வாழுக வாழுக"...

Post a Comment