(ஜோடி நம்பர் ஒன் சிம்பு ஸ்டைலில் படிக்கவும்)
எனக்கு என்ன பிரச்சனைன்னா, எனக்கு எழுத தெரியாதுங்க..சின்னபிள்ளையிலேருந்தே எங்கப்பா, எனக்கு அதெல்லாம் சொல்லி தரலை. எனக்கு எழுதத் தெரியாதுய்யா..(இங்கு ஒரு அழுகையைப் போட்டுக்கொள்ளவும்)
எதற்கு இந்த பில்டப் என்றால் எழுதப்போகும் மேட்டர் அப்படி. சமீபத்தில் நடந்த நூல்வெளியீட்டு விழாவில் மிஸ்கின் பேசிய சம்பந்தம் இல்லாத பேச்சுதான் இப்போது பதிவுலகத்தில் ஹாட் டாபிக். சாருவுடைய சீடர்கள், இதற்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று ரூம் போட்டு, சரக்கடித்துவிட்டு யோசித்துக்கொண்டு இருப்பதாக கேள்வி. மிஸ்கின் நிலைமையில் நம் பிரபலபதிவர்கள் மேடையில் பேசியிருந்தால் என்ற கற்பனையே இந்த பதிவு. இப்படி கோளாறாச் சிந்திச்சே, நானே எனக்கு சூன்யம் வைத்து மீனம்பாக்கம் வரமுடியாமல் செய்துவிடுவேனோ என்ற பயம் ஒருபக்கம் இருந்தாலும், வடிவேலு பாணியில் “போவோம்..போய்த்தான் பார்ப்போம்” என்று உள்மனது சொன்னதால் இந்த பதிவு. வழக்கம்போல், இந்த பதிவு முழுக்க கற்பனையே. யாரையும் புண்படுத்த அல்ல.
சாரு, புத்தக வெளியீட்டு விழாவுக்கு பிரபல பதிவர்களை அழைக்கிறார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் : இப்போது சாருவின் புத்தகங்களைப் பற்றி பேச பதிவுலக சூப்பர்ஸ்டார் “ஜாக்கி சேகரை அழைக்கிறேன்..
கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து பயங்கரமாக கூவுகிறார்..மன்னிக்கவும்..கத்துகிறார்..
“பதிவுலக சூப்பர்ஸ்டார் ஜாக்கி வாழ்க..வாழ்க..ஜாக்கி..ஏன் இன்னைக்கு பதிவு போடலை. உங்க பதிவு படிக்காம நான் இன்னைக்கு சோறு கூட சாப்பிடலை..பாருங்க கையெல்லாம் நடுங்குது..என் கீபொர்டுல F5 பட்டன் அழிஞ்சு போச்சு..ப்ளீஸ் ஜாக்கி..”
ஜாக்கிசேகர் ரொம்ப வெட்கப்படுகிறார்..
ஜாக்கிசேகர் : பயபுள்ளைக எம்மேல எம்புட்டு பாசமா இருக்காய்ங்க..இதற்கு நான் என்ன தவம் செய்தேன்..(பீல் பண்ணி மைக் பிடிக்கிறார்)
ஜாக்கிசேகர் : அனைவருக்கும் வணக்கம். என்னை தொடர்ந்து படித்துவரும் சாருவுக்கு முதல் வணக்கம்..
(சாரு டென்சனாகிறார்)
சாரு : அய்யய்யோ..இது எப்ப நடந்துச்சு..
ஜாக்கிசேகர் : இல்லை சாரு..நீங்கள் என்னை தொடர்ந்து படித்து வருவதை உங்கள் பதிவு ஒன்று படிக்கும்போது உணர்ந்தேன். ஒரு இடத்தில் “பதிவுலகத்தில் வாக்கிங்க்” என்று எழுதியிருந்தீர்கள். “பதிவுலகத்தில் ஜாக்கி” என்று சொல்ல நினைத்தீர்கள் என்று புரிந்து கொண்டேன்..தொடர்ந்து என்னை படித்துவருவதற்கு நன்றி
(சாரு திகிலாகிறார்..ஆஹா..நாளைக்கே இத பதிவா போட்ருவார் போல இருக்கே என்ற பயம் அவரை ஆட்கொள்ள “சரி..நான் எழுதுன புத்தகத்தைப் பத்தி ரெண்டு வார்த்தை” என்று கேட்டுகொள்கிறார்)
ஜாக்கிசேகர் : (ஆடியன்சைப் பார்த்து) இது எல்லாம் உங்களால்தான் நடந்தது..நீங்கள் இல்லாமல் நான் அலெக்சா ரேட்டிங்கில் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. உங்களுக்கு திரும்பவும் நன்றிகள். நான் சென்னை வரும்போது கையில்…
(சாரு டெர்ராகிறார்)
சாரு : ஏங்க..புத்தகத்தைப் பத்தி ரெண்டு வார்த்தை
ஜாக்கிசேகர் : ஓ..மறந்துட்டேன். என்னைத் தொடர்ந்து படித்து வரும் ஜெயமோகனைப் பார்த்து ஒன்று கேட்கிறேன்..
(சாரு முகம் மலர்கிறது)
ஜாக்கிசேகர்(மைக்கை மறைத்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவரிடம்) : ஏம்பா, ஜெயமோகனுன்னா,முகத்தை மறைச்சுக்கிட்டு தாடிவைச்சிக்கிட்டு இருப்பாரே..அவருதான..”
பக்கத்தில் இருப்பவர் : அவர் பாலகுமாரனுங்க..
ஜாக்கிசேகர் : ஓ..மாத்திட்டாய்ங்களா..அது..அவரைப் பார்த்து ஒன்று கேட்கிறேன்..நீங்கள் என்னுடைய சாண்ட்விச் நான்வெஜ் படித்திருக்கிறீர்களா..
(சாரு தலையில் கைவைத்து உக்கார்ந்துவிடுகிறார்)
ஜாக்கிசேகர்: அடுத்து உண்மைத்தமிழன் சுருக்கமாக 3 மணிநேரம் பேச இருப்பதால், இத்தோடு உரையை முடித்துக்கொள்கிறேன். போவதற்கு முன்பு என் வாசகர்களிடம் ஒருவேண்டுகோள். என்பதிவைப் பாராட்டு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருவதால், தயவுசெய்து ஒருநாளைக்கு ஒரு கடிதமாக குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்).
உண்மைத்தமிழன் பேசுவதற்கு வருவதைப் பார்த்து சாரு அவசரம், அவசரமாக மைக் நோக்கி செல்கிறார்)
சாரு: இத்தோடு இந்த நிகச்சி வாசகர்களின் நலன் கருதி முடிக்கப்படுகிறது..எல்லாரும் ஓடலாம்..சாரி..கொளம்பலாம்..அய்யோ..கிளம்பலாம்..
உண்மைத்தமிழன் : இருங்க..என்ன அவசரம்..எம்புட்டு பிரிப்பேர் பண்ணியிருக்கேன். உள்ளிருந்து நாலு அரைகுயர் நோட்டுகளை எடுக்கிறார்..சாரு டென்சனாக
சாரு : நீங்களாவது புத்தகத்தைப் பத்தி ரெண்டு வார்த்தை..
உண்மைத்தமிழன் : எம்பெருமான் முருகனுக்கு முதல்வணக்கம். சாரு எனக்கு நல்ல பழக்கம். நான் எடுத்த் குறும்படத்தை முதலில் பாராட்டியவரும் அவரே..
சாரு(மனதுக்குள்) : ரெண்டு நாள் மூச்சு பேச்சு இல்லாம கோமா ஸ்டேஜ்ஜுல இருந்தது எனக்குல தெரியும்..(மறைத்துக்கொண்டு சிரிக்க முயற்சிக்கிறார்..)
உண்மைத்தமிழன் : நன்றி..என்று பேச ஆரம்பிக்கிறார்..ஆரம்பிக்கிறார்..ஆ ரம்பித்துக்கொண்டே இருக்க கூட்டம் முழுவதும் குழுவாக தம்மடிக்க கிளம்புவதைப் பார்த்த சாரு தவழ்ந்து, தவழ்ந்து மைக்செட்காரரிடம் சென்று..
சாரு: தம்பி..நீ ஒரு உதவி பண்ணு..நைசா..கையவிட்டு மைக் வயரை புடுங்கி விட்டுடு..மைக் ஒர்க் ஆகலைன்னு சொல்லி கூட்டத்தை கேன்சல் பண்ணிடுவோம்.கொலையா கொல்லுறாயிங்க..
பேசிக்கொண்டே, வெளியில் பார்க்க முதல் ஆளாக லக்கி தம்மடித்துக்கொண்டு இருப்பதை பார்த்து டென்சனாகி லக்கியிடம் சென்று
சாரு : என்ன தம்பி..நீங்களே இப்படி செய்யலாமா..உத்தம எழுத்தாளர் ஆளுங்க பார்த்தா என்ன நினைக்கமாட்டாங்க..எப்ப இருந்து இங்க நிக்குறீங்க..
டீக்கடைகாரர் : அவரு இன்னமும் உள்ளயே போகலீங்க..இங்கதான் நிக்குறார் ஒருமணிநேரமா..
சாரு கோபத்துடன் பார்க்க
லக்கி: அய்யோ..உங்களை மேடையில் பார்க்க எனக்கு அழுகையா வருதுங்க..நீங்கதாங்க சூப்பர்ஸ்டார்..எனக்கு ஆனந்த கண்ணீரா வருவதால் அடக்கமுடியாமல் இங்கேயே நின்னுட்டேங்க..
சாரு பாசமாகி கண்ணீர்விட, உள்ளே பயங்கரவிசில் சத்தம்
நிகழ்ச்சி தொகுப்பாளர்: இப்போது உங்களுக்காக, பலத்த கரகோசத்துடன் இதோ பதிவுலக யூத்து கேபிள் சங்கர்
கேபிள் சங்கர் : தேங்க்யூ..தேங்க்யூ..எனக்கு இந்த கொண்டாட்டத்தைப் பார்க்கும்போது, நான் போன வருடம் கொண்டாடிய 28வயது பிறந்தநாள் கொண்டாட்டம் ஞாபகத்திற்கு வருகிறது….
சாரு(கடுப்பாக) : ஏங்க..இந்த அலெக்சா ரேட்டிங்க மறந்துட்டீங்க
கேபிள் சங்கர் : ஆ..சாரி..எனக்கு அலெக்சா ரேட்டிங்கில் ஒருலட்சம் கொடுத்த..
சாரு : ஒருபயபுள்ளையாவது புத்தகத்தைப் பத்தி பேசுறாயிங்களா பாரு..(பக்கத்தில் அமர்ந்திருக்கும் நர்சிமைப் பார்த்து)
சாரு : ஏங்க..நீங்களாவது புத்தகத்தைப் பத்தி ஏதாவது பேசுவீங்களா..
நர்சிம் : நாமார்க்கும் குடி அல்லோம்
சாரு : கிழிஞ்சது போ..எம்புத்தகத்தைப் பத்தி நாந்தான் பேசணும்போலயே..ஓணானை கூப்பிட்டு வேட்டிக்குள்ள விட்டமாதிரி பதிவர்களை கூப்பிட்டு நானே கெடுத்துக்கிட்டேன்..ம்..என்ன பேசலாம்..ஸ்பானிஸ் எழுத்தாளர்..பிரெஞ்சு இலக்கிய கவிஞர்..ம்ம்..கேரளாவுல இலக்கியம்..சூபி இலக்கியங்கள்..ம்..(ஆழமாக யோசித்து ஐந்து நிமிடம் கண்ணை மூடித்திறக்க, எதிரில் ஒருபயபுள்ளையும் காணோம். அனைத்து பேரும் அட் எ டையத்தில் எஸ்கேப் ஆக சாரு திகைத்துப்போகிறார். கூட்டத்தில் ஒரு பெரியவர் மட்டும் உக்கர்ந்து இருப்பதைப் பார்த்து பாசத்தோடு அவர் அருகில் சென்று..
சாரு : ஐயா..ஐயா..எம்மேலதான் உங்களுக்கு எம்புட்டு பாசம்யா..இவ்வளவுபேரு ஓடியும்..நீங்க மட்டும்..(தழுதழுக்க)
பெரியவர் : டிராபிக் மற்றும் பெட்ரோல் பிரச்சனை காரணமாக லேட்டாக கிளம்பிய டோண்டுராகவன் கார் 05:18 மணிக்கு அரங்கத்திற்குள் எண்டர் ஆனது
சாரு: (அலர்ட்டாகி) : ஆஹா..அது நீங்கதானா..அதுதான் எல்லாரும் தலைதெறிக்க ஓடுறாயிங்களா..ஆள விடுங்கய்யா சாமி.. என்று அலறியடித்து ஓட அவரைப் பிடித்து டோண்டு ராகவன் கேட்கிறார்
டோண்டு ராகவன் : மண்டபத்துக்கு எவ்வளவுங்க வாடகை…அங்கிட்டு ஏன் சாமி படம் தொங்குது..
29 comments:
vadaii
சக்க லொள்ளு.. :)
sema nakkal
உங்க நக்கலுக்கு அளவே இல்லையா. சிரிப்ப அடக்க முடியல. :))
சிரிப்ப அடக்க முடியல
தூள் பண்ணிட்டே, மாமு.
-ரமேஷ்.
ஹா..ஹா...
Class.
சிரிப்ப அடக்க முடியல. :))
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....................
aiyo aiyo...sema kaamadi..
:-))))))) முடியலண்ணே..!! சூப்பர்..!!
//மண்டபத்துக்கு எவ்வளவுங்க வாடகை…அங்கிட்டு ஏன் சாமி படம் தொங்குது..//
கலக்கல்
ஹஹஹ.... ஜாக்கி மேட்டர் கலக்கல்...
டோண்டு... ஏன் சாமி போட்டோ தொங்கலைன்னுல கேட்டுருக்கனும்...:))
முடியல சாமி :))))))))
அண்ணே நீங்க எங்கியோ போயீட்டிங்கண்ணே.... முடியல என்னயால.... இன்னிக்கு இவினிங் கால் பன்னறேன் :)
இந்தப் பதிவு கலக்கலா இருந்துச்சு!
அருமை, சிரிப்பு தாங்க முடியல
good one buddy!!!
ஓகே.. ஓகே.. செம காமெடி..! நல்லாத்தான் இருக்கு ராசா..! பாராட்டுக்கள்..!
அருமை அருமை மிகவும் அருமை
தனித்தனியாக நன்றி சொல்லமுடியாததற்கு வருந்துகிறேன். ஆபிசில் ஆணி அதிகம்.
நன்றி அக்பர்
நன்றி ரமேஷ்
நன்றி செந்தில்
நன்றி கார்த்திக்
நன்றி கார்த்தி
நன்றி ரமேஷ்
நன்றி பட்டாபட்டி
நன்றி வேலன்
நன்றி பாஸ்கி
நன்றி தாரு
நன்றி தேவா
நன்றி யோகன்
நன்றி அனானி நண்பர்
நன்றி பிரதாப்
நன்றி சங்கர்
நன்றி ராமசாமி,
நன்றி மோகன்
நன்றி கணேஷ்
நன்றி இனியா
நன்றி உண்மைத்தமிழன்
நன்றி கரிகாலன்..
அருமை , சிரிப்போ சிரிப்பு
//டோண்டு ராகவன் : மண்டபத்துக்கு எவ்வளவுங்க வாடகை…அங்கிட்டு ஏன் சாமி படம் தொங்குது..//
சாரு: யாருக்குங்க தெரியும்? வழக்கம்போல இதையும் ஓசியிலேதான் என் மாமனார் கிட்டேயிருந்து வாங்கினேன். எதுக்கு வம்பு, சாமி கண்ணைக் குத்திடுமேன்னு சாமி படத்தை மாட்டி வைத்திருக்கேன். யாராவது கேட்டாக்க, என் மனைவி வீட்டாரின் செண்டிமெண்டுக்காக அதை அலவ் பண்பண்ணுமாறு வாலி என்னை பெர்சுவேட் செய்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Raasa ungaluku bloggers elorum sernthu selai vaika poranga chennai la... :D :D
சூப்பரப்பு !
;) ;) ;)
நல்லாருக்கு,அதுவும் அந்த டீக்கடக்காரரு...உண்மையை போட்டு உடைப்பது...சூப்பர்?
அடடா..... எப்படியோ மிஸ் ஆயிடுச்சே..... செம நக்கல்ஸ்ஸ்ஸ்..................!
ethayo theda inru ithai padiththen. ungalukku nalla flow ullathu.nallaa varuveerkal. vaazhththukkal.(ainthu nimidam vaai vittu siriththen!)
Post a Comment